ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்களும் நம்பிக்கைகளும்
பெண்கள் மூட நம்பிக்கை, மூட பக்தி ஆகியவற்றின் பிடியில் சிக்கித் தாமும் கெடுவதுடன்
நமது குழந்தைகளையும் கெடுக்கின்றனர். எனவே, கல்வியறிவால்
பெண்கள் அறியாமை இருளிலிருந்தும், மூட பக்தி, மூட நம்பிக்கைகளிலிருந்தும் விடுதலையடைய வேண்டும். அதன் எதிரொளியாக
மனித சமூகமே ஒளி பெறும்” (சி.என்.குமாரசாமி, 2001:344) பெண்களின் அடிமைத்தனத்திற்கான கூறுகளுள் மூட நம்பிக்கைகள்
முதலிடத்தை வகிக்கின்றன.
பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் பெரும்பாலும் நாகரிகம் தோன்றாத காலப் பகுதியில் வாழ்ந்த மக்களிடம் தோன்றி நிலை பெற்றவை. இம்மரபு கருதி பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் சமூக மரபுச் சின்னங்கள் எனக் கூறலாம்.” (பாலமுருகன். எம்.ஐ., 2000:113) நம்பிக்கை ஒரு செயலின் காரணமாகவும், மரபு வழியாகச் சந்ததி, பின் சந்ததி இகியோரால் பின்பற்றப்படும் வழக்காகவும் உள்ளது என்று வாழ்வியற் களஞ்சியம் (தொகுதி 11:220-221) கூறுகிறது. இந்நம்பிக்கைகளைப் பெரிதும் பின்பற்றுபவர்கள் பெண்களே. இந்நம்பிக்கைகளில் மூழ்கித் திளைப்பதாலேயே பெண்கள் வாழ்வு இருளடைந்துள்ளது. எந்தச் சமூகமும் தான் ஒருக்கால் பற்றிப் பின் தன்னுள் ஒன்றாக இக்கிக் கொண்டுவிட்ட மரபுகள், வழக்கங்கள், சடங்குகள், கொள்கைகள் இவற்றின் போக்கிலேயே போய்க் கொண்டிருக்கும் மடிமையைத் தன் இயல்பாகக் கொண்டுள்ளது. அவை மனிதர்க்கிழைக்கும் நன்மை தீமை பற்றிய அக்கறை அதற்கில்லை.” (சேது மணி மணியன், 1994:114) பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் ஒவ்வொரு செயலிலும் பல நம்பிக்கைகள் ஆணைந்துள்ளன. படித்தவரிலிருந்து பாமரர் வரை பல வகையான நம்பிக்கைகளுக்கு அனைவரும் ஆளாகியுள்ளனர்.
சமயம் சார்ந்த நம்பிக்கைகள் பண்பாட்டிற்குப்
பண்பாடு வேறுபடுகின்றன, காலத்திற்குக் காலம்
மாற்றம் பெற்று வந்துள்ளன. இம்மாற்றம் முன் வரலாற்றுக்கால மனிதனின் சமய
நம்பிக்கையிலிருந்து தொன்மை மக்களிடையே ஆவி நம்பிக்கையாக மாறி பின்னர்ப் பேய், பிசாசு, தேவதை நம்பிக்கைகள் என
வளர்ந்து, இறுதியில் கடவுள் நம்பிக்கையாகப் படிமமலர்ச்சியடைந்துள்ளது.
ஆவிகளுடன் தொடர்புடைய ஆற்றல்களாயினும் சரி, பேய், பிசாசு, தேவதை முதலானவற்றின் ஆற்றல்களாயினும்
சரி, கடவுளர்களின் ஆற்றல்களாயினும் சரி அனைத்து வகைகளும் மனித
மனத்தின் படி மலர்ச்சி நிலைகளே” (பக்வத்சலபாரதி, 1990:491) ஆர்.சண்முகசுந்தரம்நாவல்களில் ஜாதக நம்பிக்கை, பேய் நம்பிக்கை, தெய்வ
நம்பிக்கை, பூ நம்பிக்கை, தீட்டு
நம்பிக்கை, கிழமை நம்பிக்கை போன்ற பல நம்பிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
5.14.1. ஜாதக நம்பிக்கை
ஜாதகம் பார்த்தல் என்பது ஆர்.சண்முகசுந்தரம்வைப்
பொருத்த அளவில் மூடநம்பிக்கை. எனவே, ஜாதகம்
பார்க்கும்பழக்கத்தைப் பல இடங்களில் சாடுகிறார். கிராமத்தில் கோவில் ஒயரிடம்
பலரும் சென்று ஒôதகம் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவருக்கு
ஜோசியம் பார்க்கத் தெரியுமா என்பது பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை.
