முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Tuesday, 12 March 2013

புறநானூற்றில் தாய்த்தொன்மம்அரங்க.மல்லிகா, இணைப்பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை.

புறநானூற்றில் தாய்த்தொன்மம்

                மதிப்பீடுகள் காலத்தில் அளவுகோல்களாகும். நேற்றும், இன்றும் அதிகாரதத்தில் இருந்தவற்றை மாற்றுவதற்குரிய சூழலை மனச்செழுமையை, அறிவியற்பூர்வமாகப் பார்க்க விழையும் ஆய்வுக் கண்ணோட்டத்தை மதிப்பீடு வளர்க்கிறது. இதன்மூலம் பழமை போற்றுதலுக்கும், இழிவுபடுத்துவதற்கும் உரியதாக இருக்கிறது என்பதை மீறிய அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளை உள்ளிழுத்திக்கொள்ளும் சூழலை முன்னிருத்துகிறது.
                இந்நிலையில் தொன்மைச்சமுதாயம் மாற்றம் பெற்று, நிலவுடமை அமைப்பு தோன்றுகிறது. புறநானூற்றில் நிலம் அடிப்படையிலான, வேறுபாடுகளினூடே, தொன்மை மாற்றத்தை அறிந்து கொள்ளலாம். வீரயுகன் கடந்து சங்ககாலச்சமுதாயம் அரசாக உருவெடுத்தக்காலம். எனினும் வீரயுககாலத்தின் தொடர்ச்சி, வீரம் சார்ந்த கல்வி, சான்றோனாகும் தன்மை, சான்றோனாக ஆண் குழந்தையைப் பார்க்க விரும்பும் தாய் என வீரத்தாய் பார்க்கப்பட்ட காலம்.
                வரலாறு மீட்டுருவாக்கப்படுவதைப் புதுவகைத் திறனாய்வு """"சூநற ஏசவைடைளைஅ’’ என்பர். கிரேக்க, இலத்தின், ஆங்கில அமெரிக்க இலக்கியங்களிலும் ஏற்பட்ட புரட்சிகளின் விளைவாக, தமிழ்ச்சூழலிலும் இலக்கியத்தில் பல புதுமைகள் ஏற்படத் தொடங்கின. இதனால் தமிழாய்வு உறுதிப்படுத்துகின்றன.
                ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு தொழில்முறை வழக்காற்றில் தனித்து அறியும்படியான வாழ்வியலுக்குரிய ஒரு சமூகத்தை ஒரு குழுவாகக் கருதுவது இயல்பு. இக்குழு பெருகி வேறு வேறு இடங்களில் தங்கி தங்களுக்கென அடையாளத்துடன் வாழ்வதை ஓர் இனக்குழு அடையாளமாகச் சொல்வது இயல்பு.
                வீரம், காதல் சங்க இலக்கியத்தின் இருபெரும் முதன்மை பிளவுகளாகக் கருதப்படுவதால் வீரம் மையப்படுத்தப்பட்ட பாடல்களில் """"தாய்’’ முதன்மையாகக் கொண்ட பாடல் 86, 276, 278, 279, 295 ஆகிய பாடல்களைக் கொண்டு தாய், மகன் உறவு சார்ந்து, தாய்த் தொன்மம் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது.
                மானுட இனப் பரிணாம வளர்ச்சியில் பெண் வேட்டையாடுதலோடுதான் தொடர்புபடுத்தப்படுகிறாள். ஆற்றல் மிக்க பெண்தெய்வம் மனிதகுலத்தின் வரலாற்றிலும் ஒவ்வொரு தனிப்பட்ட பெண்ணின் வரலாற்றிலும் வெளிப்படுகின்ற பெண் இனத்தின் அவதாரமேயாகும்.
                எரிக் நியூமேன், மகத்தான தாய்த்தொன்மம் குறித்துதான் ஆய்வுக்குள் நுழையும்போது """"தாய்’’ நினைவில் கொள்வது அவசியமாகும். ஏனேனில் வீரத்துடன் தொடர்புடையவள். சர் ஆர்தா இவான், தான் கண்டுபிடித்த எண்ணற்ற பெண் தெய்வ உருவங்கள் யாவும் ஒரே ஆற்றல் மிக்க அன்னையையே பிரதிநிதித்துவப்படுத்தின. பல்லேறு பெயர்களிலும் பட்டப்பெயர்களிலும் அவளுடைய வழிபாடு """"ஆசியா மைனரின் பெரும்பகுதி மற்றும் அதற்கப்பாற்பட்ட பிரந்தியங்களிலும் பரவலாயிருந்தது என்று கூறினர். ஆற்றல் மிக்க பெண் தெய்வம் கணவன் இல்லாத பூர்வீகத்தாய் எல்லாப் புராணத் தொகுதிகளையும் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். இது உலகம் தழுவிய உண்மை என்பதை நவீனகால கற்றறிவாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்’’(உலக வரலாற்றில் பெண்கள், ப-35).
