நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 4 October 2016

உழைப்பு


உழைப்பு



              ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் தன்னுடைய தேவைக்காகத் தினந்தோறும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவருவான். ஒரு கழியில் இரண்டு புறமும் பானைகளைக்கட்டி தோளில் சுமந்தபடி வருவான். இரண்டு பானைகளில் ஒரு பானையில் சிறிய ஓட்டை இருந்தது. இதனால் தினமும் வீடு வந்து சேரும் பொழுது, அதில் பாதியளவு நீரே இருந்தது.



Image result for பானை 
நிறை குடமுள்ள பானைக்கு தான் விவசாயிக்கு முழுமையாகப் பலன் தருவதாக கர்வம் வந்துவிட்டது. உடனே ஓட்டை உடைய பானைக்கோ மிகவும் வருத்தம். இரண்டு வருடங்கள் இப்படியே கழிந்துவிட்டன. விவசாயி ஓட்டைப் பானையை அடைக்கவேயில்லை. ஆதேப் பற்றிக் கவலைப்படாமல் எப்போதும் போல் நீர் எடுத்து வந்து கொண்டிருந்தான். ஓட்டைப் பானையும் பொறுடையாக தன்னால் இயன்ற வரை உதவிக்கொண்டிருந்தது. ஒருநாள் ஓட்டைப் பானை விவசாயியைப் பார்த்து, ஜயா நான் உங்களுக்கு முழுமையாக உதவாததால் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். என்னால் உங்களின் உழைப்பு வீணாகிறது. வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்திக் கொண்டே வருவதால் தாங்கள் முழுமையாக வீட்டிற்கு நீரைக் கொண்டு வர முடிவதில்லை. உங்கள் வேலைப் பளு அதிகாரித்து வருகிறது. என் குறையை நீங்கள் தயவு செய்து மன்னித்து விடவேண்டும். என்குறையைச்சரி செய்யுங்கள் என்றுக்கேட்டுக் கொண்டது.
அதற்கு அந்த விவசாயி பானையே உன்னிடம் உள்ள ஓட்டையை நான் அறிவேன். நான் ஆற்றிலிருந்து வீடு வரும் வழியைக் கவனித்துப் பார்த்தால், உனக்குத் தெரியும் உன்னை நான் ஏன் சரி செய்யவில்லை என்று. நான் வரும் வழிதோறும் பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். உன்னிடமிருந்து சிந்தும் நீரினால் பூச் செடிகள் நன்றாக செழிப்பாக வளர்ந்துள்ளன. இதனால் எனக்கு நிறைய பூக்கள் கிடைக்கின்றன. இவற்றை வைத்து வீட்டை அலங்கரிக்கிறேன். அது மட்டுமில்லாமல் மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் பெறுகிறேன். எனவே நீ சிந்திய நீரும், என்னுடைய உழைப்பும் வீணாகவில்லை என்றான்.

Image result for பானை ஓட்டை 
இதைக் கேட்ட ஓட்டைப் பானைத் தன்னைக் கேவலமாக நினைப்பதை நிறுத்தி விட்டது. பிறருடைய பேச்சைக் கவனிப்பதை விட்டு விட்டு தன் பணியைப் பெருமையாகக் கருதத் தொடங்கிவிட்டது. பிறர் குறை கூறுவதை நாம் கெட்கத் தொடங்கிவிட்டால், நம்மால் எந்த வேலையையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டது. எந்த உழைப்பும் வீண்போவதில்லை என்பதையும் புரிந்து கொண்டது. ஒருவன் எதிர்பார்த்த பயன் உடனே கிடைக்காமல் போகலாம். பலன் கிடைக்கவில்லையே என்று மனம் தளர்ந்து உழைப்பதை விட்டு விடக் கூடாது.
 வாழ்க்கைப் பயணத்தில் நாம் நற்பயனை அடைய நாம் செய்ய வேண்டிய மூலதனம் தொடர்ந்த உழைப்பு மட்டுமே. நம் உழைப்பின் பயன் நமக்கு முழுமையாக நீ கிட்டவில்லையே என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படத்தான செய்கிறது. யார் ஒருவர் பொறுமை என்னும் பண்பைக் கடைப் பிடித்து உழைக்கிறார்களோ, அவர்கள் ஒரு நாள் உயர்ந்த நிலையை அடைவார்கள் திருவள்ளுவர் உழைப்பின் பயனைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ஓயாமல் உழைப்பவர்கள் விதியைக் கூட துரத்தி விடுவார்கள் என்கிறார்.

1 comment:

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?