பஞ்சாங்கத்திற்கும் அவருக்கும் வெகு தூரம் தானுண்டு கோயில் பூசையுண்டு, பொடி மட்டையுண்டு என்று அக்கடா என இருப்பவர் தனக்கு ஜோசியம்
தெரியாது என்று பலமுறை கூறியும் மக்கள் கேட்பதில்லை. அவரும் அவர்களுக்கு ஐற்றபடி
பஞ்சாங்கத்தைப் புரட்டிய படியே, சனி தெசை தீருதுங்க.
மேற்கொண்டு நல்ல யோகம் கொஞ்ச நாளைக்கு எதிலும் ஒதுங்கியே இருக்க வேண்டும். வக்கிர
புத்தி” (ப-58) என்கிறார்.
ஆர்.சண்முகசுந்தரம்அடைப்புக் குறியில்
யாருக்கு என்று கேள்வி எழுப்புகிறார். எரில் சோதிடர் நடப்பதை வைத்துப் பலன்
கூறிவிட்டு இறுதியில் விதி யாரை விட்டுதுங்க என்று முடிக்கிறார். திருமணமாக
வேண்டிய பெண்களைப் பற்றிக் கேட்டால், நல்ல
யோகக்காரி. பெரிய எடமா கெடைக்கப் போகுது” (ப-59) என்று கூறுகிறார். குழந்தை பிறப்பிற்கு முன்பே ஜாதகரை
நாடும் வழக்கம் இருந்துள்ளது. (ப.து:5) ஜாதக
நம்பிக்கை பெண்களின் வாழ்வில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இரு
குடும்பத்தார்க்கும் இடையில் இருக்கும் பகையில் பழி தீர்த்துக் கொள்ள ஜாதக
நம்பிக்கையைப் பயன்படுத்துகின்றனர். பெண்ணுக்குச் செவ்வாய் தோஷம்! கழுத்தில் தாலி
ஐறினால் முப்பது நாளில் தாலிச்சரட்டைக் கழற்றியே இக வேண்டுமாம்.” (எ.போ.வா.:29) என்று நிச்சயம் செய்ய
வந்த மாப்பிள்ளையிடம் கூற மாப்பிள்ளை வீட்டார் பயந்து போய் சொல்லிக்காமலே கிளம்பி
விடுகின்றனர். இதனால், பெண்ணின் தந்தை
மாரடைப்பால் இறக்க நேரிடுகிறது. ஆனால், கல்யாணப்
பெண் ருக்கு அதைவிட நல்ல மாப்பிள்ளையைக் காதலித்து மணந்து கொள்கிறாள். வணிக
நோக்கில் சோதிடர்கள் செயல்படுவதை அழியாக் கோலம் காட்டுகிறது.
சோதிடர் சாமியப்பனுக்கு தோஷம் இருப்பதாகக்
கூறி அதை யாரிடமும் கூறாதீர்கள் என்று அவரே பத்து பேரிடம் கூறி விட்டுப் போய்
விடுகிறார். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஜாதகத்திலும் ஏதாவது குறையைக்
கூறினால்தான் அவருக்குப் பிழைப்பு நடக்க ஏதுவாக இருந்தது. பரிகாரமார்க்கத்தைத்
தேடி அவரைத் தஞ்சமடைய அவர் கையாண்ட இயுதம் அவ்வளவுதான். இடையில் யாராவது சந்தேகம்
கேட்டால் அவ்வளவுதான். பெண்களுக்கு மட்டும் தான் செவ்வாய் தோஷமிருக்கும். ஆண்களுக்கும்
இருக்குமா என்று ஒரு பெண் கேட்டுவிட ஏட்டுச் சுவடியைக் கீழே போட்டு விட்டு, இந்த ஜாதகனுக்கு நீயே மிச்சத்தைச் சொல்லு” (ப-100) என்று எழுந்து
விடுகிறார்.
