நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday, 31 December 2013

சிலப்பதிகாரம் 30. வரம் தரு காதை

30. வரம் தரு காதை
செங்குட்டுவன் தேவந்தியிடம் மணிமேகலையின் துறவு பற்றி வினவுதல்

வட திசை வணக்கிய வானவர் பெருந்தகை
கடவுள் கோலம் கண்-புலம் புக்க மின்,
தேவந்திகையைச் செவ்விதின் நோக்கி,
‘வாய் எடுத்து அரற்றிய மணிமேகலை யார்?
யாது அவள் துறத்தற்கு ஏது? ஈங்கு, உரை’ என-                            5

புத்தாண்டு வாழ்த்துகள்

          

Friday, 27 December 2013

சிலப்பதிகாரம் 29. வாழ்த்துக் காதை

29. வாழ்த்துக் காதை
உரைப்பாட்டு மடை

குமரியொடு வட இமயத்து
ஒருமொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச்
சோழன் மகள் ஈன்ற மைந்தன்,
கொங்கர் செங் களம் வேட்டு,
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன், சினம் செருக்கி
வஞ்சியுள் வந்து இருந்தகாலை;
வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர்
மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை-தன்னில்,
ஒன்று மொழி நகையினராய்,
‘தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர்
செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில்
விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்,
எம் போலும் முடி மன்னர்
ஈங்கு இல்லை போலும்’ என்ற வார்த்தை,

சிலப்பதிகாரம் 27. நீர்ப்படைக் காதை 28. நடுகல் காதை

27. நீர்ப்படைக் காதை

கனக விசயர் தலைமேல் பத்தினிக் கல்லை ஏற்றி, கங்கையில் நீர்ப்படை செய்தல்

வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின்
கடவுள் பத்தினிக் கல் கால்கொண்ட பின்,
சின வேல் முன்பின் செரு வெங் கோலத்துக்
கனக-விசயர்-தம் கதிர் முடி ஏற்றி,
செறி கழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்                                    5
அறியாது மலைந்த ஆரிய மன்னரை,
செயிர்த் தோழில் முதியோன் செய் தொழில் பெருக
உயிர்த் தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டி என்று,
யாண்டும், மதியும், நாளும், கடிகையும்,
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண்கொள;                                        10
வரு பெரும் தானை மறக்கள மருங்கின்,
ஒரு பகல் எல்லை, உயிர்த் தொகை உண்ட
செங்குட்டுவன் தன் சின வேல் தானையொடு
கங்கைப் பேர் யாற்றுக் கரை அகம் புகுந்து;
பால் படு மரபின் பத்தினிக் கடவுளை                                        15

சிலப்பதிகாரம் 25. காட்சிக் கதை

25. காட்சிக் கதை

இலவந்தி வெள்ளி மாடத்தில் தன் தேவி இளங்கோவேண்மாளுடன்
இருந்த செங்குட்டுவன் மலைவளம் காணச் சுற்றத்தோடு பெயர்தல்

மாநீர் வெலிக் கடம்பு எறிந்து, இமயத்து,
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல், வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோவேண்மாளுடன் இருந்தருளி,                                            5
‘துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்’ என,
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி,
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்.

சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் 24. குன்றக் குரவை

மூன்றாவது
வஞ்சிக் காண்டம்
24. குன்றக் குரவை
உரைப் பாட்டு மடை

குறவர் கண்ணகியை வினவுதல்

குருவி ஓப்பியும் கிளி கடிந்தும்
குன்றத்துச் சென்று வைகி,
அருவி ஆடியும் சுனை குடைந்தும்
அலவுற்று வருவேம் முன்,
மலை வேங்கை நறு நிழலின்,
வள்ளி போல்வீர்! மனம் நடுங்க,
முலை இழந்து வந்து நின்றீர்;
யாவிரோ?’ என-

சிலப்பதிகாரம் 23. கட்டுரை காதை

23. கட்டுரை காதை
மதுராபதி தெய்வம் கண்ணகியின் பின்புறம் தோன்றிப் பேசுதல்

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி,
குவளை உண் கண் தவள வாள் மகத்தி;
கடை எயிறு அரும்யிய பவளச்செவ் வாய்த்தி;
இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி;
இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும்,                                            5

சிலப்பதிகாரம் 21. வஞ்சின மாலை

21. வஞ்சின மாலை
கோப்பெருந்தேவியை நோக்கிக் கண்ணகி கூறுதல்

‘கோவேந்தன் தேவி! கொடுவினை ஆட்டியேன்
யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும்,
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு
பிற்பகல் காண்குறுhஉம் பெற்றிய - காண்;

