நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday, 21 December 2014

இன்றைய வாழ்வியலும் தமிழ்க் கவிதைகளும்


 

இன்றைய வாழ்வியலும் தமிழ்க் கவிதைகளும்

இருபதாம் நூ ற்றாண்டில் தொடங்கி வைக்கப்பட்ட புதுக்கவிதையானது, இன்று அனைத்துத் துறைகளிலும் கிளை பரப்பி விரிந்து வளர்ந்திருக்கிறது. சங்க காலத்தில் காதலும் வீரமும் மட்டுமே பாடுபொருளாக இருந்தன. ஆனால் இன்று இந்த அண்டத்திலுள்ள ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு மாற்றமும் ஒவ்வொரு பாதிப்பும் பாடு பொருளாகி இருக்கின்றன.

மேலை அறிஞர் பார்வையில் தமிழ் நம் பார்வையில் அவர்கள்

    

மேலை அறிஞர்  பார்வையில் தமிழ் நம் பார்வையில் அவர்கள்






இந்நூல் 2013ம் ஆண்டு, மதுரைத் தமிழ்ச்சோலை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இது மூன்று பகுதிகளை உடையது. பேராசிரியர் ஆர்டி(Friedhelm Hardy –England), முனைவர் தீக்கன்,(Herman Tieken - German) பேராசிரியர் பியார்தா (Madeleine Biardeau – France)ஆகியோரின் இந்தியவியல்(Indology) குறித்து  ஆய்வுகளை இந்நூலில் பேராசிரியர்தி.முருகரத்தனம் எடுத்துரைத்துள்ளார். 
 
பேராசிரியர் ஆர்டி "இந்தியச் சமயம் ஒன்று அன்று. இந்தியப் பண்பாடு பன்முகத்தன்மை கொண்டது, ஆழ்வார்களது பக்திச் சமயமும் கிருணவமும் ஒரு சமயம், பழந்தமிழ் அக மரபின் பங்களிப்பு உண்டு"  என்றும்
சமஸ்கிருதமயமாக்கலினால் தமிழ்நிலை தாழ்ந்திருப்பது போலத் தென்பட்டாலும், உண்மையில் தமிழ் உச்சி மேல் வைத்து போற்றத்தக்க அக மரபைக் கொண்டிருப்பதாகக் கூறித் தன் ஆய்வு முடிவினை வெளியிட்டுள்ளார். ஆர்டியின் ஆய்வு குறித்தும்,அதன் சிறப்பு குறித்தும் தி.முருகரத்தனம்இந்நூலில் எடுத்துரைத்துள்ளார்.  இந்நூல் ஆர்டி அறிமுகம், இந்தியப் பண்பாட்டின் முகங்கள், கிருணவத்தின் வரலாறு, பக்திச் சமயத்தின் தோற்றம் எங்ஙனம், பழந்தமிழர் வாழ்க்கை, நோக்கும் போக்கும், பழந்தமிழர் தொகை நூல்களின் கால ஆய்வு, கிருஷ்ணன் கதைகள்: வரலாறு, ஆழ்வார்கள் கிருணவம்: எழுச்சியும் தாழ்ச்சியும், கடவுள் பக்தி: இந்து சமயம்-பவுத்த சமயம்:  இன்றைய தமிழரின் பார்வை போன்ற பத்துப்பகுதிகளைக் கொண்டுள்ளது.

. ஹெர்மன் தீக்கன் காணும் பழந்தமிழ் இலக்கிய வரலாறு: புதிய கோலம் புதுப்பிராணிய வருணாசிரம தருமப் பார்வை திரு. ஹெர்மன் தீக்கன் பற்றிய அறிமுகம் போன்றவற்றோடு ஹெர்மன் தீக்கனின் ஆய்வுகளைப் பற்றிய பகுதிகளைக் கொண்டிருக்கிறது.இந்தியச் சமஸ்கிருத மொழியைத் தங்களின் முன்னோர்களின் மொழி எனப் போற்றியவர்கள் வரிசையில் இவரும் ஒருவர். இவரது நூலின் நோக்கம் பழந்தமிழர் இலக்கியங்களானச் சங்க இலக்கியங்கள், கி.பி. 8 (அ) 9ம் நூற்றாண்டில் மதுரை பாண்டியர் அவைக்களத்தில் பாண்டியர் வேண்டுதலுக்கேற்பப் பல புலவர்கள் செயற்கையாக இயற்றியவை என நிறுவவது ஆகும். தமிழின் முதல் இலக்கியம் மகேந்திரவர்ம பல்லவன் இயற்றிய மத்தவிலாச பிரகசனம்என்பதே இவரது முடிவு. பேராசிரியர் தி.முருகரத்தனம் தக்க ஆதாரங்களினடிப்படையில் தீக்கனின் கருத்தை மறுத்து உண்மையை எடுத்துரைத்துள்ளார். 

மேலை அறிஞர் பார்வையில் தமிழ்ப் பேராசிரியர் மெதலீன் பியார்தோவின் தமிழ்ப்பார்வை  .
பிரான்சு நாட்டுப் பேராசிரியையான பியார்தா - இந்து சமயத்தைப் பற்றிப் பல நூல்கள் பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார். தென்னிந்திய சிறு தெய்வ வழிபாடு குறித்து வடமொழி நூல்கள், தொல்லியல், கல்வெட்டுச் சான்றுகளின் வழி எழுதியுள்ளார்.
பியார்தோ தமிழகத்தைச் ‘சிறந்த ஆராய்ச்சிக்கூடம்‘ (‘Great Laboratory’) என்று பாராட்டுவதாகப் பேராசிரியர் கூறுகிறார்.

மூன்று மேலை நாட்டறிஞர்களின் ஆய்வினை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அவர்களின் ஆய்வினை சில இடங்களிலில் ஏற்றுக்கொண்டும், சில இடங்களில் மறுத்தும் தன் கருத்தை பதிவு செய்துள்ள பேராசிரியர் மேலை அறிஞர்களின் ஆழ்ந்த ஆய்வினை, பல மொழி அறிவை தமிழுலகம் பின்பற்றவேண்டும் என்கிறார்.