Sunday, 16 August 2015
எது சுதந்திரம்?
எது சுதந்திரம்?
பிறரது உரிமையில் தலையிடுவதா சுதந்திரம்?
பிறருக்கும் உரிமை கொடுப்பதே சுதந்திரம்.
விருப்பப்படி எல்லாம் வாழ்வதா சுதந்திரம்?
பிறர் விரும்பும்படி வாழ்வதே சுதந்திரம்.
பிறரை அடிமை கொள்வதா சுதந்திரம்?
பிறருக்கும் சுதந்திரம் கொடுப்பதே சுதந்திரம்.
வாகனத்தில் வேகமாகச் செல்வதா சுதந்திரம்?
கட்டுப்பாட்டுடன் பாதுகாப்பாகச் செல்வதே சுதந்திரம்.
கண்ட இடத்தில் எச்சில் உமிழ்வதா சுதந்திரம்?
கண்கள் இரசிக்கும்படி சூழல்காப்பே சுதந்திரம்.
ஆடை குறைப்பா பெண்களின் சுதந்திரம்?
அறிவும் ஆற்றலுமே பெண்களின் சுதந்திரம்.
கடல்கடந்த முந்தைத் தமிழன் அறிவானா சுதந்திரம்?
வணிகப்பொருட்டு நாட்டை அபகரிக்காததே சுதந்திரம்.
பெற்றோரை முதியோரில்லத்தில் தள்ளுவதா சுதந்திரம்?
பொற்றாமரைப்போல் அவரைக் காப்பதே சுதந்திரம்.
யார்எடுத்துக் கொள்ளலாம் எங்கும் சுதந்திரம்?
கடமை பொறுப்புணர்ந்தோரை தேடிவரும் சுதந்திரம்.
Subscribe to:
Posts (Atom)