மாற்றம்
நமக்காக யாருமே இல்லை என்று சாவதைவி்ட
நாம் யாருக்காகவாவது சிறு நம்பிக்கையாக இருந்து
வாழ்வதும்கூட ஒருவகை கருணைதான்.
ஒருவரின் அன்பு.. பொறுமை... சகிப்புத்தன்மை...
அருமை....தெரியாதவர்கள்..
அவர் இருந்தபோது தெரியாததுபோல
இறந்தபோதும் தெரியாதவர்கள்தான்.
யாரும் யாரிடமும் நிருபிக்கத் தேவையில்லை.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் நாணயத்தின் இருபக்கங்கள்.
தன்னை நிரூபிக்க முயன்று தோற்று
நடைப்பிணங்களென வாழ்பவர்கள் எண்ணிலா கோடி.
வைரத்தைப் பற்றித் தெரியாதவர்களுக்கு
அது வெறும் ஒரு கல் தான்.....
ஒரு வைரமோ, ஒரு ஊமத்தம்பூவோ கூட
போராடாமல் ஒளிர்வதில்லை...
.சூழல்...காலம்...மாறக் கூடியதே...
நம்பிக்கையுடனான தொடர் இயக்கம்..
ஒவ்வொரு நாளையும் திருப்பும் ...
ஒரு நாள் திரும்பும்.