முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Wednesday, 12 March 2014

படைப்பாளர்கள்


1.பாவலர் மணிவேலனார் 


படிமம்:Paavalar Manivelanar.jpg


          பாவலர் மணிவேலனார் என்றழைக்கப்படும்  பெ. இரத்தினவேலு(1932) ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் கவிஞர். தமிழகத்தின் அரூரில் தமிழியக்கம் தொடங்கியவர்.பல்வேறு இலக்கிய விருதுகள் பெற்றவர். இவரது சில நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருதினைப் பெற்றவை


              மணிவேலனார் தருமபுரி மாவட்டத்தில் கடத்தூருக்கு அருகிலுள்ள அஸ்தகிரி (குதிரை மலை) என்னும் சிற்றூரில் 1932 ல் பிறந்தார். தந்தை பெயர் பெரியண்ணன். தாய் முத்துவேடியம்மாள். விடுகாதழகிய நல்லூர் என்றொருகாலத்தில் அழைக்கப்பட்ட தற்போதைய அரூரில் வசிக்கிறார். இயற்பெயர் பெ. இரத்தினவேலு. மூன்றாம் வகுப்பு வரை அஸ்தகிரியிலும், ஐந்தாம் வகுப்பு வரை கடத்தூரிலும், பின் அரூரில் பள்ளிக்கல்வியும் முடித்துள்ளார்.


            சிறுவயதிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்றிருந்ததால், பன்னிரண்டாவது வயதில் கும்மிப்பாட்டு என்ற கவிதையைப் புனைந்தார். 1950ல் பள்ளிப்பருவத்தில் நகைச்சுவைநடிகர் என.எஸ்.கிருஷ.ணன் தலைமையில் பள்ளியில் நகைச்சுவை நாடகம் ஒன்றையும், 1956ல்  புலவர் குழந்தை தலைமையில் ‘கண்ணாடி வளையல்’ என்னும் தலைப்பில் ஈழச்சிக்கல் குறித்த நாடகத்தையும், ‘பரம்பரைப்பரிசு’ என்னும் சீர்திருத்த நாடகத்தையும் நடத்தியுள்ளார். பள்ளிப்படிப்பு முடிந்த பின்னர் மேட்டூரில் இடைநிலை ஆசிரியப்பயிற்சிப் பள்ளியில் பயின்றார். 1953ல் தருமபுரி செட்ரப்பட்டி இடைநிலைப்பள்ளியில் ஆசிரியரானார். முற்போக்கு எண்ணம் கொண்ட இவர், முத்தியாலம்மாள் என்பவரை 1955ல் சாதி மறுப்புத் திருமணம் செய்தார். கல்வி கற்பிப்பதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து படித்து பி.ஏ.(பொருளியல்) பட்டம் பெற்றார். 1977ல் முதுகலைபட்டம் பெற்று முதுகலைத் தமிழாசிரியராக உயர்ந்தார். 1990ல் ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் இலக்கியப்பணியை இன்றும் மேற்கொண்டு வருகிறார்.

படைப்புகள்

கவிதை

 • மழலை இன்பம் (1963;பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப்பட்டது)
 • மழலை இலக்கியம்(1965)
 • காதைத் திருப்பு சொல்கிறேன்(1977)
 • இயற்கை அழைக்கிறது வா (1978)

வரலாற்றுக் காப்பியங்கள்

 • நாக நாட்டு இளவரசி பீலிவளை
 • வஞ்சினம்

இலக்கியத் திறனாய்வு

 • கலித்தொகையில்  உவமைகள்
 • அவல நோக்கில் சிலம்பு
 • பாவேந்தர் நோக்கில் குடும்பம்
 • பாவேந்தர் விழையும் பெண்ணுரிமை
 • சுவை நோக்கில் சுரதா

தொகுப்பு நூல்

 • முதுமைச்சிக்கல்களும்அவற்றுக்குத் தீர்வுகளும்

பட்டங்கள்

பாவலர் மணிவேலனாருக்கு அவரது கவிதைத்திறன் மற்றும் தமிழ்த்தொண்டிற்காகப் பல பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை,

