நீர்க்குமிழிகள்
காற்றில்தோன்றிக் கொண்டிருக்கும் போதே
ஒவ்வொன்றாய் உடைந்து.... பின்
மீண்டும் மீண்டும்
தோன்றுவதும்
உடைவதுமான இந்த விளையாட்டு...
யாரும்
மீளமுடியாமல்....
மீட்பவருமில்லாமல்...
மீட்சியற்ற
உலகின் இயக்கம்
இதுதான் என்கிறது
சிலருடைய
நினைவுக்குமிழிகள் போல்...
சில தானாக உடைகின்றன.
சிலவற்றை நாம் விளையாட்டாய் உடைத்து விடுகிறோம்.
அதன் விதியென்னவோ உடைவதுதான்.