நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday, 31 December 2013

சிலப்பதிகாரம் 30. வரம் தரு காதை

30. வரம் தரு காதை
செங்குட்டுவன் தேவந்தியிடம் மணிமேகலையின் துறவு பற்றி வினவுதல்

வட திசை வணக்கிய வானவர் பெருந்தகை
கடவுள் கோலம் கண்-புலம் புக்க மின்,
தேவந்திகையைச் செவ்விதின் நோக்கி,
‘வாய் எடுத்து அரற்றிய மணிமேகலை யார்?
யாது அவள் துறத்தற்கு ஏது? ஈங்கு, உரை’ என-                            5


தேவந்தி மணிமேகலையின் துறவு உரைத்தல்

‘கோமகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி
நாடு பெரு வளம் சுரக்க’ என்று ஏத்தி,
அணிமேகலையார் ஆயத்து ஓங்கிய
மணிமேகலை - தன் வான் துறவு உரைக்கும்;                            10
மை ஈர் ஓதி வகை பெறு வனப்பின்
ஐ-வகை வகுக்கும் பருவம் கொண்டது;
செவ் வரி ஒழுகிய செழுங் கடை மழைக் கண்
அவ்வியம் அறிந்தன; அது தான் அறிந்திலன்;
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த                                    15
நித்தில இள நகை நிரம்பா அளவின;
புணர் முலை விழுந்தன; புல் அகம் அகன்றது;
தளர் இடை நுணுகலும், தகை அல்குல் பரந்தது;
குறங்கு இணை திரண்டன; கோலம் பொறஅ
பிறம் கிளர் சீறடி நெய் தோய் தளிரின;                                    20
தலைக்கோல் ஆசான் பின் உளனாக,
குலத் தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார்;
யாது நின் கருத்து? என் செய்கோ?"""" என,
மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப-
""""வருக, என் மட மகள் மணிமேகலை!"""" என்று,                            25
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு
விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய,
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித்தானம் புரிந்து, அறம்படுத்தனள்-
ஆங்கு, அது கேட்ட அரசனும் நகரமும்                                   
ஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர்-                                30
தும்மின் துன்பம் தாம் நனி எய்த,
செம்மொழி மாதவர், """"சேயிழை நங்கை
தன் துறவு எமக்குச் சாற்றினள்"""" என்றே
அன்பு உறுநல் மொழி அருளொடும் கூறினர்;
பருவம் அன்றியும் பைந் தொடி நங்கை                                                    35
திரு விழை கோலம் நீங்கினள் ஆதலின்,
ஆரற்றினென்’ என்று, ஆங்கு, அரசற்கு உரைத்தபின்-

தேவந்தியின்மேல் சாத்தன் ஆவேசமுற்று எழுதல்

குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ;
துடித்தனள் புருவம்; துவர் இகழ்ச் செவ் வாய்
மடித்து, எயிறு அரும்பினள்; வரு மொழி மயங்கினள்;                        40
திரு முகம் வியர்த்தனள்; செங்கண் சிவந்தனள்;
கை விட்டு ஓச்சினள், கால் பெயர்த்து எழுந்தனள்;
பலர் அறிவாராத் தெருட்சியள், மருட்சியள்;
உலறிய நாவினள்; உயர்மொழி கூறித்
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான்-                                           45