                தொன்மன் தெய்வங்களைப்பற்றிய பபழங்கதையாகும். மொரீகளில் இராமாயண, மகாபாரதத்திலிருந்து தொடங்குவதாகக் கூறுவர். காலந்தோறும் இப்புராணங்களில் உள்ள பெண் கதாப்பாத்திரங்கள் மாற்றம் பெற்று வந்திருப்பதைப் போல இந்தியப் பெருவெளியில் தாய் வேட்டைச்சமூகத்தின், வேட்டையாடுவதுடன் குழுவினருக்கு பங்கிட்டு கொடுத்தலையும் செய்திருக்கிறாள். இதனைக் கூர்ந்து கவனிக்கும்போது குறிஞ்சி நில மக்கள் முல்லைநிலத்திற்கு இடப்பெயர்வு இணைத்துப் பார்க்கும் போது வேட்டையாடும் இனகுழுவாழ்க்கையும், ஆடு மேய்க்கும் இனகுழு வாழ்க்கையும் அழிந்து தனிச்சொத்துரிமையும் அரசும் தோன்றிய வரலாற்றுக் காலம் என்பதை மானிடவியல் நோக்கோடு சங்க இலக்கியத்தைக் காணலாம். (பெ.மாதையன், சங்ககால இனக்குழு சமுதாயமும் அரசு உருவாக்கமும், ஏ.12)
                இதன் நீட்சியாக தனிச்சொத்துப் பராமரிப்போடு கூடிய அரசர்களின் ஆட்சித்திறனை, ஆட்சியைக் காப்பாற்றும் பொறுப்பைத் தான் நிறைவேற்றுகிறாள். போரிலே ஜப்பான் வெற்றிக்கு அரசர்களின் தாய், தந்தையின் குழவிப்பருவ வீரப்பயிற்சி காரணம் என்பர். அங்கே குழந்தைகளுக்கு நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் தியாகமும் கற்றுத்தரப்படுகிறது.
                யுத்தக்காலத்தில் ஜப்பானியத் தாய்மார்களின் சொற்களை / வழிகாட்டுதலை அப்போது வெளிவந்த இரஷ்யா ஜப்பானிஸ்வரர் என்னும் புத்தகத் தொகுதிகளாய் காணலாம். இதற்கு இணையான வரலாறுகளைக் கொண்டது புறநானூறு.
                யுத்தகாலத்தில் ஜப்பானியத்தாய்மார்கள் காட்டிய தேசாபிமான வீரச்செயல்களை அப்போது வெளிவந்த இரஷ்யா ஜப்பானிஸ்வரர் என்னும் புத்தகத் தொகுதிகளாய் காணலாம். இவ்வரலாறுகள் நமக்கு அருமையுடையனவாக தோன்றினாலும் பழைய சரித்திரங்களை ஆராயின் நம் நாட்டிலும் அத்தகைய வீரத்தாயாரும் (று.ஐ. கூhடிஅயச, ளுறயயேடவைல யனே ளுடிஉவைல ஞளலஉhடி ஹளோவைiஉயட குறித்த ஆய்வு 1907, ப.228) வீரமக்களும் மிகுதியாக இருந்தன என்பது தெரியலாம் (ஜவயாப்கள் ஆராய்ச்சி, ப.169-).
                இத்தகைய பார்வையோடு தமிழிலக்கியத்தில் குறிப்பாக புறநானூற்றில் ஆய்வு செய்யும்போது காதல், வீரம் இரண்டு தமிழ்ச் சமூகத்தின் தொன்மக்கட்டமைப்பாவதை உறுதிசெய்யலாம். புறப்பொருட்துறையில் மூதின் முல்லை என இதனை வழங்குவர்.
