நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 1 May 2020

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்ணின் உழைப்பும் சொத்துரிமையும்



ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்ணின் உழைப்பும் சொத்துரிமையும்

பெண்களின் உழைப்பு அவர்களுக்கு விவரம் தெரிவதற்கு முன்பிருந்தே ஆரம்பித்து விடுகிறது. இறக்கும் வரையில் குடும்பத்திலும் விவசாயத்திலும் பிற தொழில்களிலும் உடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு ஒய்வு என்பதே கிடையாது. இந்திய நாட்டில், வேலைக்குப் போகின்ற பெண்களில் 90 விழுக்காடு பெண்கள், ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களாக இருக்கின்றார். 80 விழுக்காடு பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். மொத்த உழைப்பில் 65 விழுக்காடு வரை உள்ள குடும்பங்கள் பெண்களின் வருமானத்தைக் கொண்டு நடத்தப்படுகின்றன. இவ்வகைப் போக்கில் மறைக்கப்படுகின்ற உண்மையாதெனில், உற்பத்தி, உற்பத்தியை உருவாக்குகின்ற மானிட சக்தியை உற்பத்தி செய்தல் இரண்டிலும் பெண்களின் பங்களிப்பு மறைக்கப்படுகின்றது” (மார்கரெட் கலைச்செல்வி, 1999::29)

குழந்தை வளர்ப்பு என்பது முழுவதும் பெண்களைச் சார்ந்ததே என்று பெண்களும் கருதுகின்றனர். சாமிக்கவுண்டர் தன் மகன்களுக்குக் குளிப்பாட்டிவிடுகிறார். அதைக் கண்டு அவர் மனைவி, போன ஜென்மத்திலே பொம்பிளையாத்தான் பொறந்திருப்பீங்க” (ச.சு.:44) என்று கேலி செய்கிறாள். மேல் தட்டு வீடுகளில் மட்டும் சமையல் செய்வதற்கு பண்டாரசாதியைச் சார்ந்தவர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். (பனித்துளி15)  நடுத்தர, கீழ்த்தட்டு வீடுகளில் குடும்பப் பெண்கள் சமையலிலும் வீட்டு வேலைகளிலும் உடுபடுகின்றனர். இராமசாமிக் கவுண்டருக்குத்தான் பணமுடை கிடையாதே அவர் குடும்பம் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மனைவி தான் எல்லாம் பண்ணட்டும்” (மாயத்தாகம்153) ஏழை  டுகளில் கணவனின் தொழிலிலும் பெண்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். இளம் சிறுமிகளிலிருந்து வயதான பெண்கள் வரை வயல் வேலையில் ஈடுபடுகிறார்கள் (உதயதாரகை.79)
                                               
                                                                             
 பருத்திக் காடுகளில் பணியாற்றும் பெண்கள் உழைப்பில் ஒருவர் மற்றவரை முந்தப் பார்க்கின்றனர். பத்துப் பேர் முன்னுக்குப் பாத்திதாண்டி போகும்போது ஒருத்தி தளுங்கி விட்டால் சிரிக்கமாட்டார்களா
? இவ்வளவுதானே என்று கேலிக்கு இடமாகிவிடுமே! எந்த ரோசக்காரி தான் அத்துவானம் என்ற பட்டத்தைச் சுமக்க சம்மதிப்பாள்?” (நா.க.:52) இப்படி கடுமையாகப் பாடுபடும் பெண்களுக்கு கிடைப்பதோ திருட்டுப்பட்டம். இந்த மாளாத வெயில்லே பாடுபடறதுக்கு நா சலிக்கிலே அக்கா. உள்ளுமடியைக் காட்டுங்கோண்ணு பருத்தி கொட்டறப்போ செல்லக்கா சொல்றா பாரு. அதைக் கேக்கறப்போ நாணுகிட்டுச் சாகலாம்னு இருக்குது” (ச.சு.:65) உழைக்கும் பெண்களின் மான உணர்வு சீண்டப்படும் போது அவர்கள் கூனிக்குறுகிப் போகிறார்கள். அவர்களால் எதிர்க்க முடிவதில்லை. எனெனில், கூலி வேலை செய்யும் பெண்களுக்குப் பணி நிரந்தரமல்ல. வாழ்க்கையில் தொடர்ந்து பாடுபடவேண்டிய கட்டாயமிருப்பதால் மற்ற பெண்களும் உதவிக்கு வருவதில்லை. கடுமையாக உழைக்கும் பெண்களுக்கு மட்டுமே மீண்டும் வேலை என்ற நிலையிலிருப்பதால் ஒவ்வொரு பெண்ணும் கடுமையாக உழைக்க வேண்டியவளாகிறாள்.
 குடும்பத்தினரின் பொறுப்பற்ற போக்கினால் குடும்ப பாரத்தைச் சுமக்கும் பெண்கள் எல்லாவற்றையும் பொறுத்துப் போக வேண்டியநிலை உள்ளது. கஞ்சாவும் கோவிலும் கதியென நம்பியிருக்கும் பொன்னப்பன் ஒரு கவளம் சோற்றுக்குத் தன் சிற்றன்னை முத்தம்மாளை நம்பி இருந்தான். முத்தம்மாள் குடும்பத்தை நடத்தப் படாதபாடு பட்டாள். அவனவன் வாய் வறண்டு கை வறண்டு நிற்கையில் எந்தத் தோட்டங் காட்டில் பன்னிரண்டு மாசமும் இள்வேண்டி இருக்கிறது?” (உதயதாரகை101) அப்படி கிடைக்கும் வேலையாலும் உடனடியாகக் கூலி கொடுக்கப்படுவதில்லை.
வேலனின் தாயார் வேலனின் மேம்போக்குத் தனத்தால் உள்ளூர் வேலைக்குச் செல்லாமல் வெளியூர் வேலைக்குச் செல்கிறாள். வேலை செய்து அவள் கைமுழுவதும் தடிப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. அவர்கள் பறித்த கொளுஞ்சிக் காய்களையெல்லாம் வண்டியில் ஏற்றிய பின், அண்ணாத்த “காசு நாளைக்கு வாங்கிக்கிங்க புள்ளைகளாண்ணு ஒரே சொல்லிலே சொல்லிட்டுத் திரும்பிப் பார்க்காமே போயிட்டாரு” (உதயதாரகை71) முதலாளி என்று வருத்தத்துடன் கூறுகிறாள். இப்படி உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் பெண்கள் வாழ்க்கையில் எளிதில் விரக்தியடைந்து விடுகிறார்கள். நாங்க தெக்கே போகத் தடம் பாத்துக்கிட்டு இருக்கிறோம்! தெற்கே என்றால்  தென் திசைக்கு சுடுகாட்டுக்கு” (ச.சு.:65) வீட்டு வேலை, விவசாய வேலை போன்றவற்றில் ஈடுபடும் பெண்கள் திருவிழாக்காலங்களில் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. விழா என்பது பெண்களைப் பொறுத்தளவில் விலா நோக உழைப்பது என்ற அளவில்தான் உள்ளது. வீராயி துணி துவைக்கும் பெண் புடவையையும், அலசி அலசி எடுத்து அவள் இடுப்பு முறிந்திருந்தது” (நா.க.:17) காலமுழுவதும் ஒர் இயந்திரம் போல உழைத்துப் பழகிப் போய்விட்ட பெண்கள் வயதான காலத்திலும் ஓய்வெடுக்க விரும்புவதில்லை. மணியக்காரக்கிழவி எழுபது வயதாகியும் நூல் நூற்று அதைத் தொலைதூரத்தில் கொண்டுபோய் கொடுத்துவிட்டு கூலி வாங்கி வருகிறாள்” (நா.க.:22)
ஆனால், பிறரது ஆதரவின்றித் தனித்துத் தொழில் புரியும் கைம்பெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் காட்டுகிறார். (அ??:20)
 சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்குவது, அவற்றைச் சுமந்து வருவது போன்றவற்றையும் குடும்பப் பெண்களே செய்கின்றனர். (நா.க.:6) வசதியான குடும்பத்துப் பெண்கள் வீட்டு வேலைகளைச்  செய்து விட்டு வயலுக்குக் கிளம்பிவிடுவார்கள். அங்கு வேலை செய்பவர்களை மேற்பார்வை செய்வது அவர்கள் வேலை. (அ.கோ.:10) ஆதரவற்ற கைம்பெண்கள் இட்லி சுட்டு விற்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். (அ.வ.:25:??:20) திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் பள்ளிச் சிறுவர்களுக்காக விடுதி நடத்தும் கைம்பெண்கள் (ச.சு.:58) ஊண்டு. பிறருக்கு வேலை கொடுக்கும் நிலையிலும் உள்ளனர்.
 தொழில் நகர வளர்ச்சியில் கவரப்பட்ட பெண்கள் அங்கு ஊணவுக்கடை நடத்தி முன்னேறியுள்ளனர். (எ.போ.வா.:32) மில்களில் சென்று சேரும் பெண்கள் எண்ணிக்கை நாளும் பெருகி வருவதால் மில்களில் வேலை கிடைப்பது அரிதாகிவிடுகிறது. (எ.போ.வா.:33) மில்களில் வேலை செய்யும் பெண்கள் படிப்படியாக முன்னேறி மேஸ்திரி நிலை வரை ஊயருகின்றனர். (த.வ.:53) சராசரியாக ஒரு பெண் நாளொன்றுக்குப் பதினாறு மணி நேரம் முதல் பத்தொன்பது மணி நேரம் வரையிலும் அதே நேரத்தில் ஒரு ஆண் நாளொன்றுக்குப் பத்துமணி நேரம் முதல் பதினான்கு மணி நேரம் வரையிலும் வேலை செய்கிறார்கள்.” (மார்கரெட் கலைச்செல்வி, 1999:91) காலத்திற்கேற்பப் பெண்கள் வாழ்வில் முன்னேற்றமும் மாற்றமும் ஏற்படுவதில்லை. மாறாக இரட்டைப் பணிப்பளுவை வாழ்நாள் முழுவதும் சுமக்கின்றனர்.  ப்படி காலம் முழுவதும் உழைக்கும் பெண்ணினுடைய உழைப்பைக் குடும்பமும் சமூகமும் அங்கீகரிப்பதில்லை. அவள் உழைப்பைப் பொருட்டாகக் கருதுவதில்லை. அவள் சாகும் வரையில் அவளுக்குச் சோறும் சீலையும் கொடுத்தால் போதுமென்ற எண்ணமே நிலவி வருகிறது. கணவன்  இருக்கும் வரையில் மட்டுமே அவள் எதையும் அனுபவிக்க முடியும். அவன் இறந்தபின்பு அவளுடைய உழைப்பின் பயனைக் கூட அவள் கேட்டுப் பெற முடியாது. அவளுடைய உழைப்பு உழைப்பாகக் கருதப்படாத நிலையே உள்ளது.
 5.13.0. சொத்துரிமை
உடைமையான நகரும் பொருட்களையும், நகரப் பொருட்களையும் சொத்து என்பர். உடைமையான அப்பொருட்களின் மீதான உரிமை சொத்துரிமை எனப்படும். பெண்களுக்குப் பொதுவாக உலக முழுவதும் சொத்துரிமை வழங்கப்படுவதில்லை. உலக மக்கள் தொகையில் சரிபாதி பெண்ணினம். ஆனால், உலகின் மொத்த உழைப்பில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுடையது. உலக வருமானத்தில் பத்தில் ஒரு பங்குதான் பெறுகிறார்கள்.பொருள் உடைமையில் நூறில் ஒரு பங்கு தான் அவர்களுக்குச் சொந்தம். (இந்து பிரகாஷ்சிங், :182) இவ்வாறு, பெண்கள் தங்கள் உழைப்பினை அதிக அளவு கொடுத்தும் அதை அனுபவிக்கும் உரிமையைப் பெற்றிருக்கவில்லை.

