Saturday, 31 October 2020
வானம்.
கடந்த பாதைகள் எல்லாம் கலைந்த கனவாக
வரும்பாதைகள் எல்லாம் முற்றிலும் புதிராக
வாழ்க்கை போகிறது ஒரு முடியாத பயணமாய்,
மௌனமே இதமாக, உடன் வரும் நிலவையும்,
அழத்தோன்றும் வேளையில்..
ஆறுதலாய் தலைகோதும் தென்றலையும்
தேடிக் கொண்டேயிருக்கிறது மனம்....
திசையறியா பறவைக்கு...
வானமெங்கும் பாதைகளே!
இலக்கில்லா பயணத்தில்...
பாதையெங்கும் புத்த போதிகளே!
தீராத பாதையின் முன் ஒரு நீண்ட கனவாய்...
ஊர்கிறது ஆழ்மனப் பயணம்!
கடக்க கடக்க முடியவேயில்லை தூரம்.
போகப் போகத் தீரவேயில்லை வானம்.
தேங்கிக் கொண்டேயிருக்கும் நினைவலைகள்
விடுபட விடுபட நிரம்பிக்கொண்டேயிருக்கும்.
எல்லா நதிகளும் கடலுள் சென்று சேருவது போல,
கருங்குழிக்குள் எல்லா கோள்களும் ஈர்க்கப்படுவது போல,
நினைவலைகள் எல்லாம் ஓர் ஒற்றைப் புள்ளியில்.
உறுதியானதென நினைத்துக்கொண்டிருந்த
வலுவான அடித்தளம் நழுவியது எப்போது?
-------------------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?