நவீன இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் உலகின் பல்வேறு
மொழிகளிலும் தனிப்பெறும் வெற்றியை அடைந்திருப்பது சிறுகதை வடிவமாகும். அவ்வடிவம்
தமிழில் மிகச்சிறப்பாகக் கையாளப்பட்டு வருகிறது. தாம் வாழுங்காலத்தே போற்றப்பட்ட
கலைஞர்களைவிட வாழ்ந்து முடிந்த பின் போற்றப்பட்ட கலைஞர்களே அதிகம். அவ்வகையில்
தகடூரான் அவர்களின் படைப்புகளைக் குறிப்பிடலாம்.