நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 29 August 2015

தற்காலக் கல்விமுறை பகுதி -1





    ஒளியை நோக்கிய ஒரு பயணம்.


Image result for education images 

கல்வி என்பது இருளிலிருந்து ஒளியை நோக்கிய ஒரு பயணம். அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய முன்னேற்றம். இன்றைக்குக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை பெருகிப் போயிருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதா? கற்றவர்களின் அறியாமை முற்றிலும் விலகியிருக்கிறதா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. என் உறவினர் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். அவர்களின் மகன் நான்காம் வகுப்புப் படிக்கிறான். அவனுக்குக் கோள்கள் குறித்து ஒரு பாடம். பாடப்புத்தகத்தில் அதை ஒட்டி ஒரு படம். ஆங்காங்கே தொலைவில் நட்சத்திரங்கள் இருக்க , சில கிரகங்கள் மட்டும் இருப்பதைப் போன்ற படம். அவனுடைய வகுப்பு ஆசிரியை பெரிய பேப்பரில் பெரிதாக அதைப் போல வரைந்து வரும் படி வீட்டுப் பயிற்சி கொடுத்திருக்கிறார். தொலைக்காட்சிகளில் பென்10, ஏலியன் போர்ஸ், மார்ஸ் உள்ளிட்ட சிறுவர் நிகழ்ச்சிகளைப் பார்த்துஏலியன்குறித்துக் கற்பனையை வளர்த்துக் கொண்டிருந்த சிறுவன், தன் கற்பனைச் சிறகை விரித்து வரைந்திருக்கிறான். பெரிய நீலவண்ண தாளில் சில கிரகங்கள், செயற்கைக்கோள், பறக்கும் தட்டு, தலையில் ஆன்டனா உள்ள பெரிய கண்களுடைய வினோத ஏலியன், பூமி, செவ்வாய், சனிக்கிரகம், இரண்டு நிலவுள்ள புதுக்கிரகம் இப்படியாக இரவு முழுவதும் வரைந்து வண்ணம் தீட்டியிருக்கிறான். அவனுடைய பெற்றோர் அவனை மிகவும் பாராட்டி ஆசிரியரின் பாராட்டும் கிடைக்கும் என நம்பிக்கையூட்டியிருக்கிறார்கள். மாலையில் வந்த பையன் முகத்தில் மிகுந்த அவமான உணர்வு. எதையும் சொல்லவில்லை. எதைக் கேட்டாலும் பதிலில்லை. கவலை தோய்ந்த முகத்துடன் உண்ணாமல் உறங்கி விட்டான்.

Sunday 23 August 2015

புத்தக வாசிப்பு அரிசோனா மகாதேவன் பதில்கள்

புத்தக வாசிப்பு


 

தாரகை இணைய வலைப்பதிவை
( https://tamizhtharakai.wordpress.com/)நடத்தி வருகிற அரிசோனா மகாதேவன் சார் நம் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுடன் பணயாற்றியவர். தற்போது அமெரிக்காவிலுள்ள அரிசோனாவில் வாழும் இவர் தமிழ் மீது தாளாத காதல் உடையவர். தமிழ் இனி மெல்ல....என்ற இவரது நாவல் தமிழின் நிலை குறித்து எழுந்துள்ள எழுச்சியூட்டும் அற்புதமான நாவல்...எதிர்காலவியல் என்னும் நவீன உத்தியுடன் வெளிவந்துள்ளதமிழின் முதல் நாவல் இது. அவரது பதில்கள் இதோ......

ஒரு அரிசோனன் பதில்கள்......

1. நூல்கள் படிக்கும் பழக்கம் பெருக்க தங்களின் வழிகாட்டுதல் என்ன?
நூல்களை மலிவு விலையில்தர பதிப்பகங்கள் முன்வரவேண்டும்.  அரசு நூல்நிலையங்கள் நிறைய நூல்களை வாங்கிவைக்கவேண்டும்.  
2. மாணவர்கள் கல்லூரி வந்தவுடன் திசைமாறிப் போய்விடுகின்றனர். அவர்களை எவ்வாறு வாசிக்க வைப்பது?
 