                                """"அடல்வே லாடவர்க் கன்றியு மவ்வில்
                                மடவரன் மகம்னர்க்கு மறமித் தன்று’’
என்று கூறும் கொல்லும் வேலினையுடைய வீரர்க்கேயன்றி, அவ்வீரக்குடியில் பிறந்த பெண்ணிற்கு மடப்பம் நிறைந்த இது பொருந்தும். இவ்விடத்தில் கண்ணோக்க வேண்டும். மடமை அறியாமை நிறைந்தவன் பெண் என்ற தமிழ்ச் சமூக வழக்கம் அழுத்தமாக காணப்பட்டு, அதன்பின் அத்தகைய பெண்ணியற்கும் சினத்தை வரவழைக்கத்தக்கது  என்று கருதப்படுகிறது. எனவே பெண்கள் அன்பையும், வீரத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பதால்தான் இன்றைக்கும் அதன் நீட்சியாக பெண்ணின் கடமைகள் வரையறுக்கப்படுகின்றன.
பொன்முடியார்,
                               """"ஈன்று புறந்தருத்தல் என்றலைக் கடனே                     சான்றேனாக்குதல் தந்தைக்குக் கடனே
 வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே                  நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே                                   ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கிக்                                       களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’’ (புறம் - 132)
இப்பாடல் தாய்த்தொன்மத்திற்கான ஆதாரமாக இருக்கிறது. """"என் தலைக் கடனே’’ என்ற சொற்றொடர் கொண்டு வேட்டையாடிய சமூகத்தில் பெண்கள் துப்பாக்கி ஏந்தி விலங்குகளைக் கொன்று வழிநடத்திய தொன்மம் தெரிகிறது. யாதும் ஊரே யாவரும் யாவரும் கேளீர் என்ற பொதுமைப் பண்புடன் வாழ்ந்த இனக்குழுச் சமூகத்தின் ஆதிதாய் தொன்மத்தாய் மென்மை களைந்து வீரம் நிறைந்தவளாயிருக்கிறாள். உயிர்த்தொழில், சிறப்புறக் காரணியாக இருந்திருக்கிறாள். ஆதி பொதுவுடைமை சமூகத்தில் பெண் தலைமை குறிப்பிடத்தக்கது. இதனால்தான் பங்கீடு சாத்தியமாகிறது. தகடூர் யாத்திர
 """"தருமமும் ஈதேயாந் தானமும் ஈதாம்  
  கருமமும் காணுங்கால் ஈதாம் - செருமுனையாற்               கோள்வாண் மறவர் தலைதுப்பிப என்மகன்                      வான்வாய் முழங்கப் பெறின்’’ (புறத்திரட்டு)
தன் மகன் யுத்தக்களத்தில் மரணித்தான். அதுவே தர்மமும் தானமும் கர்மமும் என்று இப்பாடல் இனக்குழு மாறிய பிறகு பேரரசு எழுச்சியுறுகிறது.
                தாய், வேந்தன், தலைவன், போர் என்ற இந்தத் தொடர் நிகழ்வில், தபய்த்தலைமை, அரசர் தலைமை முரண்படுகிறது. இத்தகைய முரண் தோன்றும் போது, அரச அதிகாரப் போரில் அரசனை எதிர்த்துத் தாய், கணவன், மகன் ஆகியோரைப் போருக்கு அனுப்பிவைக்கிறாள். இதனை ஆழமாக எண்ணும்கால் ஒரு இனக்குழுவின் தலைமையைத் தாய்தான் வழி நடத்தியிருக்கிறாள் என அறியலாம். அதன் தொடர்ச்சியாக பேரரசை எதிர்கொள்வது இயல்பானதாக இருக்கிறது.
     """"மீனுண் கொக்கின் தூவியன்ன
  வானல்நனரக் கூந்தல் முதியோர் சிறுவன்                       களிறெறிந்து பட்டன னென்னும் உவகை                         
 யீன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்  
 நோன் கழை துயல் வரும் வெதிரத்து                                   வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே’’ (புறம் - 277)
கொக்கின் இறகுபோல நனைத்த கூந்தலையுடைய முதியவள் தன் புதல்வனைப் போரிலே யானையை வீழ்த்திக் கொன்று தானும் மடிந்தான் எனும் செய்திகேட்டு நுஒஉவைநஅநவே - நுஒயடநசயவரசi நார்த்ராஃப் ஃப்ரை என்ற திறனாய்வாளர் தொன்மம் குறித்து கூறும்போது பலவகையான கவிஞர்களை தொன்மத்திற்கு பயன்படுத்துவர் என்று கூறுகிறார். உதாரணமாக, சிற்றில் நற்றூண் பற்றி என்ற பாடலில் சிறிய இல்லம், அதனைத் தாங்கி நிற்கும் தூண், அதனைப் பற்றிக் கொண்டு உன்மகன் எங்கே, நின் மகன் யாண்டுளன் எனக் கேட்க, அவன் எங்கு இருக்கிறான் என நான் அறியேன். ஆனால் புலி தங்கிப்போன குகைப்போல, அவனைப் பெற்ற வயிறு இது. போர்களத்திலே சென்று காண்! எனக் கூறுவதிலிருந்து பெண்கள் மறக்குடியினர் என உணரமுடிகிறது.
