முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Wednesday, 28 June 2017

மணிமேகலை.10

விடை தெரியாத  கேள்விகளுடன் மணிமேகலை மீண்டும் கடற்கரையை அடைந்தாள் இது தன் சென்ற பிறவியின் கதையா? வரும் பிறவியின் கதையா?
அலைகள் வருவதும் போவதுமான காட்சி பிறவியை நினைவூட்டியதுநடந்தபடியே பிறவிகளின் காரணத்தை சிந்தித்தாள்.
இராகுலன் என்ன ஆனான்?’
சென்ற பிறவியில் அரசியாகப் பிறந்த தான் இப்பிறவியில் கணிகை மகளாகப் பிறந்த காரணத்தை அறியாமல் தவித்தாள்பிறந்தோர் இறப்பதும்இறந்தோர் பிறப்பதுமான இச்சூழலில் இராகுலனும் எங்காவது பிறந்திருப்பான்முதல் நாளில் தொடங்கிய கடற்கரைப்  பயணம் ஐந்தாவது நாளில் தொடங்கிய இடத்திற்கே  வந்து சேர்ந்திருந்ததுஅப்படியானால் இது ஒரு தீவாதான் தீவிற்கு வந்தது எப்படி
மாணிக்கப் புத்த பீடிகையை  இங்கு யார் அமைத்தது?
அப்போது ஒளி வீசும் கோலத்துடன் ஒரு பெண் அவள் முன் தோன்றினாள்உவ வனத்தில் பார்த்த மணிமேகலா தெய்வம்சென்ற உயிரே திரும்ப வந்தது போலிருந்தது.
மணிமேகலை நலந்தானா ?
தாயேநீதான் நீதான் என்னை இங்கு கொண்டு வந்தாயா?’
ஆம்உன் மனம் பக்குவப்பட வேண்டும்பல அச்சங்கள உன்னைக் கவிந்திருக்கின்றன. அவை உன்னை விட்டு நீங்க வேண்டும்எந்தப் பெண்ணும் இதுவரை செய்யாத அரும்பணி ஒன்று உனக்காகக் காத்திருக்கிறது.நீ அதைச் செய்ய விதிக்கப் பட்டிருப்பவள். செய்வாய்.அதற்கான மனதிடத்தை நீ பெற வேண்டும் என்றே இம்மணிபல்லவத்தீவில் விட்டுச் சென்றேன்
‘உண்மைதான் நான் இப்போது பயந்தாங்கொள்ளி மணிமேகலை இல்லை.மேலும் நான், சோலைக்குள்ளே சென்று, மாணிக்க புத்த பீடிகையைக் கண்டேன்என் பிறவிகளின் பிறப்பறிந்தேன். ஆனால் எல்லாம் புதிராக இருக்கிறதே 
 ‘ஆம் அது உன் பழம்பிறப்பு‘
'.........................'
 ‘நீ இலட்சுமியாகப் பிறந்த போது நடந்தது‘
‘அப்படியா?‘ ஆச்சரியத்தில் உறைந்து போனாள்.
‘நான் மன்னனின் மகளாகப் பிறந்து மன்னனின் மனைவியாக வாழ்ந்திருக்கிறேனா?‘
‘இப்பிறவியில் நான் ஒரு கணிகையின் மகள்.‘ ஒருபிறவியில் மன்னன் மகள்... இப்பிறவியில் கணிகையின் மகள்......திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டாள். விதியின் விளையாட்டை அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
ஆனால்....’
சொல் மேகலை
இராகுலன்  என்னவானார்?‘
தெய்வம் அவளை உற்றுப் பார்த்தது.
 ‘உதயகுமரன் தான் இராகுலன்
 மணிமேகலை கண்களால் வியப்பால் விரிந்தன.
 ‘அதனால் தான் என் மனம் அவனைப் பற்றியதா
 ‘ஆமாம்ஆனால் இப்பிறவியில் நீ புத்த தருமத்தை ஏற்கப் போகிறாய்.
மன்னன் மகளாக பிறந்து பல அன்னதானங்கள் செய்த நான் இன்று கணிகை மகள்ஆனால் ஒரு தவறும் செய்யாத பரசாரகனைக் கொன்ற இராகுலன் இப்பிறவியில் ஒரு மன்னன் மகன். எப்படித் தாயே இது
இதற்கு காலம் பதில் சொல்லும் மேகலைஒவ்வொருவரும் அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்பவே பலனைப் பெறுகின்றனர். நீ அன்னதானங்களைச் செய்ததன் பலனை விரைவில் பெறுவாய். நாம் இதைப்பற்றி பேசுவதால் பயனில்லை.’
தாயும் சுதமதியும் எப்படியிருக்கிறார்களோஎன்னை உடனடியாக அழைத்துச் செல் தெய்வமே’ எனக் கரம் குவித்து நின்றாள்.
சுதமதியிடம் நீ இங்கிருப்பதைச் சொல்லிவிட்டேன்மாதவிக்கும் தெரிவித்திருப்பாள்உன் கவலையை விடு.’
இந்தத் தீவிற்கு என்ன பெயர்?
மணிபல்லவத்தீவுஇதற்கு நாக தீவுமணித் தீவு என்ற வேறு பெயர்களுமுண்டு