அறுவடை சின்னப்ப முதலியாருக்கு எழுபது வயதிற்கு மேல் ஒரு நல்ல காரியமிருப்பதாகச் சோதிடர் கூறி விடுகிறார். உடனே திருமணத்திற்குப் பெண் பார்க்கத் தொடங்கி விடுகிறார். ஆனால், அவருக்கு மாரடைப்பு தான் வந்து சேருகிறது. பெரும்பாலான பொருந்தா மணங்கள் ஜாதக நம்பிக்கையால் தான் நடந்தேறியுள்ளன. வரதட்சணை என்பதைவிட ஜாதகம் பார்த்தல் என்பது அதிக அளவு பெண்களின் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
மணக்கொடை என்பதும் ஜாதகம் பார்த்தல் என்பதும்
பெண்கள் தொடர்பான சிக்கல்கள் மட்டும் அல்ல. அவையிரண்டும் சமூகச் சிக்கல்கள்” (வளவன். சா,:1995,202) காளியண்ணன் சோதிடர்களைப் பல வருடமாக யாருக்கும் தெரியாமல்
வெளியூர் சென்று பார்த்து வருகிறார். நல்ல சோதிடர் இருக்கிறார் என்று
கேள்விப்பட்டபின் நாற்பது ஒம்பது மைல்கள் என்றாலும் ஒருவாரம் பத்து நாள் தங்கி தம்
மனக்கிடக்கையை வெளிப்படுத்தி துருவி கேட்டுவிட்டே வருவார். சிறு வயதில் ஒடிப்போன
தமையன் திரும்பி வந்துவிட்டால் சொத்து பிரிக்க நேரிடுமே என்ற கவலையால் இவ்வாறு
சோதிடர்களை தேடி அலைகிறார். (அ.கோ.:81)
இவ்வாறு கிராமப்புறங்களில் மக்கள் சோதிடர்களைத்
தேடி அலைவதும் அவர்களும் தங்கள் பிழைப்பிற்காகத் தெரிந்தும் தெரியாமலும்
தங்களுக்குத் தோன்றுவதைக் கூறி வருவதையும் காட்டும் ஆசிரியர், அந்நம்பிக்கையால் பெண்களுக்கு ஏற்படும் சமூகத் தீமைகளையும்
சுட்டிக்காட்டுகிறார்.
5.14.2. தெய்வ நம்பிக்கை
மாரியம்மன் பண்டிகையின் போது வைத்த பொங்கல் பொங்கி வழிந்ததைக் குறித்து பெண்கள் அப்படி குபு குபுன்னு பொங்கல் சாஞ்சிருக்காட்டி என்னாவது நடந்திருக்கும். .... இல்லாட்டி எம் பொண்ணு பொழைக்கிறதேது” (நாக.:39) என்று பய பக்தியுடன் பேசுகின்றனர். கோயிலில் விழுவது கிராமப்புறங்களில் நிகழ்கின்ற ஒரு வகை நம்பிக்கை. தங்களுக்குத் தீங்கு செய்தவருக்குத் தீங்கு நேர வேண்டுமென்று கோயிலில் சென்று விழுந்து கும்பிடுவது தான் கோயிலில் விழுவது ஆகும். மணியக்காரரைக் குறித்து ஒரு பெண் அப்படி வேண்டிக் கொண்டதைப் பூவும் பிஞ்சும் நாவல் (ப-54) குறிப்பிடுகிறது. கோவில் கிணற்றில் நீர் வற்றினால் தீயது நடக்கும் என்ற நம்பிக்கை (அ.கோ.:15) இருக்கிறது.
