நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday, 12 December 2013

பெண்கள் அறிவியலின் கண்கள்





பெண்கள் அறிவியலின் கண்கள்


முன்னுரை



         அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரான அறிவாற்றலையே பெற்றுள்ளனர். எனினும், பெண், கல்வி கற்கப் பலவிதமாகத் தடுக்கப்படுகிறாள். விரும்பியதைப் படிக்கவோ, வேலைக்குச் செல்லவோ இயலாத நிலை உள்ளது. அது மட்டுமின்றி வீட்டில் அதிகமான வேலை சுமை சுமத்தப்படுவதால், தனக்கான நேரமோ, தனது திறன்களை வளர்க்கப் போதுமான வாய்ப்போ இல்லாமல் ஆக்கப்படுகிறாள். எனினும் தனக்குரிய ஆற்றலை பல்வேறு வேலைகளிலும் அவள் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறாள். அவை பெரிதாகப் பேசப்படாமலும், வெளிப்படாமலுமே இருந்து வருகிறது. மேலும் பெண் குறித்த ஆண்களின் பார்வை ‘பெண் ஒரு அறிவற்ற பலவீனமான இனம்’ என்பதாகவே உள்ளது. ஏனவேதான் புதிய இயந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் ஆண்களே கையாள வல்லவர் என்று கருதப்பட்டு, ஆண்களுக்கே பெரிதும் அறிவியல் தொழில்நுட்பத் திறன்களைக் கற்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. எனவே, பெண்களுக்கும் அறிவியலுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருப்பதாக கருத்தியலே உலவி வருகிறது.

    ஆனால், மறுபுறம், கணினி தொலைக்காட்சி சாதனங்களுக்குரிய புதிய தொழில்நுட்பக் கருவிகளின் உற்பத்தியில் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். நுட்பமான பணிகளைப் பொறுமையுடன், குறைந்த ஊதியத்தில் கேள்வி கேட்காமல் செய்யக் கூடியவர்கள் பெண்களே என்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் ஏழைப் பெண்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதுபோன்ற சலிப்பூட்டக்கூடிய இயந்திரமயமான வேலைகளை மிகக் குறைந்த ஊதியத்தில் செய்வதற்கு பெண்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர் என்றே கூறலாம்.
    எனினும், பெண் உரிமை இயக்கங்களும், முற்போக்கான ஆடவரும் இந்நிலையை மாற்றி வருகின்றனர். இன்று, உயர்கல்வியிலும், ஆராய்ச்சியிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரான அளவில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.
சாதம் வடிக்கவும் சரித்திரம் படைக்கவும் பெண்கள்
