நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 28 March 2020

திருவாசக மொழியும், மொழிப் பயன்பாடும்



திருவாசக மொழியும், மொழிப் பயன்பாடும்


Why should you learn Foreign Language? | Asap German Language Class
                ஒரு மொழியில் அமைந்துள்ள சொற்கள் எண்ணற்றவை. அவற்றைக் கொண்டு சொல்லமைப்புகளையும், தொடர்களையும், வாக்கியங்களையும் உருவாக்கலாம். வாக்கியங்களையும் தொடர்களையும் உருவாக்கும்பொழுது மொழியிலுள்ள அனைத்துச் சொற்களையும் கையாள்வதில்லை. இடம் நோக்கி அதனதன் பயன் நோக்கி சொற்கள் அமைக்கப்படுகின்றன. கேட்பவரை மனதில் கொண்டும் அவருக்கு எளிதில் புரியவண்ணமும், நேரடிப் பொருள்தரும் வண்ணமும் சொற்களைத் தேர்வு செய்ய் அமைப்பதென்பது ஒரு கலையாகும்.
                ஒருவர்தம் உள்ளத்தில் எழும் கருத்துக்களை அடுத்தவர் மனதில் எளிதில் பதியவைப்பதும், சலனமடையச் செய்வதும் சொற்களின் துணகொண்டுதான். சொற்களைப் பபயன்படுத்தும் முறையில் ஒவ்வொரு கலைஞனும், ஆசிரியனும், பேச்சாளனும் வேறுபடுகிறான்.
                சொற்களைச் சரியான இடத்தில், சரியானப் பொருளைத் தரும் வகையில் பயன்படுத்துவதுடன், அச்சொல்லானது கேட்பவர் மனதில் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும், வகையிலும் சொற்களைப் பயன்படுத்துபவனுடைய படைப்பே அல்லது பேச்சே நிலைபேறடைகிறது எனலாம். இக்காரணம் பற்றியே கலைகளில் இலக்கியக்கலைசிறப்பானதாகப் போற்றப்படுகிறது. எனவே, சொற்பயன்பாடு இலக்கியப் படைப்பைச் செம்மையுறவும் முழுமையடையவும் செய்கிறது என்பது தெளிவாகிறது.

மொழியமைப்பும் பயன்பாடும்
                ஒரு மொழியின் அமைப்பில் சொல்லமைப்பும், தொடரமைப்பும் சிறப்பானதாகக் கருதப்பட்டாலும் அவ்வமைப்புகளில் பயன்படுத்தப்படும் சொற்பயன்பாடு சமுதாயப்பொருளை மற்றும் பல்வேறு சூழல்களில் வெளிப்படுத்தக் கூடிய பொருளைச் சிறப்பாக எடுத்துக்காட்ட வழிவகுக்கும். ஒரு மொழியின் அமைப்பில் பயன்படுத்தப்படும் சொற்கள் இலக்கியத்தின் தன்மைக்கு ஏற்பவும், சொல்ல வந்த கருத்திற்கு ஏற்பவும், காலச் சூழலுக்கு ஏற்பவும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிலிந்து சொற் பயன்பாடானது பொருள் விளக்ககததிற்குத் துணை செய்வதோடு, இலக்கியப் படைப்பாளியின் காலம், சூழல், சமுதாயம், சமுதாயயச சிந்தனை போன்றவற்றையும் வெளிப்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை.
                மேலும், மொழியமைப்பானது சொற்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றமடைகிறது. எனவேதான் ஒரு மொழியில் அமையும் மொழிக்கூறுகளின் தன்மைக்கேற்ப மொழியமைப்பு மாறுபட்டு அமைகிறது. முறைப்படுத்தப்பட்ட மொழியமைப்புகள் சூழலுக்கு ஏற்ப, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. இவற்றிலிருந்து, மொழியமைப்பும் மொழிப்பயன்பாடும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து விளங்குகிறது என்பது தெளிவாகிறது.
மொழிப் பயன்பாடு


ஓர் இலக்கியத்தின், மொழிப் பயன்பாட்டை ஆழ்ந்த ஆராய்வதன் மூலம் அதன் ஆற்றலை அறியமுடிகிறது. அதன் சமுதாயப் பயன் புலப்படுகிறது. சொற்களின் ஆளுமை வெளிப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக கருத்துப் புலப்பாட்டிற்குப் படைப்பாளி பயன்படுத்தியுள்ள உத்திகள், சொல்லாட்சி போன்றவற்றை அறிய முடிகிறது. இதன்வழி சிறந்ததொரு இலக்கியம் பெறவேண்டிய சிறப்புக்கூறுகள் பற்றிய வரைமுறை கிடைக்கிறது. இங்கு, திருவாசகத்தின் மொழிப் பயன்பாடு சமுதாய மொழியியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
மொழியமைப்பு
மொழித்திட்டமிடுதல் பணியில் மூன்று கொள்கைகள் முக்கியமாவையாகக் கருதப்படுகின்றன. அவை.
1.             எழுத்துருவாக்கம்
2.             புதுமையாக்கம்
3.             நிலைபேறாக்ககம்    என்பன.
