நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday, 29 April 2020

எதை இழந்தோம்?


 village life drawing க்கான பட முடிவு 

மண்ணின் விளையாட்டை விடுத்து
மட்டைப்பிடித்த போது எதை  இழந்தோம்?

எளிய வா்ழ்க்கை வெறுத்துப் பகட்டு
வாழ்க்கைத் தேடி எதைத் தொலைத்தோம்?

Monday, 13 April 2020

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் தொடர்பான மொழிப்பயன்பாடு



ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் தொடர்பான மொழிப்பயன்பாடு
மனித சமுதாய வரலாற்றில் சமயம், பண்பாடு, அரசியல் முதலிய காரணங்களால் தோற்றுவிக்கப்பட்ட பல கருத்தியல்களைப் பெண்ணியம் திறனாய்கிறது. நமது சிந்தனை அமைப்பு மொழி அமைப்பைப் பொறுத்தே அமைகிறது. குறிப்பிட்ட சமுதாயத்தில் வழங்கப்படும் சொற்கள் அச்சமூகத்தினருடைய பெண்கள் தொடர்பான அச்சமுதாயத்தினரின் பார்வையைக் காட்டும். ஒரு சமூகத்தில் பெண்களின் தகுதியையும் அவர்கள் தொடர்பான கருத்தியல்களையும் அச்சமூகத்தின் மொழியை ஆராய்வதன் மூலம் அறியலாம்.

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் சமூகச் சீரழிவு

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில்  பெண் சமூகச் சீரழிவு

தளிர் 
நகர மயமாதல் பெண்களுக்குக் கல்வி தந்து அவர்களை ஒரு புறம் உயர்த்தி வந்தது. மறுபுறம் சீரழிவுகளும் பெருகின. தொழிற்சாலை நகரங்களில் பெருகும் மக்கள் தொகை, மக்களிடையேயான நெருக்கத்தைக் குறைத்து வணிக நோக்குடன் செயல்படுவதற்குக் காரணமாகி விடுகின்றன. பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றம் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து எல்லா உறவுகளிலும் போட்டியை ஏற்படுத்தி விடுகிறது. 

பொருண்மைய நோக்கும் எதையும் பணக் கண்ணோட்டத்தில் அணுகச் செய்து ஒழுக்கவுணர்வுகளைவிட உல்லாச வாழ்க்கையை முன்னிறுத்திச் சுரண்டலுக்கும் சிறுமைக்கும் வழி தந்து மற்றவரைப் பற்றியும் எதிர்காலம் குறித்தும் சிந்தனையற்றுப் பகட்டுக்கும் போலி இன்பத்துக்கும் தற்காலிக நிறைவுகளுக்கும் முன்னுரிமை நல்கும் நிலையை உருவாக்குகின்றன.” (அன்னி தாமசு, 2000:133)
காந்திமதி, பாப்பா போன்ற பெண்களிடம் இந்நகரச் சூழல் மனிதாபிமான உணர்வை நீக்கி, மரபுமீறிய நடவடிக்கைகளில் ஈடுபடச்செய்து விடுகிறது. கிராமத்துப் பெண்களின் அப்பாவித் தனத்தைத் தங்களின் சுய நலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியத்தை வாழ்க்கைக் கலையாகக் கற்றுக் கொள்ளும் இப்பெண்கள் சமூகச் சிதைவின் எதிரொலிப்புகள்.

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்களும் நம்பிக்கைகளும்


ஆர்.சண்முகசுந்தரம்  புதினங்களில் பெண்களும் நம்பிக்கைகளும்


பெண்கள் மூட நம்பிக்கை, மூட பக்தி ஆகியவற்றின் பிடியில் சிக்கித் தாமும் கெடுவதுடன் நமது குழந்தைகளையும் கெடுக்கின்றனர். எனவே, கல்வியறிவால் பெண்கள் அறியாமை இருளிலிருந்தும், மூட பக்தி, மூட நம்பிக்கைகளிலிருந்தும் விடுதலையடைய வேண்டும். அதன் எதிரொளியாக மனித சமூகமே ஒளி பெறும்” (சி.என்.குமாரசாமி, 2001:344) பெண்களின் அடிமைத்தனத்திற்கான கூறுகளுள் மூட நம்பிக்கைகள் முதலிடத்தை வகிக்கின்றன.

