நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday, 12 December 2013

சிலப்பதிகாரம் -பதிகம்-1.மங்கல வாழ்த்துப் பாடல் முதல் 5.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை


seeko passport size
பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
kannaki broken icon
கண்ணகி சிலை

சிலப்பதிகாரம்

Kannagi main temple
சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகிகோயில்
Kannagi idol
சிதைந்த சிலையின் பகுதிகள்
Kannagi temple entrance
கண்ணகிகோயில் முகப்பு

kannaki root map
சுருளி மலைதான் நெடுவேள் குன்றம்



வழக்குரைத்தல்






 

 


 

 

 

 

 

kannaki rootKannagi complex

நெடுவேள் குன்றம் வரையிலான பாதை

      

சிலப்பதிகாரம்

 

பதிகம்

குணவாயில் கோட்டத்தில் இளங்கோ
குணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,
குடக் கோச் சேரல் இளங்கோ அடிகட்கு-
குறவர் கூறிய விந்தை நிகழ்ச்சி
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி,
‘பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,
ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு,
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்
காதல் கொழுநனைக் காட்டி, அவளொடுஇ எம்


கண்-புலம் காண, விண்-புலம் போயது
இறும்பூது போலும்; அஃது அறிந்தருள் நீ’ என-
உடன் இருந்த சாத்தனார் நிகழ்ந்ததைக் கூறல்
அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன்,
‘யான் அறிகுவன் அது பட்டது’ என்று உரைப்போன்,
‘ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்,
பேராச் சிறப்பின் புகார் நகரத்துக்
கோவலன் என்பான் ஓர் வணிகன், அவ் ஊர்
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு
ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடு உற,
கண்ணகி என்பாள் மனைவி - அவள் கால்
பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டி,
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர்
மாட மதுரை புகுந்தனன். அது கொண்டு                                               20
மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன்
பொன் செய் bhல்லன்-தன் கைக் காட்ட-
""""கோப் பெருந் தேவிக்கு அல்லதை, இச் சிலம்பு
யாப்புறவு இல்லை; ஈங்கு இருக்க"""" என்று ஏகி-
பண்டு தான் கொண்ட """"சில் அரிச் சிலம்பினைக்                            25
கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை"""" என-
வினை விளை காலம் ஆதலின், யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி,
கன்றிய காவலர்க் கூஉய், """"அக் கள்வனைக்
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு"""" என-                                  30
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணுள், நெடுங் கண் நீர் உகுத்து,
பத்தினி ஆகலின், பாண்டியன் கேடு உற,
முத்து; ஆர மார்பின் முலைமுகம் திருகி,
பிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய                                                        35
பலர் புகழ் பத்தினி ஆகும் இவள்’ என-

வினைவிளைவைப் பற்றி விளக்கும்படி அடிகள் கேட்டல்

‘வினை விளை காலம் என்றீர்; யாது அவர்
ஜீனை விளைவு?’ என்ன-
சாத்தனார் தாம் கேட்டதை உரைத்தல்
விறலோய்! கேட்டி;

அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்,
கொன்றை அம் சடைமுடை மன்றப் பொதியிலில்                            40
வெள்ளியம்பலத்து, நள் இருள் கிடந்தேன்;
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
மதுரை மா தெய்வம் வந்து தோன்றி,
""""கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்!
முதிர் வினை நுங்கட்கு முடிந்தது; ஆகலின்,                                       45
முந்தைப் பிறப்பில் பைந்தொடி! கணவனொடு
சிங்கா வண் புகழ்ச் சிங்கபுரத்துச்
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது; ஆகலின்,
வார் ஒலி கூந்தல்! பின் மணமகன் - தன்னை                                        50
ஈர் - ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி,
வானோர் - தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்"""" எனக்
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான்’ என-
அதைக் கேட்ட இளங்கோ கூறல்

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,                     55
உரைசால் பத்தினிக்கு உயர்த்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்’ என-                              60
சாத்தனார் அடிகளை வேண்டுதல்

‘முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது,
அடிகள்! நீரே அருளுக’ என்றற்கு-
நுhலை அடிகள் வகுத்த வகை

அவர்,
மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
மனையறம் படுத்த காதையும், நடம் நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும்,                                                 65
அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையும்,
இந்திர விழவு ஊர் எடுத்த காதையும்,
கடல் ஆடு காதையும்,
மடல் அவிழ் கானல் வரியும், வேனில் வந்து இறுத்தென
மாதவி இரங்கிய காதையும், தீது உடைக்                                                 70
கனுத் திறம் உரைத்த காதையும், வினுத் திறத்து
நாடு காண் காதையும், காடு காண் காதையும்,
வேட்டுவ வரியும், தோட்டு அலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்கு இசை
ஊர் காண் காதையும், சீர்சால் நங்கை                                                         75
ஆடைக்கலக் காதையும், கொலைக்களக் கதையும்,
ஆய்ச்சியர் குரவையும், தீத் திறம் கேட்ட
துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய
ஊர் சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு
வழக்கு உரை காதையும், வஞ்சின மாலையும்,                                        80
அழல் படு காதையும், அரும் தெய்வம் தோன்றிக்
கட்டுரை காதையும், மட்டு அலர் கோதையர்
குன்றக் குரவையும்-என்று, இவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து, வரம் தரு காதையொடு                                                                   85
இவ் ஆறு-ஐந்தும்
ஊரை இடையிட்ட பாட்டு உடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள, மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்.
இது-பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபு-என்.                                         90


















சிலப்பதிகாரம்

முதலாவது

புகார்க்காண்டம்

1.    மங்கல வாழ்த்துப் பாடல்

வாழ்த்தும் வணக்கமும்

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! -
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அம் கண் உலகு அளித்தலான்.

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு                        5
Add caption
மேரு வலம் திரிதலான்.

மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-
நாம நீர் வேலி உலகிற்கு, அவன் அளி போல்,
மேல் நின்று தான் சுரத்தலான்.

பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்!-                10
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

புகார்ச் சிறப்பு
ஆங்கு,
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்,
பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய-                                    15
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்,
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின்,
முடிந்த கேள்வி முழுது உணர்ந்தோரே,
அதனால், -                                                                                         20
நாக நீள் நகரொடு நாக நாடு - அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார் - நகர்.
கண்ணகியின் குலமும் நலமும்
அது - தன்னில்,

மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக் கொம்பர்;
ஈகை வான் கொடி அன்னாள்; ஈர் - ஆறு ஆண்டு அகவையாள்;
அவளும் - தான்,                                                                                 25
போதில் ஆர் திருவிளாள் புகழ் உடை வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.



கோவலனது பெருநலம்

ஆங்கு,                                                                                                   30
பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த
ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்;
வுரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்;
இரு நிதிக் கிழவன் மகன் ஈர் - எட்டு ஆண்டு அகவையான்;
அவனும் - தான்,                                                                                 35
மண் தேய்த்த புகழினன்; மதி முக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினர் ஆயத்துப் பாராட்டி,
‘கண்டு ஏத்தும் செவ்வேள்’ என்று இசை போக்கி, காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான்; கோவலன் என்பான் மன்னே

திருமண செய்தியை அறிவித்தல்

அவரை,                                                                                                   40
இரு பெரும் குரவரும், ஒரு பெரு நாளால்,
முண அணி காண மகிழ்ந்தனர்; மகிழ்ந்துழி,
ஹானை எருத்தத்து, அணி இழையார், மேல் இரீஇ,
மா நகர்க்கு ஈந்தார் மணம்.

கோவலன் கண்ணகி திருமணம்

அவ்வழி,                                                                                                 45
முரசு இயம்பின; முருடு அதிர்ந்தன;
    முறை எழுந்தன பணிலம்; வெண்குடை
அரசு எழுந்ததொர்படி எழுந்தன;
    அகலுள் மங்கல அணி எழுந்தது.
மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து,-            50
நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தர்க் கீழ்,
வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச்
சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்,
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட,
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!

மங்கல வாழ்த்தும் மங்கல அமளியில் ஏற்றுதலும்
விரையினர், மலரினர், விளங்கு மேனியர்,
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர்,                              55
சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலைனியர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக்  குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார்,    60
‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்,
தீது அறுக!’ என ஏத்தி, சில் மலர் கொடு தூவி,
ஆம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினர் - ‘தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை                              65
ஊப்பாலைப் பொன் போட்டு உழையதா, எப்பாலும்
செரு மிகு சினவேல் செம்பியன்
ஒரு தனி ஆழி உருட்டுவோன்’ எனவே.
2.    பனையறம் படுத்த காதை
எழுநிலை மாடத்தின் இடைநிலத்தில் பள்ளிக் கட்டிலின்மீது
கோவலனும் கண்ணகியும் வீற்றிருத்தல்

உரைசால் சிறப்பின், அரைசு விழை திருவின்,
பரதர் மலிந்த, பயம் கெழு, மா நகர்-
முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி,
அரும் பொருள் தரூஉம் விருந்தின் தேஎம்                                 5
ஒருங்கு தொக்கன்ன உடைப் பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட:
குலத்தில் குன்றக் கொழுங் குடிச் செல்வர்,
அத்தகு திருவின் அரும் தவம் முடித்தோர்
உத்தர - குருவின்ஒப்பத் தோன்றிய                                               10
கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன் விதித்தன்ன  மணிக் கால் அமளிசை,
நெடு நிலை மாடத்து இடை நிலத்து, இருந்துழி -

தென்றலைக் கண்டு மகிழ்ந்து, இருவரும் காதல் கைம்மிக, நிலா-முற்றம் போதல்

கழுநீர், ஆம்பல், முழுநெறிக் குவளை,
அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை,                       15
வயல் பூ வாசம் அளைஇ; அயல் பூ
மேதகு தாழை விரியல் வெண் தோட்டு,
கோதை மாதவி, சண்பகப் பொதும்பர்,
தாது தேர்ந்து உண்டு;  மாதர் வாள் முகத்துப்
புரி குழல் அளகத்துப் புகல் ஏக்கற்று;                                              20
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
முhலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த
கோலச் சாளரக்குறுங் கண் நுழைந்து,
வண்டொடு புக்க மண வாய்த் தென்றல்
கண்டு, மகிழ்வு எய்தி, காதலின் சிறந்து,                                         25
விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும்
நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி,

இருவரும் இன்புற்றிருத்தல்

சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி,
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்                                   30
கதிர் ஒருங்கு இருந்த காட்சி கோல,
வண்டு வாய் திறப்ப, நெடு நிலா விரிந்த
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழ,
தாரும் மாலையும் மயங்கி, கையற்று,                                         35
தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை;
கண்ணகியின் நலத்தைக் கோவலன் பாராட்டுதல்
அவயங்களின் அருமையைப் புகழ்தல்

‘குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னொடு உடன் பிறப்பு உண்மையின்,                    40
பெரியோன் தருக - திரு நுதல் ஆக என:
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவம் ஆக ஈக்க:                                                            45
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,
சூதவர் கோமான் தெய்வக் காவல் -
படை நினக்கு அளிக்க - அதன் இடை நினக்கு இடை என:
அறுமுக ஒருவன் ஓர் பெறும் முறை இன்றியும்,
இறும் முறை காணும் இயல்பினின் அன்றே -                           50
அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?