கற்புடை மங்கையர் எழுவர் வரலாறு

சிலப்பதிகாரம்19. ஊர் சூழ் வரி

19. ஊர் சூழ் வரி

கதிவரனது சொல்லைக் கேட்ட கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பை ஏந்தி,
நகரினுள் புக்கு, நகர மாந்தரை நோக்கி முறையிட்டு, அழுதல்

என்றனன் வேய்யோன்: இலங்கு ஈர் வளைத் தோளி
நின்றிலள்- நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி;
‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும்
பிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈது ஒன்று;
பட்டேன், படாத துயரம், படுகாலை;                                                5

சிலப்பதிகாரம் - 13.புறஞ்சேரி இறுத்த காதை

13. புறஞ்சேரி இறுத்த காதை
‘இரவில் வழிச் செல்லுதல் நன்று’ என்று கோவலன் கவுந்தி அடிகளிடம் கூறுதல்

பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு,
புண்ணிய முதல்வி திருந்துஅடி பொருந்தி,
‘கடுங் கதிர் வேனில் இக் காரிகை பொறஅள்;
படிந்தில சீறடி பரல் வெங் கானத்து;
""""கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா;                                         5

சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் 11. காடு காண் காதை

இரண்டாவது

மதுரைக்காண்டம்

11. காடு காண் காதை

உறையூரில் தங்கிய கவுந்தி முதலிய மூவரும் வைகறையில் புறப்பட்டத்
தென் திசை நோக்கிச் செல்லுகின்ற வழியில்
உதயகாலத்தில் ஓர் இள மரக் காவில் புகுதல்

திங்கள் மூன்று அடுக்கிய திரு முக் குடைக் கீழ்,
செங் கதிர் ஞாயிற்றுத் திகழ் ஒளி சிறந்து,
கோதை தாழ் பிண்டிக் கொழு நிழல் இருந்த,
ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி,
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்                                            5

சிலப்பதிகாரம் 8. வேனில் காதை

8. வேனில் காதை
இளவேனிலின் வருகை

""""நெடியோன குன்றமும், தொடியோள் பௌவமும்,
துமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு,
மாட மதுரையும், பீடு ஆர் உறந்தையும்,
கலி கெழு வஞ்சியும், ஒலி புனல் புகாரும்,
அரைசு வீற்றிருந்த, உரைசால் சிறப்பின்,                                     5

சிலப்பதிகாரம் 7.கானல்வரி

7. கானல் வரி

வயத்தமாலை கையிலிருந்த நல் வாழை மாதவி தொழுது வாங்கி,
திருத்தி, கோவலனிடம் நீட்ட, அவன் அதை வாங்கி,
கானல் வரி பாடத் தொடங்குதல்
கட்டுரை

சித்திரப் படத்துள் புக்கு, செழுங் கோட்டின் மலர் புனைந்து,
மைத் தடங் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி;
பத்தரும், கோடும், ஆணியும், நரம்பும் என்று
இத் திறத்துக் குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி-
பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல்,                        5

சிலப்பதிகாரம் 6.கடல் ஆடு காதை



6.கடல் ஆடு காதை
விஞ்சை வீரன் காமக் கடவுளுக்கு விழா எடுத்தல்

வெள்ளி மால் வரை, வியன் பெரும் சேடி,
கள் அவிழ் பூம் பொழில் காமக் கடவுட்கு,
கருங் கயல் நெடுங் கண் காதலி - தன்னொடு
விருந் தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன் -

Thursday, 12 December 2013

சிலப்பதிகாரம் -பதிகம்-1.மங்கல வாழ்த்துப் பாடல் முதல் 5.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை


seeko passport size
பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
kannaki broken icon
கண்ணகி சிலை

சிலப்பதிகாரம்

Kannagi main temple
சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகிகோயில்
Kannagi idol
சிதைந்த சிலையின் பகுதிகள்
Kannagi temple entrance
கண்ணகிகோயில் முகப்பு

kannaki root map
சுருளி மலைதான் நெடுவேள் குன்றம்



வழக்குரைத்தல்






 

 


 

 

 

 

 

kannaki rootKannagi complex

நெடுவேள் குன்றம் வரையிலான பாதை

      

சிலப்பதிகாரம்

 

பதிகம்

குணவாயில் கோட்டத்தில் இளங்கோ
குணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,
குடக் கோச் சேரல் இளங்கோ அடிகட்கு-
குறவர் கூறிய விந்தை நிகழ்ச்சி
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி,
‘பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,
ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு,
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்
காதல் கொழுநனைக் காட்டி, அவளொடுஇ எம்