    அறிவியல் தொழில்நுட்பத்தின் ஆரம்ப வளர்ச்சி சமையற் கலையிலிருந்தே தோன்றியிருக்கக் கூடும். பண்டைய நாளிலிரு¦நதே பெண்கள் சமையற் கலையில் பல தொழில்நுட்பங்களை கையாண்டு வந்துள்ளனர். அவற்றில் சில.
எ    எளிதில் வேகாத உணவு தானியங்களான பருப்பு வகைகளில் விளக்கெண்ணெய் முதலான குறைந்த (ph)அடர்த்தியுடைய எண்ணெய்களைச் சேர்த்து விரைவாக சமைக்கும் முறையை வேதியியலாளர் (liquid-water system ) என்று கூறுகின்றனர்.
எ    பித்தளைப் பாத்திரங்களை துலக்க புளியைப் பயன்படுத்தும் முறையை
(acid -base reaction )என்கின்றனர்.
எ    தயிர் உறைதல் முறையை நொதித்தல் (fermantation) என்கின்றனர்.  இதுபோன்றே தம்மை அறியாமலே பல அறிவியல் தொழில்நுட்பங்களைப் பெண்கள் தம் பணிகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
இலக்கிய ஆதாரம்
    தமிழர்கள் கூறும் 64 வகையான கலைகளில் பெரும்பாலான கலைகள் தொழில்நுட்பம் சார்ந்தவையே ஆகும். இக்கலைகளில் பெரும்பாலானவை பெண்களுக்குரியவை. முணிமேகலையில் மாதவி அறிந்திருந்ததாகவும், சீவக சிந்தாமணியில் சுரமஞ்சரி அறிந்ததாகவும் கூறப்படும் பல கலைகள் தொழில்நுட்பக் கலைகளே.
உலக பெண் ஆதாரம்
    நம் நாட்டில் மட்டுமின்றி, உலக அளவிலும் அறிவியல் தொழில்நுட்பத்தில் பெண்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கி.பி.250 வரை அலெக்ஸாண்டிரியா நகர் உலக அறிவாளிகளின் மையமாகக் கருதப்பட்டது. அங்கு வாழ்ந்த தாலமியின் கண்டுபிடிப்புகளையும், கருவிகளையும் குறித்த விமர்சனக் குறிப்புகளை எழுதியவர் ஹைபியா என்ற பெண். இவர்தான் உலகிற்குத் தெரிந்த முதல் பெண் வானவியல் அறிஞர் (கி.பி.375-415) ஆவார். இவரது குறிப்புகள் அரேபியர் படையெடுப்பால் கி.பி. 640ல் அழிக்கப்பட்டு விட்டது. உலக அழகி கிளியோபாட்ரா 9 மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்ததோடு, கணித, உயிரியல், வேதியியல் நுட்பங்களோடு, மருந்துகள் தயாரிப்பு பற்றிய அறிவினையும் பெற்றிருந்தார் என்று கூறுவர். அறிவோடு கூடிய அழகே மதிக்கப்படும் என்பதற்கு கிளியோபாட்ரா சிறந்த உதாரணமாகும்.
பெண் விஞ்ஞானிகள் குறித்த நுhல்கள்
‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ என்ற பாரதியின் கூற்றை நிரூபிக்கும் வகையில் உலகெங்குமுள்ள பெண்கள், அறிவியல் துறையில் ஆண்களுக்கு நிகராக உயர்ந்துள்ளனர். பெண் விஞ்ஞானிகள் குறித்து உலகெங்கும் வெளிவந்துள்ள நுhல்களே இதற்குச் சான்றாகும். ஆவற்றில் சில.

