நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 13 April 2020

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் தற்கொலைகள்



ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் தற்கொலைகள்


சமூகத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் தற்கொலையை நாடுகின்றனர் என்று தன் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ள தாயம்மாள் அறவாணன் அவர்கள், அதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார்.
1. ஒன்றை அடைய எண்ணும் போக்கு நிறைவேறாமல் போதல்
2. முரணான சமூகத்தோடு ஒத்துப் போக அல்லது எதிர்த்துப் போக இயலாமல் இதல்.
3. அக மனப் போராட்டங்கள்
4. ஒடுக்குதல் அதனால் வெறுப்பு வரும்
5. வேறொன்றின் மீது மனம் வைத்தல்
6. தனிமைப்படுதல்
7. எதிர்பார்த்து ஏமாற்றம்
8. உள் ஒன்று புறம் ஒன்று
9. கையற்ற நிலை (2001:78)
போன்ற காரணங்களினால் மகளிர் தற்கொலைகள் வருடந்தோறும் அதிகரித்து வருகின்றன என்று கூறுகிறார்.


ஆர்.சண்முகசுந்தரத்தின்புதினங்களில் ஆண்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான செய்திகள் இல்லை. மாறாக, இது பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில் மூன்று பேர் கன்னிப் பெண்கள். கணவனால் கைவிடப்பட்டவர்கள் இருவர். கைம்பெண் ஒன்று. மீதி கன்னிப் பெண்கள்.


5.6.1.1. கன்னிப் பெண்கள்
தற்கொலை செய்து கொண்ட கன்னிப் பெண்களில் முத்தாயாள் (அ.கோ) மற்றும் தேவானை (அ.வ.) இருவருக்கும் காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது. துரைசாமி நிர்மலாவையும் தன்னையும் காதலித்து ஏமாற்றியதை முத்தாயாளால் (அ.கோ) தாங்க முடிவதில்லை. அவனை வெறுக்க முடியாமல் தவிக்கிறாள். ஒரு பெண் தன் இதயத்தில் எந்த ஆண் மகளை வரித்துக் கொள்கிறாளோ, அவன் காலமெல்லாம் அவள் மனத்திலே அழியாமல் நிலைத்து நிற்கிறான்..... அவனில்லாமல் வாழ்வா?” (ப-262) அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

ஆண்களைப் பொறுத்தவரையில் அவன் எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் காதலிக்கலாம் கல்யாணம் செய்து கொள்ளலாம். அதற்கு வரையறை கிடையாது. ஆனால், பெண் வாழ்க்கையில் ஒருவனுக்கு மட்டும் தான் மனத்தில் இடம் கொடுக்க வேண்டும். அவன் கிடைக்காவிட்டால் அவள் வாழ்வதற்கு இவ்வுலகில் வேறு துணையில்லை. மனதால் ஒருவனை நினைத்துக் கொண்டு இன்னொருவனுடன் வாழ்க்கை நடத்துவதென்பது பாவச் செயல், அவள் கன்னியாகவும் வாழ உரிமையில்லை. தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையைத் தான் சமூகம் அவளுக்கு விட்டு வைத்துள்ளது. இந்தப் பழமைப் பிடியில் அழுந்திக் கிடக்கும் பெண்கள் தற்கொலையையே இறுதி முடிவாக எடுக்கின்றனர்.

தேவானை காதல் தோல்வி ஏற்பட்ட நிலையில் அதைத் துணிச்சலோடு எதிர் கொள்கிறாள். காதலன் சுப்ரமணியனின் துரோகத்தை நொடியில் ஏற்றுக் கொள்ளும் அவள் அவனிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறாள். தங்கள் காதலை உலகிற்குத் தெரிவித்துப் பொருந்தாமணக் கொடுமையிலிருந்து காப்பாற்றுமாறு கூறுகிறாள். இறுதி வரை கன்னியாகவே சமூகத்திற்கு முன் வாழ்ந்து காட்டப் போவதாக வேண்டுகிறாள். அவன் மறுத்து விடுவதோடு இழிவுபடுத்தியும் பேச சீற்றத்துடன் அவனை அறைந்து விட்டு துணிச்சலுடன் வெளியேறுகிறாள். காதலனின் துரோகத்தை விடத் தந்தையின் துரோகம் தான் அவளை மயக்கமடையச்  செய்து விடுகிறது. தந்தை, காதலன், சமூகம் என்ற முத்தரப்பு தாக்குதல்கள் அவளை வாழவிடாமல் தற்கொலைக்குத் துரத்துகின்றன. எதிர்த்து வாழக்கூடிய சூழலை அவளது குடும்பமும் சமூகமும் அவளுக்கு உருவாக்கித் தருவதில்லை.