தமிழ்க்கல்வி குறைவதே இந்நிலைக்குக் காரணம்.   அனைத்துப்பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படவேண்டும்.  தமிழ் நூல்கள் வாசிப்பும், அதில் தேர்வும் வைக்கப்படவேண்டும். மொழிக்கல்வி மதிப்பெண்கள், அறிவியல்துறை அனுமதிக்கு எடுத்துக்கொள்ளப்படாவிட்டாலே, தமிழ்க்கல்வி பெருகும் வாய்ப்பிருக்கிறது.

புத்தக வாசிப்பு தாசில்தார் ஆ.பரமார்த்தலிங்கம் எம்.ஏ. மதுரை பதில்கள்



A Paramartha Lingam 

 ஆ.பரமார்த்தலிங்கம் எம்.ஏ. பிஜேடிஜே  - எம்.சி மதுரை



Retired Tahsildar in Madurai District. Formely District Secretary of Revenue Officials' Associations Madurai District. Now Organizing Secretary of Tamilnadu Retired Revenue officers'Association (Tahsildars to District Revenue Officers).Formerly Editor of "Sanga Kural" which is the monthly magazine containing officials matter relating to Revenue department and Govt., officials.Formerly Joint Editor of "Sarvothaya malargirathu" a propaganda magazine of Gandhian thought. I obtained Post Graduate Diploma in Journalism and Mass Communication.I got Diploma certificate in English Tyog.(High Speed) and Tamil Typg. Higher Grade. Now I am working as a Public Relations Officer in a private Company . Some of the articles published in various magazines. Now I am a vice president of Red Cross Society of Madurai West zone. My habits are reading books and utilizing the net in computer.I have a small library in my house. My address: A.Paramarthalingam, M.A. PGDJ &MC. Tahsildar (Retd) 6/221 Angayarkanni Colony, Athikulam, Madurai -625007
Chat Conversation End
 Ph,.No,.90255 03985
                                E.mail.:  aplingam@gmail.com   Mobile No. 90255 03985

 குறுகிய காலத்தில் வெகுசிறப்பாகபதிலளித்துள்ளார்.

1.நூல்கள் படிக்கும் பழக்கம் பெருக்க தாங்களின் வழிகாட்டுதல் என்ன?
    புடிக்கும் பழக்கம் சிறிய வயதிலிருந்தே வரவேண்டும். அதில் பெற்றோர்ஆசிரியர் மற்றும் உற்ற நண்பா;களின் வழிகாட்டுதலும் அடங்கும். ஆர்வம் இருந்தால் பழக்கம் வந்துவிடும் அது வழக்கமாகிவிடும். கிராமமாக இருந்தால் நூலகம் அங்கு இருந்தால் படிக்க வேண்டும் என்ற ஆh;வம் கூடுதலாக கிடைக்கும். நிறைய படிக்க படிக்க அது வழக்கமாகிவிடும்.
2. மாணவர்கள் கல்லூரி வந்தவுடன் திசைமாறிப் போய்விடுகின்றனா;. இணைத்தில் கூட நல்ல நூல்களை அவா;கள் வாசிப்பதில்லை அவா;களை எவ்வாறு வாசிக்க வைப்பது?
     உண்மைதான். வுhசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் வாசிக்க முற்படுவா;. வுhசிக்கும் பழக்கம் உள்ளோர்ஊர்தியை நோக்கி காத்திருக்கும் நேரத்தில் ஏதோ ஒரு புத்தகத்தையோ அல்லது இதழ்களையோ கையில் வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். நீண்ட பயணம் மேற்கொள்ளும் போதும் குறிப்பாக  ரயிலில் போகும்போதும் பஸ் பயணத்தின் போதும் பார்க்கலாம். ஆனால் இந்த பழக்கம் இல்லாதவர்கள் கை பேசியில் உள்ள இணையதளத்தில் வேறு காட்சிகளையும் விளையாட்டுகளையும்தான் பார்க்க விரும்புவா;.

புத்தக வாசிப்பு பேராசிரியர் சந்திரசேகரன்சுப்ரமணியம்பதில்கள்



 சந்திரசேகரன் சுப்பிரமணியம்'s photo.