 • 1964ம் ஆண்டு எழில் பத்திரிகை 'கவிஞர்' பட்டம் வழங்கியது.
 • 1964ம் ஆண்டு பாவாணர் பெங்களுர் மன்றம் 'பாவலர்' பட்டம் வழங்கியது.
 • 1988ம் ஆண்டு உவமைக்கவிஞர் சுரதா மணிவேலனாருக்கு 'வண்டமிழ்கொண்டல்' என்னும் பட்டத்தை வழங்கியுள்ளார்.
 • 1987ம் ஆண்டு திருச்சி முத்தமிழ் மன்றம் ‘அறுசீர்அரசர்’ என்ற பட்டம் வழங்கியது.
 • 1988ம் ஆண்டு தென்னார்க்காடு கவிஞர் பேரவை 'பாவலரேறு' என்ற பட்டம் வழங்கியது.
 • 1990ம் ஆண்டு கிருஷ்ணகிரி உலகத் தமிழ்க்கவிஞர் மாநாட்டில் ‘கவிமாமணி’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
 • 1991ம் ஆண்டு அரூர் தமிழ்ச்சங்கம் ‘இலக்கியத்தென்றல்’ என்ற பட்டம் வழங்கியது.
 • 1997ம் ஆண்டு கடத்தூர் முத்தமிழ் மன்றம் ‘ஆராய்ச்சி பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கியது.
 • 1997ம் ஆண்டு சென்னை தலைநகர் தமிழ்ச்சங்கம் ‘செந்தமிழ்ச் செம்மல்’ என்ற பட்டம் வழங்கியது.
 • 1998ம் ஆண்டு மொரப்பூர் பைந்தமிழ்மன்றம் ‘காப்பிய வேந்தர்’ என்ற பட்டமும்,
 • தருமபுரி தகடூரான் அறக்கட்டளை ‘வரலாற்றுப் பாவரசர்’ என்ற பட்டமும்
 • புதுவை அரசும் பாவேந்தர் பாசறையும் இணைந்து ”பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர்” என்ற பட்டமும் வழங்கி சிறப்பித்துள்ளன.

சாதனைகள்

எழுத்துச் சீர்திருத்தம்

              1978 ஆம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு விழாவினையொட்டி பெரியார் எழுத்துச் சீர்திருத்த  முறையை நடைமுறைப்படுத்த அரசு ஆணை வெளியிட்டபோது லை, னை எழுத்துகளில் செய்த மாற்றம் போல ஐ, ஔ என்ற உயிர் எழுத்துகளை அய், அவ் என மாற்றி எழுத ஆணையிட்டது. ஐ, ஔ எழுத்துகளை மாற்றுவதால் ஏற்படும் சிக்கல்களையும் இலக்கணத்தில் ஏற்படும் மாற்றம் குறித்தும் 'சிறு திருத்தம்' என்ற தலைப்பில் ஒரு வேண்டுகோளை தமிழக அரசுக்கு பாவலர் மணிவேலனார் அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில் ஆய்வு செய்த அறிஞர்குழு ஐ, ஔ எழுத்துகளில் மாற்றம் தேவையில்லை என ஆணையிட்டது.

 

தமிழில் ஆய்வேடுகள்

 

            மதுரைப்பல்பலைக்கழகம் நிறுவப்பட்டவுடன், தமிழகத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளமையைச் சுட்டிக்காட்டி தமிழ் ஆய்வேடுகளை தமிழிலே எழுத ஆணையிடுமாறு அரூர் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் சார்பாக தமிழக அரசிற்கும் பலகலைக்கழகங்களுக்கும் வேண்டுகோள் அனுப்பினார். அவ்வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசு நடைமுறைப்படுத்தியது குறி்ப்பிடத்தக்கதாகும்.

 

தமிழ்ப்பணி

 

             1995ல் அரூரில் 'தமிழியக்கம்' என்ற பெயரில் ஒரு இயக்கம் தொடங்கினார். இது வணிக நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில் வைத்தல், பெயர்ப்பலகைகளில் தமிழில் பெயர் வைத்தல், குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயரிடுதல் போன்ற பணிகளைச் செய்தது. 1997ல் அரூரில் இலவசத் தமிழ் இலக்கியப் பயிற்சி வகுப்பு தொடங்கி யாப்பிலக்கணம், மொழியிலக்கணம் போன்றவற்றில் பொது மக்களுக்குப் பயிற்சியளித்தார். 1997ல் அரூரில் உள்ள, சங்ககாலத்தில் “நன்றா” என வழங்கப்பட்ட தற்போதைய  மஞ்சவாடி கணவாயில் கலைஞர் முத்தமிழ் மன்றம் சார்பில் ‘மலைச்சாரல்’ என்ற கவியரங்கத்தை நடத்தினார்.

 

பாடநூல்

 

 • மணிவேலனாரின் ‘இயற்கை அழைக்கிறது வா’என்ற கவிதை நூல் 1998ல் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தமிழ் இளங்கலை மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது.
 • ‘நாகநாட்டு இளவரசி பீலிவளை’ என்ற நூல் முதுகலைத் தமிழ் மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டது.

