ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்ணின் உழைப்பும் சொத்துரிமையும்
பெண்களின் உழைப்பு அவர்களுக்கு விவரம் தெரிவதற்கு முன்பிருந்தே ஆரம்பித்து
விடுகிறது. இறக்கும் வரையில் குடும்பத்திலும் விவசாயத்திலும் பிற தொழில்களிலும்
உடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு ஒய்வு என்பதே கிடையாது. இந்திய நாட்டில், வேலைக்குப் போகின்ற பெண்களில் 90 விழுக்காடு
பெண்கள், ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களாக இருக்கின்றார். 80 விழுக்காடு பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். மொத்த உழைப்பில் 65 விழுக்காடு வரை உள்ள குடும்பங்கள் பெண்களின் வருமானத்தைக் கொண்டு
நடத்தப்படுகின்றன. இவ்வகைப் போக்கில் மறைக்கப்படுகின்ற உண்மையாதெனில், உற்பத்தி, உற்பத்தியை உருவாக்குகின்ற மானிட சக்தியை உற்பத்தி செய்தல் இரண்டிலும்
பெண்களின் பங்களிப்பு மறைக்கப்படுகின்றது” (மார்கரெட்
கலைச்செல்வி,
1999::29)