பேராசிரியர் சந்திரசேகரன்சுப்ரமணியம்பதில்கள் 
prof.Dr.Chandrasekaran subramaniam M.E.,Ph.D., MIEEE, MACM, MSEI, MASQ, MIET, MCSI, MWSEAS, 
Dean & professor of Academic & Research,
Departments of CSE & I.T & ECE
Sri Ranganathar Institute of Engineering and Technology,coimbatore -641010
பேராசிரியர் சந்திரசேகரன்சுப்ரமணியம் கணினி மற்றும் தமிழை இரு கண்களாகக் கொண்டவர். சங்கப் பா  சொல்லடுக்கில்  மரபுப் பா புனைபவர். தமிழறிஞர்கள் பொறாமைப்படும் அளிவிற்கு சங்கப்பாக்களில் தோய்ந்தவர். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும் என்ற பாரதியின் கருத்தை நடைமுறைக்குக் கொண்டுவரத் துடிப்பவர். செயலாக்கம் உடைய இளைஞர். தமிழ் மொழியே உலக பொது மொழி எனவும், கணினி பகுப்பாய்வு தொடங்கி, வடிவாக்கம் முதல் நிரலாக்கம் முதல் ஒப்பாய்வு முடிய தமிழே என நாம் தான் ஒன்று சேர்ந்து ஒலிக்க வேண்டும் எனத் தமிழ் வாழ முழக்கம் செய்பவர்.
 
 ஸ்டான்ஃபொர்ட் பல்கலையில் இசைத்துறையில் கணினியும் தமிழிசையும் அழகாக நடத்துகிறார்கள். நாலாம் தமிழ் சங்கம் மேக கணிப்பியலில் 100000 மேற்பட்ட கணினிகள் ஒன்று சேர்ந்து மென் மெய்னிகர் கவிஞர்கள் பாடல் இயற்றகணினி இயல் தமிழ் , கணினி இசைதமிழ், கணினி கூத்துத் தமிழ்என இக்கால தமிழை தொழில்நுட்பத்துடன் ஏற்றி வைத்து மகிழ்கிறார்கள் என்று கூறும் இவர், தமிழில் இது போல் ஆய்வுகள் இல்லையே என்று ஏங்குபவர். இவருடைய 200 க்கும் மேற்பட்டகணினித் துறை மாணவர்கள் உலக நாடுகளில் பணியாற்றுகின்றனர். மாணவர்களுக்குபன்னாட்டு கருத்தரங்கங்கம், மா நாடுகள் ஆகியவற்றில் ஆய்வுக்கடுரை சமர்ப்பிக்க வழிகாட்டுபவர்.

என்னுடைய புத்தக வாசிப்பு தொடர்பான நேர்க்காணலுக்கு பல வேளைகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி மின்னல் வேகத்தில் விடைகள் அனுப்பி உதவியவர்.   அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

Saturday 22 August 2015

புத்தக வாசிப்பு



புத்தக வாசிப்பு



 நாளுக்கு நாள் புத்தக வாசிப்பு குறைந்த வண்ணம் உள்ளது. டீவீ வந்துவிட்டது மொபைலில் வாட்ஸப் வந்துவிட்டது. கிண்டில் வந்து விட்டது என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன.அதற்குக் காரணங்கள் காண்பதோ, இப்படி ஆகிவிட்டதே என்று குறைகள் கூறி ஆதங்கப் படுவதோ நல்ல விளைவுகளை ஏற்படுத்தப்போவதில்லை. 

  சிறுவயதிலிருந்தே இருந்தே அந்த வழக்கத்தைத தொடங்க வேண்டும். என்ன செய்து எப்படி புத்தக வாசிப்பை வளர்க்கலாம் என்று தாங்கள் மிக சுருக்கமாக ஒரு சில விடைகளில் வழிகாட்டல் தாருங்கள். தாங்கள் வாராவாரமோ அன்றாடமோ வாசிக்கும் நேரமும் குறித்து அனுப்பினால் பிறரை ஊக்கப்படுத்த உதவும்.தங்கள் அரிய நேரத்தில் தரும் இத்தொல்லைக்கு வருந்துகிறேன். ஏதாவது யாராவது செய்யா விட்டால் புத்தகப்படிப்பே அனாவசியம் என்ற போக்கு வளரும். அந்த போக்கு புத்தகம் வாசிக்கிற நேரத்தை தீய மற்றும் உதவாத வீண் காரியங்களில் விரயம் செய்யும் வழக்கத்தை தடுக்கும்.