கண்ணகியின் சாயலையும் நடையையும் மொழியையும் புகழ்தல்

மா இரும் பீலி, மணி நிற மஞ்ஞை, நின்
 சாயற்கு இடைந்து, தண் கான் அடையவும்;
அன்னம், நல் - நுதல்! மெல் நடைக்கு அழிந்து,                        55
நல் நீர்ப் பண்ணை நளி மலர்ச் செறியவும்;
அளிய - தாமே, சிறு பசுங் கிளியே -
குழலும், யாழும், அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,
மட நடை மாது! பின் மலர்க் கையின் நீங்காது                       60
உடன் உறைவு மரீ இ ஒருவா ஆயின;

கண்ணகியை அணிசெய்வித்தலும் வேண்டுமோ என்று கோவலன் கூறுதல்

நறு மலர்க் கோதை! நின் நலம் பாராட்டுநர்
மறு இல் மங்கல அணியே அன்றியும்,
பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல் இருங் கூந்தல் சில் மலர் அன்றியும்,                                   65
எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்கொல்?
நான நல் அகில் நறும் புகை அன்றியும்,
மான் மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
திரு முலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்,
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்?                        70
திங்கள் முத்து அரும்பவும், சிறுகு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர்; என் உற்றனர்கொல்?

காதல் மொழிகள்

மாசு அறு பொன்னே! வலம்புரி முத் தே!
காசு அறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!                             75
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
முலையிடைப் பிறவா மணியே என்கோ?
ஆலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னை’ - என்று                     80
உலவாக் கட்டுரை பல பாராட்டி,
தயங்கு இணர்க் கோதை - தன்னொடு தருக்கி,
வயங்கு இனர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள் -

கோவலனும் கண்ணகியும் நடத்திய இல்லறம்

வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கீழத்தி
மறப்பு - அரும் கேண்மையோடு அறப் பரிசாரமும்,                85
விருந்து புறந்தரூஉம் பெரும் தண் வாழ்க்கையும்,
வேறுபடு திருவின் வீறு பெறக் காண,
உரிமைச் சுற்றமொடு ஒரு தனிப் புணர்க்க,
யாண்டு சில கழிந்தன, இல் பெருங்கிழமையின் -
காண் தகு சிறப்பின் கண்ணகி - தனக்கு - என்.                           90

வெண்பா

தூமப் பணிகள் ஒன்றித் தோய்த்தால், என ஒருவார்
காமர் மனைவி னக் கைகலந்து, நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் - மண்மேல்
நிலையாமை கண்டவர் போல் நின்று,

3.    அரங்கேற்று காதை
மாதவியின் நாட்டியப் பயிற்சி

தெய்வ மால் வரைத் திரு முனி அருள,
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்து, சாபம் நீங்கிய
மலைப்பு - அரும் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பில் குன்றச் செய்கையொடு பொருந்திய                                  5
பிறப்பில் குன்றப் பெரும் தோள் மடந்தை
தாது அவிழ் புரி குழல் மாதவி - தன்னை,
ஆடலும் பாடலும் அழகும் என்று இக
கூறிய  மூன்றின் ஒன்று குறை படாமல்,
ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர் - ஆறு ஆண்டில்                                     10
சூழ் கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி -

ஆடல் ஆசான்

இரு வகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து,
பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து,
பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும்,
விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு,                    15
ஆடலும், பாடலும், பாணியும், தூக்கும்,
கூடிய நெறியின கொளுத்தும்காலை-
பிண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில் கையும்,
கொண்ட வகை அறிந்து, கூத்து வரு காலை -
கூடை செய்த கை வாரத்துக் களைதலும்,                                             20
வாரம் செய்த கை கூடையில் களைதலும்,
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்,
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்,
குரவையும் வரியும் விரவல செலுத்தி,
ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னொடும் -                                           25

இசையோன்

யாழும், குழலும், சீரும், மிடறும்,
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி,
தேசிகத் திருவின் ஓசை எல்லாம்                                                             30
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,
பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை -
வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையோன் - தானும்-                                                 35

முத்தமிழ்ப் புலவன்

இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ் முமுது அறிந்த தன்மையன் ஆகி,
வேத்து இயல், பொது இயல், என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நுhல் நன்கு கடைப்பிடித்து,
இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்து, ஆங்கு,                        40
ஆசையா மரபின் அது பட வைத்து,
மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து,
நாத் தொலைவு இல்லா நல் நுhல் புலவனும் -

தண்ணுமை ஆசிரியன்

ஆடல், பாடல், இசையே, தமிழே,
பண்ணே, பாணி, தூக்கே, முடமே,                                                              45
தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து,
கூடை நிலத்தைக் குறைவு இன்று மிகுத்து, ஆங்கு,
வார நிலத்தை வாங்குபு வாங்கி,
வாங்கிய வாரத்து, யாழும், குழலும்,
ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப,                                                           50
கூர் உகிர்க் கரணம் குறி அறிந்து சேர்த்தி,
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை,
சித்திரக் கரணம் சிதைவு இன்று செலுத்தும்
அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும்-

குழலோன்

சொல்லிய  இயல்பினில் சித்திர வஞ்சனை                                         55
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து, ஆங்கு,
ஏற்றிய குரல், இளி என்று இரு நரம்பின்
ஓப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி,
பண் அமை முழவின் கண் எறி அறிந்து,                                                60
தண்ணுமை முதல்வன்-தன்னொடும் பொருந்தி,
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து-ஆங்கு,
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து, வருவது ஒற்றி,
இன்புற இயக்கி, இசைபட வைத்து,                                                       65
வார நிலத்தைக் கேடு இன்று வளர்த்து, ஆங்கு
ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக,
வழு இன்று இசைக்கும் குழலோன் - தானும்-