இவ்வாறு சில உட்பிரிவுகளும் உண்டு. எழுத்தருவாக்கத்தில் எழுத்துச் சீர்திருத்தம், எழுத்தமைப்பு போன்றவையும், புதுமையாக்கத்தில் எளிமையாக்கம், விரிவாக்கம் போன்றவையும், நிலைபேறாக்கத்தில் பொதுமைப்பண்பு, எளிதில் எடுத்தாளும்திறன் போன்றவையும் இடம்பெறும்.
                மணிவாசகர் மிகச்சிறந்த புலவராயினும் செந்தமிழ்நநடையில் அனைத்தும் கவிதைகளையும் எழுதாமல், நாட்டுப்புறப்பாடல் ஓசையினிமையும், நாட்டுப்புற விளையாட்டு வடிவத்தையும் எடுத்துக்கொண்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் பாடல்களைப் பாடியுள்ளார். எளிமையான சொற்களை இதற்கெனக் கையாண்டிருந்தாலும், மேலும் எளிமைப்படுத்த விரும்பிச் சொற்களை அவற்றின் பொருண்மை சிதையாமல் சுருக்கியுள்ளார். இவ்வாறு சுருக்கப்பட்ட சொற்கள், நுட்பத்துடனும் புதுப்பொலிவுடனும் திகழ்கின்றன.
எழுத்துருவாக்கம்
                இறைவனுடைய பெருமைகளை உணர்த்தும் வகையில், இறைவனுடைய முதலுலும முடிவில்லாத தன்மைகளை ஒப்பில் ஒருத்தன்’ ‘ஒப்பிலப்பன்போன்ற சொற்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். இச்சொற்களை எளிமைப்படும்ம விரும்பி இவற்றைச் சுருக்கிறார்.
                ஒப்பற்ற ஒருவன்என்பதை ஒப்பில் ஒருத்தன்என்றும் அததன மேலும் எளிமைப்படுத்தி ஒப்பிலப்பன்என்றும் வழங்குகிறார்
                ஒப்பிலப்பன்என்பதை மேலும் சுருக்கி ஒப்பன்என்கிறார். இதனை அதே பொருள் சிதையாமல் ஒருவன்என்று சுட்டுகிறார். ஒருவன்என்பதையும் எளிமைப்படுத்தி ஒருவஎன்று வடிவம் கொடுக்கிறார்.
                ஒரு சொல்லை மேலும் மேலும் சுரக்கி அதன் பொருண்மை சிதையாமல், சொல்லும் சிதையாமல், அழமான பொரள்தரும் வகையில் எளிமைப்படுத்துவதென்பது அரிய செயலாகும். இச்செயலை மேற்கொண்டதன் மூலம் தமிழ் இலக்கியத்தி.குப் புதிய சொற்களை வழங்கியுள்ளார் மணிவாசகர்.
எ.கா
ஒப்பற்ற ஒருவன்    -    ஒப்பில் ஒருத்தன் - ஒப்பிலப்பன்- ஒப்பன் - ஒருவன் - ஒருவ
என்று வரையறைப்படுத்தலாம். இதைப்போலவே,
                                உள்ளத்தெழும் ஒலி - உள்ளத்தொளி - உளத்தொளி - உள்ளொலி
                                மாதொரு பாகத்தான் - மாதொரு பாதியன்
                                                பாதியன்      -      பாகன்
                                                பங்கள்       -      பங்க
                                                கூறுடையவன் -      கூறன்
இவ்வாறு சொற்களைச் சுருக்கி, எளிமைப்படுத்திப் பயன்படுத்துவதடன் வழக்கிலுள்ள சிறுசிறு சொற்களைக் கொண்டே பாடல்களையும் அமைத்துள்ளார். சான்றாக, திருச்சதகத்தில்,
                                ‘‘ஒருவனே போற்றி ஒப்புஇல்
                                                அப்பனே போற்றி வானோர்
                                  குருவனே போற்றி எங்கள்
                                                சூகாமளக் கொழுந்து போற்றி
                                  வருகஎன்று என்னை நின்பால்
                                                வாங்கிட வேண்டும் போற்றி
                                   தருகநின் பாதம் போற்றி
                                                தமியவேன் தனிமை தீர்த்தே’’                (5-68)
                என்ற பாடலின் பொருள், இறைவனின் திருவடியே உயிர்களுக்குச் சிறந்த துணை என்பதாகும். இப்பாடலில் அமைந்துள்ள ஒவ்வொரு சொல்லும்  எளிமையானவை. எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் கருத்துப்புலப்பாட்டு ஆற்றல் பெற்றதாக அமைந்திருப்பது இதன் சிறப்பினை எடுத்துக்காட்டுகிறது.
