நாளும் நாளும் ...
டீரிங் டிரிங் .....
தெலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டு இருந்தது. இந்த அர்த்த ராத்திரியில் தொலைபேசி
சத்தம் கேட்டவுடன் பவானிக்குத் தூக்கி வாரிப் போட்டது. யாருக்காவது ஏதாவது
ஆகியிருக்குமா? பக்கத்திலிருந்த கணவருக்குக காது கேட்கவில்லையா? வெளியே ஹாலில் மாமியார் எழுந்து ‘ஹலோ யாரு’ என்று கேட்பது கேட்டது.
குழந்தை இடையில் கவிழ்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. அதன் வலது கை
அவளுடைய நைட்டியினை இறுக்கிப் பிடித்திருக்கிறதா எனக் கையைத் தொட்டுப் பார்த்தாள்.
தூக்கத்தில் துணியை விட்டு விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது.