நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 1 May 2020

பந்துகள்






இந்த பந்துகள் போலத்தான் நம் மனமும்
 குழந்தை பருவத்தில் ஒரே சீராக. 
பின் தாறுமாறாக...
இந்த அலைகழிப்பு நிற்பதே இல்லை...
எதற்காக என்று தெரியாமல்

நாமும் ஏதோ......
 இயங்கிக் கொண்டே இருக்கிறோம்.
யாராவது நம் நிலையான இருப்பை
சீர்குலைத்து விடுகிறார்கள். 
மீண்டும் நிலைபெற நடக்கின்ற போராட்டத்தில் 
வாழ்க்கையே முடிந்து போய் விடுகிறது.
யாராவது அல்லது எதுவாவது....
ஆனால் அதுவே கூட நம் இருப்பிற்கும் இயங்குதலுக்கும் 
உயிர்ப்பிற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
சீராக இருக்கும் போது எந்த வண்ணமும் தெரியவில்லை.
அலைகழிக்கப்படும் போதுதான்
 அதிலிருக்கும் பல வண்ணங்கள் தெரிய வருகின்றன
 அத்தனையும் அனுபவங்கள்....
எனவே அலைகழிக்கப் படுவோம். 
அலைகழிப்போம்.......
அவையும் இல்லை என்றால் 
நம் வாழ்க்கை நிறங்களற்ற
கருப்பு வெள்ளை தான்.
சாரமற்ற கரும்பு 
சக்கைகள்தான்.
ஒரு கட்டத்திலேயே
வண்ணங்களை நினைத்து
நின்று விடுகிறோம் .
உடலுக்கு மட்டும்
வயதாகி விடுகிறது

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?