சமூகத்தொண்டில் கொங்கு வெள்ளாள ... 
பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் பெரும்பாலும் நாகரிகம் தோன்றாத காலப் பகுதியில் வாழ்ந்த மக்களிடம் தோன்றி நிலை பெற்றவை. இம்மரபு கருதி பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் சமூக மரபுச் சின்னங்கள் எனக் கூறலாம்.” (பாலமுருகன். எம்.ஐ., 2000:113) நம்பிக்கை ஒரு செயலின் காரணமாகவும், மரபு வழியாகச் சந்ததி, பின் சந்ததி இகியோரால் பின்பற்றப்படும் வழக்காகவும் உள்ளது என்று வாழ்வியற் களஞ்சியம் (தொகுதி 11:220-221) கூறுகிறது. இந்நம்பிக்கைகளைப்  பெரிதும் பின்பற்றுபவர்கள் பெண்களே. இந்நம்பிக்கைகளில் மூழ்கித் திளைப்பதாலேயே பெண்கள் வாழ்வு இருளடைந்துள்ளது. எந்தச் சமூகமும் தான் ஒருக்கால் பற்றிப் பின் தன்னுள் ஒன்றாக இக்கிக் கொண்டுவிட்ட மரபுகள், வழக்கங்கள், சடங்குகள், கொள்கைகள் இவற்றின் போக்கிலேயே போய்க் கொண்டிருக்கும் மடிமையைத் தன் இயல்பாகக் கொண்டுள்ளது. அவை மனிதர்க்கிழைக்கும் நன்மை தீமை பற்றிய அக்கறை அதற்கில்லை.” (சேது மணி மணியன், 1994:114) பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் ஒவ்வொரு செயலிலும் பல நம்பிக்கைகள் ஆணைந்துள்ளன. படித்தவரிலிருந்து பாமரர் வரை பல வகையான நம்பிக்கைகளுக்கு அனைவரும் ஆளாகியுள்ளனர்.

சமயம் சார்ந்த நம்பிக்கைகள் பண்பாட்டிற்குப் பண்பாடு வேறுபடுகின்றன, காலத்திற்குக் காலம் மாற்றம் பெற்று வந்துள்ளன. இம்மாற்றம் முன் வரலாற்றுக்கால மனிதனின் சமய நம்பிக்கையிலிருந்து தொன்மை மக்களிடையே ஆவி நம்பிக்கையாக மாறி பின்னர்ப் பேய், பிசாசு, தேவதை நம்பிக்கைகள் என வளர்ந்து, இறுதியில் கடவுள் நம்பிக்கையாகப் படிமமலர்ச்சியடைந்துள்ளது. ஆவிகளுடன் தொடர்புடைய ஆற்றல்களாயினும் சரி, பேய், பிசாசு, தேவதை முதலானவற்றின் ஆற்றல்களாயினும் சரி, கடவுளர்களின் ஆற்றல்களாயினும் சரி அனைத்து வகைகளும் மனித மனத்தின் படி மலர்ச்சி நிலைகளே  (பக்வத்சலபாரதி, 1990:491) ஆர்.சண்முகசுந்தரம்நாவல்களில் ஜாதக நம்பிக்கை, பேய் நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை, பூ நம்பிக்கை, தீட்டு நம்பிக்கை, கிழமை நம்பிக்கை போன்ற பல நம்பிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

