Friday, 14 October 2016
Tuesday, 4 October 2016
திடமான எண்ணமிருந்தால் போதும்
திடமான எண்ணமிருந்தால் போதும்
ஜப்பானில் மிக ஏழைக் குடும்பத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவர் சோய்ச்சிரோ என்பவர்.
அவருடைய தாயார் நெசவுத் தொழிலாளி. தந்தையோ இரும்பு பட்டறையில் வேலை செய்யும்
கூலித் தொழிலாளி. ஒரு வாடகை சைக்கிள் கடையையும் நடத்தி வந்தார். இந்நிலையில்
சோய்ச்சிரோ வாடகைக்கு விடும் சைக்கிளில் அடிக்கடி உடைந்து விடும் பிஸ்டன் ரிங்கைத் தானே தயாரிக்க
முயற்சி செய்தார். பள்ளியில் பகல் நேரத்தில் படிப்பு. இரவு பிஸ்டன் ரிங்
தயாரிப்பில் ஆராய்ச்சி. இப்படியே இவருடைய இளமை கழிந்தது. பொருட்செலவு தான் மிகுந்ததே தவிர பிஸ்டன்
ரிங் அவர் நினைத்தபடி உருவாகவில்லை. இதற்கிடையில் திருமணமும் நடந்தது.
மனைவியின் நகைகளை அடமானம் வைத்து உறுதியான பிஸ்டன் ரிங்கை உருவாக்கினார். இரண்டு
ஆண்டுகள் இடையறாத முயற்சிகளும், தோல்விகளும், பொருள் இழப்புகளும் ஏற்பட்டாலும் சோய்ச்சிரோ மனம் தளரவில்லை.
இறுதியில் அப்போது பிரபலமாக இருந்த டோயோட்டாவின் கான்ட்ராக்ட் கிடைத்தது. தன் சொத்தெல்லாம்
விற்று தொழிற்சாலை துவக்கினார். அப்போதுதான் ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேபோர்ச்சூழல் உருவாகியிருந்தது.
குறிக்கோள்

தைரியம்
தைரியம்
மனிதனுக்கு முதலாவது வேண்டிய குணம் தைரியம்தான். அதுவே மற்ற குணங்களை விட மேலானது. பயமுறுத்தும் அபாயத்திலிருந்து புறமுதுகு காட்டி ஓடக்கூடாது. அவ்விதம் செய்தால் அபாயம் இரட்டிப்பாய் விடும். தைரியமாக அதை எதிர்த்து நின்றால் அபாயம் பாதியளவாகக் குறைந்து விடும். போஜராசன் என்னும் தினமும் எட்டு லட்சுமிகளை வைத்து வழிபடுவது வழக்கம். அவனிடம் ஒரே ஒரு லட்சுமியை மட்டும் வழிபடுமாறு தேவர்கள் கேட்டுக் கொண்டார்கள். உடனே போஜராஜன் தைரிய லட்சுமியை மட்டும் வைத்து வழிபட அனுமதி கேட்டான். இதனால் மற்ற லட்சுமிகளும் அங்கேயே இருக்க வேண்டியதாயிற்று. தைரிய லட்சுமி எங்கு இருக்கிறதோ அங்குதான் மற்ற லட்சுமிகளும் இருப்பார்கள். இதை அறிந்தே போஜராஜன் அவ்வாறு கேட்டான்.
மனப்பக்குவம்
மனப்பக்குவம்
கடல் முத்து வேண்டுமானால் கடல் அலையை
எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதைப்போல வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டுமென்றால் சோதனைகளைத்
தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் தேவை.
விடா முயற்சி
விடா முயற்சி
ஒருமுறை
இங்கிலாந்தில் ஒரு பேராசிரியர் உரையை ஒரு வேலைக்காரப் பெண்மணி கேட்டார். அப்பேராசிரியரை
மற்றவர்கள் பாராட்டுவதைக் கேட்ட அவள் தயங்கியபடியே அவரிடம் வந்து ‘நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்களுக்கு பேராசிரியர்
பணி கிடைத்திருக்கிறது. அதனால் அனைவரும் பாராட்டுகிறார்கள்’ என்றாள்.
