நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday, 15 June 2015

தமிழ் இனி மெல்ல ........நாவல்


தமிழ் இனி மெல்ல......  


 அரிசோனா மகாதேவன் சார் புலம் பெயர்ந்த ஒரு தமிழர். தமிழின் அருமையை பெருமையை அந்நிய சூழலில் உணர்ந்து தனக்கான அடையாளம் மொழியே என்பதை உணர்ந்து தான் உணர்ந்ததை தாய்நாட்டுத் தமிழருக்கும் எடுத்துரைக்க இந்நாவல் புனைந்துள்ளார். உணர்வதை உணர்த்த நினைப்பதே ...அதுவும் சுவையாக ... ஒரு கதையாக ....உணர்த்த முயல்வதே .....ஒரு படைப்பின் முதல் வெற்றியாகிறது. வெற்றுரைகளாக இல்லாமல் மாபெரும் வரலாற்றை ஆழ்ந்து அறிந்து வலுவான ஆதாரங்களினடிப்படையில் தமிழ் இனி மெல்ல......  என்ற நாவல் எழுதப்பட்டுள்ளது

‘பாடிப் பறந்த குயில்’ நாவல்


பாடிப் பறந்த குயில்’ 



VAIYAVAN PADIPPARANDHA    KUYIL       96       RS=100 FICTION                        

                          

FIRM NAME: DHARINI PATHIPPAGAM

FIRM ADDRESS:4A,RAMEA FLATS,
32/79 GANDHI NAGAR 4TH MAIN ROAD, ADYAR, CHENNAI-600020
MOBILE NO: 9940120341
பாடிப் பறந்த குயில்என்ற குறுநாவல் எழுதியியருப்பவர்  எழுத்தாளர் வையவன் அவர்கள். இந்நாவல் வாழ்க்கையின் பல மதிப்பீடுகள் மீதான தவறான புரிதல்களை அடையாளம் காட்டியுள்ளது. ஆசிரியரின் உயிரோட்டம் நாவலில் உள்ளதைப் போலவே வனப்பகுதி இந்நாவலில் பின்னணியாகியுள்ளது. வனப்பகுதிகளையும், மலை அருவி, பூக்கள், பாறைகள் அதன் கம்பீரம் போன்றவற்றை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அதே சமயம் அதன் கொடூரமான மற்றொரு முகத்தையும் காட்டத் தயங்கவில்லை. கொடிய வனவிலங்குகள் திடீரென எதிர்ப்பட்டு மக்களைத் தாக்கி அழிப்பதை யதார்த்தம் மாறாமல் மிக இயல்பாகக் கதைப் போக்கில் எடுத்துக் கூறுகிறார்.

உயிரோட்டம் நாவல்

FIRM NAME: DHARINI PATHIPPAGAM
FIRM ADDRESS:4A,RAMEA FLATS,32/79 GANDHI NAGAR 4TH MAIN ROAD, ADYAR, CHENNAI-600020
MOBILE NO: 9940120341

VAIYAVAN - UYIROTTAM             300                       RS=350





உயிரோட்டம்




எழுத்தாளரின்  வையவன் அவர்களின் நாவல். சென்னை தாரிணி பதிப்பக வெளியீடு.  

ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் ஒரு ஜீவ ஊற்று புதைந்து உள்ளுக்குள் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த ஜீவ ஊற்றைக் கண்டறிந்து அதை வெளிக் கொணர்ந்தால் மண்ணில் சொர்க்கத்தை உருவாக்கி விட முடியும் என்ற கருத்தை அடிநாதமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது உயிரோட்டம் நாவல்.