கோவில் குளத்திற்குக் கிளம்பி விட்டால்
தள்ளிப் போடக் கூடாது. தள்ளிப் போட்டால் தெய்வக் குற்றமாகிவிடும் (அ?இ?:83) தெய்வத்தை நினைத்துப்
படுக்காதவர்களுக்கும் நட்டம் தான் ஏற்படுத் (மாயத்தாகம்137) கோயிலுக்காகக் கிளம்பும் பொருட்கள் கீழே விழுந்து உடைந்து
விட்டால் தீயது நடக்கும் என்று நம்பிக்கை (அ.கோ.:11) வெள்ளிக்கிழமையானால் சாமி கேட்கச் செல்லும் பெண்கள்
மற்றவர்களை அழைக்கின்றனர். சில பெண்கள் வெடியறதுக்குள்ளே என்ன இனான் பாத்தீங்கல்லே? கடமுடண்ணு சென்னிமலைக் கணவாய்லே வண்டி உருண்டு போச்சே. இப்பொ
கை முறிஞ்சு பெருந்தொறை இஸ்பத்திரியிலே கெடக்கறான்.” (கா.சு.-64) என்று கூற அதற்குப் பின் கேலிப் பேச்சுக்கள் எழவில்லை.
தெய்வத்தின் மீதான அச்சத்தின் காரணமாகக்
கிராமப் பெண்கள் சாமியார்களையும் பூசாரிணிகளையும் நம்பி அவர்களையும் வழிபடத்
தொடங்குகின்றனர். பூசாரிணி பற்றிய வாழ்க்கைக் கதைகளையெல்லாம் இவ்வச்சத்தின்
காரணமாக யாரும் சிந்தித்தும் பார்ப்பதில்லை. சட்டி சுட்டதடாவில் பரத்தையாக இருந்த
பெண் மனம் மாறி பூசாரிணியாகிறாள். அவளைப் பல ஊரிலிருந்தும் பக்தர்கள் தரிசிக்கப்
படைதிரண்டு வருகின்றனர்.
5.14.3. பேய் நம்பிக்கை
இயற்கை நிகழ்ச்சிகள் தொடங்கி கனவில் கண்ட
நிகழ்ச்சிகள்,
எதிரொலி, சொந்த
நிழல் நீரில் தெரிவது வரை அனைத்துச் செயல்களுக்கும் எவை காரணம் என விடை காண வியலாத
இறுதிக் கட்டத்தில் அவர்கள் எதிர் கொண்ட ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பின் ஒர் இவி உள்ளது.
அதுவே அச்செயல்களை இயக்குகிறது என்ற முடிவிற்கு வந்துவிட்டனர். அந்த இவிகள்
மனிதனின் அனைத்துச் செயல்களையும் இயக்க வல்லன என உறுதியாக நம்பத் தலைப்பட்டனர்.
(பக்வத்சல பாரதி,
1990:495) அதற்கான பரிகாரத்தையும்
கிராமப்புறத்தில் ஏற்படுத்தியிருக்கின்றனர். அதை மீறியவர்களைத் தான் பேய்
பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள். சுமங்கலிப் பெண்கள் பகலில் மஞ்சளும்
மணமுமாய் தனியாகச் சென்றால் பேய் பிடித்துக் கொள்ளும். (நா.க.:21)
பூவும்பிஞ்சும் புதினத்தில் நாச்சக்காள் மஞ்சள்
பூசி, கோடாலிக் கொண்டை போட்டு எள்ளுமாவு இடித்து எடுத்துக் கொண்டு
போனாள். அன்றிலிருந்து அவளுக்குப் பேய் பிடித்துவிட்டது. தன்னைப் பேய் பிடித்ததால்
தான் கணவன் இறந்து பேனான் என்று அவளும் நம்புகிறாள். அவளுடன் சென்ற
குப்பாயாளுக்குப் பேய்பிடிக்கவில்லை. சூறைக் காற்று அடிக்கும் பொழுது தூத் தூண்ணு
சொன்னதால் தப்பித்துக் கொள்கிறாள். ஆனால், மாரியப்பன்
அவளுக்கு வந்திருப்பது சன்னி. பேயுமில்லை பிசாசுமில்லை என்று கூறுவதைச் செல்லாயாள்
நம்புவதில்லை. (ப-101)
5.14.4. பூ நம்பிக்கை
தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு முன் இரு வண்ணப்
பூவை போட்டு அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அது தான் தெய்வத்தின் தீர்ப்பு என்று ஏற்றுக்
கொள்வது பூ நம்பிக்கையாகும். சிவப்பு பூவந்தால் நினைத்தது நடக்காது. வெள்ளைப் பூ
வந்தால் நினைத்தது நடக்கும். பெண் பார்த்தலில் இந்நம்பிக்கை முன் நிற்கிறது.