5.14.1. ஜாதக நம்பிக்கை
ஜாதகம் பார்த்தல் என்பது ஆர்.சண்முகசுந்தரம்வைப் பொருத்த அளவில் மூடநம்பிக்கை. எனவே, ஜாதகம் பார்க்கும்பழக்கத்தைப் பல இடங்களில் சாடுகிறார். கிராமத்தில் கோவில் ஒயரிடம் பலரும் சென்று ஒôதகம் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவருக்கு ஜோசியம் பார்க்கத் தெரியுமா என்பது பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை. பஞ்சாங்கத்திற்கும் அவருக்கும் வெகு தூரம் தானுண்டு கோயில் பூசையுண்டு, பொடி மட்டையுண்டு என்று அக்கடா என இருப்பவர் தனக்கு ஜோசியம் தெரியாது என்று பலமுறை கூறியும் மக்கள் கேட்பதில்லை. அவரும் அவர்களுக்கு ஐற்றபடி பஞ்சாங்கத்தைப் புரட்டிய படியே, சனி தெசை தீருதுங்க. மேற்கொண்டு நல்ல யோகம் கொஞ்ச நாளைக்கு எதிலும் ஒதுங்கியே இருக்க வேண்டும். வக்கிர புத்தி” (ப-58) என்கிறார்.

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்களின் பிற சிக்கல்



ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்களின் பிற சிக்கல்
சமூகம் பெண்களைப் பார்க்கும் விதம் பாலியல் ரீதியாகவே உள்ளது. வீதியிலும், வேலை செய்யும் இடங்களிலும்  ஆண்கள் பெண்களைக் கண்டும் காணாமலும் பார்ப்பது குறித்து வெட்கப் படுவதில்லை. பெண்களின் செல்பாடுகளில் உடுபாடு கொண்டு அதை கண்களால் பருகுவதில் இனந்தமடைபவர்கள் அழகை ரசிக்கும் கலா ரசிகர்கள் என்று தங்களைப் பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால், பெண்களை முறைத்துப் பார்க்கிறவர்கள், கீழான இச்சைகளிலே இன்பம் துய்ப்பவர்கள், வெளிவேடதாரிகள், பகட்டிலே மனத்தைப் பறி கொடுப்பவர்கள், அந்தரங்கத்தில் கோழைகள்” (1999:49) என்று வெ. சாமிநாத சர்மா சாடுகிறார். கிராம சமூகத்தில் வயலில் வேலை செய்யும் பெண்களை அங்கு வேலை செய்யும் ஆண்கள், பார்த்தும் பார்க்காமல் நோக்குவதைக் காட்டுவார் (க.சு.:58) பெண்களின் ஆடைகள் போகிற பாக்கைப் பார்க்க எங்குமே ஒரு கும்பல் இருக்குமே (உதயதாரகை31) பத்து வயதுப் பெண்ணிடமும் இவர்களின் பார்வை பதிந்து கிண்டல்கள் பிறக்கும். உனக்கு குடிசை கட்ட ஊங்க மாமன் வாராங்கண்ணு சொன்னாங்களே நீ என்னடாண்ணு, சமிஞ்ச புள்ளை இப்படி மாராப்புச் சீலை கூடப் போடாமெ போறாயே” (உதயதாரகை31) இப்படிச் சிறுவயதிலிருந்தே அவள் மீது பதியும். பாலியல் பார்வை அவளைப் போகப் பொருளாகவே கருதுவதைக் காட்டுகிறது..

