நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday 23 August 2015

புத்தக வாசிப்பு தாசில்தார் ஆ.பரமார்த்தலிங்கம் எம்.ஏ. மதுரை பதில்கள்



A Paramartha Lingam 

 ஆ.பரமார்த்தலிங்கம் எம்.ஏ. பிஜேடிஜே  - எம்.சி மதுரை



Retired Tahsildar in Madurai District. Formely District Secretary of Revenue Officials' Associations Madurai District. Now Organizing Secretary of Tamilnadu Retired Revenue officers'Association (Tahsildars to District Revenue Officers).Formerly Editor of "Sanga Kural" which is the monthly magazine containing officials matter relating to Revenue department and Govt., officials.Formerly Joint Editor of "Sarvothaya malargirathu" a propaganda magazine of Gandhian thought. I obtained Post Graduate Diploma in Journalism and Mass Communication.I got Diploma certificate in English Tyog.(High Speed) and Tamil Typg. Higher Grade. Now I am working as a Public Relations Officer in a private Company . Some of the articles published in various magazines. Now I am a vice president of Red Cross Society of Madurai West zone. My habits are reading books and utilizing the net in computer.I have a small library in my house. My address: A.Paramarthalingam, M.A. PGDJ &MC. Tahsildar (Retd) 6/221 Angayarkanni Colony, Athikulam, Madurai -625007
Chat Conversation End
 Ph,.No,.90255 03985
                                E.mail.:  aplingam@gmail.com   Mobile No. 90255 03985

 குறுகிய காலத்தில் வெகுசிறப்பாகபதிலளித்துள்ளார்.

1.நூல்கள் படிக்கும் பழக்கம் பெருக்க தாங்களின் வழிகாட்டுதல் என்ன?
    புடிக்கும் பழக்கம் சிறிய வயதிலிருந்தே வரவேண்டும். அதில் பெற்றோர்ஆசிரியர் மற்றும் உற்ற நண்பா;களின் வழிகாட்டுதலும் அடங்கும். ஆர்வம் இருந்தால் பழக்கம் வந்துவிடும் அது வழக்கமாகிவிடும். கிராமமாக இருந்தால் நூலகம் அங்கு இருந்தால் படிக்க வேண்டும் என்ற ஆh;வம் கூடுதலாக கிடைக்கும். நிறைய படிக்க படிக்க அது வழக்கமாகிவிடும்.
2. மாணவர்கள் கல்லூரி வந்தவுடன் திசைமாறிப் போய்விடுகின்றனா;. இணைத்தில் கூட நல்ல நூல்களை அவா;கள் வாசிப்பதில்லை அவா;களை எவ்வாறு வாசிக்க வைப்பது?
     உண்மைதான். வுhசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் வாசிக்க முற்படுவா;. வுhசிக்கும் பழக்கம் உள்ளோர்ஊர்தியை நோக்கி காத்திருக்கும் நேரத்தில் ஏதோ ஒரு புத்தகத்தையோ அல்லது இதழ்களையோ கையில் வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். நீண்ட பயணம் மேற்கொள்ளும் போதும் குறிப்பாக  ரயிலில் போகும்போதும் பஸ் பயணத்தின் போதும் பார்க்கலாம். ஆனால் இந்த பழக்கம் இல்லாதவர்கள் கை பேசியில் உள்ள இணையதளத்தில் வேறு காட்சிகளையும் விளையாட்டுகளையும்தான் பார்க்க விரும்புவா;.

3. துறை சார்ந்தநூல்கள் மாணவர்களுக்கு அந்நியமாகிப்போவதன் காரணம் பரந்த புத்தக வாசிப்பின்மையே எனக் கூறலாமா?
   ஆம். அதுதான் காரணம்.
4. துறை சார்ந்தநூல்கள் தவிர பிற இதழ்களை தாங்கள் வாசிப்பதுண்டா எனில் அவை குறித்த தங்களின் கருத்து என்ன?
   துறை சார்ந்தநூல்கள் அந்தத்துறையைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் அவ்வப்போவது ஏற்படும் மாறுதல்களைப் பற்றித் தொpந்து கொள்ளவும் அவிசியமாகிறது. அதே நேரத்தில் ;அறிவுப் பசியைத் தீh;க்கவும் நாட்டு நடப்புகளை ஒவ்வொருவரும் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பது பற்றியும் அவா;கள் எழுத்தில் கையாளும் ஆளுமைகளையப்பற்றியும் தெரிந்து கொள்ள இதழ்கள் நூல்கள் படிப்பது அவசியமாகிறது.
    பொதுவாகவே நான் வாசிப்பதில் ஆர்வம் உள்ளவன். ஆகையால் அனைத்து இதழ்களையும் வாசிக்க வேண்டுமென விரும்புவேன். இருந்த போதிலும் குறிப்பிட்ட இதழ்களை மட்டும் வாங்கி முறையாகப் படித்து வருகிறேன். ஆனந்தவிகடன் தன்னம்பிக்கை நமது நம்பிக்கை புதிய தலைமுறை இன்பினி. ஆழம்.(இப்பொழுது; அது நின்றுவிட்டது) சர்வோதய மலர்கிறது.
    
