வானம்
மேகம்
பருவம்
காற்று
ஆறு
நேரம்
கடந்து கொண்டே இருக்கிறது.
ஊரடங்கிலிருந்தாலும்,
உள்ளடங்கியிருந்தாலும்...
சாட்டையாக மாறி
சுழற்றும் கால தேவனின் கைகளிலிருந்து
மீள முடியாமல்,
பம்பரம் போல் ஓரிடத்தில்
குவிந்து சுழன்று கொண்டிருக்கும்
நினைவுகளால்...
தேங்கிப் போகும் நாம்....
நினைவு முடிவதற்குள்
இந்த நிமிடம் நம்மைக் கடந்து,
திரும்பிப் பார்த்துச் சிரிக்கிறது.
மேகம்
பருவம்
காற்று
ஆறு
நேரம்
கடந்து கொண்டே இருக்கிறது.
ஊரடங்கிலிருந்தாலும்,
உள்ளடங்கியிருந்தாலும்...
சாட்டையாக மாறி
சுழற்றும் கால தேவனின் கைகளிலிருந்து
மீள முடியாமல்,
பம்பரம் போல் ஓரிடத்தில்
குவிந்து சுழன்று கொண்டிருக்கும்
நினைவுகளால்...
தேங்கிப் போகும் நாம்....
நினைவு முடிவதற்குள்
இந்த நிமிடம் நம்மைக் கடந்து,
திரும்பிப் பார்த்துச் சிரிக்கிறது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?