நினைவு நாரில் கனவுப் பூக்கள் (சந்தக் கவிதைகள்)
கவிஞர் சந்தர் சுப்ரமணியன் . தாரிணி பதிப்பக வெளியீடு
மிக அற்புதமான சந்தக் கவிதைகள் படிக்கும்போதே இசை இதயத்திற்குள் ஊற்றெடுக்கும், சொல்லடுக்கு மனதடுக்கை தாவி மேலறும் ஜாலவித்தை இக்கவிதை. இன்றைக்கு இசையோடு கூடிய கவிதை இல்லை என்பாருக்குத் தமிழ் போல் தழைத்து நிமிர்ந்திடுவேன்
என்று நிமிர்ந்து நிற்குது சந்தர் கவிதை. இது சிந்துக்கவிதையா, தேன் சிந்தும் கவிதையா? புதுக்கவிதை போல் சந்தக்கவிதையிலும்
பாடுபொருள் மாற்றம். இஃது ஒரு புரட்சிக்கான தோற்றம். மரபுப்பா புதிய புதிய புத்தாடை கட்டி உலவ வந்தால் யார்தான் பார்க்க மறுப்பார்? மன முதிர்ச்சியும் கருணையும் நிறைந்த கவிஞனின் பூங்காவனம் இது. மரபின் செழுமையை உள்வாங்கிக் கொண்ட எளிய சொற்களைக் கொண்டு புதுப்புதுப் பொருள்களால் ஆன இசைப் பாடல்கள் இவை. சொற்சிக்கனம், அடர்த்தி, செறிவு நிறைந்த உயிர்க்கவிதைகள் இவை.