சோழீசர்மல்லைக் கோவை
நூலாசிரியர்-பிள்ளைப் பெருமாள் சிறைமீட்டான் கவிராயரென்பவர்.
இம்மல்லைக் கோவை பாடிய ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் சிறைமீட்டான் கவிராயரென்பவர். பாகை என்னும் ஊரினர். இற்றைக்கு 334 ஆண்டுகளின் முன்பு (கி.பி.1634) வாழ்ந்தவர். இவரியற்றிய வேறு நூல்கள் அர்த்தநாரீசுவரர் சந்திரசேகரமால, கபிலமலைக் குழந்தைக் குமாரர் வருக்கக் கோவை முதலியன. இவர் மல்லசமுத்திரக் காணியாளர்களாகிய விளிய குல வேளாள குலச் செல்வர்களின் * வேண்டுகோளின்படி இந்நூல் இயற்றினார் எனத் தெரிகிறது. இந்நூலாசிரியரின் பெயர்போன்ற பெயர் சோழர்காலக் கல்வெட்டொன்றில் பொறிக்கப்பட்டுள்ளது.