புதுமையாக்கம்
                வளருகின்ற ஒரு மொழியில் புதுச்சொற்கள் வந்து சேர்தல் இயல்பு. ஒரு மொழி வளர்ந்துள்ளது என்பதற்குச் சான்றாக அமைபவை அம்மொழியில் வந்து சேர்ந்துள்ள புதுச்சொற்களும், பிற அமைப்புகளோகும். பிறமொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்குவதில் மூலமோ, அல்லது பிறமொழிச் சொற்களைத் தன்னினமாக்க விகுதிகளை இணைப்பதில் மூலமோ மொழிபெயர்ப்புச் செய்வதன் மூலமோ ஒரு மொழியில் புதுச்சொற்கள் இடம்பெறுகின்றன. இலக்கியப் படைப்பாளிகளும் புதுச்சொற்கள் உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவ்வகையில் மணிவாசகர்,
1.             பிறமொழிச் சொற்களுக்கு இணையான சொற்களை உருவாக்குதல்
2.             பிறமொழிச் சொற்களோடு, தமிழ்ச் சொற்களை இணைத்துப் புதுச்சொற்களை உருவாக்குதல்
போன்ற இரு கொள்கைகளின் அடிப்படையில், புதுச் சொற்களை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
1.இணையான சொற்கள்
                மணிவாசகர் இருமொழிப் புலமை பெற்றவர். கூடமொழியிலும் தமிழிலும் தேர்ச்சிபெற்றவர். வடமொழியிலுள்ள நுண்பொருட் சொற்களைத் தமிழ் மொழியிலும் இடம்பெறச் செய்ய வே.டும் என்ற நோக்கில், வடமொழிச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
                வடவாமுகாக்கினி என்னும் வடமொழிச் சொல்லை சுடுதீ (6-32) என்று மொழிபெயர்த்துள்ளார். வடவாமுக்கினியானது உலகினையேச் சுட்டு அழித்துவிடும் கொடும் நெருப்பாகும். அந்த வடவைத்தீயும் கலங்கும் படி எவராலும் தாங்குவதற்கு முடியாதது ஆலகால விடம். அந்த ஆலகால விடத்த்தயும் அமுதுபோல் உண்டு, உலகைக் காத்தவன் இறைவன் என்று இறைவனுடைய தாய்த்தன்மையை உணர்த்துகிறார். வடமொழிச் சொல்லான வடவாமுகாக்கினி என்பதை அப்படியே பயன்படுத்தாமல் சுடுநீ என்று பொருள் சிதையாமல் மொழிபெயர்த்துள்ளார். இதைப்போலவே ஈஸ்வரன், ஈஸ்வரி என்னும் இரு வடமொழிச் சொற்களையும் உடையவன், உடையவள் என்று மொழிபெயர்த்துள்ளார்.
2.இணைப்புச் சொற்கள்
                சோதி, தேசு, விமல போன்ற வடமொழிப் பெயர்களுடன் இறுதியில் -அன்- என்ற விகுதியை இணைப்பதின் மூலம் அவற்றைத் தமிழ்ப்படுத்தியுள்ளார்.
எ.கா.
                                சோதியன்
                                தேசன்
                                விமலன்
                மணிவாசகர் வடமொழிச் சொற்களில் பொருண்மை மட்பத்துடன் கூடிய சொற்களையே கையாண்டுள்ளார் என்பதையும் காணமுடிகிறது.
நிலைபேறாக்கம்
                இலக்கியத்தில் சொற்களைத் திரும்பத் திரும்பத் பயன்படுத்துவதின் மூலமும், பொருண்மை நுட்பத்துடன் கூடிய சொற்களை இடம்நோக்கி பயன்படுத்துவதின் மூலம் நிலைபேறாக்கம் ஒருவகையில் மேற்கொள்ளப்படுகிறது. ‘‘ஒரு சொல் அன்றாட நடைமுறை வழக்கிலோ படைப்புக்களிலோ மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பயன்பாட்டில் பரவலாக ஈடுபத்தப்படுவதை நிலைபேறாக்கம் என்கிறோம். (1989-73) என ஜெயா தமது நூலில் மேற்கொளாகக் குறிப்பிட்டுள்ளளர்.
                மணிவாசகர் புதுச்சொற்களை உருவாக்கியதோடு, அவற்றை நிலைபேறாக்கம் செய்யவும் தன்னுடைய நூலிலேயே பல இடங்களில் திரும்பத் திரும்பக் கையாண்டு அவற்றின் பயன்பாட்டையும் ஆற்றலையும் வெளிப்படுத்தி அவற்றை நிலைபேறாக்கம் செய்துள்ளார். அவ்வகையில் 
                                உடையான்          உடையவன்
                                உள்ளொளி          சேதன்
                                செய்யான்           வெண்மையன்
                போன்ற சொற்களை திரும்பக் கையாளுகிறார். இலக்கிய வழக்குச் சொற்களைச் கையாளும்போது ஒருபொருள் தரும் பல சொற்களைப் பயன்படுத்துவதின் மூலம் நிலைபேறாக்கம் செய்கிறார்.
                                ‘‘கொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே’’ (8-1)
                இறைவனுடைய பெருமையை உணர்த்துமிடத்து, திருமால் பிரமன் ஆகிய இரு கடவுளர்களையும் விட உயர்ந்தவர் சிவபெருமானே என்று குறிப்பிடுகிறார். திருமாலும், காணமுடியாத திருப்பாதங்களை உடையவனும், பிரமனும் அறிய முடியாத திருமுடியை உடையவனும் சிவபெருமானே என்று சிவபெருமானின் அடிமுடியின் பெருமையை உணர்த்துகிறார். திருமாலும் செல்ல முடியாத பாதாளத்திற்கும் செல்லக்கூடியவன் சிவன் என்று கூறுமிடத்து பாதாளம் என்று குறிப்பிட்டிருந்தாலும் பொருள் மாற்றம் ஏற்பட்டிருக்காது. இலக்கிய வாக்கிலிருந்து பூதலம் என்ற சொல்லை நாட்டுப்புறப் பாடல் வடிவான திருவம்மானையில் பயன்படுத்தியுள்ளதின் மூலம் அச்சொல்லின் நிலைபேறாக்கத்திற்கு முயன்றுள்ளார். ஆனால் அடுத்த பாடலிலேயே பாதாளத்தார் என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளார்.