                தருவன் பகை களத்தின் மீது வேலை எறிந்து, அவ்வேலைத் திரும்பப் பெற ஆற்றல் இல்லாதவனாய், வெறுங்கையனாய் புறங்கொடுத்து மீண்டது பற்றி,
          """"வாதுவல் வயிறே வாதுவல் வயிறே           
 நோவலத்தை நின்னின்றனனே                                       அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க                          
 புகர்முகக் குஞ்சர மெறிந்த எஃகம்                                 
 அதன் முகத் தொழிய நீ போந்தனயே                                  அதனால், எம்பில் செய்யாப் பெம்பமி செய்த                               கல்லக் காளையை ஈன்ற வயிறே’’ (புறத்திரட்டு- தொல், பொருள்.71)
எனக் கூறிவெறுத்தாள். பகையரசைப் போரில் வென்ற அக்களத்திலே தானும் இறந்துபடிடாமல், யானை முகத்தெரிந்த தன் வேலை அதனோடே போட்டுவிட்டு நீ புறங்கொடுத்துத் திரும்பினை. இதனால் மூடனாகிய உன்னைப் பெற்ற என் வயிற்றை அறுப்பேன். இதனை தொல்காப்பியத்தில் தாய் தப வந்ந தலைப் பெயனிலை என்று கூறப்பட்டுள்ளது. இத்தகு அருள் செயல்கள் முலையறுத்தல், வயிறு அறுத்தல் யாவும் தாயைத் தெய்வ நிலைக்கு உயர்த்தியுள்ளது. தாய் தெய்வ வழிபாடு போர்ச்சூழலின் பின்னணியோடுதான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. சிலம்பால் கண்ணகியோட இடமுலைத்திருகி எறிந்து மதுரையை எரியூட்டினாள் என்ற செய்தியால் பின்னால் கொற்றவை சிந்தனையும் சிந்திக்கத்தக்கது. ஏனேன்றால்,
                                """"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே                                  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’’
என்ற காலத்தினூடான மக்கள் வாழ்க்கை மன்னன் ஆட்சியோடு தொடர்புடையதாக இருக்கிறது. மக்கள் செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் ஆட்சி சிறப்பாக இருக்க வேண்டும். அரசு அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள பகை நாட்டினர் மீது மன்னன் போர் தொடுக்க வேண்டும். இதில் கணவன், மகன் வீரர்களாகப் பொறுப்பேற்க வேண்டும். அரசு அதிகாரம் மாறாமல் இருக்க, மன்னன் தன் உயிரையும் காப்பாற்றிக்கொண்டு, போரில் வீரனாக உள்ள பெண்ணின் கணவன் மற்றும் மகன் உயிர் துறக்கிறான். மன்னனுக்காக வடக்கிருந்து உயிர் பிசிராந்தையார் மற்றும் பிற புலவர்கள் வடக்கிருந்து உயிர்நீத்தல் பெருமையும் இதனோடு எண்ணிப்பார்க்க வேண்டும்.
                பாரி மகளிர் """"அற்றை திங்கள்’’ எனப்பாடி வருந்துவதில் தாயவெணைப்பில்லடி மகளின் துயரம் எண்ணத்தக்கது. கபிலர் அந்தப் பாரி மகளிருக்காக எடுக்கும் முயற்சிகள் யாவும் மன்னன் பெருமை நிலையிலிருந்து எடுத்துக் காட்டியதாகவே எண்ண வேண்டும். போரில் அரசன் உயிர் துறக்கும் சூழல் ஏற்பட்டால் மக்களும் மாண்டு போகும் நிலை உருவாகும். அரசன், மக்கள் உயிர்துறப்பது மூதின்முல்லைப் போர்ச்சூழலில் இவர்கள் இறப்பை எதிர்கொள்ளக்கூடிய பக்குவம் தாய்க்கு மட்டுமே உண்டு. இதுதான் வீரநிலை, முதுகுடிநிலை. இத்தகைய ஏற்பு மனநிலையை ஒரு தாய் இயல்பாக ஏற்றுக் கொண்டிருப்பதாக புறநானூற்றுப் பாடல்களால் அறியலாம் (புறம் - 277).