முயற்சி இல்லாமல் உயர்ச்சி இல்லை
முயற்சி இல்லாமல் உயர்ச்சி இல்லை
17-ம் நூற்றாண்டில் பெர்மா என்ற நீதிபதி இருந்தார்.
அவருக்கு கணிதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. பெர்மா கணிதம் தொடர்பான
பல நூல்களைப் படித்து, அவற்றைப் போட்டுப்
பார்ப்பதிலேயே காலம் கழித்தார். ஒரு புதிய கணக்கைத் தானே உருவாக்கினார். ஆனால்
அதை முடிக்காமல் புதிராக விட்டு விட்டார். இறந்தும் போய் விட்டார்.
முன்னேற்றத்திற்குக் காரணம்
முன்னேற்றத்திற்குக் காரணம் எது?
ஐசக் நியூட்டன் இருபது ஆண்டுள் ஒவ்வொரு நாளும் பலமணி நேரம் உழைத்து அரிய ஆராச்சிக்
குறிப்புகளை சேகரித்து வைத்திருந்தார். ஒரு நாள் அவர் வீட்டில் இல்லாத பொழுது அவருடைய நாய்
எரியும் மெழுகு வர்த்தியைத் தட்டிவிட்டது. மேசைமேலிருந்த அத்தனையும் ஆராய்ச்சிக்
குறிப்புகளும் எரிந்து சாம்பலாயின. வீடு திரும்பிய ஐசக் நியூட்டன்
அதிர்ச்சியடைந்தார். எனினும் நாயின் மீது கோபம் கொள்ளாமல் அதைப் பரிவுடன் தடவிக்
கொடுத்து, ‘இதன் மதிப்பு உனக்குத்
தெரிந்தால் இவ்வாறு செய்திருக்க மாட்டாய்’ என்று அமைதியாகக்
கூறினார்.
உழைப்பு
உழைப்பு
ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன்
இருந்தான். அவன் தன்னுடைய தேவைக்காகத் தினந்தோறும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவருவான். ஒரு
கழியில் இரண்டு புறமும் பானைகளைக்கட்டி தோளில் சுமந்தபடி வருவான். இரண்டு பானைகளில் ஒரு பானையில் சிறிய ஓட்டை
இருந்தது. இதனால் தினமும் வீடு வந்து சேரும் பொழுது, அதில் பாதியளவு நீரே இருந்தது.
Saturday, 1 October 2016
அரசியல் நோக்கில் வள்ளுவரும் சாணக்கியரும்
பொருட்சுருக்கம்
வள்ளுவர்-சாணக்கியர்-அரசியல்-அரசன்-கல்வி-அமைச்சர்-ஒற்றன்-வார்த்தை-கருத்துகளை
ஒப்பிட்டு ஆராய்தல்.
முன்னுரை
மக்கள் ஒத்து வாழ அரசமைப்பு, அதன் செயல்பாடுகள், கடமைகள், சட்டங்கள், தண்டனைகள் போன்றவை இன்றியமையாதன. முடியாட்சி, குடியாட்சி எவ்வகை
ஆட்சியாயினும் அதை நடத்தக்கூடிய மன்னனை அல்ல தலைவனைப் பொருத்தே அரசு அமைகின்றது.
வள்ளுவரும் சாணக்கியரும் முடியாட்சி காலத்து அரச நிலவரங்களை, நீதிகளைச் சொல்லிச்
சென்றாலும், தற்காலத்திற்கும் அவை பொருந்துகின்றன. வள்ளுவர் வகுத்த வள்ளுவமும், சாணக்கியர் வகுத்த அர்த்த சாத்திரமும் பல கருத்துக்களில் ஒத்துப்போகின்றன.
வள்ளுவர் காலத்தை விட பிற்காலத்தவரான சாணக்கியர் (கி.பி.நான்காம் நூற்றாண்டு)
வள்ளுவத்தையே முதனூலாகக் கொண்டு பல கருத்துகளைக் கூறிச் சென்றுள்ளார் என்று
கூறக்கூடிய அளவிற்கு ஒற்றுமைகள் உள்ளன.
Subscribe to:
Posts (Atom)