ஒரு கனவு .......

.



ஒரு கனவு


இன்று அதிகாலையில் ஒரு கனவு. பெரும்பாலும் கனவுகள் நினைவிற்கு வருவதில்லை என்பதும் கனவு பலன்களில் நம்பிக்கையில்லை என்பதும் கனவுகளைப் பற்றி நான் எப்போதும் பேசாததற்குக் காரணங்கள். கனவுகளைக் கண்கள் விரிய விரிய விவரிப்பவர்களை நான் வியப்புடனும், சில சமயம் அசட்டையுடனும் கவனித்திருக்கிறேன். ஆனால் என்னை இன்று முழுதும் ஆட்கொண்ட கனவை சொல்லியேயாக வேண்டும். கண்கள் விரிய, வாய் கிழிய கனவுகளைச் சொல்வதில் எப்போதும் விருப்பமிருந்ததில்லை என்பதால் எழுதுகிறேன்.

ஒரு பலதளங்களுள்ள வீடு. ஒரு குடும்பத்தினருக்குச் சொந்தமானது. வீட்டுத் தலைவன் இல்லாதபோது ஒரு பேய் (ஆமாம் பேய்தான். சிரிக்காதீர்கள்) அந்த வீட்டினரை பல வகைகளில் பயமுறுத்வும், பற்றிக் கொள்ளவும் முயற்சி செய்கிறது. சுவிட்ச் போர்டிலும், டிவியிலும், மிக்ஸி ஜாரின் வழியாகவும், செல்போனிலும் மேசை இழுப்பறை வழியாகவும், மாடிப்படியின் பக்கவாட்டிலிருந்தும் பயமுறுத்தப் பார்க்கிறது

               வீட்டுத் தலைவன் இல்லாதபோதுதான் இந்தச் சேட்டைகளெல்லாம். எனவே, மற்றவர்கள் சொல்வதை வீட்டுத்தலைவன் நம்புவதில்லை. அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளாதது பேய்க்குக் கொண்டாட்டமாகி விட்டது. தன் விருப்பத்திற்கு விளையாடுகிறது. வீட்டில் அடித்தளத்தில் ஒருமுறை தலைவன் ஓய்வாக அமர்ந்திருக்கையில் அவனையும் தான் பயமுறுத்திப் பார்க்கலாம் எனப் படிக்கும் பேப்பரிலிருந்து தன் தலையை நீட்டுகிறது. தலைவன் முதலில் மிரள்கிறான். பின் சுதாரித்துக் கொண்டு, பேப்பரை கீழே எறிகிறான்.

 
 பத்திரிக்கை உடனே பேப்பர் மனிதனைப் போல உருமாறுகிறது. அவனை நோக்கி காற்றில் அலைந்தபடி வருகிறது. உடனே வீட்டுத்தலைவன் நீண்ட மண்வெட்டியால் அதன் தலையில் போடுகிறான் (மண்வெட்டி எப்படி அவன் கையில் வந்ததென்று கேட்கக்கூடாது. இது கனவு) உடனே அவனை அச்சுறுத்த வேறொரு முகம் எடுக்கிறது. திகைத்த அவன் சுதாரித்துக் கொண்டு மீண்டும் ஒரு போடு போடுகிறான். உடனே அவனின் நண்பனின் முகத்திற்கு மாறுகிறது. கையை ஓங்கியவன் திகைக்கிறான். அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு பேப்பர் பேய் விரைவாக அவனைப் பற்ற வருகிறது. நண்பன் முகமாய் இருந்தாலும் ஒரே போடு. அவன் காதலியின் முகமாய் மாறுகிறது. மீண்டும் ஒரே போடு. இப்படித் தாய் முகம், தந்தை முகம் என அவனுக்குப் பிடித்தவர் முகமாக முதலில் மாறி அடி வாங்கிய பேய், பின்பு தன் கோர முகத்தைக் காட்ட ஆரம்பிக்கிறது. இப்படிப் பல முகங்களில் அடி வாங்கிய படியே அது இருக்கத் தலைவன் கோடாரியால் விடாமல் போட்டபடியே இருக்கிறான். 


