முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Thursday, 28 November 2013

தமிழ் வலைப்பூக்களில் பெண்களின் பங்கு


தமிழ் வலைப்பூக்களில் பெண்களின் பங்குவேதகாலம் தொடங்கி இன்றுவரை பெண்களின் பங்களிப்புகள் இலக்கிய உலகிலும், தகவல் பரிமாற்ற தளங்களிலும் முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன. இக்கட்டுரை இணையத்தின் வழி வெளியாகும் வலைப்பூக்களில் பெண்களின் பங்களிப்பைப் பற்றி ஆராய்கிறது.


மேலும் வாசிக்க....

பெண்களின் வலைப்பூக்கள்

    இணைத்தின் மற்றொரு பயன் வலைப்பூக்கள் ஆகும். மின்னஞ்சல், மின்குழு, இணையதரவு தளங்கள், இணைய இதழ்கள் வரிசையில் மற்றுமொரு மைல்கல் இணைய வலைப்பூக்கள் ஆகும். வலைப்பூ என்பதை ஆங்கிலட்தில் ‘பிளாக்’ என அழைப்பர். ஜார்ன் பெர்கர் என்பவர் வலைப்பூவிற்கு webblog எனப் பெயர் சூட்டினார். பின் இது பீட்டர் மெர்ஹால்ஸ் என்பவரால் blog  என சுருக்கி அழைக்கப்பட்டது. இது சில இணைய நிறுவனங்கள் இலவசமாக தம்மிடம் கணக்கு துவங்கியுள்ள பயனர்களுக்கு வழங்கும் இலவச சேவையாகும். இச்சேவையை முதன்முதலில் துவங்கிய நிறுவனம் ‘எக்ஸான்யா’ (ஓயலேய) ஆகும். 1996ம் ஆண்டில் இச்சேவையை இது தொடங்கியது. இது இணைய பயனர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டதால் கூகுள், வேர்ட்பிரஸ் போன்ற நிறுவனங்களும் இச்சேவையைத் தொடங்கின. எக்ஸான்யா நிறுவனம் பின்னர் கூகுளால் வாங்கப்பட்டது.  தனிநபர் தன் கருத்தை இணையம் வழி பதிவிட இது சிறந்த தளமாகும். கட்டற்ற கருட்துச்சுதந்திரம், நேரம் கிடைக்கும்பொழுது பதிவிடும் வசதி, தம் கருத்துக்களை, படைப்புகளை, வாழ்க்கை அனுபவங்களை, பயண அனுபவங்களை, கலைகளை, புகைப்படங்களை வெளியிட வலைப்பூ மிகச் சிறந்த இடமாகும். இதைப் படிக்கும் பலர், தம் கருத்துக்களை வெளியிடவும் வாய்ப்பு உள்ள பகுதியாகும்.

தமிழின் முதல் வலைப்பூ

    நவன் என்கிற பயனர் தான் தமிழின் முதல் வலைப்பதிவை வெளியிட்டவர் என்று26.1.2003ல் வெளியான தன் வலைப்பதிவில் அவரே குறிப்பிட்டுள்ளார். ஆனால், 1.1.2003 அன்று கார்த்திக் இராமதாஸ் தான் முதல் வலைப்பூவை வெளியிட்டவர் என சிந்து நதி இதழ் குறிப்பிடுகிறது.
(www.navan.name.blog/?=18) கார்த்திக்கின் வலைப்பூ பிளாக்டிரைவ் என்னும் தளத்தில் உள்ளது.
. (karthikramas.blogdrive.com) இதிலிருந்து கார்த்திகேயன் இராமசாமி என்கிறவரின் கார்த்திக் இராமதாஸ் வலைப்பூதான் தமிழின் முதல் வலைப்பூ எனலாம்.