                சொற்களின் நிலைபேற்றை காக்கும்பொருட்டு ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்களைப் பொருள் மாறுபாடின்றி இயல்பாகப் பயன்படுத்தியுள்ளது அவரது மொழிப் பயன்பாட்டுத்திறனை வெளிப்படுத்துகிறது. இதைப்போலவே பொய்கை, புனல், மடு, பொழில் போன்ற ஒரே பொருள்தரும் சொற்களை இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தியுள்ளதும் சொல்லாட்சியின் தனித்தன்மைக்குச் சான்றுகளாகும்.
                பேச்சு வழக்குச் சொற்களின் நிலைபேறாக்கத்திற்கு நாடகப் பாங்கு வடிவினவான நாட்டுப்புற விளையாட்டு வடிவங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதன் மூலம் விளையாட்டு வடிவங்களுக்கும் இலக்கிய மதிப்பு கொடுத்துள்ளதோடு, இன்று வழக்கொழிந்த சிலவிளையாடல்களுக்குத் தனது இலக்கியத்தில் நிலைபேறு அளித்துள்ளார். விளையாட்டுப் பாடல்கள் உரையாடல் வடிவத்தில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். மணிவாசகர் பயன்படுத்தியுள்ள பேச்சு வழக்குச் சொற்கள் இன்றும் வழக்கில் பயின்று வருவதனைக் காணமுடிகிறது.
                திருவெம்பாவைப் பாடல்களில் பயின்று வரும் சில பேற்று வாக்குச் சொற்களைக் காணலாம்.
எ.கா
                                இராப்பகல்
                                நேசமும் வைத்தனையோ
                                சீசீ இவையும் சிலவோ
                                என்னோடீ
                                மொத்துண்டு         போன்றவை.
இலக்கணக் கூறுகள்
                ஒரு மொழியின் வளர்ச்சிக்கேற்ப, புதுச்சொற்களும், கலைச்சொற்களும் அதில் வந்து சேர்வதுபோலவே இலக்கணக் கூறுகள் வந்து சேர்கின்றன. சொல்ல வந்த கருத்திற்கு ஏற்ப, இலக்கணக்கூறுகளைப் பயன்படுத்துவதில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. மணிவாசகர் இலக்கணக் கூறுகளைக் கையாண்டுள்ள தன்மையைக் காணும்பொழுது, அவர் இலக்கணக் கூறுகளிலும், சிற்சில மாற்றங்களைப் பயன்பாட்டிற்கேற்ப செய்துள்ளதை இனங்காண முடிகிறது.
முன்னிலைச் சொற்கள்
                மணிவாசகர் முன்னிலைச் சொற்களைப் பயன்படுத்துவதில் மாற்றம் செய்துள்ளார். திருவள்ளுவர் முன்னிலை ஒருமைப் பெயர்களைக் குறிக்குமிடத்து வினைமுற்றில்-ஈர்- விகுதிகளைக் கையாண்டுள்ளார்.
                                ‘‘யார்உள்ளி தும்மினீர்’’               (குறள்.1320)

மணிவாசகர் முன்னிலை ஒருமையை குறிக்குமிடத்து சில இடங்களில் -ஈர்-விகுதியைக் கையாண்டுள்ளார். என்றாலும் பெரும்பாலும் முன்னிலைப் பன்மையிலேயே இவ்விகுதியைப் பயன்படுத்துகிறார். 
                நல்லீர்        (9-15)
                பூண்முலையீர் (7-15)
                மென்மொழியீர்       (9-13)
வினைமுற்றை முதலில் கூறுதல்
                பொதுவாக வாக்கிய அமைப்பானது எழுவாய் முதலிலும், பயனிலை இறுதியிலும் அமைவதே மரபு. சொல்ல வந்த கருத்தைக் கேட்பவர் விருப்பமுடன் கேட்க வேண்டும் என்பதற்காக வினைமுற்றை எழுவாயாகப் பயன்படுத்திப் பாடல்களை இயற்றியுள்ளார் ஆசிரியர். கருத்துகளை மக்கள் மனதில் ஆழப்பதிய வைக்கவேண்டும் என விரும்பியே இவ்வாறு அமைத்துள்ளார். எடுத்துக்காட்டாக, சில பாடல்கள் இங்குச் சுட்டிக்காட்டப்படுகின்றன. திருச்சதக இறுதிப்பாடலில், பாடவேண்டும் என்று தொடங்குகிறார். கேட்பவர்க்கு எதை? ஏன்று ஒரு விருப்பம் தோன்றும் வகையில் போற்றி நின்னையேஎன முடிக்கிறார். இவ்வாறு தொடர்ந்து, வினைமுற்றை முதலில் கூறி, ஒரு விருப்பத்தை ஏற்படுத்தி, பாடலின் முடிவில் பூடகமாக பதிலுரைப்பதுபோல் உரைக்கிறார். பாடலின் இறுதிச்சொல்லானது மெய்யர் மெய்யனே என்று முடிகிறது.