Janaki Ammal.jpg
Computer scientist Sanghamitra Bandyopadhyay
Computer scientist Sanghamitra Bandyopadhyay

Computer Scientist Sangamithra     and        INDIAN ROCKETRY scientist Anna Mani       and
Janaki Ammal Edavaleth Kakkat was an Indian botanist

1.        Haber. Louis. Women Pioneers & Science
2.       Stille, Darlene R. Extraordinary women scientists.
3.       Emberlin, Diane Contributions of women to Science.
4.       MC Graifna, Sharon Bertsch Nobel Prize women in science
5.       Yount, Lisa Twentieth Century women Scientists.

இவை தவிர, பெண் விஞ்ஞானிகள் எழுதியுள்ள நுhல்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டு வெளிவந்துள்ளன என்பதிலிருந்தே பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கையை உணரலாம்.
இந்தியப் பெண் விஞ்ஞானிகள்
    இந்தியத் திருநாட்டைப் பொறுத்த அளவில் 1875 வரை பெண்களுக்கு மெட்ரிக் தேர்வு எழுத அனுமதி இல்லை. 1977ல் தான் கல்கத்தா மற்றும் பம்பாய் பல்கலைக்கழகங்கள் அனுமதி வழங்கின. எனினும், மருத்துவக் கல்வி போன்ற உயர்கல்விகளுக்கான அனுமதியை 1883ல் தான் வழங்கின. 1978 வரை லண்டன் பல்கலைக்கழகங்களும் பெண்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதுமே உயர்கல்வி பெண்களுக்குத் தாமதமாகவே வழங்கப்பட்டது. அனுமதி பெற்ற பின்,
எ    1896ல் புவியியல் துறையில் பம்பாய் பல்கலைக்கழகத்தில் சோரப்ஜி ஆலிஸ் முன்டே என்பவர் பி.எஸ்.ஸி. பட்டம் பெற்ற இந்தியப் பெண் ஆவார். அப்போது இந்திய அளவில் 7 ஆண்களே இப்பட்டம் பெற்றிருந்தனர்.
எ    1920-1933 வரை 5 பெண்கள் எம்.எஸ்.ஸி. பட்டம் பெற்றிருந்தனர். 1934ல் இயற்பியல் துறையில் இப்பட்டம் பெற்ற முதல் பெண் மைனா மாதவ் பராஞ்சியே ஆவார். இவர் பின் லண்டன் சென்று பி.எச்.டி. பட்டம் பெற்றார்.
எ    1942-1947ல் 5 பெண்கள் பி.எச்.டி. பட்டம் பெற்றிருந்தனர். அவர்கள் கே.வி. காந்தக், இராதா கே அய்யர், ஆலிவ் ஜோசப், டாடா நானாவதி, மாலினி வர்தே போன்றவர்களாவர். இந்தியாவைப் பொறுத்தளவில் 1942ற்குப் பிறகு இவ்வெண்ணிக்கை கூடியது என்றே கூறலாம்.
இவ்வாறு பட்டம் பெற்று உயர்கல்வியில் ஆராய்ச்சி செய்த இப்பெண்கள் தங்கள் அறிவாற்றலை இச்சமூகத்திற்கு வழங்கியுள்ளனர்.
இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு
எ    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்ணாகிய டாக்டர் கமலா சோஹானி, பம்பாய் இராயல் விஞ்ஞானக் கழகத்தின் முதல் பெண் இயக்குநருமாவார். உணவு கலப்பட சோதனைக் கருவியை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.
எ    டாக்டர் கமல்ரணதிவே புற்றுநோய் மற்றும் தொழுநோய் ஆய்வில் ஈடுபட்டு ‘செயல்முறை உயிரியல்’ என்ற புதுப்பாடப் பிரிவை அறிமுகப்படுத்தினார். சுற்றுப்புறச் சூழல் கேட்டால் வரும் புற்றுநோய், செல்லியல், சோதனை முறையிலான புற்றுநோய்த் தோற்றவியல், புற்றுநோய்த் தடுப்பியல், கதிரியக்க முறை போன்ற துறைகளில் இவர் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக ‘பத்ம பூஷன்’ விருது பெற்றார்.
எ    டாக்டர் இராதா பந்த் உயிர் வேதியியலில் சிறந்த ஆய்வு மேற்கொண்டவர்.