விருதுகள்

 

 • 1992ம் ஆண்டு சேலம் தேன்தமிழ்ப்பதிப்பகம் ‘சிறந்த எழுத்தாளர்’ விருது வழங்கியது.
 • 1994ம் ஆண்டு கே.ஆர்.ஜீ.நாகப்பன் இராசம்மாள் அறக்கட்டளை ‘இலக்கிய விருது’ வழங்கி சிறப்பித்தது.
 • 1996ம் ஆண்டு தஞ்சை இளவரசர் இராசா பான்ஸ்லே ‘கவியரசர் கண்ணதாசன் விருது’ வழங்கி சிறப்பித்துள்ளார்.
 • 2000ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், நூறாயிரம் ரூபாய் பணமுடிப்பும்,தங்கப் பதக்கமும் வழங்கி சிறப்பித்தது.
 •  

நூல்களுக்கான விருதுகள்

 

 • 1995ம் ஆண்டு ‘சுவை நோக்கில் சுரதா’ என்ற நூல் ‘சிறந்த திறனாய்வு நூல்’ என்ற விருதை தமிழ்நாடு அரசிடமிருந்து பெற்றது.
 • 1997ம் ஆண்டு 'பீலிவளை' என்ற நூல் தமிழ் வளர்ச்சித்துறையிடமிருந்து ‘சிறந்த கவிதை நூல்’ என்ற விருதையும் 10,000 ரூபாய் பரிசை தமிழ்நாடு அரசிடமிருந்தும் பெற்றது.

2.மா.இராமமூர்த்தி:

படிமம்:Photo0068.jpg            இவர் எழுத்தாளரும் கவிஞரும் படைப்பாளரும் ஆவார். பல கவியரங்க நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கவிதை வாசித்துள்ளார். இவரது “அபராசிதவர்மபல்லவன்” என்னும் காப்பியத்திற்கு 2012ம் ஆண்டிற்கான தமிழக அரசின் பரிசு கிடைத்துள்ளது.

பொருளடக்கம்

இளமை

இராமமூர்த்தி தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதிகாரப்பட்டி என்ற சிற்றூரில் 18-04-1948 இல் ந.மாணிக்கம் - மாரியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இளங்கலையில் பொருளாதாரப்பாடம் படித்திருந்தாலும் தமிழ்க் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டவர்.

தமிழ்ப்பணி

 • சென்னை சர்.தியாகராசர் கல்லூரியின் 1970-71 ம் ஆண்டுமலரில் கதிரவன் என்னும் தலைப்பில் இவரது முதல் கவிதை வெளிவந்து முதற்பரிசு பெற்றது.
 • 17-03-1973 ல் சென்னை வானொலியில் இளைய பாரதம் நிகழ்ச்சியில் கவிதை வாசித்தார்.
 • 28-12-2004ல் ஜெயா தொலைக்காட்சியில் கவிதை வாசித்துள்ளார்.
 • பாவலர் மணிவேலனார் இலக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற கவியரங்க நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார்.

கவிதை வெளிவந்த இதழ்கள்

 • ஔவையார் இதழ்
 • பொதுநூலகச் செய்தி மடல்
 • மீனாட்சி மருத்துவ மலர்
 • தெளிதமிழ்
 • மீண்டும் கவிக் கொண்டல்
 • அறிவின் வழி
 • குயில்

படைப்புகள்

 1. பாவலர் மணிவேலனார் வாழ்க்கைக் காப்பியம்
 2. பாவலர் மணிவேலனார் பிள்ளைத்தமிழ்
 3. அபராசிதவர்மபல்லவன்(2010)

  3.உத்தமசோழன்


 
உத்தமசோழன் என்கிற புனைப் பெயர் கொண்ட அ. செல்வராஜ் ஒரு வட்டாட்சியராக தஞ்சையில் பணிபுரிந்தவர். இவர் பணிஓய்விற்குப் பிறகு முழுநேர படைப்பாளியாக மாறி உள்ளார்.


ஆசிரியர் அறிமுகம்

சிறுகதைத்தொகுப்புகள்

 1. துணை என்றொரு தொடர்கதை
 2. ஆரம்பம் இப்படி்த்தான்
 3. வாழ்க்கையெங்கும் வாசல்கள்
 4. வல்லமை தாராயோ
 5. சிந்து டீச்சர்
 6. மனிதத்தீவுகள்
 7. கருவி மறந்த கூடு
 8. பாமரசாமி
 9. ஒரே ஒரு துளி
 10. உத்தமசோழன் சிறுகதைகள்