                இதைப்போலவே, திருஅம்மானைப் பாடலொன்றில் சொற்களை இடையிலே நிறுத்தி, மேலே என்ன சொல்லப் போகிறார் என்று கேட்பவர் விருப்பமுடன் எதிர்பார்க்கும் வண்ணம் தம் தொடரமைப்பை அமைத்துள்ளார்.
                சூடுவேன் பூங்கொன்றைஎன்று தொடங்குகிறார். இங்கு, சொல்ல வந்த கருத்து முடிந்துவிட்டது போல் தோன்றுகிறது. ஆனால் அடுத்த சொல்லாக சூடி என்ற சொல்லைப் பெய்கிறார். இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. சூடி? பதிலையும் அவரே உரைக்கிறார். சூடிச்சிவன் திரள்தோள் கூடுவேன். இத்துடன் கருத்து முற்றுப் பெற்றுவிட்டதைப் போலத் தோன்றுகிறது. ஆனால் கூடி என்ற சொல்லைப் பெய்து சொல்ல கருத்து முற்றுப்பெறவில்லை என்று உணர்த்துகிறார், இதைப்போலவே சொற்களை அமைத்து கேட்பவர் புதிதா ஏதோவொன்றை அறியப்போகிறோம் என்று ஆர்வமுடன் எதிர் பார்க்கும் வகையில் சொல் விளையாட்டினைச் செய்து காட்டுகிறார். இவ்வாறு அமைந்த பாடலைக் ககண்போம்.
                                ‘‘சூடுவேன் பூங்கொன்றை சூடிச்சிவன் திரள்தோள்
                                  கூடுவேன் கூடிமுயங்கி மயங்கி நின்று
                                  ஊடுவேன் செவ்வாய்க்கு உருகுவேன் உள்உருகித்
                                  தேடுவேன் தேடிச்சிவன் கழலே சிந்திப்பேன்
                                  வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல்ஏந்தி
                                  ஆடுவான் சேவடியே பாடுதும்காண் அம்மானாய்’’ (8-17)
                இவ்வாறு இலக்கண மரபுகளிலும் புதுமை வெற்றி கண்டுள்ளார் மணிவாசகர். இலக்கண அமைப்பில் மாற்றம் செய்ததின் மூலம் பாடலுக்கு ஒருவித ஓசையினிமையையும் இலக்கிய நயத்தையும் வழங்கியுள்ளார். சூடுவேன், கூடுவேன் என்று வினைமுற்றை (செயலை) முதலில் கூறியிருப்பதன் மூலமும், முதன்மைப்படுத்தியிருப்பதன் மூலமும் மணிவாசகரின் உறுதித் தன்மையும் இறைப்பற்றும் புலப்படுகிறது. இதன்மூலம் சொற்களை ஆழமுடன் இடம் நோக்கிப் பயன்படுத்தும் மணிவாசகரின் ஆளுமை புலப்படுகிறது.
இரட்டைப் பன்மை
                தமிழின் விகுதிகளாக அர், ஆர், மின் போன்றவற்றைப் பயன்படுத்தவர் அவ்வாறு பயன்படுத்தும்பொழுது ஒரு விகுதியையே சொற்களுக்கு, வினைகளுக்கும் இறுதியில் இணைப்பர். அவ்வகையில் ஒரு விகுதி பெற்ற சொற்களாக,
                                கொம்பர் (அர் விகுதி) (5-67)
                                நான்முகனார் (ஆர் விகுதி) (14-18)
                என்பவை இடம்பெற்று திருவாசகத்தில் பயின்று வந்துள்ளன. ஆனால், விகுதி மேல் விகுதி பெற்றுச் சில சொற்கள் பயின்று வரும் புதுமையையும் காணமுடிகிறது. அவ்வகையில்,
                                விடேங்கள்    -      ன்ஒரு விகுதி, கள் ஒரு விகுதி           (5-75)
                                சேர்மின்கள்   -      மின்ஒரு விகுதி, கள் ஒரு விகுதி  (36-10)
                                உந்தீர்கள்     -      ஈர்ஒரு விகுதி, கள் ஒரு விகுதி           (46-2)
                சேர்மின்என்ற ஒரு விகுதி பெற்ற சொல்லும் திருவாசகத்தில் பயின்று வந்துள்ளது. அதாவது உயர்வுப் பன்மையில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கில், உயர்வு ஒருமையிலும் சில சமயங்களில் இவ்வாறு வழங்கப்படும். ஆகவே, உயர்வுப் பன்மையிலேயே அச்சொல் வழங்கப்படுகிறது என்பதை உணர்த்தவே, மீண்டும் ஒரு பன்மை விகுதியை இணைத்து சேர்மின்கள் என்று வழங்கிறார். இவ்வாறு இலக்கண மரபுகளில் மாற்றம் செய்து, தான் சொல்ல வந்த கருத்தை முழுமை பெறச் செய்யும் மொழித்திறம் - கருத்துப்புலப்பாட்டுத்திறம் போற்றுதற்குரியது.
அடைச்சொற்களின் பயன்பாடு
                ஒரு பொருளின் இயல்பினை-தன்மையை-பெருமையை உணர்த்துவதற்கு அடைகளைப் பயன்படுத்துவது மரபு. அடைகள் சீர் நிரப்புவதற்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. என்றாலும், பொருள் புலப்பாட்டிற்கு அவை உதவுகின்றன. திருவாசகத்தில் அடைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள முறையினைக் காணலாம்.