பிறந்த வீட்டினர் திருமணத்தின் போது மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை கொடுக்க வேண்டியிருப்பதால் அவளுக்கும் தனியாகச் சொத்து தருவதில்லை. வரதட்சணையாகக் கொடுக்கப்படும் பொருளின் மீதும் அவள் உரிமை கொண்டாட முடிவதில்லை. பெண் தன் தேவைகளுக்கு அதைப் பயன்படுத்த கணவன் வீட்டாரின் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஆனால், கணவன், தன் தேவைகளுக்கு அதை எளிதில் பயன்படுத்திக் கொள்ளவோ, விற்கவோ உரிமை பெற்றிருக்கிறான். திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் பெண்ணுக்குக் கணவன் உடைமையின் மீது எவ்வித உரிமையும் இல்லை. அவள் உழைப்பிற்குப் புகுந்த வீட்டிலும் பிறந்த வீட்டிலும் மதிப்பு வழங்கப்படுவதில்லை. கணவன் உள்ளவரை உடைமைப் பொருட்களை அவள் அனுபவிக்கலாம் என்ற நிலையே நிலவி வருகிறது. இவ்வாறு, காலந்தோறும் பெண்கள் நிலமற்றவர்களாக, தன் சார்பாகக் கொடுக்கப்படும் வரதட்சணை மீது உரிமையற்றவர்களாக உள்ளனர்.
 சொத்துரிமையும், சட்டமும்
சமூகத்தின் அனைத்து ஒழுங்கு, சட்ட திட்டங்களையும் இயற்றிய ஆண் தன் தனிச் சொத்துரிமையின் மூலம் பெண்ணை அடக்க, அவள் உழைப்பைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். இத்தனிச் சொத்துரிமை சமுதாயம் மாறுகின்ற போதுதான் உண்மையான விடுதலையைப் பெண்கள் பெற இயலும்.
 மனித உற்பத்தி முதலான பணியிலிருந்து, அனைத்துப் பணிகளாலும் பெண் உழைப்புச் சுரண்டலுக்கு இளாக்கப்படுகிறாள். இந்நிலையை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவள் நாகம்மாள் தான். தன் உழைப்பு மீதான உரிமையை உணர்ந்து அதைப் பெற போராடுகிறாள். தன் கொள்கையில் இடையில் ஏற்படும் குறிக்கீடுகளை ஊதறித் தள்ளிவிட்டு இறுதிவரை உறுதியாக நிற்கிறாள். இந்துப் பெண்கள் சொத்துரிமைச் சட்டம் 1937இல் தான் நிறைவேறியது. இந்தச் சட்டம் இந்து விதவைகளுக்குத் தனது கணவரின் தனிப்பட்ட சொத்துக்களிலும் இந்துக் கூட்டுக் குடும்பத்தில் அவரது பங்கிலும் மகன்களுக்குள்ள அதே உரிமையை அடைய வழி செய்தது. அப்போதுங்கூட ஐனைய மக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. விவசாய நிலங்களைப் பொறுத்தவரை, மாநில அரசினரால் இத்தகைய உரிமை வழங்கும் சட்டம் 1947-இல் தான் நிறைவேறியது. இந்த இரு சட்டங்களின் படி விதவைகளுக்குப் பங்கு பெற உரிமை இருந்துங்கூடச் சட்ட நிர்பந்தங்களுக்கோ அல்லது தனது பராமரிப்புக்கோ அன்றி, பராதீனம் செய்ய உரிமையில்லை” (இராஜரத்தினம். எஸ், 2001:163)
எனவே, பெண்களுக்குச் சொத்துரிமையில்லாத நிலையில் நாகம்மாள் சொத்து கேட்டுப் போராடுவதை எரார் பழித்துரைக்கின்றனர். நாகம்மாள் சின்னப்பனிடம் நேரடியாகச் சொத்து கேட்கும் பொழுது, பங்கு வேணுமா? செரி எந்தக் காமாட்டிப் பயெ கேக்கச் சொன்னானோ அவனெ வரச்சொல் என்று ஊக்கிரமாக மொழிகிறான்.நாகம்மாள் பதில் பேச முடியாது அமைதியாகி விடுகிறாள். இவ்வாறு, ஆண் பண்பாட்டின் பெயரால் பெண்ணின் உரிமையை அவமதித்து அடங்கிப் போகச் செய்யும் ஊத்தியைக் கையாண்டு பெண்ணைச் செயலற்றவளாக்கி  விடுகிறான். இதனால்,  சமூகத்தின் பார்வையில் பெண் என்ற வட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறாள்.