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் நட்பு



ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் நட்பு
ஆணும் ஆணும் கொள்ளும் நட்பிற்கு பண்டைய தமிழ் இலக்கியங்களில் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன், பாரி-கபிலர் போன்று பல ஆதாரணங்கள் உள்ளன. ஆண்-பெண் நட்பிற்கு ஒளவையார்-அதியமானை ஆதாரணம் காட்டுவர். ஆனால் ஒரு பெண்ணும் பெண்ணும் இணைந்து வாழ்நாள் முழுவதும் நட்போடு இருந்ததற்கான சான்றுகள் இல்லை. திருமணத்திற்கு முன்பும் பின்பும் ஆண்களைப் போல நட்பு கொண்டோர் பற்றித் தகவல்கள் இல்லை. இதற்கான காரணத்தை ஆர்.சண்முகசுந்தரம்நாவல்களின் வழி ஆராய்ந்த போது சில உண்மைகள் பெறப்பட்டன. கல்வி  கற்கும் வாய்ப்பு கிட்டிய பின்பு தான் பெண்கள் தோழியர் வீடுகளில் சென்று தங்கும் வாய்ப்பைப் பெற்றனர். அத்தோழிகளுக்கு மணமானபின், அவர் கணவர்களின் பரந்துபட்ட பார்வையின்மையினால் நெருங்கிய நட்பையும் பெண்கள் இழக்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. விரிந்த மலரிலும், மூன்று அழைப்பிலும் தோழியரின் கணவர்கள் நடத்தும் காதல் நாடகத்தால் பாலாமணியும், சாவித்ரியும் மனம் வெறுத்து விடுகிறார்கள்.

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் பற்றிய ஆண்களின் பார்வை


ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில்  பெண் பற்றிய ஆண்களின் பார்வை

 
Vadivelu joke வடிவேல் வயிறு குலுங்க ... 
ஒவ்வொரு ஆணும் தன் திருமணத்திற்கு முன்னரும் பின்னரும் அடுத்த பெண்களை வெறும் போகப் பொருளாக மட்டுமே எண்ணிப் பழகுகிறான். காதல் திருமணம் என்றாலும் அழகான பெண் எதிரில் இருந்துவிட்டால் பக்கத்திலிருக்கும் மனைவி கூட அவனுக்கு மறந்துவிடுகிறது. புதிய பெண்ணிடம் பழகும் போது ஆணின் மனம் கட்டற்றுத் திரிகிறது. பாலாமணியிடம், தோழி இந்திராவின் கணவன் உரையாடுகிறான். இளம் மனைவியின் கேள்விகளைவிடப் பாலாமணியின் கேள்விகள் தான் அவனுக்கு முக்கியமாகப்பட்டது. இதனால் அடுத்த நாளே பாலாமணிக்கு விடை தந்து விடுகிறாள் இந்திரா. (வி.மா:155) கமலத்தின் கணவன் தன் மனைவி பக்கத்து அறையில் இருக்கும்போதே அவள் தோழியிடம் தவறதாக நடக்க முயற்சி செய்கிறான். (மூ.அ.:28)

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் விலை மகளிர் நிலை



ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் விலை மகளிர் நிலை

ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் இல்லாமல், பொருளுக்காகக் கன்னித் தன்மையை இழந்து பின் பலருடன் பொருளுக்காக உடலுறவு கொள்பவரே விலை மகளிர் இவார்” (கலைமதி. இ. 4 புனிதாம்பாள்.மு., 2003:1161) இவர்களின் நிலையை, இறுதிக் கால வாழ்க்கையை ஆர்.சண்முகசுந்தரம்வெளிப்படுத்தி உள்ளார்.

ஆண்களுடைய போகத்திற்கு இளாகும் இப்பெண்கள் சமூகத்தால் இழிவாக நடத்தப்படுகின்றனர். இவர்களைப் பயன்படுத்தும் ஆடவரும் இவர்கள் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும் நிலையில் ஒதுங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். வயிற்றுப் பாட்டிற்காக இத்தொழிலை மேற்கொள்ளும் இப்பெண்கள் பிற பெண்களின் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இப்பெண்களைப் பயன்படுத்தும் ஆண்கள் தம்முடைய சமூகக் கடமையை மறந்து விடுவதால் இவர்களுக்கு விடிவுகாலம் ஏற்படுவது இல்லை. இப்பெண்களை இழிவாக்கி வெறுத்தொதுக்கும் சமூகம் அவர்களைப் பயன்படுத்தும் ஆண்களை ஒன்றும் செய்வதில்லை.