 
ஆனந்தவிகடனின் தலையங்கம் மிகவும் ஆணித்தரமாகவும் உள்ளொன்று வைத்து எழுதாமலும் இருக்கும். விமர்சனங்கள் துணுக்குகள் ஏனைய கட்டுரைகள் படித்து மகிழத்தக்கதாக இருக்கும். அதனால் தொடர்ந்து வாசிப்பேன். தன்னம்பிக்கை நமது நம்பிக்கை புதிய தலைமுறை ஆகிய இதழ்கள் இளைஞர்களுக்கு உற்சாக முட்டும் இதழாகவும் பயனள்ள கட்டுரைகள் பல தாங்கி வருவது உண்டு. உழைப்பின் வலிமையை உணா;த்துவதாக இருக்கும். இளைஞா;களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும். இன்பினி. இது ஒரு வாழ்வியல் நூல். வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்ள பல செய்திகள் அதில் இருக்கும். நெடுநேரம் சிந்தித்து செயல்படுத்தவேண்டிய செய்திகள் ஏராளாமாக இருக்கும். பயனுள்ள பல செய்திகளை இந்த இதழிலிருந்து பெற முடியும். நான் பல நண்பர்களுக்கு இதனைப் படியுங்கள் என பரிந்துரை செய்துள்ளேன். ஆழம்- உண்மையிலேயே அரசியல் பற்றியும் வரலாறு பற்றியும் தொpந்து கொள்ள ஏதுவான இதழ்.. இதில் வெளிவரும் கட்டுரைகள் அனைத்தும் ஆழமாக ஆய்ந்து ; புள்ளிவிபரங்களுடன் எளிய தமிழில் வந்துகொண்டிருந்தது.  இந்த இதழ் இப்போது காணவில்லை..அதற்கு வந்த ஊழ்வினை என்னவோ? திடீரென நின்றுவிட்டது. .சா;வோதயம் மலா;கிறது.  இது காந்தீயத்தைப் பரப்பும் இதழ். இதில் காந்தியின் கோட்பாடு அது பற்றிய மற்ற தகவல்கள் ஆகியவற்றைத்  தாங்கி வரும் ;. இந்த இதழில் புத்தகங்களின் ஆய்வும் உண்டு. நான் பல புத்தகங்களைப;பற்றி திறனாய்வு செய்து இந்த இதழில் எழுதியுள்ளேன்.
     மற்ற இதழ்களை நூலகங்களில் படிப்பதும் அங்கிருந்து வாங்கிவந்து வீட்டில் படிப்பதும் உண்டு. நேரத்தை பொருத்து பல்வேறு இதழ்களைப் படிப்பதும்  உண்டு. சில கருத்துகளில் உடன் பாடும் உண்டு. சில கருத்துகளில் மாறுபட்ட நிலைப்பாடும் உண்டு. மதுரை காந்திய அருங்காட்சியகத்;தில் வாசகா; வட்டம் என்று ஒன்று உண்டு. அந்த வட்டத்தில் உள்ள செயற்குழு உறுப்பினர்களில் நானும் ஒருவன். ஓவ்வொரு மாதமும் ஒரு நூல் பற்றி ;ஆய்வு நடைபெறும். ஆய்வு செய்கின்றவா; நூலைப்பற்றி ஆய்வு செய்து செய்திகளைத் ;திரட்டித்தருவாh;. அவரது உரைக்குப்பின் ;உறுப்பினர்கள் மேலும் விளக்கம் கேட்பா;. ஆகையால் அனைத்து உறுப்பினர்களும் புத்தகத்தை முழுதுமாக படித்த உணா;வைப் பெறுவா;. ஆனால் காந்தியத்தைப்பற்றியும் அதனை ஒட்டியுள்ள கருத்து சார்ந்தபுத்தகங்களாகவே பெரும்பாலும் இருக்கும்.

