திடமான எண்ணமிருந்தால் போதும்
ஜப்பானில் மிக ஏழைக் குடும்பத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவர் சோய்ச்சிரோ என்பவர்.
அவருடைய தாயார் நெசவுத் தொழிலாளி. தந்தையோ இரும்பு பட்டறையில் வேலை செய்யும்
கூலித் தொழிலாளி. ஒரு வாடகை சைக்கிள் கடையையும் நடத்தி வந்தார். இந்நிலையில்
சோய்ச்சிரோ வாடகைக்கு விடும் சைக்கிளில் அடிக்கடி உடைந்து விடும் பிஸ்டன் ரிங்கைத் தானே தயாரிக்க
முயற்சி செய்தார். பள்ளியில் பகல் நேரத்தில் படிப்பு. இரவு பிஸ்டன் ரிங்
தயாரிப்பில் ஆராய்ச்சி. இப்படியே இவருடைய இளமை கழிந்தது. பொருட்செலவு தான் மிகுந்ததே தவிர பிஸ்டன்
ரிங் அவர் நினைத்தபடி உருவாகவில்லை. இதற்கிடையில் திருமணமும் நடந்தது.
மனைவியின் நகைகளை அடமானம் வைத்து உறுதியான பிஸ்டன் ரிங்கை உருவாக்கினார். இரண்டு
ஆண்டுகள் இடையறாத முயற்சிகளும், தோல்விகளும், பொருள் இழப்புகளும் ஏற்பட்டாலும் சோய்ச்சிரோ மனம் தளரவில்லை.
இறுதியில் அப்போது பிரபலமாக இருந்த டோயோட்டாவின் கான்ட்ராக்ட் கிடைத்தது. தன் சொத்தெல்லாம்
விற்று தொழிற்சாலை துவக்கினார். அப்போதுதான் ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேபோர்ச்சூழல் உருவாகியிருந்தது.