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் கைம்பெண் நிலையும் சமூகமும்



ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் கைம்பெண் நிலையும் சமூகமும்
கைம்பெண்கள் கணவரின் உறவினர் அல்லது தாய் வீட்டாரின் ஆதரவில் வாழ்கிறார்கள். இவ்வாறு வாழும் பெண்களுக்கு இருதரப்பிலும் சொத்துரிமை இல்லை.
மனைவி இறந்தபின் வயதான தாத்தாவும் மறுமணம்
பண்ணிக்கிட்ட உரிமையுண்டு - இளம் மங்கையை முடிப்பதுண்டு
மண்டை வறண்டு தன் கணவனை இழந்தவர் கட்டழகியானாலும்
கடைசியில் சாக மட்டும் உரிமையுண்டு” (பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,1937:122-123)
என்பதற்கேற்ப, நாகம்மாள் சொத்து குறித்து கெட்டிப்பனுடன் பேசுவதை உண்மையறியாமல் ஊரார் பழிதூற்றுகின்றனர். கணவன் வீட்டாருடன் வாழும் பெண்கள் கணவனின் உழைப்பின் மூலம் கிடைத்த வருமானத்தை, வீட்டை, அனுபவிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கணவனுடன் பிறந்த சகோதரர்கள் இல்லையெனில் சொத்து குறித்துச் சிக்கல் எழுவதில்லை.

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் தற்கொலைகள்



ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் தற்கொலைகள்


சமூகத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் தற்கொலையை நாடுகின்றனர் என்று தன் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ள தாயம்மாள் அறவாணன் அவர்கள், அதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார்.
1. ஒன்றை அடைய எண்ணும் போக்கு நிறைவேறாமல் போதல்
2. முரணான சமூகத்தோடு ஒத்துப் போக அல்லது எதிர்த்துப் போக இயலாமல் இதல்.
3. அக மனப் போராட்டங்கள்
4. ஒடுக்குதல் அதனால் வெறுப்பு வரும்
5. வேறொன்றின் மீது மனம் வைத்தல்
6. தனிமைப்படுதல்
7. எதிர்பார்த்து ஏமாற்றம்
8. உள் ஒன்று புறம் ஒன்று
9. கையற்ற நிலை (2001:78)
போன்ற காரணங்களினால் மகளிர் தற்கொலைகள் வருடந்தோறும் அதிகரித்து வருகின்றன என்று கூறுகிறார்.

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் திருமணச் சிக்கல்


ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் திருமணச் சிக்கல்

ஆணும், பெண்ணும் இணைந்து சமூகத்தில் ஒரு அங்கமாவதற்கான நிகழ்வையே திருமணம் என்கிறோம். திருமணம் என்பது சமுதாயக் கட்டுக்கோப்பிற்காக ஆணும் பெண்ணும் அன்பு கொண்டு இயற்கையான எழுச்சிகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒருவர்பால் ஒருவர் திருப்தி கொண்டு ஒத்து வாழ்வதற்கானதோர் ஒப்பந்தமே. குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் மதித்து, மரியாதை கொடுத்து தோழமையுணர்வுடன் பங்கு கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.” (நளினிதேவி.நா., 1991:143-144)