தெய்வம் உற்ற தேவந்தியின் உரை

‘கொய் தளிர்க் குறிஞ்சிக் கோமான்-தன் முன்
கடவுள்-மங்கலம் காணிய வந்த
மடமொழி நல்லார் மாண் இழையோருள்,
அரட்டன செட்டி-தன் ஆய்-இழை ஈன்ற
இரட்ணடையம் பெண்கள் இருவரும் அன்றியும்,                            50
ஆடகமாடத்து அரவு-அணைக் கிடந்தோன்
சூசடக் குடும்பியின் சிறு மகள் ஈங்கு உளள்;
மங்கல மடந்தை கோட்டத்து-ஆங்கண்
செங் கோட்டு உயர் வரைச் சேண் உயர் சிலம்பில்,
பிணிமுக நெடுங்கல் பிடத்தலை, நிரம்பிய                                         55
ஆணி கயம் பல உள; ஆங்கு அவை இடையது,
குடிப்பகை நுண கலும், கவிர் இதழ்க் குறுங் கலும்,
இடிக் கலப்பு அன்ன இழைந்து உகு நீரும்,
உண்டு ஓர் சுனை; அகுனுள் புக்கு ஆடினர்
பண்டைப் பிறவியர் ஆகுவர்; ஆதலின்,                                               60
ஆங்கு-அது கொணர்ந்து, ஆங்கு, ஆய்-இழை கோட்டத்து
ஓங்கு இருங் கோட்டி இருந்தோய்! உன் கை,
""""குறிக்கோள் தகையது;  கொள்க""""எனத் தந்தேன்;
ஊறித் தாழ் கரகமும் உன் கையது அன்றே;
கதிர் ஒழிகாறும் கடவுள் தன்மை                                                             65
முதிராது; அந்நீர் முத் திற மகளிரைத்
தெளித்தனை ஆட்டின், இச் சிறு குறுமகளிர்
ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய்;
பாசண்டன் யான்; பார்ப்பனி-தன்மேல்,
மாடல மறையோய்! வந்தேன்’என்றலும்-                                          70

சாத்தனது வரலாற்றையும், அவன் கரகம் தந்ததையும் மாடலன் கூறுதல்

மன்னவன் விம்மிதம் எய்தி, அம் மாடலன்-
தன் முகம் நோக்கலும் - தான் நனி மகிழ்ந்து,
‘கேள் இது, மன்னா! கெடுக நின் தீயது!
மாலதி என்பாள் மாற்றாள் குழவியைப்
பால் சுரந்து ஊட்ட, பழவினை உருத்து,                                               75
கூற்றுயிர் கொள்ளக் குழவிக் கிரங்கி
ஆற்றாத் தன்மையள் ஆரஞ ரெய்திப்
பாசண் டன்பாற் பாடு கிடந்தாட்கு
ஆசில் குழவி யதன்வடி வாகி
வந்தனன் அன்னை நீ வான் துய ரொழிகெனச்                              80

செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப்
பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து
தேவந் திகையைத் தீவஞ் செய்து
நாலீ ராண்டு நடந்ததற் பின்னர்                                                              85

மூவா இளநலங் காட்டியென் கோட்டத்து
நீவா ரென்றே நீங்கிய சாத்தன்
மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்
அங்குறை மறையோ னாகத் தோன்றி
உறித்தாழ் கரகமும் என்கைத் தந்து                                                     90

குறிக்கோள் கூறிப் போயினன் வாரான்
ஆங்கது கொண்டு போந்தே னாதலின்
ஈங்கிம் மறையோள் தன்மேல் தோன்றி
அந்நீர் தெளியென் றறிந்தோன் கூறினன்
மன்னர் கோவே மடநதையர் தம்மேல்                                              95

தெளிந்தீங் கறிகுவம் என்றவன் தெளிப்ப
ஒளித்த பிறப்புவந்த துற்றதை யாதலின்
புகழ்ந்த காதலன் போற்றா வொழுக்கின்
இகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய்
ஏதில் நன்னாட் டியாருமில் ஒருதனிக்                                                100

காதலன் றன்னொடு கடுந்துய ருழந்தாய்
யான்பெறு மகளே என்துணைத் தோழீ
வான்றுயர் நீக்கும் மாதே வாராய்
என்னோ டிருந்த இலங்கிழை நங்கை
தன்னோ டிடையிருள் தனித்துய ருழந்து                                           105

போனதற் கிரங்கிப் புலம்பறு நெஞ்சம்
யானது பொறேஎன் என்மகன் வாராய்
வருபுனல் வையை வான்துறைப் பெயர்ந்தேன்
உருகெழு மூதூர் ஊர்க்குறு மாக்களின்
வந்தேன் கேட்டேன் மனையிற் காணேன்                                          110