     5. இணைய வழி படிப்பென்பது தகவல் திரட்ட உதவும். வுhழ்க்கையில் மனித மனங்கள் பண்பட உதவுமா?
      

 மனிதமனங்கள் பண்பட வேண்டுமென்றால் படிப்பதினாலோ இணையத்தின் மூலம் சேகரிப்பதாலே வராது. வள்ளுவர் கூறியது போல் குற்றம் அறக்கற்று அதன்வழி ஆற்றும்போதுதான் மனித மனம் பண்படும். கற்றதனால் மனித மனம் பண்படுமென்றால் கற்றவா;கள் அனைவரும் பண்புடையவர்களாகத்தானே இருக்க வேண்டும். தற்போது  குற்றங்கள் அனைத்தும்  கற்காதவரைக்காட்டிலும் அதிகம் கற்றவா;கள் ;மூலமே நடைபெறுகின்றதை நித்தமும் காண்கிறோம். நேரிலும் பார்க்கிறோம். அதனால் வாசிப்பதற்கும் மனித மனம் பண்படுவதற்கும் சம்பந்தம் இல்லை. கற்க வே;ண்டும் ;அதன்படி நடக்க வேண்டும் என உள்ளத்தில் நிலை நிறுத்துவா;கள் மட்டுமே பண்பாடு உள்ளவர்களாக ;இருக்க முடியும். வேண்டுமானால் மனங்கள் பண்பட வாசிப்பு ஒரு தூண்டுகோலாக அமைய வாய்ப்பு இருக்கிறது எனக்  கொள்ளலாம்.ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் ;செய்யற்க சான்றோர்பழிக்கும் வினை: என்று வள்ளுவப்பெருந்தகை கூறினர்;. தாய் பசி பசி எனத் ;துடித்தாலும் சான்றோர்பழிக்கும் செயலைச் செய்யாதிருக்க வேண்டும் என்பது நமது கோட்பாடு.  தாயே பசி பசி எனத் துடித்தாலும் தவறு ;செய்யக்கூடாது என்றால் எந்த சூழ்நிலையிலும் நீ தவறு செய்யாதே என்பதுதானே பொருள். இதனைப் ;படித்தவா;கள் அதன்படி நடந்தால் பண்பட்ட சமுதாயமாகவே நமது நாடு இருந்திருக்குமே;. படிக்க வேண்டும்  படித்தபின் ; ;அதன்படி நடக்க வேண்டும்  என்ற எண்ணம் அமைந்தால் மட்டுமே மனம் பண்பட உதவும். இணைய வழிப் படித்தாலும் சரி புத்தகத்தை வாசித்தாலும் சரி -எந்த வழியில் படித்தாலும் படித்தபடி பண்பாடுடையவனாக இருக்க வேண்டுமென மனித மனம் நினைத்தால் மட்டுமே பண்பாடு உடையவனாக இருக்க முடியும்.
      6. நூல் படிப்பதற்கும் இணைய வாசிப்பிற்கும் உள்ள வித்தியாசம்?
       

