நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 28 July 2014

சங்கத் தமிழரின் சூழல்தூய்மை





வேனிற்காலங்களில் நீர்வளம்



சூழல் காப்போடு அதனைத் தூய்மையாகப் பேண வேண்டியதும் அவசியம்.இல்லையேல் நோய் தோன்றும். இந்நிய மக்களில் எழுபது சதவீத மக்கள் பெரிதும் நோயினால் பாதிக்கப்படுவதற்கு நீர் மாசுபாடே காரணமாகும். வேனிற்காலங்களில் நீர்வளம் குறைந்து கிருமிகள் பெருகும். அக்காலத்தில் நீரைக் காய்ச்சிப் பருக வேண்டும் என நாலடியார்,‘குடநீர் அட்டு உண்ணும்‘(382) பழக்கத்தை வலியுறுத்துகிறது.




வேனிற்காலத்தில் நோய் வராமலிருக்க புது மண்பானையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் புது மண்பானையின் மண் மணம் நீங்க பாதிரிப் பூக்களைப் போட்டு வைக்க வேண்டும் என்றும் நாலடியார் கூறுகிறது.
சூழல்தூய்மை  - நோய் வராமலிருக்க         

ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு”(நாலடியார்39) என்கிறது இப்பாடல். தற்காலத்தில் R.O. Water பயன்படுத்துகிறோம் பழந்தமிழைர் இதை இயற்கை முறையைக் கையாண்டு யாதொரு செலவுமின்றி பயன்படுத்தி இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?