                இது தாயின் அதிதநிலை. தன்னை பெருமிதப்படுத்திக் கொள்ளும் செயலாகும். ஆணாதிக்க சமூகத்தால் இத்தகைய வீரம் நிறைந்த பெண்களை வீழ்த்த இயலாத சூழலில் கணவன், மகன் போரில் இறந்து போவதை எதிர்கொள்ளக் கூடியவர்களாக படைத்திருப்பதின் மூலம் பெண் தெய்வமாகப் பார்க்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. தாய் வழிபாடு வழிபடு தன்மையாக மாறியிருக்கிறது.
                தமிழக கிராமங்களில் வயல்வெளியைக் காப்பவர்கள் பெண் தெய்வங்களாக இருப்பர். பெண்கள், ஆண்களால் காவல் காத்திருக்கும்போது அவர்களை ஆண்கள் தாக்குறச் செய்யும்போது அவர்களை எதிர்கொண்டு உயிர்துறந்து பெண்கள்தான் வழிபடப்படுகிறார்கள். மாரியம்மன் இதற்கு சான்றாகும். இதன் தொடர்ச்சிதான் இலங்கை, ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் நடைப்பெற்றுவரும் போரில் துப்பாக்கி ஏந்திப் போர் செய்யும் பெண்களை தாய்த்தொன்ம நீட்சியாகவே கொள்ளலாம். ஈழத்து நவீனக் கவிதைகள் புறநானூற்று வீரத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
                                """"கெடுக சிந்தை கடிதிவண் துணிவே                         மூதில் மகளிராதல் தகுமே                                              மேல்நாள் செருவற்கு இவன் தன்னை                                   யானை எறிந்து கலித்து ஏழிந்தனனே                                     பெருநல் உற்ற செருவற்கு கொழுநன்                                       இன்னும் செருப்பறைகேட்டு விருப்புற்று                           வேல் கைக் கொடுத்து வெளிது                                     வியத்து உடீஇ                                                           பாதுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி                                        ஒரு மகன் அல்லது இல்லோன்                                      செருமுகம் நோக்கில் செல்கென விடுமே!’’
மூதின்முல்லை என்ற துறையில் ஒக்கூர் மாசாத்தியார் பாடலில் வரும் தாய் மறக்குடி சார்ந்தவள். இவனின் தந்தை படைக்களத்தில் யானையைக் கொன்றவன். கணவன் ஆநிரைகளைப் பாதுகாப்பவன் மாண்டவன். அச்சமயம் போருக்கு அழைப்பு எழுகிறது. பறையொலி கேட்கிறது. """"மனப்புகழ்பால் விருப்பம் கொண்ட அப்பெண்தனக்கிருந்து ஒரேயொரு புதல்வனைக் குடும்பியில் எண்ணெய் வைத்து வெள்ளிய ஆடையுடுத்தி போருக்கு அனுப்புகிறாள். இத்தாய்க்கு நிகர்த்த வீரத்தை’’ அ.காந்தாவின் எந்த மகனுக்காய என் கால்களை நகர்த்தஎன்னும் கவிதையில் காணலாம்.
                                """"அவனை விதைத்த                                         அடுத்த கணம்                                                       அடுத்தடுதுள்ள                                                     கல்லறைகளை நோக்கி                                              ஓடின கால்கள்                                                     கண்ணீர் பூக்களை                                                    தூவின கைகள்                                                   
 எந்த மகனுக்காய்                                                  
 என் கால்களை நகர்த்த!                                             நேற்று விதையுண்டு போன                                               
 மூத்தவனுக்கா? இல்லை                                             இப்போதுதான்                                                      விதைக்கப்பட்ட என்                                                      இளைய குஞ்சிக்கா?’’
ஃபஹிமா ஜமாளின் கவிதைகள் போரின் வலி, அடக்குமுறைக்கெதிரான தார்மீகக் கோபம் இனங்களுக்கிடையிலான உறவு முதலானவற்றைப் பேசுகின்றன. (ப-187)
                இவ்வாறு புறநானூற்றில் பார்க்கப்படும் தாய் நவீன உலகின் போர்ச்சூழலில் எத்தகைய இடத்தோடு தன் பணியைத் தொடர்கிறாள் என்பதை ஆய்வுலகம் அவதலைக்க வேண்டும்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?