 நூல் படிக்கும்போது குறிப்பிட்ட நூலின் தகவல்களை மட்டுமே; நாம் பெறமுடியும். மற்ற தகவல்களையும் கருத்துகளையும் பெற வேண்டுமென்றால் மற்றப் புத்தகங்களை சேகரிக்க நாட்கள் தேவைப்படும். நமது ஆh;வமும் குறைய நோpடலாம். ஆனால் இணையதளத்தின் மூலம் வாசிக்க முற்படும்போது மற்ற நூல்களில்; உள்ள விபரங்களை நொடிப்பொழுதில் சேகரித்து விடலாம். இதன் மூலம் நாட்களும் உழைப்பும் குறைவாகவே இருக்கும்.
      7. பல நூல்களைப் படித்து அறிவை வளர்ப்பதின் மூலம் தன்னம்பிக்கை ஏற்படும்.ஆக்க அறிவு மிகும் .இணையத்தரவுகள் இதைச் செய்யுமா?
 இப்பொழுது பலதரப்பட்ட பொருட்களில் ;புத்தகங்கள் வெளிவருகின்றன. இதழ்களும் வெளிவருகின்றன. என்னைப் ;பொருத்தவரை இவைகள் பல புத்தகங்களை வாசித்து அதன் அடிப்படையில் தயார்செய்யப்பட்டு வெளிவந்துள்ளன என நான் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. அதிக அளவில் இணைதளத்தின் மூலம் பெறப்பட்டு அதற்குப்பின் அந்தப் பொருள்பற்றிய தங்களுடைய பார்வைகளையும் சோ;த்து தயார்செய்து புத்தகமாக வெளிவருகிறது. தற்போதைய நிலையில் இணைய தளத்தின் மூலம் சேகரித்த செய்திகளை ஒன்று சோ;த்து நீட்டியும் சுறுக்கியும் அதோடு தங்களி;ன் எண்ணங்களையும் சோ;த்து தயார்செய்;யப்பட்டவைகள்தான் புத்தகமாக வெளிவருகிறது. அதனைத்தான் நாம் வாசிக்கிறோம். இதில் நேரடியாக ;இணையதளத்தில் வாசிப்பது ஒரு முறை. இணையதளத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட செயதிகளை புத்தக உருவத்தில் படிப்பது ஒரு வகை. இன்றைய நிலையில் ;வெளியாகும் நூல்களில் பெரும்பாலும்  இணையதளத்தின் மூலம் சேகாpக்கப்பட்டவைதான் என்பதுதான் என் ;கருத்து. அப்படி வெளியாகும் நூலைப்படித்தும் அறிவை வளா;த்துக்கொள்ளலாம். இணையதளத்தில் நேரடியாகப் படித்தும் அறிவை வளா;த்துக்கொள்ளலாம்.
       8. நூல் படிப்பு கண்களுக்கு பயிற்சி. இணைய வாசிப்பு கண்களுக்கு கேடு. இணையத்தை நீண்ட நேரம் படிக்க பயன்படுத்த முடியுமா?
      

 விஞ்ஞான வளர்ச்சியில் இவைகள் தவிர்க்க முடியாதவை. விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் உருவான அனைத்தையும் ஆய்ந்தால் நன்மையும் ;;தீமையும் கலந்தே வரும். இது காலத்தின் கட்டாயம். ரயிலிலும் விமானத்திலும் செல்வது ஆபத்தாக உள்ளது என கருதி நாம் இப்பொழுதும் கட்டவண்டியில் பயணிக்க முடியுமா? இவைகள்;. எந்த அளவுக்கு எப்படி பயன்படுத்த முடியுமோ ;அந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் நிறை குறை ஆராய்ச்சி தேவை இல்லை என்பது என் கருத்து.
       9 .பல விஷயங்களை இணையத்தில ;படித்தாலும் புத்தக வாசிப்பு போல் சிந்தனையைத் தூண்டுமா?
       
 புத்தகள் ஒரு கருவிதான். சிந்தனை என்பது அவரவா; மனப்பாங்கைப்பொறுத்தவை. வெளியுர்பயணக்கின்றவா; கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு வாசிக்கிறார்;. அவா; சிந்தனையைத் தூண்டுவதற்காக புத்தகத்தை வாசிக்க வில்லை. பொழுது போக்கிற்காக. இதுபோல் கைபேசி மூலம் இணையத்தில் வாசிப்பவரும் பொழுது போக்கிற்காகவே அதனை செய்கின்றார்;. சிந்தனையைத் தூண்ட வேண்டும் என்ற கருத்து உள்ளவா; அதற்கேற்க நூலை தோ;ந்தெடுத்து ;அதற்கென நேரம் ஒதுக்கி செயல்படுவா;. அதே போல் இணையதளத்தில் செய்தி சேகாpப்பவரும் அந்த நிலைப் பாட்டைத்தான் எடுப்பார்.. இதில் புத்தகம் வாசிப்பு சிந்தனையைத் தூண்டும் இணையத்தில் ;வாசித்தால் தூண்டாது என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. இணையத்தில் உள்ள செய்திகளை நகல் எடுத்து ;வைத்துக்கொண்டு வாசித்தாலும் சிந்தனை தூண்டப்படலாம்.
      10.மக்கள் படிப்பதற்கேற்ற தரமான நூல்கள் அதிக அளவில் வெளிவர என்ன செய்ய ;வேண்டும்?
         தரமானஎழுத்தாளர்கள் எழுத முன் வரவேண்டும். பிரபலமானவர்களை ;மட்டும் திரும்ப திரும்ப ;எழுத ஊக்குவிக்காமல் முன்வரும் தரமான எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் பதிப்பாளர்கள் முன் வர வேண்டும். அறக்கட்டளையினா; சேவை நிறுவனங்கள் இல்லாதவா;களுக்கும் இயலாதவா;களுக்கும் உதவி செய்வது போல் தரமான நூல்கள் வெளிவரவும் உதவி செய்யலாம். நூல்கள் வெளியாவதை பிரபலப்படுத்த வேண்டும். அரசு தரமான நூல்கள் ;வெளிவர உதவ வேண்டும். புரவலா;கள் தொண்டு நிறுனங்கள் இப்பணியை மேற்கொள்ளலாம். விலையும் கட்டுக்குள் இரு;க்க வேண்டும்.
      11. நல்ல விமர்சகர்கள் உருவாக வேண்டுமானால் நல்ல படைப்புகள் வேண்டும்.அதற்கு நல்ல ரசனை வேண்டும். அதற்கு நல்ல வாசிப்பு அவசியம். வுட்டத்தைச் சுற்றி வருவது போலத்தான் இதுவும். தங்களின் கருத்து என்ன?
       உண்மையே. நல்ல வாசிப்பு உடையவர்கள்தான் நல்ல ரசனையுடையவா;களாக இருப்பாh;கள். நல்ல ரசனை உடையவர்கள்தான் நல்ல படைப்புகளைத்தர முடியும். நல்ல படைப்புகள் உருவாகும்போது நல்ல விமர்சனங்கள் உருவாகும். மொத்தத்தில் நல்ல வாசிப்புடையவா;கள்தான் படைப்பாளியாக உருவாக முடியும். நல்ல விமர்சகர்கள் உருவாக நூலகம் புத்தக ஆய்வு மன்றங்கள் மற்றும் இதழ்களில் புத்தக ஆய்வுக்கட்:டுரைகள  இடம் பெறுதல் போன்றவைகள் நல்ல விமர்சனங்களை உருவாக்கும்.
     12. நீங்கள் காணும் தற்கால நூல்கள் இதழ்களில் ;உள்ள குறைகள் குற்றங்கள் என்ன? எப்படிக் களையலாம்?
      
