இன்றைய உணவு
ஒரு வயதில்
மலத்தை நக்கி
வாயி்ல் சப்பியவன்
வளர்ந்தபின் கேட்கிறான்
பீ....ட்சா வாங்கித் தா.
பிடி(பி.டி.) சாபம்
எலிக்கும் குரங்கிற்கும்
கல்லீரல்,சிறுநீரகம்
வெந்தது போதாதா
மான்சாண்டோவே?
நீ பிடி சாபம் கொடுக்க
கொக்கென்று நினைத்தாயோ
இந்தியரை?
ஒரு கத்தரிக்காயும் வேண்டாம்
போ.
டாஸ்மார்க்
மக்களைச் செல்லாக் காசாக்கி
சுண்டி விளையாடும்
அரசியல் விளையாட்டில்
எப்போதும்
பூக்களே விழுகின்றன.
தனிமரம்...
உன்னை
யாரோ அழைக்கிறார்கள்
போ என்றதும் போனாள்
சன்னமல்லி...
குண்டுமல்லி...
ஊசிமல்லி...
வாசலில் நின்று
பூவிற்றவனைக் கண்டு
பெருங்கோபத்துடன்
உள்ளே வந்தவளைப் பார்த்து
“நா சொன்னா மட்டும் அடிக்க வர்றே”
என்ற தம்பியைத் துரத்திய நாட்களை
நினைத்துப் பார்த்துப் பெருமூச்சுவிடுகிறாள்
விக்கிற விலைவாசிக்கு
ஒன்று போதும் என நிறுத்திவிட்ட
மல்லிகா.