கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா. . ...
தாய் மகளின் காதலை அறிந்து கொண்டாள். இதனால் காவல் மிகுந்தது. ஏச்சும்
பேச்சும் எழுந்தது. தலைவி, தலைவனைச் சந்திக்க இயலாமல் தவிக்கிறாள். மனம்
புழுங்குகிறாள். காதலினால் வருந்துகிறாள். மேனி வாடிப் போனது. தலைவியின் இத்துயரம்
கண்ட தோழி தலைவனைச் சந்திக்கின்றாள். தலைவியின் நிலையை எடுத்துக் கூறினாள்.
அவனுடைய அருளற்ற கொடுந்தன்மையினால் தலைவி படும் துயரத்தை அறிந்த அவன் ஊர்
சென்றான். தற்போது உற்றாருடன் உரிய முறையில் பெண் கேட்க வந்துள்ளான். இதை தலைவியிடம்
கூறுகிறாள் தோழி.