மண்ணின் விளையாட்டை விடுத்து
மட்டைப்பிடித்த போது எதை இழந்தோம்?
எளிய வா்ழ்க்கை வெறுத்துப் பகட்டு
வாழ்க்கைத் தேடி எதைத் தொலைத்தோம்?
மண் தந்த விளைச்சல் தவிர்த்துப்
பணம் தந்த விளைவால் எதைப் பெற்றோம்?
பொன்வெள்ளி விடுநிலம் பெருக்கி
உடல் நலம் பேண எப்படி மறந்தோம்?
பல தலைமுறைக்கும் தரவேண்டியது
வீடு காடு கார் என ஏன் நினைத்தோம்?
உடலுறுதி மனத்திண்மை, மனிதநேயம்,
மதச்சார்பின்மை சொத்தென எப்போது உணர்வோம்?
நம் கைகளில் பச்சைமண் அதை எதுவாகவும்
மாற்றும் வல்லமை உண்டென்று எப்போது நம்புவோம்?
----------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?