சில புத்தகங்களில் ;இலக்கணப் பிழைகள்-குறிப்பாக சந்திப் பிழைகள்; எழுத்துப் பிழைகள் பொருட்பிழைகள் ஒருமையில் ஆரம்பித்து பன்மையில் முடியும் சொற்றொடா; போன்றவை சரிபார்க்காமல் இடம் பெறுகின்றன.. இவைகள் எல்லாம் அச்சடிப்பதற்கு முன் நகலுடன்  சாpபாh;க்காதது தமிழுக்குரியதான சிறப்புகளை சரியாகப் புரிந்து கொள்ள முயலாமை போன்றவைகள். முயன்றால் இவைகளைத் தவிர்க்க முடியும். குற்றங்களைப் பொறுத்தவரை செய்திகளை சொல்வது மட்டும் ஒரு எழுத்தாளாpன் பொறுப்பாக இருக்க முடியாது. அவைகள் மக்கள் மனதில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற முன் எண்ணமும் இருக்கவேண்டும். எழுத்தாளனை கட்டுப்படுத்த முடியாது என்று சொன்னாலும் நமக்கும் ஒரு சமூகப் பொறுப்பு உள்ளது என்பதனையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எத்தனையோ எழுத்துகள் எழுச்சியு}ட்டியுள்ளன. ஏத்தனையோ எழுத்துக்கள் சமுகத்தை மாற்றி அமைத்துள்ளன. அதே போல் தவறான புரிதல் காரணமாக தேவைய்ற்ற கலவரத்தையும் உண்டு பண்ணியுள்ளது. சொல்லுகின்ற  கருத்தை தெளிவாகவும் அதே நேரத்ததில் இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதனையும் கணிக்கும் திறமையும் இருக்க வேண்டும். சமீப காலங்களில் நல்ல எழுத்தாளாகளின் படைப்புகள் கூட விமர்சனத்துக்குட்பட்டு மனம் சஞ்சலப்பட்ட நிகழ்ச்சியை நாம் அறிவோம். இம்மாதிரியான குற்றங்கள் விமர்சனங்கள் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது எழுத்தாளர்களின் தார்மீக கடமையாகும். இதழ்களைப் பொருத்தவரை டைம் பாஸிங் என்ற அடிப்படையிலும் நகைச்சுவை என்ற அடிப்படையி;லும் மறைமுகமாக உணர்ச்சிகளைத் தூண்டும் செய்திகளும்  இடம் பெறுகின்றன. சமுக நலம் கருதி இவைகளை தவிர்க்கலாம்.