 சின்னப்பன் சிறு வயதிலிருந்து நோயினால் துயருற்றவன். எனவே, அவனுடைய உழைப்புத் தொழிலில் நாகம்மாள் உழைப்பை விடக் குறைவு தான். நாகம்மாளும் அவள் கணவனும் பாடுபட்டுச் சேர்த்த சொத்து, அவளுக்கும் அவள் பெண் குழந்தைக்கும் சேராமல், ஆண் என்பதற்காகச் சின்னப்பனையேச்  சேருகிறது. யார் சம்பாரித்த சொத்து? என் புருஷன் சொத்து எனக்குச் சேராதா?” (நாக:104) என்ற நாகம்மாளின் குரலில் வெளிப்படும் குமுறல், அதன் உண்மை, உரிமை குறித்துச் சிந்திப்பவர்கள் இல்லை.
 சமூகத்தோடு ஒத்துப் போக விரும்பும் மரபு வழிப் பாத்திரங்களான பெரும்பாலான பெண்களும், நாகம்மாளின் பெண் உரிமைக் குரலை உணர்வதில்லை. கணவனின் சொத்து பெண்களுக்கில்லை என மறுக்கும் சமூகம் அவன் வாங்கிய கடனுக்கு மட்டும் பெண்களையே கைக்காட்டுகிறது. வெங்காத்தாளின் கணவன், உயிருடன் இருந்த போது வாங்கிய கடன் பற்றி அவளுக்குத் தெரிவிப்பதில்லை. அவர் இறந்த பின், கடன் கொடுத்த வீரப்பச் செட்டியார் அவளிடம் அது குறித்து நேரில் சந்தித்து தெரிவிக்காமல் நேரடியாக நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துவிடுகிறார். பழம் பகையைக் காரணமாக்கி விதவை வெங்காத்தாளுக்கு, அவள் தமையனும் உதவாமல் நழுவி விடுகிறார்.
ஆண்களின் சுயநலம்
ஒருபுறம் சமூகம் பெண்ணின் உழைப்பிற்கு மதிப்பைத் தர மறுக்கிறது. மறுபுறம் கடனுக்குப் பெண்ணைக் கை காட்டித் தப்பித்துக் கொள்கிறது. கைம்பெண்களின் நிலை இவ்வாறென்றால் கன்னிப் பெண்கள் மணமாகும் சூழலில் அவளுக்குரிய தாய் வழி சீதனத்தையும் தர மறுக்கும் அவலம் சட்டிசுட்டதடா நாவலில் சுட்டப்படுகிறது. (ச.சு:51)
 சொத்துரிமை என்பது ஆண்களுக்கு மட்டுமே என்ற ஆணாதிக்கச் சமூகத்தின் விதைப்புகளாக முழுவதும் மாற்றம் பெற்றுவரும் இளைய தலைமுறையினரின் அடையாளங்களாகவே மாரப்பனையும், பழனியப்பனையும் ஆசிரியர் படைத்துக் காட்டுகிறார். பொருட் பெண்டிர் என்று அழைக்கப்பட்டாலும் விலை மகளிர் நிலை பொருளியல் ரீதியாக மிகத் தாழ்ந்தே உள்ளது. சாமியப்ப முதலியார் பணம் கொடுக்காமல் தன்னிடம் வந்து வாழும் விலை மகளிரை மிகக் கேவலமாக நடத்துவதை அறுவடை (ப.43) நாவல் காட்டுகிறது. விலை மகள் மீனாட்சி இறுதிக் காலத்தில் மனந்திருந்தி சாமியாரிணியானாலும் பரிகாரமாகப் பக்தர்களின் நன்கொடைப் பணத்தை மாரப்பனிடம் கொடுத்து விடுகிறாள். சொத்தையும், சீதனத்தையும், ஊரிய பொருளையும் பெண்களுக்குத் தரமறுக்கும் ஆண் சமுதாயம் அதை நல்வழியில் செலவழிப்பதில்லை. எழுபது, எண்பது வயதிற்குமேல் சொத்திருக்கும் இறுமாப்பில் பொருந்தாமணக் கொடுமைக்கும் காரணமாகின்றனர்.
