நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday, 13 April 2020

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் பற்றிய ஆண்களின் பார்வை


ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில்  பெண் பற்றிய ஆண்களின் பார்வை

 
Vadivelu joke வடிவேல் வயிறு குலுங்க ... 
ஒவ்வொரு ஆணும் தன் திருமணத்திற்கு முன்னரும் பின்னரும் அடுத்த பெண்களை வெறும் போகப் பொருளாக மட்டுமே எண்ணிப் பழகுகிறான். காதல் திருமணம் என்றாலும் அழகான பெண் எதிரில் இருந்துவிட்டால் பக்கத்திலிருக்கும் மனைவி கூட அவனுக்கு மறந்துவிடுகிறது. புதிய பெண்ணிடம் பழகும் போது ஆணின் மனம் கட்டற்றுத் திரிகிறது. பாலாமணியிடம், தோழி இந்திராவின் கணவன் உரையாடுகிறான். இளம் மனைவியின் கேள்விகளைவிடப் பாலாமணியின் கேள்விகள் தான் அவனுக்கு முக்கியமாகப்பட்டது. இதனால் அடுத்த நாளே பாலாமணிக்கு விடை தந்து விடுகிறாள் இந்திரா. (வி.மா:155) கமலத்தின் கணவன் தன் மனைவி பக்கத்து அறையில் இருக்கும்போதே அவள் தோழியிடம் தவறதாக நடக்க முயற்சி செய்கிறான். (மூ.அ.:28)


மற்றொரு தோழியான சுலோச்சனாவின் கணவன் ரகுவும் சாவித்ரியிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறான். (மூ.அ.:184) இவனுக்கு ஒரு குழந்தையும் ஊண்டு. அழகான பெண்களைக் கண்டுவிட்டால் அவளை அடைவதற்கு ஆண்களில் சிலர் சுற்றுப் புறத்தையும் மறந்து விடுகிறார்கள். அந்தப் பெண் தன் விருப்பத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடித்தால் உடனே அவள் தான் தன்னை மோசம் செய்ய நினைத்தாள் என்று கதை கட்டி விடும் செயலை மேற்கொள்ளத் தொடங்குகிறார்கள்.

அப்பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிய அக்கறை அவனுக்கு இல்லை. தன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்வதற்காக எத்தகைய கீழ்த்தரமான செயல்களிலும் அவன் இறங்கத் தயங்குவதில்லை. கமலத்தின் கணவன் சாவித்ரி இருவரைக் காதலித்து ஏமாற்றிவிட்டு ஒடி வந்துவிட்டதாக அவள் வீட்டுக்குக் கடிதம் எழுதுகிறான். (மூ.அ.:220) கல்லூரிப் பெண்கள் யதார்த்தம் என்ற பெயரில் ஆண்களுடன் மிக இயல்பாகப் பழகுகிறார்கள். பெண்களுக்குக் கொடுக்கப்படும் கல்வியின் காரணமாக விகல்பமின்றி அனைவருடனும் மிக இயல்பாகப் பழகுவதையும் உரிமை என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஆண்கள் அப்படி விகல்பமின்றிப் பழகுவதில்லை என்பதை அனுபவப்பட்ட பின்னரே தெரிந்து கொள்கிறார்கள்.

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?