செல்லாயாளைப் பெண் பார்க்க வந்தவர்கள் அவ்வூர் கோயிலில் பூ வைத்துக் கேட்கின்றனர்.
சிவப்புப் பூ வந்ததால் பொருத்தமில்லை எனத் திருப்பி விடுகின்றனர் (பூ.பி.:83:104)
நாச்சப்பனுக்குச் சிற்றூரில் தங்குவதா, நகரத்திற்குச் செல்வதா என்று குழப்பம். செல்லியம்மனும்
மாரியம்மனும் அவனுடைய இஷ்ட தெய்வங்கள். இரு கோயிலிலும் பூ வைத்துக் கேட்கிறான்.
மாரியம்மன் கோயிலில் சிவப்பு பூ வருகிறது. செல்லியம்மன் கோயிலில் வெள்ளைப் பூ
வருகிறது. எனவே,
மேலும் குழப்பம் தான் அதிகரிக்கிறது. (த.வ.:6) இவ்வாறு பூ வைத்துப் பார்ப்பதால் பலனொன்று மில்லை. மாறாக, குழப்பம் தான் நீடிக்கும் என்பது ஆசிரியர் கருத்து.
5.14.5. தீட்டு நம்பிக்கை
பொதுமக்கள் அதிகம் புழங்குகின்ற சந்தை போன்ற இடங்களுக்குச்
சென்று மீளும் பெண்கள் தீட்டு பட்டு விட்டதாகக் கருதி வாங்கி வந்த பொருள்கள்மீது
சாணித் தண்ணீர் தெளித்துத் தூய்மைப்படுத்துவர். தம்மீது தெளித்துத் தூய்மைப்
படுத்திக் கொள்ளும் பெண்களும் ஊண்டு. சிலர் குளித்து தீட்டைப் போக்கிக் கொள்வர்.
(நா.க.11)
5.14.6. கிழமை நம்பிக்கை
வெள்ளிக் கிழமையன்று பெண்கள் மற்றவர்களுக்கு எதுவும்
தர மாட்டார்கள். கோவிந்தசாமியின் மனைவி ஒரு விசேசத்திற்கு அவசரமாகப் போக வேண்டும்.
நகை தேவை. வேலாத்தாளிடம் உங்க ஆத்தாளது இருக்குமல்லோ. நீ சித்தே வெள்ளிக்
கிளமீண்ணு பாக்காதே” (ச.சு.:111) என்று கெஞ்சுகிறாள். வெள்ளிக் கிழமை தனியாக என்ன புண்ணியம்
பண்ணிற்று”
(அ.கோ.:82) என்று
கிழமை நம்பிக்கையைச் சாடுவார்.
5.14.7. இன்னும் சில நம்பிக்கைகள்
பல்லி தலைக்கு மேலே ஊச்சியிலிருந்து சொன்னால்
அச்சமில்லை என்ற நம்பிக்கை உள்ளது. (நா.க.:85) பேசிக்
கொண்டிருக்கையில் பல்லி சொல்லுதுங்க. நடந்தாலும் நடக்கலாம் என்று நாச்சக்காள்
சொல்கிறாள். (அ.கோ.:82) இது போல் காகம்
கரைத்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கையும் உள்ளது. (நா.க.:87) பல்லி கத்துவது காகம் கத்துவது, மணி அடித்தாலும் கழுதை கத்தினாலும் நல்லது தான் அவர்களில்
பலருக்கு” (அ.கோ.:82) என்று சாடுவார்.
காலையில் எழுந்ததும் தலை வாசலில் தலை இடித்துக் கொண்டால் கெட்ட காரியம் நடக்கும் என்ற
நம்பிக்கை. (நா.க.:87)
குழந்தைகளுக்குத் திருஷ்டி சுற்றிப்
போடுவதற்காக,
மிளகாயைப் படிக்குள் போட்டு, தலையைச் சுற்றி அடுப்பில் கொட்டுவர். அந்த நெடி ஊரையே
தும்மவைக்கும். ஆனால், கொஞ்சம் கூட பொரியவே இல்லைப்
பாரு என்று பத்துத்தரம் தும்மி விட்டு கண்களைத் துடைத்துக் கொள்வாள்.” (உதயதாரகை81) நெடி பரவாமல் இருக்க
வேண்டும். அப்போது தான் திருஷ்டி இல்லை என அர்த்தம். ஆனால், பெண்கள் நெடி பரவினாலும் அதை மாற்றிக் கூறி திருஷ்டி இல்லை என்று
பொய்யாகத் திருப்திப்பட்டுக் கொள்வதை இங்குச் சாடுகிறார்.
