ஒருபானைப் பொங்கல் பலகதைகள் சொல்லும்
ஒருநூறு பலநூறு பலவாறாய்
பிரிந்திருக்கும்
தமிழர் கூட்டம் அத்தனையும் கொண்டாடும்
அனைத்துலகும் கொண்டாடும் நன்றிக்கான
விழா!
செல்லுக்குள் புதைந்து வாழும் மக்களை
செல்லரிக்க விடாமல் அண்ணாந்து சூரியனைப்
பார்க்க வைக்கும் நாளிது நல்லமனிதருக்கு
உழவனை, நினைவில் மீட்டும் திருநாளிது!