பொருட்சுருக்கம்
வள்ளுவர்-சாணக்கியர்-அரசியல்-அரசன்-கல்வி-அமைச்சர்-ஒற்றன்-வார்த்தை-கருத்துகளை
ஒப்பிட்டு ஆராய்தல்.
முன்னுரை
மக்கள் ஒத்து வாழ அரசமைப்பு, அதன் செயல்பாடுகள், கடமைகள், சட்டங்கள், தண்டனைகள் போன்றவை இன்றியமையாதன. முடியாட்சி, குடியாட்சி எவ்வகை
ஆட்சியாயினும் அதை நடத்தக்கூடிய மன்னனை அல்ல தலைவனைப் பொருத்தே அரசு அமைகின்றது.
வள்ளுவரும் சாணக்கியரும் முடியாட்சி காலத்து அரச நிலவரங்களை, நீதிகளைச் சொல்லிச்
சென்றாலும், தற்காலத்திற்கும் அவை பொருந்துகின்றன. வள்ளுவர் வகுத்த வள்ளுவமும், சாணக்கியர் வகுத்த அர்த்த சாத்திரமும் பல கருத்துக்களில் ஒத்துப்போகின்றன.
வள்ளுவர் காலத்தை விட பிற்காலத்தவரான சாணக்கியர் (கி.பி.நான்காம் நூற்றாண்டு)
வள்ளுவத்தையே முதனூலாகக் கொண்டு பல கருத்துகளைக் கூறிச் சென்றுள்ளார் என்று
கூறக்கூடிய அளவிற்கு ஒற்றுமைகள் உள்ளன.