ஒரு கட்டத்தில் அதன் மீது பரிதாபம் வர நிறுத்துகிறான். உடனே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த பேய் விசுவரூபம் எடுக்கிறது. தலைவன் இம்முறையும் சிறிதும் அசரவில்லை. தொடர்ந்து அடித்து அதனை இல்லாமலாக்கிவிட முடிவெடுத்து அடித்தபடியே இருக்கிறான். இத்தோடு கனவு கலைந்துவிட்டது. எனக்கு ஒரே குழப்பம். இது கனவா? இல்லை எப்போதோ பார்த்த ஏதாவது ஒரு படமா? பேய் படங்கள் பார்த்து பல வருடங்களாகிவிட்டது. பேய் பார்க்கும்போதெல்லாம் எப்படி மேக்கப் போட்டிருக்கான், எப்படியெல்லாம் கிராபிக்ஸ் வளர்ந்திருக்கிறது என்ற கோணத்திலேயே பார்ப்பதால் எந்தப் பேய் படமும் பயமுறுத்தியதில்லை.

 

உடனே மறந்துபோய் விடும். ஆனால் இந்தக் கனவு இதில் ஏதோ ஆழ்மனது கூறும் செய்தி ஒளிந்திருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியபடியே இருந்தது. பின் நானே ஒரு முடிவிற்கும் பின் தெளிவிற்கும் வந்தேன். பல அடுக்கு மாளிகை நம் உடல். குடும்ப உறுப்பினர்கள் நம் உடல் உறுப்புகள். தலைவன் தான் அறிவு. கீழே உள்ள அடுக்கிலிருந்து தான் மேலே பல தளங்களுக்கும் பேய் சென்று பயமுறுத்தியிருக்கிறது. நம் மூலாதாரம் தான் ஆசைகளின் பிறப்பிடம். அதுதான் கீழ் அடுக்கு. அட அந்தப் பேய் வேறு யாருமில்லை. நம் ஆசைதான். அது குடும்ப
உறுப்பினர்களைப் பற்றப் பார்த்திருக்கிறது. 

 அதாவது மெய், வாய், கண், மூக்கு, காது, நாக்கு என்ற உறுப்பினர்களைப் பற்றி விட முயற்சித்திருக்கிறது. அறிவு என்னும் தலைவனைக் கண்டு அதற்குப் பயம் மற்ற உறுப்புகள் அறிவிடம் பேய் பற்றவிருப்பதைக் கூறி எச்சரித்திருக்கின்றன. ஆனால் தலைவன் அதை அலட்சியம் செய்து விட்டான். இறுதியில் அவனையே பற்ற பார்த்திருக்கிறது. இறுதியாக அவன் சுதாரித்துக் கொண்டான் என்றாலும் பேய், அவன் காதலியாக, நண்பனாக, உறவினராகவெல்லாம் பல வடிவெடுத்து அவனை முடக்கிப் போட முயன்றிருக்கிறது. ஆனால் தலைவன் எச்சரிக்கையாக இருந்ததால் திரும்பத் தலையெடுக்க விடாமல் தொடர்ந்து பேயின் தலையை அடித்துக் கொண்டேயிருநதிருக்கிறான். 

எனவே ஆழ்மனது ஆசையில் விழிப்புணர்வோடு இரு என்பதை ஒரு பேய்க் கனவின் வழி என்னை எச்சரித்திருக்கிறது என நான் புரிந்து கொண்டேன். நான் என் ஆசைகளைக் குறித்து (அது காதலோ, காமமோ, இச்சையோ, இம்சையோ, கைக்கு வளையலோ, காதுக்கு இசையோ, கண்ணுக்குத் தொலைக்காட்சியோ, காலுக்கு உயர்ந்த காலணியோ) இப்போதிருந்தே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஆசைகள் தோன்றும்போதே அதைத் தலையெடுக்க விடாமல் விழிப்புணர்வு என்னும் சம்மட்டியால் அதன் தலையில் ஒரு போடுபோடுவதென்று தீர்மானித்துக் கொண்டேன்.

எதிர்காலத்தில் யாரறிவார்? யார் யார் தலையில் சம்மட்டியால் போடுவாரென்று? உங்களுக்கு இப்படி ஏதாவது கனவு தோன்றி அதற்கு நீங்களே இப்படி விளக்கம் கொடுத்துக் கொண்டதுண்டா?