பெண்கள் அறிவியலின் கண்கள்





பெண்கள் அறிவியலின் கண்கள்


முன்னுரை



         அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரான அறிவாற்றலையே பெற்றுள்ளனர். எனினும், பெண், கல்வி கற்கப் பலவிதமாகத் தடுக்கப்படுகிறாள். விரும்பியதைப் படிக்கவோ, வேலைக்குச் செல்லவோ இயலாத நிலை உள்ளது. அது மட்டுமின்றி வீட்டில் அதிகமான வேலை சுமை சுமத்தப்படுவதால், தனக்கான நேரமோ, தனது திறன்களை வளர்க்கப் போதுமான வாய்ப்போ இல்லாமல் ஆக்கப்படுகிறாள். எனினும் தனக்குரிய ஆற்றலை பல்வேறு வேலைகளிலும் அவள் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறாள். அவை பெரிதாகப் பேசப்படாமலும், வெளிப்படாமலுமே இருந்து வருகிறது. மேலும் பெண் குறித்த ஆண்களின் பார்வை ‘பெண் ஒரு அறிவற்ற பலவீனமான இனம்’ என்பதாகவே உள்ளது. ஏனவேதான் புதிய இயந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் ஆண்களே கையாள வல்லவர் என்று கருதப்பட்டு, ஆண்களுக்கே பெரிதும் அறிவியல் தொழில்நுட்பத் திறன்களைக் கற்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. எனவே, பெண்களுக்கும் அறிவியலுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருப்பதாக கருத்தியலே உலவி வருகிறது.

ஆனந்தாயி காட்டும் குடும்ப உறவுகளில் பெண் நிலை









 ஆனந்தாயி காட்டும் குடும்ப உறவுகளில் பெண் நிலை


 

முன்னுரை


 

 குடும்ப அமைப்பில் குழந்தை வளர்ப்பு, திருமணம், வாழ்க்கை, தாய்மை என்று பலதரப்பிலும் பெண் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறாள். குடும்ப அமைப்பின், மரபுக் கண்ணோட்டத்தாலும், சமுதாய நெருக்கடியாலும், பொருளாதார நிலையினாலும், பெண் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றாள்.
பெண்ணியக் கருத்துக்கள் உலகெங்கும் பேசப்பட்டு வரும் இந்நாளில், குடும்ப உறவுகளில் பெண் நிலையைப் பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது. ஆனந்தாயி நாவல் காட்டும் குடும்பமானது, இன்று பல இடங்களில் நாம் காணும் ஒரு குடும்ப அமைப்பே ஆகும். ஆசிரியர் காட்டும் அத்தனை குணாம்சங்களும் பொருந்திய குடும்பங்கள் சில தான் என்றாலும், அவர் குறிப்பிடும் பல அம்சங்கள் பெரும்பாலான குடும்பங்களில் நிலவி வருகிறது என்பதை யாரும் மறுக்கவியலாது.

குடும்பம்

ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு ஒரு குடும்பமாகும். அன்பு, பரிவு, பாதுகாப்புணர்வு, ஒன்றுபட்டு வாழ்வது, சகிப்புத் தன்மை ஆகியவற்றின் உறைவிடம் குடும்பம் என்பது குடும்பததைப் பற்றிய பொதுவான கணிப்பாகும்.
ஆனால், தந்தை வழிச் சமுதாயத்தில் சொத்துரிமை பெற்ற ஆண் ஆதிக்கம் செலுத்துபவனாகவும், தலைமை சார்ந்தவனாகவும், விளங்குகிறான். சொத்துக்களைத் தனியுடைமையாக்கப், பெண்ணிற்குக் கற்புக் கோடடை விதித்து வீட்டிற்குள் பூட்டினான், அடக்கி தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டான்.

மேலும் வாசிக்க...

Monday, 9 December 2013

சங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை


 சங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை



முன்னுரை


        ஒருவன் உணவின்றிச் சில வேளைகள் வாழலாம்; ஆனால் உடையின்றி அரைக் கணமும் வாழ இயலாது. அரசரின் மானத்தையும், ஆண்டியின் மானத்தையும் காக்கக் கூடியது உடை. துறவிகளும் துறக்காத சிறப்புடையது உடை. தீ மூட்டி வேள்வி செய்யும் அந்தணரின் தொழிலைவிட, தீ மூட்டி உணவு சமைக்கும் சமையல் தொழிலைவிட உயர்ந்தது நெசவுத் தொழில் என்பதால்தான் வள்ளுவரும், கம்பரும் நெசவுத் தொழில் மேற்கொண்டனர் என்பது வரலாறு கூறும் உண்மை.