எந்தாய் இளையாய் எங்கொளித் தாயோ
என்றாங் கரற்றி இனைந்தினைத் தேங்கிப்
பொன்தாழ் அகலத்துப் போர்வெய் யோன்முன்
குதலைச் செவ்வாய்க் குறுந்தோடி மகளிர்
முதியார்மொழியின் முன்றில் நின்றழத்                                              115

தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன்
மாடல மறையோன் தன்முக நோக்க
மன்னர் கோவே வாழ்கென் றேத்தி
முந்நுhன் மார்பன் முன்னிய துரைப்போன்
மறையோன் உற்ற வான்துயர் நீங்க                                                       120

உறைகவுள் வேழக் கையகம் புக்கு
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற
காதலி தன்மேற் காதல ராதலின்
மேனிலை யுலகத் தவருடன் போகும்
தாவா நல்லறஞ் செய்தில ரதனால்                                                        125

அஞ்செஞ் சாய லஞ்சா தணுகும்
வஞ்சி மூதூர் மாநகர் மருங்கிற்
பொற்கொடி தன்மேற் பொருந்திய காதலின்
அற்புளஞ் சிறந்தாங் கரட்டன் செட்டி
மடமொழி நல்லாள் மனமகிழ் சிறப்பின்                                               130

உடன்வயிற் றோராய் ஒருங்குடன் றோன்றினர்
ஆயர் முதுமக ளாயிழை தன்மேல்
போய பிறப்பிற் பொருந்திய காதலின்
ஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறுமக ளாயினள்                                               135

நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும்
அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவ ரிறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கை                                              140

ஆனே றூர்ந்தோன் அருளிற் றோன்றி
மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின்
செய்தவப் பயன்களுஞ் சிறந்தோர் படிவமும்
கையத் தனபோற் கண்டனை யன்றே
ஊழிதோ றூழி யுலகங் காத்து                                                               145

நீடுவா ழியரோ நெடுந்தகை யென்ற
மாடல மறையோன் தன்னொடு மகிழ்ந்து
பாடல்சால் சிறப்பிற் பாண்டிநன் னாட்டுக்
கலிகெழு கூடல் கதழெரி மண்ட
முலைமுகந் திருகிய மூவா மேனிப்                                                150

பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து
நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப்
பூவும் புகையும் மேவிய விரையும்
தேவந் திகையைச் செய்கென் றருளி
வலமுறை மும்முறை வந்தனள் வணங்கி                                 155

உலக மன்னவ னின்றோன் முன்னர்
அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்                                   160

எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரம்என்று எழுந்த தொருகுரல்
ஆங்கது கேட்ட அரசனு மரசரும்                                                  165

ஓங்கிருந் தானையும் முறையோ டேத்த
வீடுகண் டவர்போல் மெய்ந்நெறி விரும்பிய
மாடல மறையோன் தன்னொடுங் கூடித்
தாழ்கழன் மன்னர் தன்னடி போற்ற
வேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின்                           170

யானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்து
தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி
வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுங்தை தான்நிழ லிருந்தோய் நின்னை
அரைசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று                   175

உரைசெய் தவன்மே லுருத்து நோக்கிக்
கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்றன் செல்லல் நீங்கப்
பகல்செல் வாயிற் படியோர் தம்முன்
அகலிடப் பாரம் அகல நீக்கிச்                                                       180

சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து
அந்தமி லின்பத் தரசாள் வேந்தென்று
என்திறம் உரைத்த இமையோ ரிளங்கொடி
தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்                                             185

பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின்                                 190

செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோ ரவைக்களம் அகலா தணுகுமின்
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்                        195

அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளுங் களவுந் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது                         200

செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென்.

கட்டுரை

முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்
குடதிசை யாளும் கொற்றங் குன்றா
ஆர மார்பிற் சேரர்குலத் துதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்                                     5

விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்பத் தவருறை நாட்டுக்
குடியின் செல்வமுங் கூழின் பெருக்கமும்
வரியுங் குரவையும் விரவிய கொள்கையின்
புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய                  10

மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு
பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்
கங்கைப் பேர்யாற் றுக்கரை போகிய
செங்குட் டுவனோ டொருபரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டமுற் றிற்று.                                         15







No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?