தமிழ்வலைப்பூக்களில் தரவுபெயர்வுதிறன் தேவைக்கான
தமிழ் இணையச்சேவை
முன்னுரை
இணைத்தின் மற்றொரு பயன் வலைப்பூக்கள் ஆகும்.
மின்னஞ்சல்., மின்குழு,
இணையதரவு தளங்கள், இணைய
இதழ்கள் வரிசையில் மற்றுமொரு மைல்கல் இணைய வலைப்பூக்கள் ஆகும். இது சில இணைய நிறுவனங்கள் இலவசமாக தம்மிடம் கணக்கு துவங்கியுள்ள
பயனர்களுக்கு வழங்கும் இலவச சேவையாகும். இச்சேவையை
முதன்முதலில் துவங்கிய நிறுவனம் ‘எக்ஸான்யா’
.
ஆகும். 1996ம் ஆண்டில் இச்சேவையை இது தொடங்கியது.
இது இணைய பயனர்களால் பெரிதும்
பயன்படுத்தப்பட்டதால் கூகுள், வேர்ட்பிரஸ் போன்ற நிறுவனங்களும்
இச்சேவையைத் தொடங்கின. தனிநபர் தன் கருத்தை
இணையம் வழி பதிவிட இது சிறந்த தளமாகும். கட்டற்ற
கருட்துச்சுதந்திரம், நேரம்
கிடைக்கும்பொழுது பதிவிடும் வசதி, தம்
கருத்துக்களை, படைப்புகளை, வாழ்க்கை
அனுபவங்களை, பயண அனுபவங்களை, கலைகளை,
புகைப்படங்களை வெளியிட வலைப்பூ மிகச் சிறந்த
இடமாகும். இதைப்படிக்கும் பலரும் தம் கருத்துக்களை வெளியிடவும் வாய்ப்புள்ள
பகுதியாகும். இணையத்தில் காலத்தேவைக்கேற்ப பல இணையச் சேவைகள் பெருகி வந்தாலும்,
பெருகிவரும் பயனீட்டாளர்களுக்கேற்ப மேலும் பல சேவைகள் தேவைப்படுகின்றன.
வலைப்பூக்களின் பெருக்கம் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும்பங்காற்றி வருகிறது. பல
செறிவுள்ள கருத்துக்களைக் கொண்ட ஆய்வுகள் தமிழ் இலக்கியம் சார்ந்து வெளிவருகின்றன.
ஆனால் இவற்றிற்கான ஒருங்கிணைப்பு இல்லை. தரவு பெயர்வுத் திறன் என்னும் இணைய சேவையை
வலைப்பூக்களில் பயன்படுத்தினால் இக்குறையை நீக்கி பல கருத்துச் செறிவுடைய
கட்டுரைகளை
ஒருங்கிணைக்கமுடியும். இணையச்சேவைகளில் ஒன்றான தரவுபெயர்வுத் திறன் குறித்து
ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தரவு கண்டறிதல் , தரவு
பெயர்வு , தரவு சேர்க்கை, தரவு
முழுமை மற்றும் தரவு காப்பு ஆகிய நிலைகளில் தமிழ் வலைப் பூக்களைச் சரியாக கோர்த்து தமிழ் மாலையாக மாற்ற
இந்த ஆய்வுக்கட்டுரை ஒரு முன்னோடியாக இருக்கும்