5.15.0. சகுனம் பார்த்தல்
மற்ற நம்பிக்கைகளைப் போலவே சகுனம்
பார்த்தலையும் மக்கள் ஒவ்வொரு செயலிலும் கடை பிடிக்கிறார்கள். பூமியை விலை எழுது
முன் சகுனம் பார்த்தல் முக்கியமான செயலாகும். எருக்கலைச் செடியிலிருந்து வெடிக்காத
மொக்கை நசுக்கி அது வெடித்தால் காரியம் நல்லபடியாக நடக்கும். (ச.சு.:142) என்று நம்புகின்றனர்.
5.16.0. சடங்குகள்
குறிப்பிட்ட ஏதேனும் காரணம் பற்றியோ, அல்லது அதற்கு வெளிப்படையான, தெளிவான
காரணம் எதுவும் தெரியாத நிலையிலோ, இயல்பானதாகக்
கொள்ளப்பெற்று,
அல்லது கட்டாயமானதாக வற்புறுத்தப் பெற்று, தொன்று தொட்டு கைப்பற்றப்பட்டு வரும் நம்பிக்கை, வயப்பட்ட பழக்க வழக்கங்கள் சடங்குகளாக அமைகின்றன.” (அன்னி தாமசு, 2000:43) வரதட்சணை ஒந்து தலை நாகத்தைப் போன்று பன் முகத்தன்மை
கொண்டதாகும். அதன் ஒவ்வொரு முகத்திலும் கடுமையான, விஷம்
தோய்ந்த கூரிய பற்கள் உண்டு நம் சமூகத்தில் வழங்கி வரும் பல சடங்குகள்
வரதட்சணையின் மறு வடிவங்களாகவே வழங்கி வருகின்றன.
5.16.1. நிச்சயதார்த்தம்
நிச்சயதார்த்தம் என்னும் இச்சடங்கு
திருமணத்திற்குப் பின் நிகழ்த்தப்படுகின்ற ஒன்று. இது பெண் வீட்டில் தான்
நடைபெறும். இச்சடங்கின் போது ஆகும் செலவுகள் பெண் வீட்டாரைச் சார்ந்தது. ஆண்
வீட்டார் அழைத்து வரும் படைக்கு ஊணவளிப்பது பெண் வீட்டாரின் கடமை. கிட்டப்பன்
வீட்டுக்கு முன்னால் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. இயிரம் பேர் ஒரே சமயத்தில்
ஊட்காரலாம்..... மேளத்திற்குக் கோவைக்கே நேரில் சென்று பெரிய செட்டாக” ஏற்பாடு செய்தான். சித்தாமணி சகோதரர்களுக்கு நல்ல பெயர். அத்துடன்
நாட்டியக் கச்சேரிக்கும், அட்வான்ஸ் தந்து, அவர்கள் கோஷ்டி, பிரயாண வசதிக்கும் கார் அமர்த்தி விட்டான். பூமாலைகள் சொல்ல
வேண்டுமா?....
மூன்று நாளாக ஒந்து அய்யர்கள் சமையல் அறையை ஆக்ரமித்துக்
கொண்டிருக்கிறார்கள்.” (எ.போ.வா.:22-23) ஆனால், மாப்பிள்ளை வீட்டார்
வழியில் சபாபதி முதலியார் சொன்ன பொய்யை உண்மையென நம்பி வராமலே திரும்பி
விடுகிறார்கள். இதனால் கிட்டப்ப முதலியார் அதிர்ச்சியில் இறந்துவிடுகிறார்.
5.16.2. திருமணச் சடங்கு
பெண்ணின் வீட்டில்தான் திருமணம்
நடத்தப்படுகிறது. திருமணச் சடங்கு செலவு மணப் பெண் வீட்டார் ஏற்றுக் கொள்கின்றனர்.