     13.நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த நூல்கள் என்ன உங்களுக்குப் பிடித்த படைப்பாளர் யார்?
படித்த புத்தகங்கள்: காந்தியடிகளின்சத்திய சோதனைஅப்துல் கலாம் அவா;களின்; அக்கினிச் சிறகுகள் டாக்டர் இல.செ. கந்தசாமி அவர்களின் சிந்தனை மலடுகள் தமிழருவி மணியனின் மறக்க முடியாத மனிதா;கள் எம்.ஏ.ஜோவின் திருவும் மதியும சோம.வள்ளியப்பனின் சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? அப்துல்கலாம் அவர்களின் இளைஞர்கள் காலம் சுப.வீரபாண்டியனின் ஒன்றே சொல்!நன்றே சொல். வெ.இறையன்புவின் ;பத்தாயிரம் மைல் பயணம் மரபின் மைந்தனின் ஒரு விநாடி புத்தர் மற்றும் பல.
பிடித்த படைப்பாளர்: டாக்டர் இல.செ.கந்தசாமி மற்றும் வெ.இறையன்பு அவர்கள்.
         14.தற்போது வரும் இதழ்கள் தரமுடையனவாக உள்ளனவா?
        இரண்டும் உள்ளன. 
தரத்ததை மட்டும் கவனத்தில் கொண்ட இதழ்கள் பல காலப்போக்கில் விற்பனை ஆகாமல் காணாமல் போய்விட்டன. வியாபார நோக்கத்தையும் கருத்தில் கொண்டு அந்தந்த காலத்திற்கேற்ப சில மாற்றங்களையும் செய்தும பல இதழ்கள் தொடர்ந்து வருகின்றன. இன்றைய காலக்கட்டத்தில் எது தரம் எது தரம் இல்லை என்பதற்கும் ஒரு எல்லைக்கோடு வைத்துக்கொள்ள முடியவில்லை. இலக்கியத்தில் சொல்லப்பட்டவைகளையும் அறநூல்களில் சொல்லப்பட்டவைகளையும் கருத்தில் கொண்டு எழுதப்படும் இதழ்கள்தான் தரம் என கொண்டால் பெரும்பாலனவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நிறைய புதிய செய்திகள் சுவாரசியமான தகவல்கள், உண்மைச் செய்திகள், கருத்துகள் ஆகியவற்றை சுவையாகத்  தருகின்ற இதழ்களை தரமான இதழ்கள் என  கணிக்கலாம். தரமற்றதாக வெளிவரும் இதழ்கள் காலப்போக்கில் மறைந்து விடும். மற்றவை நிலைத்து நிற்கும். இதனை நாம்  கண்கூடாகப்  பார்க்கலாம்.
15. புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்றார் லெனின். தற்போது இணையம் தகவல்கள் விரைவாகத் தரலாம். ஆனால் உள் ஆற்றலை வளர்க்குமா?   புத்தகங்கள்தான் உள் ஆற்றலை வளர்க்கும். இதில் மாறுபடான கருத்தில்லை. ஆனால் அந்த புத்தகமும் இணையத்தில் வாசித்து-சேகரித்து-புத்தகமாக வெளிவருகிறது என்பதுதான் உண்மை. தகவல்களை சேகரிப்பதற்கும் பல்வேறு தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கவும் ஒரு முடிவுக்கு வரவும் இணையம் உதவுகிறது. தகவலை திரட்டுவது சேர்ப்பது தங்களின் கருத்துகளையும் சேர்த்து உருவாகுவதுதான் இப்பொழுதுள்ள நூல்கள். முன்பு முனைவர் பட்டம் பெறுவதற்காக பல நூல்களை அல்லும் பகலும் படித்து குறிப்பெடுத்து எடுக்கப்பட்ட தலைப்புகளுக்கேற்றவாறு தங்களுடைய ஆற்றலையும் சேர்த்து ஆய்வுக்கு அனுப்பி முனைவர் பட்டம் பெற்றனர். இப்பொழுது தாங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பை கணினியில் விரல்களின் உதவியால் தட்டி சேகரித்து பின்பு ஆய்வு கட்டுரையாக கொடுப்பவர்கள்தான் அதிகம் பேர். புத்தகம் படித்து ஆய்வு செய்தவர்களையும் இணையத்திலிருந்து விபரங்கள் சேகரித்து ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பியவர்களையும் கணக்கில் கொண்டுவந்து ஆய்வு செய்தால்  இணையத்தின் மூலம் பெறப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை  அனுப்பியவர்களின் ஆற்றல் குறைவாகவே இருக்கும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?