நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 28 June 2017

தொல்காப்பியத்தின் சிறப்பு

இந்தியா ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்ட நிலையில், ஆங்கிலம், ஜொர்மனி, பிரெஞ்சு முதலிய ஐரோப்பிய மொழிகளில் சமஸ்கிருத நூல்கள் பெரும்பாலும் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் தமிழ்மொழியில் வெகு சில நூல்களே மொழி பெயர்க்கப்பட்டன. தொல்காப்பியம் எந்த மொழியிலும் மொழிபெயார்க்கப்படவில்லை.

 இந்திய  மொழிகளில் கூட தொல்காப்பியம் மொழிபெயர்க்கப்படவில்லை. இந்தியக் கவிதையியல் என்ற சாகித்திய அகாடமி நூலில் ஆங்கிலம், -----  உருது, அரபு மொழிகளின் கவிதையியல் பேசப்படுகிறது. 

ஆனால் தமிழ் மொழிபற்றி ஒரு சொல் கூட இல்லை. தொல்காப்பியத்தின் பெருமை தமிழகத்திலேயே அறியப்படாமல் தான் உள்ளது. 

தமிழ் ஆய்வுலகம் கூட தொல்காப்பியம் சார்ந்த ஆய்வுகளை புதிய நோக்கில் மிகக்குறைவாகவே ஆராய்ந்துள்ளது. தமிழில் கார்த்திகேசு சிவத்தம்பி தான் கவிதையியல் நோக்கில் தொல்காப்பியத்தை ஆராய்ந்துள்ளார். இந்நிலையில் தொல்காப்பியத்தின் மேன்மையை தமிழருக்கும், உலகத்தவருக்கும் அறிய வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?