நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 19 March 2016

சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது..........



Image result for தலைவன் தலைவி பிரிவு

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது.........
.  



 குறிஞ்சிக்கலியின் பத்தாவது பாடல். தோழி கூற்றாக வருகிறது. தோழியின் மேன்மையான குணத்தை விளக்கும் பாடல் இது. தலைவன்-தலைவி சேர்கையில் அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சியை இப்பாடல் எடுத்துரைக்கிறது. தலைவிக்குத் தலைவன் மீதுள்ள சினத்தைப் போக்க தன் மீது பழியைச் சுமத்திக் கொள்ளும் தோழியின் பெருந்தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. தலைவன்-தலைவிக்கு இடையை ஏற்படும் மன ஊசலாட்டத்தையும், தவறான புரிதல்களையும் போக்குபவளாக இத்தோழி படைக்கப்பட்டிருக்கிறாள். காதலர்களிடையில் ஏற்படும் ஐயத்தை நீக்கி, நெருக்கத்தை ஏற்படுத்த நம்பிக்கையுடைய நெருங்கிய ஒரு நட்பின் தேவையை, தோழியின் இன்றியாமையை வலியுறுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. வார்த்தைகள் பயன்படுத்தும்போது அதை உணர்ந்து உத்தேசித்து சரியான வார்த்தைகளை உப்போகப்படுத்திப் பேசவேண்டும் என்பதற்கு தேழி கூற்றுப்பாடல்கள் நல்ல சான்று.




ஒரு காதலன் காதலியைத் தேடி வருகின்றான். இரவு நேரத்தில் அவன் வருவதால் பல தடைகளைச் சந்திக்கிறான். தலைவியின் ஊரிலே இரவு நேரத்தில் இரவு காவலர்கள் ஊரைச் சுற்றி வந்து கொண்டிருப்பார்கள். இவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும். காவலர்  கண்ணில் படாமல் விழிப்புணர்வோடு வரவேண்டும். ஒரு முறை காவலரை ஏமாற்ற முடியாததால் வருத்தத்தோடு திரும்பிச் சென்று விடுகிறான். தலைவியோ அவனுக்காகக் காத்திருந்து ஏமாந்து விடுகிறாள்.  
வெட்சிப்பூவைக் கொண்டு தலைவன் தன் வருகையை வெளிப்படுத்த வேண்டுமென்று அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம். வெட்சிப்பூவின் ஓசைக்காகத் தலைவி இரவு முழுவதும் காதைக் கூர்மையாக்கி விழிக்காமலிருந்தாள்.
மற்றொரு முறை  தலைவன் வந்தான். ஆனால், உறங்காமல் விழித்திருந்த அவ்வூர் நாய்கள், புதிய அவனைக் கண்டு குரைத்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிப் போய் விடுகிறான். தலைவியும் ஏமந்து போனாள்.

மறுமுறையும் தலைவன் இரவு நேரத்தில் வந்தான். காவல்காரர்களையும், நாயையும் ஏமாற்றியாகிவிட்டது. தலைவியின் வீட்டின் பின்புறம் வந்துவிட்டான். ஆனால், தலைவின் தாய் தூக்கம் வராமல் அந்நேரத்தில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறாள். தலைவன் இம்முறையும் ஏமாற்றத்தோடு திரும்பி விடுகிறான். தலைவியும் தாயின் செயல்களால், துன்பமடைந்து தான் உறங்குவது போல் நடித்துக்கொண்டிருந்தாள். தலைவன் வந்தாலும், சை ஏற்படுத்தினாலும் அவனைச் சந்திக்க இயலாச் சூழலை எண்ணி துயருற்றிருந்தாள்.