பெண்களின் வலைப்பூக்கள்

    வலைப்பூக்களை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மிகக் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. பெண்களின் வலைப்பூக்களை பலவகைகளாக வகைப்படுத்தலாம். அனுபவம், கலைகள், இலக்கியம், படைப்புகள், ஆன்மீகம், அறிவியல், ஈழத்தமிழர் உணர்வு என பல வகை பொருள்களில் வலைப்பதிவுகள் பெண்களால் எழுதப்பட்டுள்ளன.    வெளிநாடு வாழ் இந்தியப் பெண்களில் பலர் தமிழில் வலைப்பூவை நடத்தி வருகின்றனர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பெண்களும் தமிழில் வலைப்பூக்களை நடத்தி வருகின்றனர். வெளிநாடு வாழ் இந்தியப் பெண்களில் குறிப்பிடத்தக்கவர். துளசி கோபால் ‘துளசி டீச்சர்’ பெயரில் வலைப்பூ வெளியிடுகிறார். துளசி கோபால் மிக மூத்த பதிவர், நியூசிலந்தில் வசிக்கிறார். பயணக் குறிப்புகள் சிறப்பானவை 

புலம்பெயர்ந்த பெண்களில் சந்திரவதனா செல்வகுமார் குறிப்பிடத்தக்கவர். இலங்கைத் தமிழர். ஜெர்மனியில் வசிக்கிறார். பெண் உடல் நலம், விடுதலை, வேலைவாய்ப்பு முதலானவற்றோடு சாதனைப் பெண்கள் என்கிற பதிவையும்
 (www.vippenn.blogspot.com) ல் வெளியிட்டு வருகிறார்.

    அமெரிக்காவில் வசிக்கும் ஆனந்தி ‘அன்புடன் ஆனந்தி’ வலைப்பூவை நடத்துகிறார். கவிதை, சொந்த அனுபவங்கள், திரைப்பட விமர்சனம், சமையல் குறிப்புகளை வெளியிட்டு வருகிறார். anbudanananthi.blogspot.com)       

       ‘தோழி பிரஷா’ என்பவர் கனடாவில் வசிக்கிறார். கவிதைகள் மிகுதியாக பதிவிட்டுள்ளார். தகவல் தொழில்நுட்ப செய்திகள், கவிதை, கட்டுரை, சிறுகதைகளை வெளியிட்டு வருகிறார்.
(pirasahthas.blogspot.in ) கறுப்பி என்பவர் கனடாவில் தகவல் தொடர்புத்துறையில் பணியாற்றுகிறார். இலங்கைத் தமிழர் அவலங்களைக் கட்டுரைகளாக, கவிதைகளாகவும் திரைப்பட விமர்சனமாக வெளியிடுகிறார். புதிய மாதவி என்கிற பெயரில் வலைப்பூவை நடத்தும் மும்மையைச் சேர்ந்த மாதவி கவிதை, சிறுகதை, கட்டுரைகளை வெளியிடுகிறார். லஷ்மி அம்மாள், ஈரோட்டைச் சேர்ந்த இவர் அறுபது வயதானவர். இப்பதிவர் தம் புகைப்படங்களோடு பதிவினை வலைப்பதிவினைச் செய்து வருகிறார். 1.குறை ஒன்றுமில்லை  2.தமிழ் விரும்பி
(gomathyamma.blogspot) (echumi.blogspot.in )என்ற இரு வலைப்பூக்களை நடத்துகிறார்.
குறை ஒன்றுமில்லை என்ற வலைப்பதிவில் தன் சிங்கப்பூர் பயண அனுபவங்களைப் படங்களுடன் பதிவு செய்துள்ளார். மேலும் ,உண்மைச் சம்பவங்கள், பூசை செய்யும் முறைகள், சமையல் குறிப்புகள், நகைச்சுவை, சொந்த அனுபவங்கள் முதலானவற்றோடு தன் சிறுகதைகளையும் இப்பதிவில் வெளியிட்டுள்ளார். தமிழ்விரும்பி என்ற வலைப்பதிவில் மருத்துவக் குறிப்புகள், பள்ளி அனுபவங்கள், படித்த கவிஞர்கள், எதிர்கால சந்ததியினருக்கான அனுபவங்கள் போன்றவற்றை எழுதுகிறார். இந்திராவின் கிறுக்கல்கள்-   
(chellakirukkalgal.blogspot.com) தமிழ் சினிமா விமர்சனங்கள், இணையதள நட்பு தொடர்பான அறிவுரைகள், அறிவியல் கட்டுரைகள், நகைச்சுவை கட்டுரைகள் பிற வலைப்பதிவர்களின் அறிமுகம் என பலதரப்பட்ட செய்திகளை இந்திரா எழுதுகிறார். மீனாவின் எண்ணங்கள்- மீனா கணினி மென்பொறியாளர்
(meena-vin-ennangal.blogspot.in)இவருடைய பதிவுகளில் இயற்கை பற்றிய இவரது கவிதைகள் இடம் பிடிட்துள்ளன.