மனித இனம் தன் பால் உந்துதலை ஒரு நிறுவன அமைப்பிற்குள் நிறைவு செய்து கொள்ள ஏற்படுத்திய முறையே திருமணமாகும்.” (பக்வத்சலபாரதி,:1990:368) திருமணம் என்பது சட்டமுறைப்படி அமையும் சடங்காகும்என பெர்ரண்டு ரஸ்ஸல் கூறுவார். (மாதவன். கோ, 1965:29) ஒரு பாதியாய பெண்ணும் மற்றொரு பாதி
யாய ஆணும் ஒன்றுபடுவது என்னும் தொடர்பிலிருந்து எழும் சமூக அமைப்பே குடும்பம் ஆகும். குடும்பம் நீடித்து நிலைப்பதற்குத் திருமண ஏற்பாடு இன்றியமையாதது.” (திலகவதி. க, 2001:24)
திருமணம் என்பது பெண்ணை ஒரு குடும்பத்திலிருந்து  இன்னொரு குடும்பத்திற்கு மாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. திருமணம் பெண்ணிற்குச் சமுதாயத்தில் மதிப்பை ஏற்படுத்தி பெண்ணை முழுமையாக்குவதாகக் கருதப்பட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.”(இலட்சுமி.சி.எஸ், 1986:142)

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் கல்வியும் சமூக சேவையும்

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் கல்வியும் சமூக சேவையும்

படித்த பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளுவதோடு சமூகச் சேவையிலும் உடுபடுவார்கள் என்பதைப் பல பெண் பாத்திரங்களின் மூலம் உணர்த்துகிறார். படித்த பெண்கள் மருத்துவராக, வக்கீலாக, அமைச்சராக, ஆளுநராக, வெளிநாட்டுத்தூதுவராக வர முடியும். ஆனால் விரிந்தமலர் புதினத்தில் வரும் கமலத்திற்கு அவற்றிலெல்லாம் விருப்பம் இல்லை. 
 அவற்றிற்கெல்லாம் மேலான மனித குலம் முழுமைக்கும் சேவை செய்வதற்கான உலக சமாதானப் பணியில்
ஈடுபாடு கொள்ள விரும்புகிறாள். பழங்களை நேராக எடுத்துக் கொண்டு போய்ச் சேரியிலுள்ள குழந்தைகளுக்குத் தந்துவிட்டு காற்றில் பறப்பது போன்று களிப்போடு நடையிட்டு வருகின்ற சமயத்தில் - அவள் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கின்ற தன் உணர்வுகளை எண்ணிப் பார்த்தாள். (ப-213) பாலாமணியும் செஞ்சிலுவைச் சங்கத்தினரோடு சேர்ந்து கிராமப் பகுதி மக்களுக்குச் சேவை செய்கிறாள். தன் ஊர் இளைஞர்களையும் அதில் ஈடுபடுத்துகிறாள். (விரிந்தமலர்.:106)
மீனாட்சி தன் சொல்வன்மையால் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துகிறாள். அவளுடைய பிரசங்க வன்மையை அந்தப் பட்டிக்காட்டுப் பிராந்தியம் அதற்கு முன் கேட்டுப் பூரித்ததில்லை. தங்கள் ஊர்க்காரி என்பதைத் தெரிந்தவுடன் அவர்களுடைய உற்சாகம் கரை புரண்டுவிட்டது. பாட்டிமார்களே தங்கள் ஓட்டுக்களை நிச்சயம் சின்ன மணியக்காரருக்கே போடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.” (இ.நே. : 197) அவள் பிரசங்கம் செய்த கட்சியே வெற்றி பெறுகிறது.

