குறிஞ்சிக்கலி பாடல் 2
கல்யாண மாலை கொண்டாடும் வேளை......குறிஞ்சி நிலப் பெண்கள், அருவிகளில்
நீராடவும்
, மலர்களைக் கொய்யவும்,
தோழியரோடு வெளியில் சென்று விளையாடவும், தினைப்புனக்
காவலுக்குச் செல்லவும் உரிமை பெற்றவர்கள். குடும்பச் சூழலை உணர்ந்து நடப்பவர்கள். தங்கள்
கற்பொழுக்கத்தைக் காத்துக் கொள்ளும் மாண்புடையவர்கள். தினைப்புனக் காவலின் போது பெண்கள், பறவைகளைப் பரண் மீதிருந்து கவ்ண்கல் வீசி விரட்டுவர். இளைஞர்கள்
தினையை உண்ண வருகிற மான்களையும், யானைகளையும் அம்பினை எய்து விரட்டுவர்.
திணையைக் காவல் காக்கும் பணியில் இவர்கள் ஈடுபடும்பொழுது, ஒருவரை ஒருவர் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.