வீட்டுப்புறா- சக்தி என்பவர் வீட்டுப்புறா என்ற வலைப்பதிவினை இவர் படைப்புகளில் கவிதைகள் மிகுதியாக இடம் பிடிட்து சரியும் இரவு, யாருமற்றவன், எதிர்வரும் நாளெல்லாம்,
(veetupura,blogspot.com) அறிவுப்பூர்வமாகவும் நகைச்சுவையாகவும் எழுதும் பெண் பதிவர்கள் மிகுதி. கவிதை, சிறுகதை, பாயய அனுபவங்கள், வாழ்க்கை அனுபவங்கள், திரைப்பட விமர்சனம், அரசியல், சமையல், வீட்டு உள் அலங்காரம், புத்தக விமர்சனம், போன்றவற்றை உரிய புகைப்படத்துடன் மிக அழகாக வெளியிட்டு வருகிறார்கள்.  மனச்சாரல்கள்- கனவு -திரைப்பட விமர்சனம், புற்றுநோய், வெளிநாட்டு அனுபவம், மகளிர்தினம் குறிட்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. வலைப்பதிவு கனவு என்பதாகும்.

«. kanavuglinmugavari.blogspot.in)மாங்கனி என்பவர்
enpoems.blog.in my thought’s da machi jokes for life, , பயமறியாப் பாவையர் சங்கம் போன்றவற்றை நடட்துகிறார். தமிழ் மாங்கனி என்ற பெயரில்
apaasangam.blogspot.in நகைச்சுவையான பதிப்புகளை சிறப்பாக வெளியிட்டு வருகிறார். tamilmayil -பதிவில் மைல், பெண்கள் மலர், தேவதை, ராணி, கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்த பதிவுகளை வலைப்பூவில் பதிவிட்டுள்ளனர். கவிதாயினி தாமரையும் ‘கவிதாயினி தாமரை’ என்ற பெயரில் தம் கவிதைகளை அனுபவங்களை வெளியிட்டு வருகிறார்.

(udtgeeth.blogspot.com)  நவராத்திரி புகைப்படம், அன்னையர் தின சிறப்புகள் கனவுகளின் முகவரி சிறப்புகள், பெண்மையை போற்றுவோம், கோலம் தங்கநகை விவரங்கள், சமையல் போன்றவை உள்ளன.விஜி ராமின் நேசம், மயில் வலைப்பூக்கள் இதைத்தவிர பெண் என்னும் புதுமை, மௌனவெளி, கீதா மஞ்சுரி, வனப்பு, சௌசி, ரஞ்சனி நாராயணன், தமிழ்முகில், ராஜலஷ்மி பரமசிவன் போன்றவையும் பெண்கள் நடத்தும் தமிழ்ப்பூக்கள் தான் tamilmayil பெங்களூரில் வசிக்கும் இராமலஷ்மி தன் வலைப்பூவில் புகைப்படங்களையும் கவிதைகளிலும் வெளியிடுகிறார். தினந்தோறும் ஒரு படைப்பையாவது வெளியிடுவார். மணிப்பிரியாவின் ‘ஊஞ்சல்’ வலைப்பதிவு எதையும் நகைச்சுவையாகச் சொல்லக்கூடியது. விக்னேஷ்வரி, டெல்லியிலிருந்து எழுதுகிறார். ‘நான் நானாக’ என்னும் வலைப்பதிவு இவருடையது. பேராசிரியை ராஜியின் இதயப்பூக்கள் பேராசிரியை எம்.ஏ. சுசீலாவின் ‘எம்.ஏ. சுசீலா’ போன்றவை வலைப்பதிவுகள் சிறப்பானவை. தமயந்தி புகைப்படங்களையும் கவிதைகளையும் வெளியிடுகிறார்.

பெண் பதிவுகளை அறிமுகப்படுத்தும் வலைப்பூக்கள்

மகளிர் கடல் என்பது
( magalirkadal.blogspot) பெண் பதிவுகளை அறிமுகப்படுத்தும் வலைப்பூ ஆகும்.
( magalirkadal.blogspot) என்கிற வலைப்பூ ‘பதிவுலகில் பெண்கள்’ என்கிற பதிவுகளை பதிவிட்டு வருகிறது. அன்பு தோழி என்ற பெயரில் கட்டுரை, மகளிர் தின வாழ்த்து கட்டுரை, படிப்பு அனுபவம் உள்ளிட்ட பதிவுகள் இதில் உள்ளன.