எ    சாந்தா காந்தி தாவரவியலில் உயர் ஆய்வு மேற்கொண்டவர்.
எ    டாக்டர் மாலதி பைச்வால் தொழில்நுட்ப முறையில் மருந்துகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
எ    டாக்டர் மாதுரி பென்பவசார் காயங்கள் தொடர்பாக பி.எச்.டி பட்டம் மேற்கொண்டார்.
எ    டாக்டர் லிலிபென் தேசாய் வேதியியலில் பி.எச்.டி பட்டம் பெற்றார்.
எ    டாக்டர் ஸ்மிதா ராய் முளைவிட்ட தானியங்களிலுள்ள நிகோடினிக் திராவகத்தின் ஊன்ம ஆக்க சிதைவு மாறுபாட்டு அம்சங்களை குறிப்பாக ஊட்டச்சத்து குறித்து ஆய்வு செய்தார்.
எ    மேற்குறிப்பிட்ட விஞ்ஞானிக்கு தந்தை எதிர்ப்பும், குடும்ப வறுமையும் இருந்தபோதிலும், துணிந்து நேருவிற்கு கடிதம் எழுதி உயர்கல்விக்கான உதவியைப் பெற்றார். தனக்குத் தெரிந்த தையல் தொழிலை மேற்கொண்டே, நுhல்களை கடன் வாங்கி, அகதிகள் முகாமில் தங்கி, தெருவிளக்கில் படித்து முன்னேறினார். பாபா அணுசக்தி நிறுவனத்தில் பணியேற்று புரோட்டின் வேதியியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டார்.
இவ்வாறு, பெண் விஞ்ஞானிகள் ஆண்களுக்குச் சிறிதும் சளைத்தவர்கள் இல்லை என்று அனைத்து துறைகளிலும் ஆய்வு மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
    இந்திய விண்வெளி தொழில்நுட்பக் கழகத்திலும் பெண்களின் பங்களிப்பு ஆண்களுக்கு நிகராக உள்ளது. ஐளுசுடீ எனப்படும் இவ்வமைப்பில் பணியாற்றும் பெண்கள் மொத்தம் 300 பேர். தொழில்நுட்பப் பிரிவில் விஞ்ஞானிகளாக 168 பேரும், நிர்வாகத்துறையில் 123 பெண்களும், துசுகுல் 9 பெண்களும் பணியாற்றுகின்றனர். அங்குள்ள ஆண், பெண் உள்ளிட்ட 2485 பணியாளர்களில் பெண்களின் விழுக்காடு 16.6ரூ சதவீதமாகும்.
உலக அளவில் அறிவியல் துறையில் பெண்கள்
    உலகரங்கின் பல நாடுகளில் பெண்கள் ஆண் ஆதிக்கத்தின் அடிமைகளாகவே நீண்ட காலம் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். எனினும், சிறுபான்மை பெண்கள் தடைகளை உடைத்துக் கொண்டு அனைத்துத் துறைகளிலும் தங்கள் ஆற்றலை, வல்லாண்மையைக் காட்டி புகழ் பெற்று விளங்குகின்றனர். அவ்வாறு விளங்கும் பெண்கள் பற்றியும், அவர்களின் அறிவியல் பங்களிப்பு பற்றியும் இனிக் காண்போம்.
எ    கிறிஸ்டினா ஆலன், காட்டுச் சூழலியல் பாதுகாப்பு ஆய்வில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.
எ    மாந்தா அஸ்னார் மெக்ஸிகோவின் ஆபத்தான எரிமலைகளில் தங்கி ஆய்வினை நிகழ்த்தி எரிமலை குறித்த அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளை வழங்கினார்.
எ    ஜீடித் பெர்னால்ட் கடலியல் ஆய்வினை நிகழ்த்தி வெள்ளைச் சுறா குறித்த அரிய தகவல்களை அளித்தார். இச்சுறாப் பற்றிய ஆய்வினை உலகில் 12 நபர்கள் மட்டுமே மேற்கொண்டிருந்தனர்.
எ    பார்பரா பாண்ட் தாவர உயிரியல் ஆய்வில் மரத்தின் உச்சிக் கிளை வரை நீர் எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறதென்பதையும், ஒரு காட்டிற்குத் தேவைப்படும் நீர் அளவு பற்றியும் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.
எ    ஆன் பௌலஸ் பாலைவன உயிரினங்களின் கேட்பு ஒலி அளவைக் கண்டறிந்தார்.
எ    ராசெல் பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள், அதைத் தடுக்கும் முறைகளையும், நிஸ்டாடின் என்ற பூஞ்சை எதிர்ப்பு மருந்தையும் கண்டுபிடித்துள்ளார்.