இது நாகர்களுக்குரிய தீவுஇதன் இருபுறம் உள்ள தீவில் வசிக்கும் மன்னர்கள் இத்தீவுற்காகப் போரிட்ட போது புத்த தேவனே அவதரித்துஇத்தீவு தனக்குரியது எனக் கூறித் தன் பாதபங்கயங்களைப் பதித்து விட்டுச் சென்றார்இங்கு தீங்கு தரும் பாம்புகளிருந்தாலும் யாரையும் தீண்டாது. தீங்கு தரும் விலங்குகளும் கிடையாது.’
அப்பப்பா எத்தனை பாம்புகள்அவை கடிக்காது என்றாலும்அவற்றை நினைக்கும் போதே மயிர் கூச்செறிகிறதே
ஆனால் பாம்புகளை விடக் கொடிய பெண்களுக்கெதிரான சமூகச் சூழ்நிலைகளை நீ இனி தெரிந்து கொள்ளப் போகிறாய்
இன்னுமா நான் ஒரு கணிகை மாதவியின் மகள்கணிகைகளின் அபல நிலை நான் அறியாததா? என் தாய் மாதவியின் அறிவும் திறமையும், குடத்திலிட்ட விளக்காய் அவளுடைய பிறந்த குலத்தினால் மாறிப் போனதே தன் பிறந்த தாயினாலேயே மீண்டும் கணிகையாக வாழும் நெருக்கடியான சூழலைச் சந்திக்கிறாளே?  எல்லாவற்றையும்  எதிர்த்துக்  துறவிக்கோலம் பூணுவதற்கு துணிந்தாளே.  எப்படி வேண்டுமானலும் வாழலாம் என்று நினைக்கும் கணிகை குலப் பெண்கள் மத்தியில் இப்படித் தான் வாழ வேண்டும் என்று நினைத்து தன் தாயையும் நாடாளும் மன்னனையும் எதிர்த்து நிற்கிறாளே. கணிகை குலப் பெண்களில் ஒருத்தியாகப் பிறந்து பல ஆடவரால் வெறும் உடலாகப் பார்க்கப்படும் இழி நிலையை நானும் பெற்றுள்ளேனேஎன்னையும் துறவியாகத்தான்  மாற்றிக் காட்டுவேன் என்று துணிந்து நினைக்கிறாளே. கணிகை மட்டுமல்ல எந்தப் பெண்ணும் இச்சமூகத்தில் ஒழுக்கத்துடன் வாழமுடியாத சூழலையும் நான் அறிவேன் தாயே!
 மணிமேகலைக்கு மூச்சு வாங்கியது. இதற்கு முன் இப்படி அவள் யாரிடமும் பேசியதில்லை. தீவின் தனிமை தந்த சிந்தனையோட்டத்தில் தான் உணர்ந்ததை படபடவென்று கொட்டித்தீர்த்துவிட்டாள். அவளைப் புன்னகையோடு பார்த்த தெய்வம் நிதானமாக,மணிமேகலை நீ அறிய வேண்டியது இன்னும் இருக்கிறது. நீ இனி துணிவுடன் எதையும் எதிர்கொள்ள வேண்டும்உனக்கு மூன்று மந்திரங்களைத் தருகிறேன்இவை உனக்கு பிற்காலத்தில் உதவியாக இருக்கும். இனி நீ விரும்பிய வடிவத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்.‘
‘நான் எதற்காக வேற்றுருவம் எடுக்க வேண்டும்?‘
‘காலம் வரும்போது உனக்குப்புரியும்.‘
, இனி, பசியைத் தாங்கவும்வான்வழி செல்லவும் உன்னால் முடியும்
‘இவையெல்லாம் எனக்கு எதற்காக தாயே?‘
அவளுக்கு விடை தராமல், மணிமேகலா தெய்வம் தொடர்ந்து சொல்லியது.
‘நீ எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய கருத்து ஒன்று உண்டுமக்களின் உடல் என்பது உணவின் பிண்டம்தான். வயிற்றுப்பாடுதான் உலகில் பெரிய பாடு. வயிறுதான் மக்களைப் பிரிக்கிறது. உண்டு கொழுத்தவனிடம், வறியவன் உணவிற்காக தன்மானத்தை இழக்கிறான். வறுமையும் சமூகக் கேடுகளும் நெருங்கிய தொடர்புடையவை. இவற்றின் அடிவேர் பசிதான்
பசியின் கொடுமையை இந்தத் தீவு வாழ்விலேயே உணர்ந்து கொண்டேன்புகாரில் பசி என்பதையே அறியாமலிருந்தேன்இரண்டு நாள்கள் பசியோடிருந்தேன்மாதவிடம் இது பிடிக்காது அது பிடிக்காது என்று சாப்பிடாமல் அலை கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தனவயிறு சுருண்டுநினைவு மயங்கிஉணர்வுகள் இழந்து அப்பப்பா....பசியின் கொடுமையை நான் நன்கு அனுபவித்தேன் விரும்பியது எதுவும் கிடைக்காது என்ற நிலையில் கிடைத்ததை உண்ணவேண்டிய சூழலின் கொடுமையை உணர்ந்தேன். பின் எதையும் உண்ணப் பழகிக் கொண்டேன்மணிமேகலை தன்னை வியந்தபடியே பதிலுரைத்தாள்.
உன் முகத்தில் தெரியும் தெளிவும் உறுதியுமே அதைக் காட்டுகிறது
மணிமேகலா தெய்வம் அவளின் தெளிவைக் கண்டு புன்னகைத்தது
பின்விடை பெற்றது.
[தொடரும்]

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?