1.பாவலர் மணிவேலனார்
பாவலர் மணிவேலனார் என்றழைக்கப்படும்
பெ. இரத்தினவேலு(1932)
ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் கவிஞர்.
தமிழகத்தின் அரூரில் தமிழியக்கம் தொடங்கியவர்.பல்வேறு இலக்கிய விருதுகள்
பெற்றவர். இவரது சில நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருதினைப்
பெற்றவை
மணிவேலனார் தருமபுரி மாவட்டத்தில்
கடத்தூருக்கு அருகிலுள்ள அஸ்தகிரி (குதிரை மலை) என்னும் சிற்றூரில் 1932 ல்
பிறந்தார். தந்தை பெயர் பெரியண்ணன். தாய் முத்துவேடியம்மாள். விடுகாதழகிய
நல்லூர் என்றொருகாலத்தில் அழைக்கப்பட்ட தற்போதைய அரூரில் வசிக்கிறார்.
இயற்பெயர்
பெ. இரத்தினவேலு. மூன்றாம் வகுப்பு வரை அஸ்தகிரியிலும், ஐந்தாம் வகுப்பு
வரை கடத்தூரிலும், பின் அரூரில் பள்ளிக்கல்வியும் முடித்துள்ளார்.