யாழ்ப் புலவன்

ஈர்-ஏழ் தொடுத்த செம் முறைக் கேள்வியின்
ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி,                                                        70
வன்மையின் கிடந்த தார பாகமும்,
மென்மையின் கிடந்த குரலின் பாகமும்,
மெய்க் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள,
கைக்கிளை ஒழிந்த பாகமும், பொற்பு உடைத்
தளராத் தாரம் விளரிக்கு ஈத்து,                                                              75
கிளைவழிப் பட்டனள்; ஆங்கே, கிளையும்
தன் கிளை அழிவு கண்டு அவள்வயின் சேர,
ஏனை மகளிரும் கிளைவழிச் சேர
மேலது உழையுளி, கீழது கைக்கிளை
வம்பு உறு மரபின் செம்பாலை ஆயது;                                               80
இறுதி ஆதி ஆக, ஆங்கு அவை
பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது,
படுமலை, செவ்வழி, பகர் அரும்பாலை என,
குரல் குரலாகத் தற்கிழமை திரிந்த பின்,
முன்னதன் வகையே முறைமையின் திரிந்து-ஆங்கு,               85
இளி முதலாகிய எதிர்படு கிழமையும்,
கோடி, விளரி, மேற்செம்பாலை என
நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்
இணை நரம்பு உடயன அணைவுறக் கொண்டு-ஆங்கு,
யாழ் மேற்பாலை இட முறை மெலிய,                                               90
குழல்மேல் கோடி வல முறை மெலிய,
வலிவும், மெலிவும், சமனும், எல்லாம்
பொலியக் கோத்த புலமையோனுடன் -

நாட்டிய அரங்கின் அமைப்பு

எண்ணிய நுhலோர் இயல்பினின் வழா அது,
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு,                95
புண்ணிய நெடு வரைப் போகிய நெடுங் கழைக்
கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு,
நுhல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல் அளவு இருபத்து நால் விரல் ஆக,
எழு கோல் அகலத்து, எண் கோல் நீளத்து,                100
ஒரு கோல் உயரத்து, உறுப்பினது ஆகி,
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடை நிலம் நால் கோல் ஆக,
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய,
தோற்றிய அரங்கில் - தொழுதனர் ஏத்த;                    105
பூதரை எழுதி, மேல் நிலை வைத்து;
தூண் நிழல் புறப்பட, மாண் விளக்கு எடுத்து; ஆங்கு,
ஒரு முக எழினையும், பொரு முக எழினியும்,
கரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்து - ஆங்கு;
ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து                110
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி;
விருந்துபடக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து -

தலைக்கோல் அமைதி

பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த
சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு,
கண் இடை நவ மணி ஒழுக்கி, மண்ணிய                    115
நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி,
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆக என
வந்தனை செய்து, வழிபடு தலைக்கோல்
புண்ணிய நல் நீர் பொன்குடத்து ஏந்தி                          120
மண்ணிய பின்னர், மாலை அணிந்து,
நலம் தரு நாளால், பொலம் பூண்ஓடை
அரசு உவாத் தடக் கையில் பரசினர் கொண்டு,
முரசு எழுந்து இயம்ப, பல் இயம் ஆர்ப்ப,
அரை சொடு பட்ட ஐம் பெருங்குழுவும்                        125
தேர் வலம் செய்து, கவி கைக் கொடுப்ப,
ஊர் வலம் செய்து புகுந்து, முன்வைத்து-ஆங்கு -

மாதவியின் நாட்டியம்
மங்கலப் பாடல்

இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்,
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,
வலக் கால் மன் மிதித்து எறி, அரங்கத்து,                    130
வலத் தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி,
இந் நெறி வகையால் இடத் தூண் சேர்ந்த
தொல் நெறி இயற்கைத் தோரிய மகளிரும்,
சீர் இயல் பொலிய, நீர் அல நீங்க,
வாரம் இரண்டும் வரிசையின் பாட,                               135
பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் -
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்.

இசைக் கருவிகள் ஒலித்த முறை

குழல் வழி நின்றது யாழே; யாழ் வழித்
தண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப்
பின் வழி நின்றது முழவே; முழவொடு                       140
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை.



அந்தரக் கொட்டு

ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி,
கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி,
வந்த முறைமையின் வழிமுறை வழாமல்,                    145
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,

தேசிக் கூற்று

மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து,
பாற்பட நின்ற பாலைப்பண் மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து,
மூன்று அளந்து, ஒன்று கொட்டி, அதனை                    150
ஐது மண்டிலத்தால் கூடை போக்கி,
வந்த வாரம் வழி மயங்கிய பின்றை,

மார்க்கக் கூத்து

ஆறும் நாலும் அம்முறை போக்கி,
கூறிய ஐந்தின் கொள்கை போல,
பின்னையும், அம்முறை பேரிய பின்றை,                    155
பொன் இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென,
நாட்டிய நல் நுhல் நன்கு கடைபிடித்துக்
காட்டினள் ஆதலின்,

மாதவி மன்னனிடம் பெற்ற பரிசு
காவல் வேந்தன்

இலைப் பூங் கோதை, இயல்பினின் வழாமை,
தலைக்கோல் எய்தி, தலை அரங்கு ஏறி,                    160
விதி முறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு
ஒரு முறையாகப் பெற்றனள்-

மாதவியின் மாலையைப் பெற்று, கோவலன் அவளுடன் இருத்தல்

‘அதுவே,
நுhறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த,
வீறு உயர் பசும் பொன் பெறுவது; இம் மாலை,                  165
மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு’ என,
மான் அமர் நோக்கி ஓர்கூனி கைக் கொடுத்து,
நகர நம்பியர் திரிதரு மறுகில்,
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த
மா மலர் நெடுங் கண் மாதவி மாலை                                   170
கோவலன் வாங்கி, கூனி - தன்னொடு
மணமனை புக்கு, மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி,
விடுதல் - அறியா விருப்பினன் ஆயினன்-
வடு நீங்கு சிறப்பின் தன் மனை, அகம் மறந்து - என்.        175

வெண்பா

எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும்,
பண் நின்ற கூத்துப் பதினொன்றும், மண்ணின்மேல்
போக்கினாள் - பூம் புகார்ப் பொன் தொடி மாதவி, தன்
வாக்கினால் ஆடு அரங்கின் வந்து.