ருக்கு (அ?.?.) குடும்பப் சிக்கல்யில் தீர்வு காணத் தெரியாமல் தவிக்கிறாள். அவளுடைய தந்தையும் சின்னையனும், குடும்பப் பெண்களும் தொடர்ந்து தகராறு செய்து கொண்டே இருப்பதைப் பார்த்து அவள் மனம் வெதும்பிப் போகிறாள்.  கல்வியறிவற்ற கிராமத்தில் வளரக்கூடிய ருக்குவிற்குத் தங்கள் குடும்பப் சிக்கல்யைக் காணாச்சுனை கமலம் போலத் தீர்த்து வைக்கத் தெரியவில்லை. தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொள்கிறாள். தன் சடலத்தோடு குடும்ப சச்சரவுகள் வெந்து நீறாகி விடும் என நினைத்தாள். தன்னுடைய உயிரையே பலியாக வைக்க வேண்டுமென்ற பித்து ஒரு பாவைக்கும் தோன்றும்படியாகக் காரியங்கள் பண்ணியவர்கள் பாவிகள் இல்லையா?” (ப-99) என்று கூட்டுக் குடும்ப சூழலின் தன்மையை வெறுத்துக் கூறுகிறார் ஆசிரியர்.

5.6.1.2. மணமானவர்கள்
திருமணமானவர்களில் கணவனால் கைவிடப்பட்ட மைலாத்தாள், எல்லோரையும் போல குடும்பத்தைச் சிறப்பாக நடத்தி வந்தாள். வேலை செய்வதில் அவளுக்கு நிகர் யாருமில்லை. திருமணமான ஒராண்டில் அவளுக்குப் பெரிய அம்மை நோய் வந்து அவளுடைய அழகைக் கெடுத்து விட்டது. அதனால் அவள் கணவன் அவளைக் கைவிட்டு விட்டான். பெண் என்பவள் கணவனுக்கு நோய் வந்தால் பெண் தன் உயிரைக் கொடுத்தாவது அவளைக் காப்பாற்ற வேண்டும். தன் உழைப்பால் அவனையும் அவன் சுற்றத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். ஆனால், அவள் அழகிழந்துவிட்டால் குடும்ப அமைப்பிலிருந்து துரத்தப்படுகிறாள். வாழ்வில் துயர்கள் மலிந்த போதிலும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, மனிதாபிமான உறவு அடிப்படையில் அன்பு செலுத்தி விட்டுக் கொடுத்து, வாழ்வதைப் புரிந்து கொள்ளும் பயிற்சிக் கூடமாக வாழ்வைப் பொருளுடையதாக்கும் செயலில் பெரும் பங்கு வகிப்பவள் பெண்” (வேங்கடராமன். சு., 1997:90-91) ஆனால், இவையெல்லாம் இணுக்குச் சொல்லப்படுவது இல்லை அவன் எக்காரணத்தைக் கூறியும் மிக எளிதாகப் பெண்ணைப் புறக்கணித்து விடலாம்.

இச்சமூகம் அவனுக்குத் துணைபோகும். எனவே, பெண் தனக்கு எதிராகக் கணவன் செயல்படும் போது அவனை எதிர்க்கும் துணிவின்றிச் சமூகத்தின் இழி செயலால் தனக்குள்ளாகவே புழுங்கி மனச் சிதைவிற்கு ஆளாகின்றாள். மைலாத்தாளின் கணவனின் செயலைவிட அவள் அண்ணனின் துரோகம் அவளைப் பெரிதும் பாதித்து விடுகிறது. தன் தங்கையென்றும் பாராமல் அவள் கணவனுக்குத் தன் மகளை இரண்டாந்தாரமாக மணமுடித்து வைக்கிறார். இம்மனக் குமுறலிலிருந்து மைலாத்தாளால் மீள முடிவதில்லை. அவள் கணவனுக்குக் குழந்தையும் பிறந்து விடுகிறது. அவளுக்கு என்ன தோன்றியதோ கிணற்றுக்குள் குதித்து விடுகிறாள். அவளுடைய உடலிலிருந்து இடை சிறிது கூட விலகவில்லை. சுய உணர்வோடு செய்து கொள்பவர்கள் சேலையை இறுக்கிக் கட்டிக் கொண்டு குதிப்பார்கள். ஒரு வேலை மரணத்தை அணைக்கச் செல்லுகையில் வேலாத்தாளுக்கு நல்ல புத்தி வந்து விட்டதாக்கும்” (ஊ.தா.124) என்று குறிப்பிடும் ஆசிரியர் தற்கொலை செய்துகொள்பவர்கள் சுய உணர்வோடு செய்து கொள்பவர்கள் அல்ல என்பதை முத்தாயாள் மூலம் காட்டுகிறார்.