இச்சடங்கு இரம்பமாகுமுன் சாணியில் பிள்ளையார் செய்து அதன் மீது அருகம்புல்லும், செவ்வரளிப் பூவும் வைத்து மண் விளக்கு ஏற்றி மணமக்கள்
வழிபடுகின்றனர். (மாயத்தாகம்52) கொங்கு நாட்டில் இச்சடங்கின்
போது கையாளப்படும் மற்றொரு செயலையும் ஆசிரியர் இங்குக் குறிப்பிடுகிறார். இச்சடங்கில்
மாப்பிள்ளை பவனி வரும் போது, கால் ரூபாய் மாணிக்கத்தா
மெராசு” என்ற வயதான பெண், மாப்பிள்ளைக்கு
எதிரெதிரே நுழைந்து புரியாத ஒலிகளை எழுப்புவாள். பல்லைக் காட்டி அவளுக்குக் கால்
ரூபாயைத் தூக்கிப் போட்டு அவளைத் தீய மொழிகள் கூறி விரட்டுகின்றனர். இதனால், மாப்பிள்ளையைப் பிடித்திருந்த சனி விலகி விடுவதாக
நம்புகின்றனர். (மாயத்தாகம்96)
ஆனால், மாப்பிள்ளை
ஆறுமுகம் சனி தசை இரம்பமே இப்பத்தானே! எப்போதோ தீர்ந்து விட்டதாக எவரோ சொன்னார்களே
இதில் எது நிசம்?
(மாயத்தாகம்97) என்று தொழிலில் நட்டம் வந்த நிலையில் நினைத்துப்
பார்க்கிறான். இவ்வாறு, பெண்களைக் கேவலப்படுத்தும்
வகையில் இச்சடங்குகளை நிகழ்த்தி வந்துள்ளனர். ஆசிரியர் இதைச் சகித்துக் கொள்ள
முடியாத அருவெறுப்பான நிகழ்ச்சி என்கிறார்.
5.16.3. பெயர் வைக்கும் சடங்கு
பெயர் வைக்கும் சடங்கு குழந்தை பிறந்த
பதினோறாம் நாளில் நடத்தப்படுகிறது. இது பெயர் சூட்டுவிழா ஆகும். இதுவும் பெண்
வீட்டாரே நடத்துகின்றனர். வாழை மரம் முன்புறம் கட்டப்பட்டிருந்தது. வாசலில்
ஊட்காருவதற்குச் சமுக்காளமும், பாய்களும்
விரிக்கப்பட்டு இருந்தன. ஐழெட்டு எர் பெரிய மனிதர்களும் வந்து சேர்ந்து
விட்டார்கள். ஒரு சின்னக் கல்யாணம் போலத்தான் காரியங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
பலகார வாசனை,
நெய் வாசனை,” (ச.சு.78) இவ்விழா பெரும்பாலும்
வசதியானவர்கள் வீட்டில்தான் நடத்தப்படுகிறது. ஏழைகளின் நிலை பற்றி, அன்னக் காவடி விழா கொண்டாட நினைத்தால் கணகணவென்று மணிகளை
இட்ட வேண்டியது தான்” (ச.சு.:76) என்பார். இது போன்ற விழாக்கள் ஏழைகளை பாதிப்பதும் உண்டு. இவ்விழாவிற்கு
அழைக்கப்பட்ட வீரக்கா மொய் வைப்பதற்காக ஊரெல்லாம் அழைக்கிறாள். யாரைக் கேட்டாலும்
ஊதட்டைப் பிதுக்குகிறார்கள். நாங்களும் மொய் வைக்கத்தான் அலைந்து
கொண்டிருக்கிறோம். மொய்க்கு மொய் வைக்கா விட்டால் கேவலம்!” (ச.சு.:98)
வசதியானவர்களுக்கு விழா நடத்துவதும், மொய் வைப்பதும் ஒரு கௌரவம். ஆனால், ஏழைகளுக்கு மானம் தான் கௌரவம். இதற்கு மாயத் தாகத்தில்
தீர்வு தருகிறார். நம்ப சாதியிலே யாரும் மொய் வாங்கப்பட்டாதுனு” ...... (மாயத்தாகம்18) ஒவ்வொருவரும்
தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இலோசனை கூறுகிறார். (ச.சு.:46) பிறந்ததில் இருந்து மண் மீது கண் மூடுகிறவரை விழாக்கள்
வந்து கொண்டே தான் இருக்கின்றன. இப்போதெல்லாம் கிழவர்களும் தவறாமல் பிறந்த தின
விழாக்கள் கொண்டாடுகிறார்கள் ஆண்டு தோறும் எது நின்றாலும் உயிர்க் குலத்தை
விழாக்கள் விடவே விடாது!” (ச.சு.:76) என்று வீண் கௌரவத்திற்காக நடத்தப்படும் விழாக்களைச்
சாடுகிறார்.