செம்என்ற அடைச்சொல்
                ஓரே அடை இரண்டு பெயர்களுக்குப் பொருந்நதி வருதல் உண்டு, இம்முறையில் ஒரே அடைச்சொல்லை வேறுவேறு பொருள்களுக்குத் தரும்போது அவை ஒரே பொருனைத் தந்து நிற்காது, சிறப்பித்து வரும் பொருள்களின் சிறப்பு வெளிப்பாட்டிற்குத் துணையாகவும் அமைவதைக் காண்கிறோம்.
                சிவபெருமானுக்குச் செம் என்னும் அடைச்சொல்லைப் பயன்படுத்துமிடத்து,
                                செஞ்சடை           செம்மேனி
                                செம்முடி            செம்பிரான்
                                செங்கண்            செவ்வாய்
என்று சிவந்த என்னும் பொருள்படும் வகையில் செம் என்ற சொல்லை அடையாகப் பயன்படுத்துகிறார். பார்வதிக்குப் பயன்படுத்துமிடத்தும்,
                செம்பார்முலை
                செவ்வாய்
என்று கூறி சிவந்த என்னும் பொருள் தரும் வகையிலேயே இவ்வடைச் சொல்லைப் பயன்படுத்துகிறார். ஆனால், திருமாலுக்குப் பயன்படுத்துமிடத்து தாமைரைமலர் போன்ற என்று பொருள்தரும் வகையில் பயன்படுத்துகிறார்.
                செங்கண்நெடுமால்
                செங்கணவன்
சிவபெருமானுக்குப் பயன்படுத்தும் பொழுது பெரும்பாலும் சீற்ற மிகுதியைக் குறிக்கவே செம் என்ற அடைச்சொல்லைப் பயன்படுத்துகிறார்.
கண்ணிற்கு வரும் அடைச் சொற்கள்
                ஒரே பொருளுக்குப் பல்வேறு இடங்களில் பல்வேறு அடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் அப்பொருளின் ஒவ்வொரு தன்மையினை விளக்குவனவாக அமைந்துள்ளள. அவ்வகையில் கண்ணிற்கு வரும் அடைச்சொற்களைக் காண்போம்
உமையுடைய கண்ணிற்கு வரும் அடைச்சொற்கள்
                                மையார்தடம்
                                செங்கயம்
                                போதரி
                                கரும்                             கண்
                                குவளை
                                வாள்
வேல்
உமையின் கண்ணைக் குறிக்குமிடத்து, மையிடுவதால் கருமை என்று பொருள்தரும் வகையில் மையிலங்குகண், கருங்கண், மையார்தடங்கள், மைகலந்த கண் போன்ற சொற்களை அமைக்கிறார். கண்ணின் கூர்மையையும், ,ழகையும் குறிக்க வேல், வாள், குவளை, கயல் போன்ற அடைச்சொற்களைப் பயன்படுத்தி உள்ளார்.
சிவபெருமானின் கண்ணிற்கு வரும் அடைச்சொற்கள்
                                நெற்றி
                                செம்
                                கருணை                   கண்
                                அம்
                                முக்
                சிவபெருமானுடைய கண்ணைக் குறிக்குமிடத்து, நெற்றிக்கண்ணைப் பெற்றிருக்கும் காரணத்தினால் பெரும்பாலும் முக்கண்ணுடையவன் என்று பொருள்தரும் வகையிலே அடைச்சொற்களைப் பயன்படுத்துகிறார். மேலும், இறைவன் கருணை மிகுந்தவன் என்பதைக் குறிக்கும் வகையில் கருணை என்ற அடைச்சொல்லை.ம், சீற்றத்தால் சிவந்த கண்களையுடையவன் என்பதைக் குறிக்க செங், அங் முதலான அடைச்சொற்களையும் பயன்படுத்தியுள்ளார்.
                இதைப்போலவே, இறைவனின் திருவடிக்குப் பொன், செந்தளிர், மலர் தாமரை, செங்கமலம், பூவார், நிமலன் போன்ற சொற்களை அடைகளாகப் பயன்படுத்தியுள்ளார்.
                இவ்வாறு ஒரு பொருளின் முழுத்தன்மையினையும் விளக்கும் வகையில் அடைகளைப் பயன்படுத்தியுள்ள பாங்கு உற்று நோக்கத்தக்கது.
ஒரு பொருட் பன்மொழி
                ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்களைக் கையாளுதல் மரபு. அந்த வகையில் மணிவாசகரும் பல சொற்களைத் தமது படைப்பில் கையாண்டுள்ளார். ஒரு சொல்லைடத திரும்பப் பயன்படுத்துவதினால் வரும் சலிப்பை நீக்கவே இச்சொற்களைப் பயன்படுத்துகிறார் என்பதை அறியமுடிகிறது இதன்வழி அவரின் சொல்லாட்சித்திறனை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. உடல் என்பதைக் குறிக்க அவர் பயன்படுத்தியுள்ள சொற்களைக் கீழே காணலாம்.