நாவல்கள்

 1. தொலைதூர வெளிச்சம்
 2. கசக்கும் இனிமை
 3. அவசரஅவசரமாய்
 4. பூபூக்கும் காலம்
 5. உயிர் உருகும் சப்தம்
 6. கனல்பூக்கள்
 7. பத்தினிஆடு
 8. கலங்காதே கண்ணே
 9. மனசுக்குள் ஆயிரம்
 10. தேகமே கண்களாய்

4.ஆண்டாள் பிரியதர்ஷினி தற்கால பெண் படைப்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

பொருளடக்கம்

வாழ்க்கைக் குறிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில்  05.10.1962 அன்று பிறந்தார். பெற்றோர்:கவிஞர் ஆ.கணபதி புலவர் - சுப்புலட்சுமி. சென்னை சாரதா வித்யாலயாவில் பள்ளிப்படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் கல்லூரிப் படிப்பும் முடித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம்முனைவர் பட்டமும் ஆங்கில இலக்கியத்தில் பெற்றுள்ளார். இவரின் கணவர் கவிஞர் பால ரமணி ஆவார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒருமகளும் உள்ளனர்.

படைப்புகள்

கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, திறனாய்வு என இதுவரை பல படைப்புகளைப் படைத்துள்ளார்.

புதினங்கள்

 1. தகனம்
 2. கனவுகள் கைப்பிடிக்குள்
 3. முதல் ஒளிபரப்பு ஆரம்பம்
 4. தாளம் தப்பிய தாலாட்டு

குறும் புதினங்கள்

 1. சிகரம்சிலந்திக்கும் எட்டும்
 2. கதாநாயகி
 3. சாருலதா
 4. வேடிக்கை மனிதர்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

 1. சுருதி பிசகாத வீணை
 2. ரிஷிமு்மனுஷீயும்
 3. தோஷம்
 4. தலைமுறைதாகம்
 5. பெருமூச்சின் நீளம்

கவிதைத் தொகுப்புகள்

 1. புதிய திருப்பாவை
 2. சுயம் பேசும் கிளி
 3. முத்தங்கள் தீர்ந்துவிட்டன
 4. சூரியனை விடிய வைப்போம்
 5. தோகையெல்லாம் துப்பாக்கிகள்

கட்டுரைகள்

 1. பெண் எழுத்து
 2. விடிவைத்தேடி
 3. தேசம் மிச்சமிருக்கும்

விருதுகள்

 1. கவிதைகளுக்காக 2000ம் ஆண்டு கவிஞர் வைரமுத்து விருது
 2. தோஷம் சிறுகதைக்காக லில்லி தேவசிகாமணி விருது
 3. உண்டியல் கதைக்காக பாவலர் முத்துசாமி விருது
 4. கழிவு சிறுகதைக்காக இலக்கியச்சிந்தனை விருது
 5. சுயம்பேசும் கிளி கவிதைத் தொகுப்பிற்காக நாகப்பன் ராஜம்மாள் விருது
 6. துகனம் புதினத்திற்காக காசியூர் ரங்கம்மாள் விருது
 7. அவனின் திருமதி, தீ, தோஷம் சிறுகதைகள் ஆனந்தவிகடன் வைரவிழாவில் 5000ரூ ஒவ்வொன்றும் பரிசு பெற்றன
 8. தினமணி புத்தக கண்காட்சியில் 3000ரூ பரிசு
 9. சாணஅடுப்பும்,சூரிய அடுப்பும் இந்திய அரசின் பரிசு பெற்றது

பட்டங்கள்

 1. நெல்லை இலக்கிய வட்டம் எழுத்துலகச்சிற்பி பட்டம் வழங்கியுள்ளது.
 2. தேனீஇலக்கிய கழகம் கவிச்செம்மல்.

சிறப்புகள்

 1. 2003ல் டிசம்பர் 11 பாரதியார் பிறந்ததின விழாவில் அன்றைய இந்தியக் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் தலைமையில் கவியரங்கத்தில் கவிதை வாசித்தார்.
 2. சாகித்ய அகாதமி பெண்படைப்பாளர் படைப்புகள் தொகுதியில் இவரது சிறுகதை இடம் பெற்றுள்ளது.
 3. பெண்கவிஞர்களின் தொகுப்புநூலான பறத்தல் அதன் சுதந்திரம் தொகுப்பில் இவரது கவிதை இடம் பெற்றுள்ளது.

பாடநூல்களில் படைப்புகள்

 1. வானவில் வாழ்க்கை ஸ்டெல்லாமேரி கல்லூரி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 2. கதாநாயகி கேரளா பல்கலைக்கழகத்தில் பள்ளி இறுதிவகுப்பிற்குப் பாடத்திட்டமாக உள்ளது.
 3. தகனம் திருச்சி ஜெயின்ட்ஜோசப் கல்லூரியில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?