புறநானூற்றில் கொங்குநாட்டு வரலாறு
முனைவர் ப.முத்துசாமி தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் -7
பன்னெடுங்காலத்திற்கு முன்னரே மக்கள் நாகரிகமாக
வாழ்ந்த நிலப்பகுதிகளாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் பகுதிகளில் இந்தியாவில்
உள்ள சிந்து சமவெளிப்பகுதியும் ஒன்றாகும். சிந்து சமவெளி நாகரிகம் ஆரியநாகரிகத்திற்கு
முற்பட்டது; அது திராவிட நாகரகம்; அது தமிழ்நாகரிகம்
என்பது ஆய்யவாளர்தம் முடிவாகும். தமிழினம் மிகத்தொன்மையான இனம்; அவர்களின் தமிழ்மொழி மிகத்தொன்மையான மொழி; உலகிற்கே முதல்மொழி; அதுவே உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றெல்லாம்
ஆய்வறிஞர்கள் உறுதியாக மொழிந்துள்ளனர்.