உணவு மற்றும் சமையல் வலைப்பூக்கள்

உணவு மற்றும் சமையல் தொடர்பானவற்றில், அடுப்பங்கரை,சமையல் கலை,சமையல் எக்ஸ்பிரஸ்,தமிழ் குக்கிங் போன்றவையும் பெண் பதிவர்கள் நடத்தும் வலைப்பூக்களாகும். உணவு தொடர்பானவற்றில், எந்த ஊரில் என்ன சாப்பிடலாம். வாங்க வித்யாவின் வலைப்பதிவு நகைச்சுவை நிரம்பியுள்ளது. வெளிநாட்டுவாழ் பெண்பதிவர் மேனகா ஷாஷிகாவின் சமையற் குறிப்புகள் மிகப் பிரபலம். விதுhஷ் என்கிற வித்யாவின் வலைப்பதிவில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரை, சமையல் முதல் சங்கீதம் வரை பலதுறை கட்டுரைகள் இடம்பிடித்துள்ளன. தேனம்மை லெஷ்மணன் ‘சும்மா’ வலைப்பதிவில் செட்டிநாடு சமையல், கவிதை சமையல், கவிதை, பேட்டி என பதிவிடுகிறார்.

‘அம்மாக்களின் வலைப்பூ’

‘அம்மாக்களின் வலைப்பூ’ பெண்கள் பலபேர் இணைந்து இதை நடத்துகின்றனர். இவர்களே தனித்தனியாகவும் வலைப்பூக்களை நடத்துகின்றனர். விட்யா 
(umapanavblogspot,monibhuvan,blogspot நினைவெல்லாம் நிவேதா, உமா, மோனிஷா, அமுதா இதை நடத்துகின்றனர். உமா பிரணவ் 
(umapanavblogspot,monibhuvan,blogspot)    தம் கவிதைகளை அனுபவங்களை வெளியிட்டு வருகிறார். காயத்ரி சித்தார்த் தன் வலைப்பூவில் தன் குழந்தையின் அழகையும், குறும்புத்தனங்களையும் இலக்கியமாகச் சொல்லக்கூடியவர். மோனிஷாவின் அம்மா என்பவர் தன் குழந்தைகளைப் பற்றி நகைச்சுவையாக எழுதியுள்ளார். ‘என் வானம்’ அமுதா யேனோர.
mKjh nandhu.yazh.blogs மழலைக் குறும்புகளை, குழந்தை வளர்ப்பு பற்றி பதிவிட்டுள்ளார். குழந்தை வளர்ப்பு குறித்து இளந்தாய்மார்கள் பலர் தங்கள் கருத்துக்களை இணைத்து பதிவு செய்துள்ளனர். அம்மாக்களின் வலைப்பூ. குழந்தை வளர்ப்பு மட்டுமின்றி குடும்ப நலம், உடல்நலம், குழந்தைகளுக்கான இணைய தளங்கள், ததைகள், எழுத்துப் பயிற்சி, குழந்தைகளுக்கானத் திரைப்படங்கள் போன்றவை இதில் இடம் பிடித்துள்ளன. தமிழ் மொழியைப் பொறுத்தளவில் ஔவையார், நச்செள்ளையார், ஆதிமந்தியார் உள்ளிட்ட பெண்பாற்புலவர்கள் தொடங்கி ஆண்டாள் பிரியதர்சினி, சல்மா, ரிஷி, வெண்ணிலா உள்ளிட்ட தற்காலப் பெண் படைப்பாளர்கள் வரை மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியமுடைய படைப்பாளர்களைக் கொண்ட வளமான மொழியாகத் தமிழ்மொழி விளங்குகிறது.   இருபதாம் நுhற்றாண்டு வழங்கிய  தகவல்  தொடர்புக் கருவிகளுள் ஒன்றான இணைத்தின் வழியும் பெண்களின் பங்களிப்புகள் வெளியாகி வருகின்றன.

REFERENCES
<http://dheekshu.blogspot.in/>-
<http://sandanamullai.blogspot.in/>-
<http://tamilfriendtamil.blogspot.in/>
(<http://www.blogger.com>)
(<http://www.wordpress.com>)
(tamilrockzs.blogspot.in)
( magalirkadal.blogspot)
 nandhu.yazh.blogs

தொடரும்------------


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?