வலை               மெய்
                ஊறல்                             யாக்கை
                காயம்                            உடம்பு
                குப்பாயம்                         உடலம்
                குரம்பை                           குடில்

                                ‘‘அழிதரும் ஆக்கை’’    (3-120)
                                ‘‘வேற்றிவிகார விடக்குடம்பு’’  (1-84)
                                ‘‘செடிசேர் உடலம்’’       (5-83)
                                ‘‘சிதலைச் செய்காயம்’’               (6-41)
                                ‘‘மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடில்’’           (1-52)
                                ‘‘ஊனார் புழுக்கூடு’’       (5-55)
                                ‘‘துயராக்கையின் திண்வலை’’                (6-39)
                இவ்வாறு உடல் என்பதைக் குறிக்கப் பல சொற்களை வழங்கினாலும், அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள அடைமொழிகள் ஒரு பொதுப்பொருளைத் தருவனவாகவே உள்ளன. உடலானது அழியும் தன்மை வாய்ந்தது. மண்ணுக்கு இரையாகும் புழுவின் கூடு போன்றது. ஜம்புலன்களால் மனதை ஆட்படுத்தும் வலை போன்றது என்றெல்லாம் கூறுகிறார். இதன்மூலம் அழிகின்ற இவ்உடலால் பெறப்படும் உலக இன்பங்களிவெல்லாம் பொய்யானவை, அவை வெறும் சிற்றின்பங்களே என்று எடுத்துக்கூறி இறையருளின் பேரின்பத்தில் திளைத்துப் பயன்பெறுங்கள் என்று நெறிப்படுத்துகிறர்ர். உடலைக் குறிக்கப் பயன்படுத்த்ப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லும் ஒரு தத்துவத்தையே எடுத்துக்கூறுகிறது என்றால் அது மிகையன்று.
தாழ்வெனும் தன்மை
                மணிவாசகர், இறையருளை மற்றும் இறையன்பை உணர்ந்த வந்தவர். இறையருளின் பெருமையைச் சாதராண மக்களும் உணரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்டார். தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற பெருநோக்குடன், தான் இறைவனால் ஆட்கொள்ளப் படுவதற்கு முன்னிருந்த நிலையை எடுத்துக்கூறுகிறார்.
                ஜம்புலன்களால் அலைப்புண்டு, மாதர் தம்மைச் சார்ந்து, அரச இன்பங்களில் திளைத்து இறையருளைச் சிறிதும் சிந்தியாமல் இருந்த நிலையைத் தன் பாடல்களில் விவரிக்கிறார்.
எ.கா.
                                ‘‘அடற்கரி போல்ஐம் புலன்களுக்கஞ்சி அழிந்தஎன்னை’’         (6-32)
                                ‘‘நகையார் கொங்கைக் குன்டைச்சென்று’’                       (6-27)
                இவ்வாறு கீழான வாழ்க்கை நடத்தி வந்த தன்னை ஆட்கொண்ட இறைவன் மக்களையும் நல்வழிப்படுத்துவான் என்ற கருத்தினை மக்களுக்கு எளிதில் புலப்படுத்த இறைவனின் கருணையைப் பாராட்டுகிறார். உருகாத கல்நெஞ்சையும் தன் கருணையினால் உருக்கி ஆட்கொள்பவன் இறைவன் என்பதனை,
                ‘‘கல்நெஞ்சு உருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்டான்’’ (10-11) என்ற வரிகளில் உணர்த்துகிறார்.
                மக்களை ஆற்றுபடுத்த வேண்டும் என்பதற்காக தன்னை நாயேன், பித்தன், புன்மையன் பேயன் என்றெல்லாம் கூறிக் கொள்கிறார். இவற்றால் நாயினும் கீழான தன்னையும் ஆட்கொண்ட இறைவன் கண்டிப்பாகப் பிறரையும் ஆட்கொள்வான் என்று அழுத்தம் திருத்தமாக இச்சொற்களின் வழியே வெளிப்படுத்துகிறார். தாழ்வெனும் தன்மையின் மூலம் பிறரை நல்வழிப்படுத்தும் பெருநோக்கு இதன்வழி புலனாகிறது.
இறைக்கருணை
                இறைவனுடைய கருனைத் திறத்தை எண்ணி எண்ணி வியக்கிறார் மணிவாசகர் எளியவர்களுக்குத் தகுதிக்கு மீறிய இன்னருள் புரிபவன் இறைவன். இறைவனின் கரணை கைம்மாறு கருதாதது. எல்லா உயிர்களுக்கும் உயிராக ஒளிரும் இறைவன், அருள் வேண்டி நிற்போர் அனைவருக்குமே தன்னை அளித்துவிடுகிறான்.
                                ‘‘தந்ததுஉன்தன்னை, கொண்டது என்தன்னை`
                                  சங்கரா, யார்கொலோ, சதுரர்?
                                  அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்,
                                  யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?
                ஏன்று இறைவனை நோக்கி, ,உன்னை எனக்கு நீ தந்துவிட்டதால், எனக்கு ஏற்பட்ட இன்பம் இருக்கிறதே அது எல்லையில்லாத பேரின்பமாகிறது. முடிவு இல்லாத ஆனந்தம் அது. ஏன்னை நீ எடுத்துக்கொண்டதால் நீ என்ன பெற்றதாய்? ஏன்று இறைவனைக் கேட்குகிறார். கைம்மாறு கருதாத உதவிதானே கருணை. இக்கருணையை நினைத்து நினைத்து உருகிப் பாடுகிறார்.