5.16.4. இறப்புச் சடங்கு
கணவன் இறந்தபின் தாலி வாங்கும் போது
பிறந்திடத்துக் கோடி கொடுக்கும் வழக்கம் (நா.க.:123) உள்ளது. பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் வசதிக்கேற்ப இச்சடங்கினை
நிகழ்த்துவர்.
5.16.5. நினைவுச் சடங்கு
குடும்பத்துப் பெரியவர்கள் இறந்த நாளை, படைப்புப் போடுவது” என்ற
சடங்காகக் கொண்டாடுகின்றனர். இதில் பெண்கள் செய்யும் பணிகள் தான் அதிகம்.
மாயத்தாகத்தில் காவேரி அம்மாளின் தாளிப்பு வீட்டையே மணக்கச் செய்து கொண்டிருந்தது.
(மாயத்தாகம்156)
பாட்டியின் நினைவை அன்றைக்குத்தான் நினைவு
கூற வேண்டும் என்பதில்லை. எப்போதும் பாட்டி நினைப்புதான் என்று ஆறுமுகம் கூறுவதைக்
காவேரியம்மாளுக்குக் கேட்க சகிக்கவில்லை. (மாயத்தாகம்148)
5.16.6. காப்புச் சடங்கு
பண்டிகையின் போது காப்புக் கட்டுவார்கள். இக்காப்புக்கட்டிற்கு
முன்னரும் பின்னரும் வெளியூர்க் காரர்கள் வருவதும் செல்வதும் கூடாது. எனவே, பங்கஜம் தாய் வீட்டிற்குக் காப்புக் கட்டுவதற்கு முன்னரே
சென்று விடுகிறாள். (கா.சு.:39) இங்குப் பங்கஜத்தைப்
பொருத்த அளவில் அவள் வரவு அவள் பெற்றோருக்கும் வரவாகவே உள்ளது. இவ்வாறு, திருமணம் தொடங்கி அவள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு
நிகழ்ச்சிக்கும் அவளுடைய பிறந்த வீட்டினர் தான் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், வறட்சியான மாவட்டத்தைச் சேர்ந்த கொங்கு மக்கள் பெண் குழந்தை
பிறப்பை முற்றிலும் வெறுக்கின்றனர்.
5.16.7. மந்திரச் சடங்கு
மாராக்காள் தன் மகளுக்குத் திருமணம் தள்ளிப் போவதால் ஊரார் கூறும் அறிவுரைகளையெல்லாம் கேட்டு நடக்கிறாள். இறுதியாக ஒரு மந்திர வாதியை நாடுகிறாள். அவன் யந்திரம் எழுதி, வாசற்படியிலுள்ள பில்லி சூனியத்தை எடுப்பவன். தோட்டத்தில் பல இடங்களில் தோண்டி பூமியிலிருந்து எதையோ எடுத்துக் காட்டுகிறான். புதைக்கப்பட்டிருந்த புதை பொருட்களா? புதுப் பொருட்களா என்று மாராக்காளுக்குத் தெரியவில்லை. ஒரு சிகப்புத் தகடு, கெட்டியான சடை முடிகள், நாலுப்பற்கள் - நாய்ப்பற்களோ என்னவோ தெரியவில்லை” (அ.கோ.:61) கிராமப்புறப் பெண்களைஆட்டிக் படைக்கும் இந்நம்பிக்கைகள் எவ்விதப் பலனையும் தருவதில்லை. முத்தாயாள் உயிரையும் காப்பாற்றுவதில்லை. இச்சடங்கு குறித்து குறிப்பிடும் நடையிலேயே ஆசிரியரின் கேலி புலப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?