ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் சமூகச் சீரழிவு
நகர மயமாதல் பெண்களுக்குக் கல்வி தந்து அவர்களை ஒரு புறம் உயர்த்தி வந்தது. மறுபுறம் சீரழிவுகளும் பெருகின. தொழிற்சாலை நகரங்களில் பெருகும் மக்கள் தொகை, மக்களிடையேயான நெருக்கத்தைக் குறைத்து வணிக நோக்குடன் செயல்படுவதற்குக் காரணமாகி விடுகின்றன. பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றம் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து எல்லா உறவுகளிலும் போட்டியை ஏற்படுத்தி விடுகிறது.
பொருண்மைய நோக்கும் எதையும் பணக் கண்ணோட்டத்தில் அணுகச் செய்து ஒழுக்கவுணர்வுகளைவிட உல்லாச வாழ்க்கையை முன்னிறுத்திச் சுரண்டலுக்கும் சிறுமைக்கும் வழி தந்து மற்றவரைப் பற்றியும் எதிர்காலம் குறித்தும் சிந்தனையற்றுப் பகட்டுக்கும் போலி இன்பத்துக்கும் தற்காலிக நிறைவுகளுக்கும் முன்னுரிமை நல்கும் நிலையை உருவாக்குகின்றன.” (அன்னி தாமசு, 2000:133)
காந்திமதி, பாப்பா
போன்ற பெண்களிடம் இந்நகரச் சூழல் மனிதாபிமான உணர்வை நீக்கி, மரபுமீறிய நடவடிக்கைகளில் ஈடுபடச்செய்து விடுகிறது.
கிராமத்துப் பெண்களின் அப்பாவித் தனத்தைத் தங்களின் சுய நலத்திற்காகப்
பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியத்தை வாழ்க்கைக் கலையாகக் கற்றுக் கொள்ளும் இப்பெண்கள்
சமூகச் சிதைவின் எதிரொலிப்புகள்.
காந்திமதி தன் அழகால் ஆண்களை மயக்கி காரியம்
சாதிப்பவள். அவளது அழகுக்கு ஆண்கள் மகுடியால் கட்டுண்ட நாகம் போல மயங்கினார்கள். ஆனால்
சந்திரன் அவளை ஊதாசீனப்படுத்தினான். இதனால் வெகுண்ட காந்திமதி, அவன் விரும்பும் கமலத்தின் மீது பொறாமை கொண்டாள். இப்போட்டி
உணர்வு பெண்ணுக்குப் பெண்ணே துரோகம் செய்யக் காரணமாகிறது. விட்டுக் கொடுக்காத
தன்மை, ஆணை எந்த வகையிலாவது வெற்றி கொண்டு வசமாக்க வேண்டும் என்ற எண்ணம்
இவற்றினால் மற்றொரு பெண்ணின் வாழ்வைக் காந்திமதி எண்ணிப்பார்ப்பது இல்லை. தான்
தப்பித்துக் கொண்டு மற்றொரு பெண்ணைப் பலியாக்கும் கலையில் தேர்ந்து விடுகிறாள்.
5.17.1. நகை, அலங்கார மோகம்
ஆரம்பகாலக் கொங்குச் சமுதாயத்தில் பெண்கள்
ரவிக்கை அணிவதில்லை. வயசுப்புள்ளைகளாட்டம் அந்தச் சனியனையெல்லாம் போட்டுக்கிட்டு
மத்தவங்க முன்னாலே எப்படிப் போவது?” (உதயதாரகை18) என்று நடுத்தர வயதுப் பெண்கள் மறுத்தார்கள். கைம்பெண்கள்
வெள்ளை ஆடை அணிவர் (பனித்துளி45)
இம் மோகத்தில் மயங்கியதால் காந்திமதியின் நடத்தையைக் கவனிக்கக் கமலம் தவறிவிடுகிறாள். பெண் யாருக்காகத் தன்னை அழகு படுத்திக் கொள்கிறாள்? மற்றவர்களுக்கு வனப்பைப் படைக்கவா? பிறர் பார்த்து இவர்களுக்கு என்ன ஆகிறது? குடும்பப் பெண்களும் குழந்தை குட்டி பெற்றவர்களும் தங்களை யாராவது திரும்பிப் பார்த்தால் பெருமையும் கர்வமும் கொள்கிறார்கள். அது என்ன கர்வமோ? என்ன இனிமை அதில் இருக்கிறதோ. ஆனால் பாலாமணி தனக்காகவே தன்னை அலங்கரித்துப் பூரிப்பு அடைவாள்” (வி.த.:139) என்று பிறருக்காக அன்றி தனக்காகவே பெண்கள் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். ஆர்.சண்முகசுந்தரம், ஆண்களுக்காகவோ, பிறருக்காகவோ தன்னை ஒரு பெண் அலங்கரித்துக் கொள்வது அவளையே அவள் இழிவுபடுத்திக் கொள்வதற்குச் சமம் என்கிறார்.
நன்றாக அலசி இருக்கிறீர்கள் தொடருங்கள்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்