4.    அந்திமாலைச் சிறப்புச் செய் காதை

மாலைப் பொழுதின் வரவு

‘விரி கதிர் பரப்பி, உலகம் முழுது  ஆண்ட
ஒரு தனித் திரி உரவோன் காணேன்;
அம் கண் வானத்து, அணி நிலா விரிக்கும்
திங்கள் அம் செல்வ யாண்டுன் உளன்கொல்?’ என,
திசை முகம் பசந்து, செம் மலர்க் கண்கள்                    5
முழு நிர் வார, முழு மெயும் பனித்து,
திரை நீர் ஆடை இரு நில மடந்தை
அரைசு கெடுத்து, அலம்வரும் அல்லல்காலை-
கறை கெழு குடிகள் கை தலை வைப்ப,
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி,                10
வலம்படு தானை மன்னர் இல்வழி
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்,
தாழ் துணை துறந்தோர் தனித் துயர் எய்த;
காதலர்ப் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த;
குழல் வளர் முல்லையில் கோவலர் - தம்மொடு       15
மழலைத் தும்பி வாய் வைத்து ஊத;
அறுகால் குறும்பு எறிந்து, அரும்பு பொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற;
எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப,
முல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென -                  20

நிலா - முற்றத்தில் கோவலனும் மாதவியும் களித்திருத்தல்

இளையர் ஆயினும் பகை அரசு கடியும்,
செரு மாண் தென்னர் குலமுதல் ஆகலின்,
அந்தி வானத்து, வெண் பிறை தோன்றி,
புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி,
பான்மையின் திரியாது பால் கதிர் பரப்பி,                    25
மீன் - அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து -
இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல் பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து,
செந் துகிர்க் கோவை சென்று ஏந்து அல்குல்
அம் துகில் மேகலை அசைந்தன வருந்த,                    30
நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா - முற்றத்து -
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து, ஆங்கு;
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி,
கோலம் கொண்ட மாதவி அன்றியும் -



காதலரைக் கூடிய மகளிரின் களி மகிழ்வு

குட திசை மருங்கின் வெள் அயிர் - தன்னொடும்    35
குண திசை மருங்கின் கார் அகில் துறந்து;
கூடமலைப் பிறந்த வான் கேழ் வட்டத்து,
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக;
தாமரைக் கொழு முறி, தாதுபடு செழு மலர்,
காமரு குவளை, கழுநீர் மா மலர்,                                 40
பைந் தளிர்ப் படலை; பரூஉக் காழ் ஆரம்
சுந்தரச் சுண்ணத் துகளொடும் அளைஇச்
சிந்துபு பரிந்த செழும் பூஞ் சேக்கை,
மந்த - மாருதத்து மயங்கினர் மலிந்து, ஆங்கு,
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கி,                     45
காவி அம் கண்ணார் களித் துயில் எய்த -

கணவனைப் பிரிந்து வாழும் கண்ணகியின் துயர நிலை

அம் செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய,
மென் துகில் அல்குல் மேகலை நீங்க,
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்,
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்,                   50
கொடுங் குழை துறந்து வடிந்து வீழ் காதினள்,
திங்கள் வாள் முகம் சிறு வியர்ப் பிரிய,
செங் கயல் நெடுங் கண் அஞ்சனம் மறப்ப,
பவள வாள் நுதல் திலகம் இழப்ப,
தவள வாள் நகை கோவலன் இழப்ப,                           55
மை இருங் கூந்தல் நெய் அணி மறப்ப,
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் -

காதலரைப் பிரிந்த மாதர்களுடைய நிலை

காதலர்ப் பிரிந்த மாதர் நோதக,
ஊது உலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி,
வேனில் - பள்ளி மேவாது கழிந்து,                               60
கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து,
மலயத்து ஆரமும் மணி முத்து ஆரமும்
அலர் முலை ஆகத்து அடையாது வருந்த,
தாழிக் குவளையொடு தண் செங்கழுநீர்
வீழ் பூஞ் சேக்கை மேவாது கழிய,                                 65
துணை புணர் அன்னத் தூவியின் செறித்த
இணை அணை மேம்படத் திருந்து துயில் பெறஅது,
உடைப் பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக் குமிழ் எறிந்து, கடைக் குழை ஓட்டி,
கலங்கா உள்ளம் கலங்க, கடை சிவந்து                    70
விலங்கி நிமிர் நெடுங் கண் புலம்பு, முத்து உறைப்ப -

வைகறை வரையில் காமன் திரிதல்

அன்னம் மெல் நடை - நல் நீர்ப் பொய்கை -
ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரைத்
தாமரைச் செவ் வாய், தண் அறல் கூந்தல்;
பாண் வாய் வண்டு நோதிறம் பாட,                           75
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப;
புள் வாய் முரசமொடு, பொறி மயிர் வாரணத்து
முள் வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப;
உரவுநீர்ப் பரப்பின் ஊர் துயில் எடுப்பி,
இரவுத் தலைப்பெயரும் வைகறைகாறும் -             80
அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சார்,
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி,
மகர வெல் கொடி மைந்தன், திரிதர -
நகரம் காவல் நனி சிறந்தது - என்.

வெண்பா

கூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆய்           
காவலன் வெண்குடை போல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும், கண்ணகிக்கும், வான் ஊர் மதி விரிந்து
போது அவிழ்க்கும் கங்குல் - பொழுது.

5.    இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
சூரியன் உதித்தல்

அலைநீர் ஆடை, மலை முலை ஆகத்து,
ஆரப் பேரியாற்று, மாரிக் கூந்தல்,
கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதை இருள் - படாஅம் போக நீக்கி,
உதைய மால் வரை உச்சித் தோன்றி,                                 5
உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி -

மருவூர்ப் பாக்கம்

வேயா மாடமும்; வியன் கல இருக்கையும்;
மான் கண் காலதர் மாளிகை இடங்களும்;
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன் அறவு அறியா யவனர் இருக்கையும்;                   10
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள்
கலந்து, இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும்;
வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,
பூவம், புகையும், மேவிய விரையும்
பகர்வனர் திரிதரும் நகர வீதியும்;                                         15
பட்டினும், மயிரினும், பருத்தி நுhலினும்,
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும், துகிரும், ஆரமும், அகிலும்,
மாசு அறு முத்தும், மணியும், பொன்னும்,
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா       20
வளம் தலைமயங்கிய நனந்தலை மறுகும்;
பால் வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல விதியும்;
காழியர், கூவியர், கள் நொடை ஆட்டியர்,
மீன் விலைப் பரதவர், வெள் உப்புப் பகருநர்,                      25
பாசவர், வாசவர், பல் நிண விலைஞரொடு
ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும்;
கஞ்சகாரரும், செம்பு செய் குநரும்,
மரம் கொல் தச்சரும், கருங் கைக் கொல்லரும்,
கண்ணுள் வினைஞரும், மண்ணீட்டு ஆளரும்,                30
பொன் செய் கொல்லரும், நன்கலம் தருநரும்,
துன்னகாரரும், தோலின் துன்னரும்,
கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி
பழுது இல் செய்வினைப் பால் கெழு மாக்களும்;
குழலினும் யாழினும், குரல் முதல் ஏழும்,                               35
வழு இன்றி இசைத்து, வழித் திறம் காட்டும்
அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினையாளரொடு
மறு இன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் -

பட்டினப் பாக்கம்

கோ வியன் வீதியும்; கொடித் தேர் வீதியும்;                             40
பீடிகைத் தெருவும்; பெருங்குடி வாணிகர்
மாட மறுகும்; மறையோர் இருக்கையும்;
வீழ்குடி, உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள்வேதரும், காலக் கணிதரும்,
பால் வகை தெரிந்த பல் முறை இருக்கையும்;                         45
திரு மணி குயிற்றுநர், சிறந்த கொள்கையோடு
அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும்;
சூதர், மாகதர், வேதாளிகரொடு
நாழிகைக் கணக்கர், நலம் பெறு கண்ணுளர்,
காவல் கணிகையர், ஆடல் கூத்தியர்,                                          50
பூ விலை மடந்தையர், ஏவல் சிலதியர்,
பயில் தொழில் குயிலுவர், பல் முறைக் கருவியர்,
நகை-வேழம்பரொடு வகை தெரி இருக்கையும்;
கடும் பரி கடவுநர், களிற்றின் பாகர்,
நெடுந் தேர் ஊருநர், கடுங் கண் மறவர்,                                        55
இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும்;
பீடு கெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல் சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும் -

நாள்-அங்காடிப் பூதத்தை மறக் குடி மகளிர் வழிபடுதல்

இரு பெரு வேந்தர் முனையிடம் போல
இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய                                      60
கடை கால் யாத்த மிடை மரச் சோலை,
கொடுப்போர் ஓதையும், கொள்வோர் ஓதையும்,
நடுக்கு இன்றி நிலைஇய நாள்-அங்காடியில் -
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,
‘வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க’ என,                     65
சூதவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடை கெழு பீடிகை -
புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,
பூவும், புகையும், பொங்கலும், சொரிந்து;
துணங்கையர், குரவையர், அணங்கு எழுந்து ஆடி;                   70
‘பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும்
பசியும், பிணியும், பகையும், நீங்கி;
வசியும், வளனும், சுரக்க’ என வாழ்த்தி;
மாதர்க் கோலத்து, வலவையின் உரைக்கும்,
மூதிர் பெண்டிர் ஓதையின் பெயர -                                                   75

பூதத்திற்கு வீரர்கள் உயிர்ப் பலி கொடுத்தல்

மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும்,
பட்டின மருங்கின் படை கெழு மாக்களும்,
முந்தச் சென்று, முழுப் பலி-பீடிகை,
""""வெந் திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க"""" எனப்
பலிக் கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக’ என-                  80
கல் உமிழ் கவணினர், கழிப் பிணிக் கறைத் தோல்,
பல் வேல் பரப்பினர் மெய் உறத் தீண்டி,
ஆர்த்து, களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து,
சூர்த்து, கடை சிவந்த சுடு நோக்குக் கருந் தலை,
‘வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க’ என,                                       85
நல் பலி-பீடிகை நலம் கொள வைத்து, ஆங்கு,
உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து
மயிர்க் கண் முரசொடு வான் பலி ஊட்டி-

மண்டபத்தில் பலிஇடல்

இரு நிப hருங்கின்ர பொருநரைப் பெறஅ,
செரு வெங் காதலின், திருமாவளவன்,                                           90
வாளும், குடையும், மயிர்க் கண் முரசும்,
நாளொடு பெயர்த்து, ‘நண்ணார்ப் பெறுக-இம்
மண்ணக மருங்கின், என் வலி கெழு தோள்’ என,
புண்ணிய திசைமுகம் போகிய அந் நாள்-
‘அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய,                                95
பகை விலக்கியது இப் பயம் கெழு மலை ’ என,
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை,
கொடுவரி ஒற்றி, கொள்கையின் பெயர்வோற்கு,
மா நீர் வேலி வச்சிர நல் நாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்,                                 100
மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும்,
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்,                    105
நுண்வினைக் கம்மியர் காயா மரபின;
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு
மயன் விதித்துக் கொடுத்த மரபின; இவை-தாம்
ஒருங்குடன் புணர்ந்து, ஆங்கு, உயர்ந்தோர் ஏத்தும்
அரும் பெறல் மரபின் மண்டபம்-                       