முத்தாயாள் பதினைந்து வயதில் விதவையானவள். தந்தை குடும்பத்தை, தொழிலை நிர்வகித்து வருகிறாள். அவளுக்கு நாச்சப்பன் ஊதவுகிறான். அவள் தந்தையின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்ட சிலர் அவளையும் நாச்சப்பனையும் ஆணைத்துப் பேசுகின்றனர். இதனால் முத்தாயாள் மனித குலத்தின் மாளாத்துயர் அனைத்தும் தன் தலையிலே தாங்கியவளைப் போல மனமுடைந்து போனாள். மனிதர்களைப் பார்க்கவே அஞ்சினான். நாச்சப்பனைக் கண்டு நடுங்கினாள். அழுது அழுது கண்களும் கன்னங்களும் வீங்கிப் போய்விட்டன.
விதவையான பின் தந்தைக்கு இதரவாகத் தன் வாழ்நாளைக் கழிக்க நினைத்தவளுக்கு இக்களங்கம் துன்பத்தின் ஊச்சிக்கு அழைத்துச் சென்று விடுகிறது. தான் களங்கமற்றவள் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும். உண்மை இயிரம் வருடத்திற்குப் பின்பு தெரிந்தாலும் கவலையில்லை. ஆனால், தெரிந்தாக வேண்டும். அதற்கு எளிய வழி தற்கொலை தான். மனநிழல் குஞ்சாளுக்கும் தன்னை விரும்பும் காதலனுக்குத் தான் களங்கமற்றவள் என்று நிரூபிப்பதற்குத் தற்கொலை தான் சிறந்த வழி என்று தோன்றியுள்ளது.

இவர்களில் முத்தாயாள் (ப.து) மட்டும் காப்பாற்றப்படுகிறாள். ஆண்கள் வலிமையானவர்கள், எதையும், சமாளிக்கும் திறனுடையவர்கள், தனித்தியங்கக் கூடியவர்கள், மன வலிமை ஊடையவர்கள என்றும் பெண்கள் சார்ந்து வாழ்பவர்கள், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள், மென்மையானவர்கள் என்றும் வழிவழியாக பரப்பப்பட்டு வருகின்ற கருத்தாக்கங்களினால் பெண்களும் அதையே உண்மையென்று நம்பி வந்து வாழ்ந்து வருகின்றனர். இச்சமூகம், அவள் அதிகம் பேசக் கூடாது. எதையும் எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடாது என்று ஊளவியல் ரீதியான பல கட்டுப்பாடுகளை இட்டு மனித இயல்பிற்
கு மாறான நடத்தைகளை அவளுள் புகுத்தியது. இதன் விளைவாக அவள் தற்கொலையை அதிகம் நாட வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது.

தற்கொலை செய்து கொள்ளும் பெண்களைப் பற்றி ஆசிரியர், எண்ணந்தான் வென்றது. உணர்ச்சி வெற்றி பெற்றது. அறிவு மங்கி விட்டது”. (ப.து:77) என்று அறிவு மயங்கிய நிலையில் தான் பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். என்னுடைய சிக்கல்கள் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு ஏற்பட்டு விடுமல்லவா. உயிர் போய் விட்டால், பிறகென்ன? உடல் இல்லை, உணர்வுகள் இல்லை, அதன் பாற்பட்ட துயரங்கள் இல்லை என்று நொந்து நூலாகிப் போயிருக்கும் அவளுக்குத் தோன்றி விடுகிறது” (ஜோதிர்லதா கிரிஜா, 2001:192) என்று தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் மனநிலையை விவரிக்கிறார்.

பெண் பிறவி எடுத்ததன் பயன் ஒருவர்க்கு மனைவியாகித் தொண்டு செய்து கடைத் தோற்றம்அடைவதற்கே என்று கற்றோரும் மற்றோரும் மக்கள் தொடர்பு ஊடகங்களும் கருதுவதால், அதற்கியையப் பணி மகளிர் ஊட்பட அனைத்து மகளிரும் இங்ஙனம் குடும்பத்தில் சமூகப் படுத்தப்படுகின்றனர். இதனால் மகளிர் தம் வாழ்வில் சிக்கல்களை எதிர்நோக்கிச் சமாளிக்கும் ஆற்றல் அற்றவர்களாக ஆகிவிடுகின்றனர்” (பொ.நா.கமலா, 1994:28)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?