நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday, 20 April 2015

வீரா்களின் நிலை

 வீரா்களின் நிலை

 

இனக்குழு சமுதாயம்,குறுநில அரசாகவும்,பேரரசாகவும் மாறுவதற்காகப் பல போர்கள் நடத்தப்பட்டன. நில எல்லையை மையமிட்டே இவர்களுடைய போர்கள் நிகழ்த்தப்பட்டன. தமக்கு இணங்காத அடிபணியாத குறுநில மன்னர்களையும், அவர்களை ஆதரிக்கும் மக்கள் வாழும் நாட்டையும் அழித்து இல்லாமல் ஆக்குவதற்காக அவர்கள் ஊர்களை எரியூட்டுதல்,வளங்களைச் சூறையாடுதல்,மகளிரை இழிவுபடுத்துதல் உள்ளிட்ட பல செயல்களைச் செய்துள்ளனர். தம்மை எதிர்ப்போரின் கதி இதுவே என்பதை மற்ற மன்னர்கள் உணரவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்துள்ளனர் என்பது வெளிப்படை.

சங்க காலப் போர் முறை – காலமாற்றம்




 சங்க காலப் போர் முறை – காலமாற்றம்



 சங்ககால மக்களில் போர் மரபைப் பின்பற்றிய இருவகை மக்கள் நிலையைக் காண்கிறோம். ஆதிகுடிகள் எனப்பட்ட பழங்குடியினர் எந்த நேரத்திலும் அறப்போர் முறைக்குப் புறம்பாகப் போரிட்டதில்லை. ஆனால் பின்னால் நாடு பிடிக்கும் ஆசையில் பல மன்னர்கள் அறப்போர் முறைக்கு மாறாக செயல்பட்டிருக்கின்றனர். தமிழரின் அறப்போர் முறைக்கு மாறான தன்மைகளையும் சில பாடல்கள் வெளிப்படுதியுள்ளன.   தகடூர் யாத்திரை என்னும் நூல் அதியமானின் மீது நடத்தப்பட்ட  போர் குறித்த ஒரு நூலாகும். முழுதும் கிடைக்காத ஒரு அரிய நூல். இதில் ஒரு மறக்குடி மறவனுக்கும் ஒரு முன்ன்னுக்கும் நடக்கும் உரையாடல் இடம்பெற்றுள்ளது.தன்னுடைய படைபலத்தைக் கொண்டு  எதிரியை வெற்றி பெற முடியாது என்று ஒரு மன்னன் உணர்கிறான். உடனே, படைத்தளபதியாக விளங்கும் மறக்குடி தலைவனை அழைத்து. இரவில் எதிரிப்படையைத் தாக்குமாறு அறிவுறுத்துகிறான். ஆணையிடுகிறான். அம்மறக்குடி மறவன்வேல் படைக்குத் தலைவன். வெறும் கூலி மட்டுமே பெற்று வாழும்  அவன் எப்படிப்பட்டவன் என்பதைக் கீழ்வரும் பாடல் தெரிவிக்கிறது. 

தற்கால உலக அமைதி கொள்கைகளும் சங்கப் புலவர்களும்

 

 தற்கால உலக அமைதி கொள்கைகளும் சங்கப் புலவர்களும்

 

  “போரே இல்லாத சமுதாயம்தான் மிகவும் மேம்பட்ட சமுதாயம் ஆகும், மனிதன் பண்பட்டவன் என்பதைக் காட்டுவதும் ஆகும். போரினால் ஏற்படும் அழிவு ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் இராணுவத்திற்கெனச் செலவிடும் தொகையினை ஆக்கபூர்வச் செயல்களுக்கெனச் செலவிட்டால் உலகில் எங்கும் வறுமையும் கல்வியறிவின்மையும் வேலையின்மையும் போன்ற கொடுமைகளே இருக்கமாட்டா என்பதனை எத்தனையோ சான்றோர்கள் எத்தனையோ விதங்களில் அறிவுறுத்தியுள்ளனர். போர்விதிகள், ஒழுங்குமுறைகள் பற்றிய ஆய்வெல்லாம் இறுதியில் போரற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கே பயன்படவேண்டும் என்கிறார் பேராசிரியர் க. பூரணசந்திரன்.

போரில் தோற்றாலும் பகை வென்றாலும் பகை


 Image result for சங்ககால ஆயுதங்கள்





போரில் தோற்றாலும் பகை  வென்றாலும்  பகை


Image result for அமைதியான உலகம் 
பக்குவப்பட்ட மனதிலிருந்து நல்ல எண்ணங்களே வெளிப்படும்; இது நலம் தரக்கூடிய செயல்களாக மாற்றமடையும். மனதைப் பக்குவப்படுத்தலே புலவர்கள் இவ்வுலகிற்குச் செய்யும் மாபெரும் தொண்டாகும். அரசுகளுக்கிடையே யார் பெரியவர், யார் வல்லவர் என்ற போட்டி மனப்பான்மையே போர் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. இதனால்தான், உள்நாட்டுப் பிணக்குகளாலும், வெளிநாட்டு நெருக்கடிகளாலும் அரசர்களுக்கிடையே போர் தோன்றிக்கொண்டே இருக்கிறது. போர் சிறியதோ, பெரியதோ, போரில் தோற்றாலும், வென்றாலும், பகை மட்டும் என்றும் மறைவதில்லை. இதனால் நாடுகளிடையே அமைதி என்பதும் என்றும் இருப்பதே இல்லை. நாடுகளிடையே அமைதி என்பது மிக அரிதாகவே உள்ளது. மிகமிக அரிதாக எப்போதாவது அமைதி தோன்றுமானால், பின்னர் ஏதாவாதொரு பூசல் தோன்றி அமைதியைக் கெடுத்து மீண்டும் போரை ஏற்படுத்தி விடுகிறது. ஒவ்வொரு அரசும் தன் வலிமையைப் பெருக்கிக் கொள்ளவே விரும்புகிறது. தன் நாடு பெருநாடாக வேண்டும், பேரரசாக வேண்டும் என்பது ஒவ்வொரு அரசின் குறிக்கோளாகவும் இருக்கிறது.ஏகச் சக்கரவர்த்தியாகவாழவே ஒவ்வொரு அரசனும் விரும்புகிறான். இந்தப் பேராசையாலேதான் அரசுகளிடையே அமைதி கெடுகிறது. இதனால்தான் போட்டி, பூசல்,பகை,போர் என்றும் முடிவது இல்லை.