மறுமுறையும் தலைவன் வந்தான். இம்முறை காவல்காரர்களை ஏமாற்றியாகிவிட்டது. நாயும் உறங்கி விட்டது. தாயும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். தலைவி கூறிய நொச்சி செடியருக்கே வந்தான்..சலசலப்பை ஏற்படுத்திப் பூக்களை உதிர்த்தான். ஆனால் என்ன ஒரு கொடுமை தலைவி வரவில்லை. காரணம் என்ன?  
சிறிது நேரத்திற்கு முன் தான் காற்று ஏற்படுத்திய சலசலசப்பைத்  தலைவன்ஏற்படுத்தியாக நினைத்துத் தலைவி வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றிருந்தாள். இம்முறை தலைவன் ஏற்படுத்திய சலசலப்பையும், காற்று ஏற்படுத்தியதாகக் கருதியதால் வந்து பாராமல் வீட்டுற்குள்ளேயே இருந்து விட்டாள்.
Image result for தலைவன் தலைவி பிரிவு 
தலைவனும் பொறுத்திருந்து பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விட்டபின், தலைவி தலைவன் வரவில்லை என நினைத்து  வருத்தம் கொண்டாள். தலைவன் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதி வருந்தினாள். தன் தோழியிடம் சொல்லி தலைவனைச் சந்தித்து அவன் நிலையை அறிந்து வரச் செய்தாள். தோழி தலைவனைச் சந்திக்கிறாள். இருவர் நிலையையும் அறிகிறாள். தான் அவர்களுக்குத் தக்க முறையில் உதவியிருந்தால் இருவரும் சந்தித்திருப்பார்களே எனத் தன் மீது கோபம் கொண்டள். தலைவிக்குத் தலைவன் மீதுள்ள கோபத்தைப் போக்க ஒரு வழியைக் கூறி, தலைவியைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறாள்.
இவள் நன்மைகளைப் பேசிடும் தோழி,  நன்மைகளைப் பேசினால்,  நல்ல வளம் சேர்ந்திடும் என்றறிந்து சுவை ஊட்டும் சொல்லிலே சுற்றமெல்லாம் மகிழவே  மகிழ்ச்சிச் செல்வம் நிலைக்கவே சொல்லாடிடும் தோழி. தலைவன் தலைவி காதலுக்கு தோழி அரிய செல்வம் ஆகுமே!

இதோ அப்பாடல் தோழியும் தலைவனும் உரையாடும் வகையான இப்பாடலைக் காண்போம்.

தோழி கூறுகிறாள். அழகிய அருவிகள் உடைய மலைநாட்டுத் தலைவனே. ன்னுடைய மலைநாட்டிலே மணிநிறத் தும்பிகள் ஏராளமாக உள்ளன. அத்தும்பிகள் நிலையைப் போல உன் நிலையும் யிற்று. வ்வாறு என்கிறாயா? உன் குறிஞ்சி நாட்டிலே தேனையுடைய சிறந்த மலர்கள் பூத்துக் குலுங்கி நிற்கும்.
மணி நிறத் தும்பிகள் தன் மீதர்ந்து தேனை உண்டு செல்லும் என நினைத்து மலர்ந்து காத்துக் கிடக்கின்றன. ஆனால் இதையறியாத தும்பி மலரென்று எதை எதையோ நாடி ஏமாற்றம் கொள்கிறது. உன் மலை நாட்டில் மிகப்பெரிய யானையும், மிகக் கொடிய வேங்கையும் ஒன்றோடொன்று சண்டையிடுகின்றன. உன் மலை நாட்டுத் தும்பி, வேங்கையை வேங்கை மலரென்று நினைத்து அதன் மீது சென்று மொய்த்தது.
பின் அருகில் சண்டையிட்டுக் கொண்டிருந்த யானையின் முகத்தில் தெரிந்த புள்ளிகளைச் சிறு ஒளிப் பூக்கள் என நினைத்து அதன் மீது சென்று மொய்த்தது. அங்கும் தேனா கிடைக்கும்?. ஆனால் தும்பிகள் தன் தவறுணராது தாது மாறி வேங்கையையும் வேழத்தையும் மொய்த்துக் கிடக்கும். மறுபுறம் குறிஞ்சி மலரோ காத்துக் கிடக்கும். தும்பி மாறி மாறி இவ்வாறு வேங்கையையும், வேழத்தையும் மொய்ப்பது எப்படியிருக்கிறது தெரியுமா? போர்க் களத்தில் இரு பெரும் வேந்தரும் ஒருவரோடொருவர் மாறு கொண்டு போரிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, புலவர்கள் அவர்களை அமைதிப்படுத்த வேண்டி இங்கும் அங்கும் மாறி மாறி அலைவதைப் போலிருந்தது.
உனக்கும் அந்தத் தும்பிக்கும் வேறுபாடில்லை. உன் நாட்டிலுள்ள தும்பிகள் குணமே உன்னிடமும் உள்ளது. மலரை நாடாத தும்பி போல் நீயும் இவ்வறே அலைக் கழிக்கப்பட்டு வருகிறாய் உன்னிடம் குற்றமில்லை. அவளும் நாள் தவறாமல் விழித்திருத்து ஏமாந்து போனாள். இரவில் சந்திக்காததால் தாங்கள் இருவரும் பகலில் சந்திக்க முடியாமல் போயிற்று.

