திருவாசக
யாப்பமைதி
கவிஞர்கள் தன் உள்ளத்தெழும் உணர்வுகளை, வெளிப்படுத்தக்கூடிய மொழி வடிவங்களே
இலக்கியங்களாகும். கவிஞர்கள் ஓர் அனுபவத்தை என்பது போது, அவ்வனுபவத்தில் ஆழ்ந்து தோய்கின்ற
நிலையில் அவர்களது உணர்வுகள் ஊற்றெடுத்துப் பாட்டாக வெளிப்படுகிறது. அந்த உணர்வு
சொல் வடிவம் பெறும்பொழுது அது யாப்பு எனப்
பெயர் பெறுகிறது. ‘‘காலத்திற்கு ஏற்ற கருத்துகளையும் சிந்தனைகளையும்
கவிஞர்கள் ஆற்றல் மிக்க மொழிநடையில் வெளியிடுவதற்குக் கருவியாகப் பயன்படும்
செய்யுள் வடிவங்களே யாப்பு எனப் பெயர் பெறும்’’
என்கிறார் அகத்தியயலங்கம் (1983-3) கருத்துக்களுக்கு
ஏற்பவும் உணர்ச்சிகளுக்கு ஏற்பவும் கவிஞர்கள்,
பலவகையான யாப்புகளை இலக்கியத்தில் கையாண்டுள்ளனர்.