நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 19 March 2016

அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா? அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?



Image result for தலைவன் தலைவி அச்சம் 
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
Image result for தலைவன் தலைவி அச்சம் 
குறிஞ்சிக்கலி பதினோராவது பாடல் தோழி கூற்றுப் பாடல், தலைவனின் ஆசையைத் தலைவிக்குப் புரிய வைக்க முயலும் தோழியின் இக்கட்டா சூழலை வெளிப்படுத்தும் பாடல்.  தலைவிக்குத் தலைவனின் பால் அன்பிருக்கிறது. ஆனால் அச்சமும் இருக்கிறதே. குடும்பத்தாரையும், உறவுகளையும், ஊரையும் நினைத்து மிகுந்த அச்சம் கொண்டிருப்பதால் தலைவனைக் கண்டும் காணாதது போல இருக்கிறாள். தலைவனோ தோழியின் உதவியை நாடுகிறான். தோழி தலைவியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

யானையைப் பிடிக்க வல்ல ஆற்றுலுடையவர்கள் மற்றொரு யானையைக் கொண்டு தானே கருதிய யானையைப்  பிடிப்பார்கள். யானையைப்பிடித்து அடக்கக் கூடிய பேராண்மையுள்ளவன் தலைவன். அவன் உன் மீது விருப்பம் கொண்டிருக்கிறான். ஆனால் நீயோ அவனை ஒரு பொருட்டாகவும் கருதவில்லை. எனவே உன் தோழியாகிய என் உதவியை நாடினான் என்கிறாள்.


உடனே தலைவி கோபமாகக் கேட்கிறாள் தோழியே அவன் யரொன்று உனக்குத் தெரியுமா? எத்தகையன் என்பதை நீ அறிவாயா? என்று கேட்கிறாள். அவன் பேச்சைக் கேட்பது யார்க்கும் அரிதே என்கிறாள்.

அதற்குத் தோழி கூறுகிறாள். அவன் ஒரு சிறந்த வீரன். உலகையே ஒரு குடைக்கீழ் ஆளும் திறடையும், தகுதியும், வலிமையும் உடையவன். ஆனால் ஆணவம் என்றால் என்னவென்றே அறியாதவன். நல்ல சான்றோர்களிடம் எப்படி அடங்கிச் செல்ல வேண்டுமோ அப்படி அடங்கி நடக்கக் கூடியவன். அவனுடைய அடக்கம் வறுமையினால் ஏற்பட்டதல்ல. உள்ள வன்மையினால் தோன்றியதாகும். இயலாதவர்களுக்கும், இல்லதவர்களுக்கும் தானே முன் வந்து உதவக் கூடியவன். அத்தகைய உயர் குணமுடையவன் அவன். உன் மீது விருப்பம் கொண்டுள்ளான்.
Image result for தலைவன் யானை 

உன் உள்ளம் அறிய தனக்குரிய தன்மானத்தை விட்டு விட்டு, வீரத்தை விட்டு விட்டு, பிச்சை கேட்பவன் போல என்னிடம் வந்த கெஞ்சிகிறான். ஒரு நாள், இருநாள் அல்ல இப்படிப் பல நாட்கள். அவன் என்னிடம் கேட்ப தென்ன? உன்னுடைய உள்ளத்தில் அவனுக்கு ஓர் இடம்.நீ மறுத்தால் உயிர் வாழேன்என்று றுதி படக் கூறுகிறான்.

ஆனால் நீயோ அவனுடைய விருப்பம் அறிந்தும், உன்மனதில் அவனுக் கொரு இடம் தர மறுக்கிறாய்.அவனுக்கு உடன் படமாட்டேன் என்கிறாய். அவனை எப்படி நம்புவது என்கிறாய். நீ சொல்வதை நான்  அவனிடம் சொன்னால், ‘என் நெஞ்சு படும் பாட்டைத் தோழியாகிய  நீயறியாமல் யார் அறிவார்என்று எதிர் கேள்வி கேட்கிறான். உண்மையிலேயே வருத்தத்தோடு உழல்கிறான். நீயோ, நாமே எல்லாவற்றையும் முடிவு செய்து விடுவதா என்ற கேட்டுக் காலம் கடத்துகிறாய். இவருக்குமிடையில் நான் தான் மாட்டிக் கொண்டு அல்லலுறுகின்றேன்.
 
Image result for தலைவியின் ஐயம் 

நீயோ என்னைப் போலப் பிறர்க்கும் இந்நிலை ஏற்பட்டிருக்குமோஎன அவன் மீது ஐயம் கொள்கிறாய்.  நீயோ எம்முடிவும் எடுக்க மறுக்கிறாய். தனியாக இருக்கும் ஒரு பெண் முடிவெடுக்க முடியுமா என்கிறாய். நானோ இவனிடம் மாட்டிக் கொண்டு அருளில்லாதவள் என்ற பட்டம் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.

அவனோஉன் காதல் இன்றேல் சாதல்என்கிறான். நீ அவனை மறுத்தால் உயிர் வாழேன் என்று சொல்வது பொய்யில்லை போல் தோன்றுகிறது. அவனை ஏற்றுக் கொள்வது தான் அறிவுடமை. நானும் உனக்கு உறுதுணையாக இருக்கிறேன். உன் பொருட்டு நானும் சிந்தித்தன். அவனே உனக்கு ஏற்ற மணவாளன் என்று உணர்ந்தேன். இனியும் யோசிக்க வேண்டியிருந்தால் நாம் இருவருமே கலந்து பேசி ஐயம் தீர்த்துக் கொள்வோம். வனை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு வந்திருக்கிறேன். இனி யோசிப்பதிலே பயனில்லை தயங்கதே. ன் காதலை அவனிடம் எடுத்துரைத்து மகிழ்ச்சி யோடிருஎன்று தோழி தலைவியை ஆற்றுப் படுத்திகிறாள்.
ஒன்று, இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும்; உலகம்
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்;
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்,
நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்;
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க
5
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்;
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு, என்னைச்
சொல்லும் சொல், கேட்டீ சுடரிழாய்! பல் மாணும்;
'
நின் இன்றி அமையலேன் யான்' என்னும் அவன் ஆயின்,
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிதுஆயின்,
10
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உளகொல்லோ? நறுநுதால்!
'
அறியாய் நீ; வருந்துவல் யான்' என்னும் அவன் ஆயின்,
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிதுஆயின்,
அளியரோ, எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்;
'
வாழலேன், யான்' என்னும் 'நீ நீப்பின்' அவன் ஆயின்,
15
'ஏழையர்' எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின்,
சூழுங் கால், நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்;
சூழுங்கால், நறுநுதால்! நம்முளே சூழ்குவம்
'
அவனை,
நாண் அட, பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது;
20
"பேணினர்" எனப்படுதல் பெண்மையும் அன்று; அவன்
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா' எனக்
கூறுவென் போலக் காட்டி,
மற்று அவன் மேஎவழி மேவாய், நெஞ்சே!


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?