எ    ஜேசெலின் பெல்பர்னெல் விண்வெளியிலிருந்து வரும் சில அதிர்வலைகளின் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதை கண்டறிந்தார்.
எ    யுஜெனிக் கிளார்க் என்பவர் விஷ மீன்கள் குறித்தும், புதிய வினோத வடிவ மீன்கள் குறித்தும் அரிய தகவல்களை வெளியிட்டார்.
எ    மேரி க்யூரி கதிரியக்க ஆய்வில் வெற்றிக் கொடி நாட்டினார்.
எ    சில்வியா இயர்லே சுறா, ஈல் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்.
எ    டயான் பாஸி, மனிதர்கள் செல்ல இயலாத மலைகளின் மேல் வாழும் வெள்ளி முதுகு கொண்ட 800 பவுண்டு எடையுடைய கொரில்லாக்கள் பற்றிய ஆய்வினை தனியாக மேற்கொண்டு சாதனைகள் நிகழ்த்தியுள்ளார். ஜேன் குடால் சிம்பன்ஸி பற்றிய ஆய்வினை 35 வருடங்கள் அவைகளோடு அவைகளாகவே வாழ்ந்து அரிய தகவல்களை உலகிற்கு அளித்தார்.
எ    ஆலிஸ் ஹாமில்டன், தொழிற்சாலை நச்சுகளைப் பற்றி 25 வருடங்களாக உலகளவிலுள்ள பல தொழிற்சாலைகளில் ஆய்வினை நிகழ்த்தி உலகளவில் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
எ    கரன் தேஜிங்கா என்பவர் தென் அமெரிக்காவிலும், அமேசான் காடுகளிலும் முதலை பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். லூயிஸ் ஹோஸ், அமெரிக்காவிலுள்ள காற்று நுழைய முடியாத அடர் குகைகளில் வாழும் விலங்குகளின் வாழ்வியலை ஆராய்ந்து சூழலியல் பற்றியும், புதிய மருத்துவ முறைகளையும் கண்டறிந்து வெளியிட்டுள்ளார்.
எ    கிராஸ் ஹோப்பர், இன்றுள்ள கணினியின் அடிப்படை மொழிக் கட்டமைப்பை வடிவமைத்துக் கொடுத்தவராவார்.
எ    மார்க்ரெட் குமட், தெற்கு பசிபிக் தீவுகளில் வாழும் ஆதிப்பழங்குடியினர் குறித்து மேற்கண்ட ஆய்வு மானிடவியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
எ    ஆன்னா ரூஸ்வெல்ட் அமேசான் மழைக்காடுகளை ஆராய்ந்து மனித இடப்பெயர்வு குறித்து ஆய்வு செய்தார். ஆப்பிரிக்காவிலிருந்த மனித இனம் ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு பரவிய நிலை குறித்து அரிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
எ    ப்ளோரன்ஸ் சாபின், இரத்த அணு குறித்தும், கருவளர் மாற்றம் குறித்தும் ஆராய்ச்சி செய்துள்ளார். கன்டஸ்பெர்டி மனித மூளையில் ஏற்படும் நுட்பமான வலிகளை நீக்கும் மருந்துகளைக் கண்டறிந்தார். ஹாலிஸிசான்பை/மூளை நரம்பியல் பற்றிய ஆய்வில் கூஆளு முறையைப் பயன்படுத்தி மன அழுத்தம், மன இறுக்கம் முதலான மன நோய் தீர்வு வழிகளை உலகிற்கு அளித்தார்.
எ    சானான் லூசிட் விண்வெளியில் பல வருடங்கள் தங்கி விண்வெளிக் கப்பல், மற்றும் விண்வெளி நிலையங்கள் அமைப்பதற்கான தொழில்நுட்பங்களைக் கண்டறிந்தார். வேரா கூப்பர் ரூபின், நட்சத்திரம் மற்றும் பிரபஞ்ச இயக்கங்களை ஆராய்ந்து இதுவரை வெளிவந்துள்ள வானியல் விதிகளில் உள்ள பல தவறுகளை சுட்டிக்காட்டி அவற்றை நிரூபித்து புதிய ஆய்விற்கு வழிவகுத்தார். சின்-சூயிங் வூ என்பவர் புதிய நியூக்ளியர் ஆய்வினை நிகழ்த்தி நியூக்ளியர்கள் ஓரியல்புத் தன்மை உடையவை என்ற கருத்தை தகர்த்தார். லிஸி மெயிட்னர் செயற்கைக் கதிரியக்கத் தனிமங்களை உருவாக்குவதில் ஈடுபட்டு வெற்றி கண்டார்.