ஆனால் இருவரையும் சந்திக்க வைக்க வேண்டிய பொறுப்புடைய நானோ, ஏனோ அதைச் செய்யவில்லை.

Image result for தலைவன் தலைவி பிரிவுதலைவன் வந்திருந்து தான் அவனுடைய வருகை அறியாது தவறு செய்தேனோ என்று தலைவி ஒரு புறம் வாடுகிறாள். தான் கருதுவது போலத் தலைவனும் தன் பிழை எனக் கருதி உள்ளம் கொந்திருப்பானோ என்ற கவலை தலைவிக்கு உண்டாயிற்று. அதற்குப் பொறுக்காதளாகி தோழியாகிய என்னைச் சந்தித்துத் தலைவனாகிய உன் நிலையை அறிந்து வரக் கூறினாள்.

நீயும் தலைவி மீது கோம் கொண்டிருக்கிறாய். உன் நிலையும் பரிதாபமானதே. ஏமாறித் திரும்பினேன், பகற் குறியும் இழந்தேனே என வருந்தி நிற்கிறாய்.
இதற்கு நானே முழுப் பொறுப்பு. எனவே உனக்கு என் மீது கோபமில்லையாயினும், தலைவியைச் சந்தித்துக் குற்றம் தோழியுடையதே எனப் பொய்யாக வேணும் கூறு. அவளுக்கு ன் மீது கோபமில்லை. என் மீதே கோபம்.

உன்னுடைய மலையைப் போன்றதே அவளுடைய உள்ளம்.  மலையின் பள்ளத்தாக்கிலே நின்று கொண்டு, நாம் உரக்கக் கூறினால் மலையும் திரும்ப அதையே எதிரொலிக்குமல்லவா? அதைப் போலவே தலைவியும் உன் கருத்தையே உடன்பட்டு எதிரொலிப்பாள்.
மலைத் துளிக்காக வானை நொக்கிப் பாடிக் கொண்டிருக்கும் வானம் பாடி போல, அவள் உன் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறாள்.

நீ தவறான அல்ல குறியினால் வாராதொழிந்தாய் எனக் கூறினால், ஏற்றுக் கொள்ளாமல் கோபிப்பாள். ஆனால் என் மேல் கூறும் பழியை ஏற்றுக் கொண்டு, உடன் வந்து உன்னை ஏற்றுக் கொள்வாள். வருத்தம் நீங்குவாள். எனவே விரைந்து சென்று தலைவிச் சந்திப்பாயாக எனத் தோழி கூறுகிறாள்.


வீயகம் புலம்ப, வேட்டம் போகிய
மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி,
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்,
'
வேங்கை அம் சினை' என விறற் புலி முற்றியும்,

பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும்,
வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும்
அயம் இழி அருவிய அணி மலை நல் நாட!
ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன்,

மாறினென் எனக் கூறி மனம் கொள்ளும், தான் என்ப
கூடுதல் வேட்கையான், குறி பார்த்து, குரல் நொச்சிப்
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக;
அருஞ் செலவு ஆர் இடை அருளி, வந்து அளி பெறாஅன்,
வருந்தினென் எனப் பல வாய்விடூஉம், தான் என்ப

நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு, தன்மாட்டுப்
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக;
கனை பெயல் நடு நாள் யான் கண் மாற, குறி பெறாஅன்,
புனையிழாய்! என் பழி நினக்கு உரைக்கும், தான் என்ப
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், தன்

அளி நசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக;
என ஆங்கு,
கலந்த நோய் கைம்மிக, கண் படா என்வயின்
புலந்தாயும் நீ ஆயின், பொய்யானே வெல்குவை
இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச்

சிலம்பு போல், கூறுவ கூறும்,
இலங்கு ஏர் எல் வளை, இவளுடை நோயே


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?