ஐவகை மன்றங்களில் அரும் பலி இடுதல்அன்றியும்,             110
                                                                             
வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதிக்
கடைமுக வாயிலும், கருந் தாழ்க் காவலும்,
உடையோர் காவலும், ஒரீஇய ஆகி,
கட்போர் உளர் எனின், கடுப்பத் தலை ஏற்றி,                               115
கொட்பின் அல்லது கொடுத்தலீயாது,
உள்ளுநர்ப் பனிக்கும் வெள் இடை மன்றமும்-
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடி,
பழுது இல் காட்சி நல் நிறம் பெற்று,                                              120
வலம் செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்-
வஞ்சம் உண்டு மயல்-பகை உற்றோர்,
நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர்,
அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர்,
கழல் கண் கூளிக் கடு நவைப் பட்டோர்,                                      125
சுழல வந்து, தொழ, துயர் நீங்கும்,
நிழல் கால் நெடுங் கல் நின்ற மன்றமும்-
‘தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்,
அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்,
அறைபோகு அமைச்சர், பிறர் மனை நயப்போர்,                     130
பொய்க் கரியாளர், புறங்கூற்றாளர், என்
கைக் கொள் பாசத்துக்கைப் படுவோர்’ என,
காதம் நான்கும் கடுங் குரல் எடுப்பி,
பூதம் புடைத்து உணும் பூத-சதுக்கமும்-
அரைசு கோல் கோடினும், அறம் கூறு அவையத்து,               135
உரை நுhல் கோடி ஒரு திறம் பற்றினும்,
நாவொடு நவிலாது, நவை நீர் உகுத்து,
பாவை நின்று அழுஉம் பாவை மன்றமும்-
மெய் வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐ-வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ -                                       140

விழாவின் தொடக்கமும் முடிவும் முரசு அறைந்து அறிவித்தல்

வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானைப் ப¨டர்த்தலை ஏற்றி,
வால் வெண் களிற்று-அரசு வயங்கிய கோட்டத்து,
கால்கோள், விழவின், கடைநிலை, சாற்றி-

கொடி ஏற்றம்

தங்கிய கொள்கைத் தரு நிலைக் கோட்டத்து,                            145
மங்கல நெடுங் கொடி வான் உற எடுத்து-

வீதியின் மங்கலத் தோற்றம்

மரகதமணியொடு வயிரம் குயிற்றி,
பவளத் திரள் கால், பைம் பொன் வேதிகை,
நெடு நிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்,
கிம்புரி, பகு வாய்க் கிளர் முத்து ஒழுக்கத்து,                               150
மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரணம் நிலைஇய, தோம் அறு பசும் பொன்
பூரண கும்பத்து, பொலிந்த பாலிகை,
பாவை விளக்கு, பசும் பொன் படாகை,
தூ மயிர்க் கவரி, சுந்தரச் சுண்ணத்து,                                               155
மேவிய கொள்கை வீதியில் செறிந்து - ஆங்கு -
இந்திரனை நீராட்டுதல்

ஐம் பெருங்குழுவும், எண் பேர் ஆயமும்,
அரச குமரரும், பரத குமரரும்;
கவர் பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர்,
இவர் பரித் தேரினர், இயைந்து ஒருங்கு ஈண்டி;                          160
அரைசு மேம்படீஇய, அகநிலை மருங்கில்,
‘உரைசால் மன்னன் கொற்றம் கொள்க’ என,
மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக்கொண்ட
தண் நறுங் காவிரி, தாது மலி பெரும் துறை,                               165
புண்ணிய நல் நீர் பொன்குடத்து ஏந்தி,
மண்ணகம் மருள, வானகம் வியப்ப,
விண்ணவர் தலைவனை விழு நீர் ஆட்டி-

கோயில்களில் வேள்வி

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்,
அறு முகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும்,                           170
வால் வளை மேனி வாலியோன் கோயிலும்,
நீல மேனி நெடியோன் கோயிலும்,
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்,
மா முது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால் -                                           175

கடவுளர் திருவிழா

நால் வகைத் தேவரும், மூ - அறு கணங்களும்,
பால் வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் -

அறவுரை பகர்தல்

அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும்,
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்,                          180
திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால்-

சிறைவீடு செய்தல்

கொடித் தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித் தளை நீக்க அருள் சிறந்து ஒருபால்-

இசை முழக்கம்

கண்ணுளாளர், கருவிக் குயிலுவர்,
பண் யாழ்ப் புலவர், பாடல் பாணரொடு,                                           185
எண்-அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால்-


விழா மகிழ்ச்சி

முழவுக் கண் துயிலாது, முடுக்கரும், வீதியும்,
விழவுக் களி சிறந்த வியலுள் ஆங்கண்-

இளவேனிலும் மலயத் தென்றலும் உலவும் வீதி

காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா
மாதர்க் கொடுங் குழை மாதவி - தன்னோடு                                   190
இல் வளர் முல்லை, மல்லிகை, மயிலை,
துhழிக் குவளை, சூழ் செங்கழுநீர்,
பயில் பூங் கோதைப் பிணையலின் பொலிந்து,
காமக் களி மகிழ்பு எய்தி, காமர்
பூம் பொதி நறு விரைப் பொழில் ஆட்டு அமர்ந்து,                         195
நாள் மகிழ் இருக்கை நாள் - அங்காடியில்
பூ மலி கானத்துப் புது மணம் புக்கு,
புகையும் சாந்தும் புலராது சிறந்து,
நகை ஆடு ஆயத்து நல் மொழி திளைத்து,
குரல் வாய்ப் பாணரொடு, நகரப் பரத்தரொடு,                                 200
திரிதரு மரபின் கோவலன் போல,
இளி வாய் வண்டினொடு, இன் இளவேனிலொடு,
மலய மாருதம் திரிதரு மறுகில் -

வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்

கரு முகில் சுமந்து, குறு முயல் ஒழித்து - ஆங்கு,
இரு கருங் கயலோடு இடைக் குமிழ் எழுதி,                                      205
அம் கண் வானத்து அரவுப் பகை அஞ்சி,
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்! -
நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின்
சீர் வாய் துவலைத் திரு நீர் மாந்தி,
மீன் ஏற்றுக் கொடியோன், மெய் பெற, வளர்த்த,                             210
வான - வல்லி வருதலும் உண்டுகொல்! -
‘இரு நில மன்னற்குப் பெரு வளம் காட்ட,
திருமகள் புகுந்தது இச் செழும் பதி ஆம்’ என,
எரி நிறத்து இலவமும், முல்லையும், அன்றியும்
கரு நெடுங் குவளையும், குமிழும், பூத்து, ஆங்கு,                          215
உள்வரிக் கோலத்து உறு துணை தேடி,
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்!-
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி,
பல் உயிர் பருகும் பகு வாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்து, தன் அரும் தொழில் திரியாது,                    220
நாண் உடைக் கோலத்து நகை முகம் கோட்டி,
பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி,
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு! -என,
உருவிலாளன் ஒரு பெரும் சேனை
இகல் அமர் ஆட்டி, எதிர் நின்று விலக்கி, அவர்                               225
எழுது வரிக் கோலம் முழு மெயும் உறீஇ,
விருந்தொடு புக்க பெரும் தோள் கணவரொடு -