பல விலை மகளிரோடு தொடர்பு கொள்கின்றனர். மணமுடித்த ஒரு பெண்ணைத் தள்ளி வைத்துவிட்டு, வேறொரு பெண்ணை மணந்து கொள்கின்றனர். (ஊ.தா) ஆனால், பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்புடைய ஆண்களைச் சாடாமல் அவன் வீட்டுப் பெண்களையே சாடுகின்றனர். ஆண்களின் தவறுகளுக்குப் பெண்களே இழி மொழிகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. (ஊ.தா.28)
 கூண்டுக்கிளிகள்
குடும்ப வரவு செலவு கணக்குகளை ஆண்களே பெரும்பாலும் பார்த்துக் கொள்கின்றனர். வயலிலும் குடும்பத்திலும் உழைக்கும் பெண்கள் குடும்ப வருவாயைப் பற்றி அறிந்திருப்பதில்லை. ஒயாத உழைப்பு அவர்களை அழுத்துவதாலும், கருத்துரிமையின்மையினாலும் கணவன் உள்ளவரை சொத்து பற்றி சிந்திப்பது இல்லை. விவசாயத்தில் நல்ல வருவாய் வரும் பொழுது ஆண்கள், தங்களைக் குறித்துப் பெருமையாகக் கூறிக் கொள்கின்றனர். நட்டம் வரும்பொழுது பெண்களையே குற்றம் சுமத்துகின்றனர். அவளுக்கு என்ன தெரியும்? அவளுக்குத் தெரியறாப்பலே இருந்தா பொளப்பு ஐ இப்படி இருக்குது?” (பனித்துளி33) என்று இராமசாமிகவுண்டர் தொழில் நட்டத்திற்கு மனைவியைக் காரணமாக்குகிறார். விருந்திற்கு ஐராளமாய் வருபவர்கள் வராமல் நின்று விடுவதை வைத்தும், மகனின் முக வாட்டத்தைக் கண்டும் காவேரியம்மாள் தொழிலில் நட்டம் என எகித்துக் கொள்கிறாள் (மா.தா:136) குடும்பப் பொருளியல் நிலை குறித்து பெண்கள் அறிய முடிவதில்லை. கணவனின் அதிகாரப்பிடியிலிருந்து விடுபடும் வாய்ப்பு பெற்ற பெண்கள் தன் சுய உழைப்பின் மூலம் உட்டும் வருவாயைத் தாங்களே வைத்து நிர்வகிப்பதில்லை. மரபுப் பிடியின் தாக்கத்தினால் மீண்டும் வேறோர் ஆணிடமே கொடுத்து அடங்கிப் போகின்றனர். மாராக்காள் தன்னுடைய மற்றும் தன் மகள் வருவாயைத் தன் வீட்டில் வந்து வாழும் நாச்சப்பனிடம் கொடுத்து அவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறாள். (த.வ.:79)குடும்பப் பொருளியல் பற்றிய தெளிவான சிந்தனைப் போக்கு இல்லாமலிருப்பதே பெண்களின் பல சிக்கல்களுக்குக் காரணமாகின்றது. ஆனால் ஆசிரியரிடம் பெண்களின் பொருளியல் அறிவு குறித்த கருத்து மாறுபட்டு உள்ளது. பொருளியல் நிலை அறிந்து சொத்தில் உரிமை கேட்டுப்போராடும் நாகம்மாளை, கலகக்காரியாகவே காட்டுகிறார். அவளை நியாய உணர்வுடைய பெண்ணாகக் காட்டுவதில்லை. நாகம்மாள் சொத்து கேட்பது குறித்து, காரிருளில் கன்மை வைக்கும் திருடனின் செயலோடு ஒப்பிடுகிறார். அவளை நச்சுப்பாம்பாக உருவகப்படுத்துகிறார். (நா.க.:36-52)  எனவே, பெண்களின் சொத்துரிமை பற்றிய ஆசிரியரின் கருத்து ஆணாதிக்கக் கருத்தியலாகவே உள்ளது. எனவேதான், சொத்துகேட்கும் நாகம்மாளின் நடத்தை குறித்து தவறான கருத்தையே படிப்போர் முன் வைக்கிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?