                                ‘‘அருள்நவி சுரக்கும் அமுதே’’               (3-39)
                                ‘‘என்னுட் கலந்து தித்திக்கவல்ல கோளை  ‘’ (8-16)
                                ‘‘சித்தம் புகுந்த தித்திக்கவல்ல கோளை’’ (5-90)
                                ‘‘தேனே அமுதே கரும்பின்தெளிவே’’                (5-55)
                                ‘‘தேணையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து’’       (6-21)
                இவ்வாறெல்லாம் இறைக்கருணையும் பேரி.பத்தையும் பலவாறு வியந்துபாடுகிறார். அனைவரும் அறிந்த இனிமைப் பாள்களான தேன், அமுது, கரும்பு இவை மூன்றையுமே இறைமை இன்பத்திற்கு இணையாகக் கூறுகிறார். இவ்வாறு கூறும்பொழுது, தேன், போன்றவன், அமுதம் போன்றவன், பால் போன்றவன் என்று கூறியதோடு நில்லாமல் இவை அனைத்துமானவன் என்பதை இச்சொற்களைக் கொண்டு அடுக்கிக் கூறுகிறார்.
 இறைஇன்பத்தை முழுமையாக உணர்த்த நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களின் பெயர்களால் விளக்குகிறார். அவ்வாறு சொல்லும்போது தேனையே முதலில் கூறுகிறார். இதற்குப் பண்டிதமணி தரும் விளக்கம் மேலும் சுவையைக் சுட்டுவதாக அமைந்துள்ளது.
                ‘‘இம்மூன்றுப் பொருள்களையும் வரிசைப்படுத்தும்பொழுது தேன்-அமுது கரும்பு என்ற வரிசையில் அமைந்துள்ளார். மூன்றனுள்ளும் தேன் வடிகட்டிய அளவில் எடுக்கப்படுவது, நாவிற் பட்டதும் மிகுந்த இனிமை தருவது பால். காய்ச்சப்பட்ட பின் இனிமை பயப்பது (அமுது என்பதற்குத் தேவர் உணவாகிய அமிர்தம் எனவும் பால் எனவும் பொருள் கொள்ளலாம் என்பது பண்டிதமணியின் கருத்து)
 “கருப்பஞ்சாறு, ஆலையில் இட்டுப்பிழிந்து எடுக்கப்பட்டு, நன்றாகக் காய்ச்சப்பட்டபின் கட்டியாகி இனிமை செய்வது. இம்மூன்றனுள்ளம், தேன் புழுக்களின் எச்சில் மயமாகவும், பால் ஊனுடலின் சாரமாகவும் உள்ளவை. பயன் விளைவிப்பதில் தேனினும் பால் சிறந்தது. பாலொடு தேன் கலந்தற்றே என்பது, ஒரு உருபு உயர்வு குறித்து வந்ததும் அறிக. கருப்பங்கட்டி, எச்சில், ஊன்கலப்பு முதலிய அக்குற்றம் இலதாய், உடலுக்கு நலம் பயப்பதாகும். இம்முறையில் ஆண்டவன் அன்பரை ஆட்கொள்ளுங்கால், தேனைப்போல மிக இனியனாய் வெளிப்பட்டு வயப்படுத்துப் பாலைப்போலப் பின் பயன்வினைத்துக் கருப்பங்கட்டியைப் போலத் தூய இன்பம் அறித்துப் பாதுகாப்பான் என்பது அறியதக்கது. இதன் சுவை அருமையிலும், கருப்பங்கட்டிச் சுவை அதனினும் அருமையினும் அறியப்படுதல் போல, ஆண்டவன் அன்பவரை ஆட்கொள்ளுங்கால், முதலில் எளியனாகவும், பின் அவன் சொருப நிலையை உணர உணர மேன்மேலும் பெரியனாக.ம் காணப்படுவான் என்னும் உண்மையும் பெறப்படுதல் அறிக’’ என்று இம்மூன்றுப் பொருள்களையும் அமைத்துள்ள வைப்புமுறையைப் பண்டிதமணி விளக்குகிறார். (1985, 285-286)
                பிறிதொரு இடத்தில், ‘‘மாறிலாத மாக் கருணை வெள்ளமே’’ (5-91) என்கிறார். மாறிலாத என்னும் சொல் விளைவிக்கும் பயன்பெரிது. (மாறு-இலாத-அளவாலும் தன்மையாலும் வேறுபடுதல் இல்லாத). இறைவனுடைய கருணையானது எக்காலத்தும் மாறுபாடின்றி ஒரே அளவினதாய் நிறைந்த விளங்கும் தன்மையை வாய்ந்தது என்பதை உணர்த்தவே மாறிலாத என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இதைப்போலவே, மா என்பது பெரிய அளவில்லாத என்னும் பொருள்படும். இங்கு வெள்ளப்பெருக்கு என்னும் பொருளில் பயின்று வருகிறது.
வெள்ளப்பெருக்கானது எத்தகையத் தடையையும் உடைத்துக்கொண்டு சீறிப்பாயும் இயல்புடையது. இறைக்கருணையும் இதைப்போலவே அன்பரைத் தடைகளை உடைத்து வெள்ளமெனப் பாய்ந்து வரும் இயல்புடையது என்பதை உணர்த்தவே மா என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் மணிவாசகர் பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு சொல்லும், மிகவும் ஆற்றல் வாய்ந்த நுட்பப் பொருளை விளக்கவே எடுத்தாளப்பட்டுள்ளது என்பது புலனாகிறது.











No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?