எ    சின்டி லீ வான்டவர், கடலுக்கு அடியில் 15,000 அடிக்குக் கீழே ஆராய்ச்சி செய்து, சூழலியல் குறித்தும் நிலவியல் குறித்தும் பல அரிய நுட்பங்களை வெளியிட்டார். ரூத் பாட்ரிக், உலகிலுள்ள 900க்கும் மேற்பட்ட ஆறுகளை ஆராய்ந்து ஆறுகளைக் கழிவுகளிலிருந்து காக்க வேண்டிய அவசியத்தையும், காக்கும் முறைகளையும் எடுத்துரைத்தார்.
எ    ஜேன் கிரிக் வால்டர் ஆப்பிரிக்காவில் 3.5 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மனிதனின் பாத படிமங்களைக் கண்டறிந்ததோடு, 17 புதிய அறியப்படாத இன விலங்குகளைக் குறித்தும் படிமங்களையும் உலகிற்கு வெளிப்படுத்தினார்.
எ    அன்னி வானெகா, காசநோய் குறித்து நவாஜோ பழங்குடி இன மக்களிடம் எடுத்துரைத்து அவர்களை நவீன மருந்துகளை ஏற்க வைப்பதில் வெற்றிகண்டார். இதன்மூலம் சமூகவியல் ஆராய்ச்சியாளராக இனங் காணப்பட்டார்.
இதுவரை பெண்கள் நிகழ்த்தியுள்ள அனைத்து ஆய்வுகளும் ஆக்கத்திற்கு வழி வகுக்கக் கூடியவையாகவே உள்ளன. ஆதிக்க நோக்கில் புதிய கண்டுபிடிப்புகளை  நிகழ்த்தாமல், ஆக்க நோக்கிலேயே புதிய ஆராய்ச்சிகளை பெண்கள் மேற்கொண்டு வந்துள்ளனர் என்பதை மேற்குறித்த அனைத்து ஆய்வுகளும் வெளிப்படுத்துகின்றன.  வறுமை நீங்கவும், வன்முறை ஒழியவும், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பிற்காகவும், வளங்கள் பெருகவும், அரிய உயிரினங்களைக் காக்கவும், புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்குமான ஆய்வுகளையே தங்கள் இயல்பினால் பெண்கள் விரும்புகின்றனர்.
முடிவுரை
    எல்லோரும் இன்புற்று வாழவும், புதிய தொழில்நுட்பத்தை இயற்கையோடு இயைந்து இயங்கும் வகையில் பயன்படுத்தவே இவ்விஞ்ஞானிகள் பெரிதும் முயன்றுள்ளனர். சூழலையும், வளங்களையும் பாழ்படுத்தாத, வறுமையையும், வீண் ஆடம்பரத்தையும் உருவாக்காத ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கும் தொழில்நுட்பமே தற்காலத் தேவையாகும். இவ்விஞ்ஞானிகள், உண்மையான
சமத்துவத்திற்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் தீங்கற்ற, அடிப்படைத் தேவைகளை உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தையே கருத்தில் கொண்டு பயன்படுத்தியுள்ளனர். எனவே, இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் சூழலில் அறிவியல் உலகிற்குப் பெண்களின் பங்களிப்பு இன்னும் அதிகத் தேவையாகும்.
உதவிய நுhல்கள்
 1.        Ken Dall Haven: Women at the edge of discovery London: LIBRARIES, 2003

2.தொகு. சி.எஸ். லஷ்மி, சொல்லாத கதைகள் சென்னை, ஸ்பேரோ
3.
4.http://www.insaindia.org/detail.php?id=N90-1057

2 comments:

  1. வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
    வாழ்த்துக்கள்
    அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
    link is here click now!

    ReplyDelete
    Replies
    1. அருமையான முயற்சி. நாங்கள் பதிவிடும் கட்டுரைகளைத் தாங்கள் பார்வையிட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி. என்னுடைய 2 பதிவுகளைத் தாங்கள் தேர்நதெடுத்தமைக்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் குருநாத சுந்தரம் அவர்களே.

      Delete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?