சாவித்ரியின் மாமா பஞ்சாயத்துத் தலைவர். அவர் மூலமாகப் பல செய்திகளை நன்றாக அறிந்து கொள்கிறாள். நீங்க மின்சாரத்திற்கு ஏற்பாடு பண்ணாதவரை நம்ம ஊர் கீழுக்குத்தான் போய்க் கொண்டிருக்கும்.” (மூன்று அழைப்பு.:213) என்று ஆலோசனை கூறுகிறாள் தங்கள் தோட்டத்துக் கிணறுகளில் என்ஜின் வைத்துத் தண்ணீர் இறைக்க வேண்டும் என்பது அவளுடைய ஆசை. வெள்ளாமையைப் பெருக்க வேண்டுமென்ற ஆர்வம் மட்டுமின்றி ஊர் முன்னேறும் என்ற அவளது கனவும் நிறைவேறும் என நம்புகிறாள்.
 அவளது பேச்சாற்றலை வியக்கும் முத்து அவளை அரசியலில் உடுபடச் சொல்கிறான். அவளுக்கு அரசியல் மகிழ்ச்சி தரும் என்று நம்பிக்கையூட்டுகிறான். (ப-216) அவளது உறவினரான செல்ல முதலியார்,  சாவித்ரி படித்திருக்கிறாள். அவள் எம்.எல்.ஏ. ஆவாள். அப்படியே அமைச்சர் ஆகிவிடுவாள்.” (மூன்று அழைப்பு :197) என்று நம்புகிறார்.
 பெண் சமூகத்தைப் பாதிக்க முடியும், அதே போன்று சமூகம் பெண்ணைப்    பாதிக்கும் .... ஒர் ஆணைப் போன்று பெண்ணும் தனக்குரிய சொர்க்கம் அல்லது நரகத்தைத் தேர்ந்தெடுக்கவோ படைத்துக்கொள்ளவோ வலிமையுடையவள்என்று பிரைடன் என்பவர் கூறுகிறார் (சரோஜா. கோ, 2000:38) கல்வி கற்ற பெண்கள் சமூக சேவை, அரசியல் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு சமூக மாற்றத்திற்கு வித்திடுகின்றனர். இங்குப் பழைய மரபுகளில் மூழ்கித் திளைத்த ஆண்களே, பெண்களுக்கு வழிகாட்டி அவர்களை அரசியல் போன்ற சமுதாய இயக்கத்தில் பங்கு பெறச் செய்கின்றனர். வீட்டையும், நாட்டையும் காக்கும் பொறுப்பு ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானதென்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் கல்வியறிவு மறுக்கப்பட்ட பெண், கல்வி கற்க அனுமதிக்கப்பட்டவுடன், ஆண்களைப் போலவே எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல என்ற உண்மையை வெளிப்படுத்துவது போல பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டு வெற்றி பெற்றனர்.
பாரதி கண்ட கனவை நனவாக்கிக் கொண்டு முன்னேறும் பெண்கள் காலத்திற்கேற்ப தன் இளுமையிலும் பல மாற்றங்களைப் பெற்று வளருகின்றனர். அரசியலிலும், அறிவுத் துறையிலும் பெண்கள் முத்திரை பதித்து வருவதற்கான பல சான்றுகளை ஆர்.சண்முகசுந்தரம்நாவலில் தெளிவாக்கியுள்ளார். பெண்களின் சுதந்திர வாழ்க்கைக்கு, மேன்மைக்கு, மரபுகளைத் தகர்த்து முன்னேறுவதற்குப் பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட வேண்டும். கல்வி பெறாத பெண்கள் பழைய மரபுக்குள்ளாகவே அழுந்தி சிக்கித் தவிப்பதை இரம்பப் புதினங்களில் காட்டுகிறார்.
 பெண்ணுக்குக் கொடுக்கப்படும் கல்வியினால் அவர்கள் வாழ்வில் மட்டுமின்றி சமூகத்திலும் குடும்பத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு புதிய பாரதத்தை உருவாக்கிக் காட்டுவர் என்ற ஆசிரியரின் நோக்கம் புலப்படுகிறது. பெண் ஆணைவிட எவ்விதத்திலும் குறைந்தவள் இல்லை என்பதை அவள் கல்வி கற்றாலோழிய நிரூபிக்க இயலாது. அக்கல்வி இன்றேல் ஆண்களும் அவளை ஆணையாக மதிக்கப்பட மாட்டார்கள்.” (தூரன் பெ,1978:251) என்ற பாரதியின் கருத்துக்களுக்கு உருவம் கொடுக்கக்கூடிய வகையில் கமலமும் மீனாட்சியும் உருவாக்கப்பட்டுள்ளனர்.