மனை புகுந்த ஆடவர் தம் மனைவியரின்
ஊடலைத் தீர்க்க அறியாது நடுங்குதல்

உடன் உறைவு மரீஇ, ஒழுக்கொடு புணர்ந்த,
வடமீன் கற்பின், மனை உறை மகளிர்;
‘மாதர் வாள் முகத்து, மணித் தோட்டுக் குவளைப்       230

போது புறங்கொடுத்துப் போகிய செங் கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின், யாவதும்
மருந்தும் தரும் கொல், இம் மா நில வரைப்பு?’ என,
கையற்று நடுங்கும் நல் வினை நடு நாள்-

கண்ணகிக்கும் மாதவிக்கும் கண் துடித்தல்

உள்ளக நறுந் தாது உறைப்ப, மீது அழிந்து,                    235
கள் உக நடுங்கும் கழுநீர் போல;
கண்ணகி கருங் கணும், மாதவி செங் கணும்,
உள் நிறை கரந்து, அகத்து ஒளித்து, நீர் உகுத்தன;
எண்ணு முறை, இடத்தினும் வலத்தினும் துடித்தன-
விண்ணவர் கோமான் விழவு நாள் அகத்து - என்.                    240

2 comments:

  1. What was cause behind every happening , why kovalan only became culprit or victim ,like kovalan and kanagi , how many lifes are spoiled are being spoiled from the very ancient times ( no one is blamed , blamed is the system of karmas ). what would had been the cause behind kannagi and kovalan story as if shown in the agaytiar movie agaytiar curses jaindran , and urvashi to born in the city of poompuhar .were jai indran with urvashi affairs wrong . who was jai indran , and who was urvashi .

    person the indra was accused by the great gods , the link given below

    http://www.speakingtree.in/public/spiritual-blogs/ seekers/faith-and-rituals/bgupta#commentlist

    was jaiindra , his real son . in agaytiar movie agaytiar says to jai indra , jaiindra you born to indra and you have not understand me .

    in dasavataram old movie,durvasa rishi curses to indra story might had link ,
    https://www.youtube.com/watch?v=FesZ3592YHg
    poompuhar 's story and history is match able to the story shown in agaythyiar movie -- as agaythiar curses --
    https://www.youtube.com/watch?v=Qh4_NTH_qW0&featur e=related

    crores and crores of peoples are being killed ,destryoed in such a way no one can find out , and given different shapes and made to bad brains and minds ,
    genetical deshaped and disorded to lusty and bad brains and bad minds .
    are made from single soul to multy humans souls to suffer and painful
    creatures to never become humans and buried alive under earth and even
    killed into stomaches and made to toilets and throughn into hells like
    toilets---

    ReplyDelete
  2. Kannagi's anklet was filled of diamonds and queen anklet was of pearls and in look were similar .
    why the in story why ankets were compared .
    compare shows in , diamonds and pearls , the kannagi would had been the very elder to the queen .
    some mishappenings would had been taken in very past and the stories would had been going on birth by birth..



    realy how many kannagi stories would had been created





    Kannagi story was repeated again in the ambala under earth , this time also great cruilities happend on kannagi ,

    if i am not wrong , kannagi , is the daughter or sister of great and ancient god .
    why the cruilities and mishappenings were and are happening again and again , what is the wrong with peoples and peoples went of wrong wisdom and misbehavings and bad acts ..
    and peoples are beaten very badly and broken and even buried alive by the great gods and goddesses and great humans .

    -----------------------------------------------------------------------

    Draupady , ganga ,kannagi , bhooma devi , saraswaties . sitas , and other devies and other good peoples were always and again and again insulted and were victim of cruielties and crimes .and girls like taraka(tataka) and her mother and her souls were accused and culprits and of cruilities ,why could not become good humans and peoples like others . why peoples became so bad and wrong even girl and ladies insulted ladies ,

    Was kunti and kunti's humans and other souls were real cuilprits , in the 2012 ,13 ,2014 were beaten and killed very badlly by the gods like bharama , guru bhiraspati ,dakshina moorti , two goddess might be ganga and draupadi and other gods like may be ram ,krishna , and others .of many mahabharata story of one kunty was mother of human of taraka or taraka sister .according to one story draupadi was boon/cursed by shiva of five husdands . kunti and kunti's humans and other souls would had been culprits or guilty of revenges .


    Were putana , who tried to kill krishna by making drink milk and other women ,like holika ,who tried to burn krishna and other womens and others were culprits or were became the cuplprits of wrong and bad traditions or bad karmas of karmas or some other traditions


    Why krishna ,rama ,shiva and others mahans elder peoples were good peoples and indras and others peoples were bad
    crores and crores have been destroyed and are being buried alive under earths , throughwn into hells and made landless ,
    why others peoles could not become good humans and good peoples

    who were those peoples , which has been and being killed ,destroyieded ,
    whose generations were , why were bad peoples , were really bad , why
    could not became good peoples ,

    Were rama and ravana were
    enemy ? , if i am not wrong rama shakti and murgan and veerbhadra are
    same avatars .(savarupnaga , ravana sister and sita might had been the close
    relative) .
    which peoples would had some wrong and intercaste marrages . intercaste marrages would had been the cause of quarrels there would had been great conspirancies to kill the peoples. which were from the westren and south westron parts of himayalas .in many stories of dakasa prajapati story also many wrong and multy wifes and mishappenigs happened . ( peoples which had to make lifes good and better , used the criminals ,enemities and wrong ideas and methods for spoiling and destroying the lifes )


    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?