அம்மாப்பேட்டை அருள்மிகு சுப்ரமணியர் சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி வழி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அக்கோயிலிலுள்ள துர்க்காதேவிக்குச் சிறப்பு வழிபாடுகள் நாள்தோறும் நடைபெற்றுவருகிறது. உற்சவ அம்மன் சிலைக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
துர்க்கை அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம்
ஒவ்வொரு நாளும் ஐந்து வயதிற்குட்டபட்ட சிறுமியைத் துர்க்காதேவிபோல் அலங்கரித்து, அம்மனே நேரில் வந்ததாகப் பாவித்து வணங்குகின்றனர்.