எது கவிதை?
கண்ணுக்குள் அடங்கா இயற்கைக் காட்சியா?
சொல்லுக்குள் அடங்கா கவிதைப் பொருண்மையா?
பல பரிமாணமுடைய மின்னும் வைரமா?
பார்க்கும்போதே வடிவம் மாற்றும் மேகமா?
படிக்குந்தோறும் பொருள் மாறும் புதுமையா?
படிப்பவருக்கேற்ப பொருள் மாறும் பிரதியா?
நுணுக்கரிய நுண்ணுணர்வைத் தரும் பார்வையா?
நோக்கரிய நோக்குடையாரின் உணர்வு நுட்பமா?
சிறு மழையும், ஒரு மழலையும், ஒரு பார்வையும்,
ஒற்றைச் சிறகும், சிறு தென்றலும், மர நிழலும்,
சில சமயம் “ம்” என்ற ஒற்றை சொல்லும் கவிதைதான்.
-----------------------------------------------------------------------
நீ யார்?
சாரல் தூறல் ஆலி திவலை
எத்தனை பெயர்கள் உனக்கு?
பருவம் தவறி வந்தாலும்....
மழை மழைதானே?
மனதையும் மண்ணையும் குளிர்விக்கும் கனமழையா?
உயிரோடு உறைய வைக்கும் பனி மழையா ?
நனையக் காத்திருக்கிறேன் வா.
-------------------------------------------------------------------------
கொரானா......
காய்ச்சல்
பிளேக்
கான்சர்
எயிட்ஸ்
பெருநோய்களைப் பின்னுக்குத் தள்ளி
முன்னணியில் உள்ளது தும்மல்.
நன்றாகத்தான் சொன்னார்
பழந்தமிழர்.....
பெரியோரை வியத்தலும் இலமே...
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே......
----------------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?